அரபுலகை கலங்கவைதத ஒரு அகால மரணம – பாலஸ்தீனிய அடையாள சின்னம் மஹ்மூட் தர்வீஷ்

அரபுலகை கலங்கவைதத ஒரு அகால மரணம – பாலஸ்தீனிய அடையாள சின்னம் மஹ்மூட் தர்வீஷ்

எஸ். எம். எஸ். பஷீர்

“எங்களை வரலாற்றிலிருந்து வெளியேற்றும் திட்டத்திற்கெதிராக வெற்றிகொண்டுள்ளோம்” - மஹ்மூட் தர்வீஷ்

பாலஸ்தீனிய கவிஞர் மஹ்மூட் தர்விஷ் அவர்களின் அகால மரணம் இந்த மாதம் முதல் வாரத்தில் (9.8.2008) அரபுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு முக்கிய நிகழ்வாகும். எகிப்திய ஜனதிபதி கமால் அப்துல் நாசரின் மரணத்தின்பின் இன்னிகழ்வு அரபுலகை கலங்க செய்த நிகழ்வாக கருதப்படுகிறது. இவரது கவிதைகளும் உரைநடை ஆக்கங்களும் 40 ஆண்டுகாலம் பாலஸ்தீனிய மக்களை கட்டிப்போட்டிருந்தது. தர்விஷ் அரபுலகின் நிகரற்ற கதாநாயகனாவே கருதப்பட்டார். அரபுலகிற்கு அப்பாலும் இவரது தாக்கம் விரவிக்காணப்பட்டது. திறந்த இருதய சத்திரசிகிச்சையின் போது ஐக்கிய அமெரிக்காவின் ஹூஸ்டன் வைத்தியசாலை ஒன்;றில் தனது 67 வயதில் காலமானார்.

1941ல் லெபனானுக்கு அன்மியதான அல்-பிர்வா எனும் பாலஸ்தீனிய குக்கிராமம் ஒன்றில் பிறந்தார். 1948ல் யூத ஆயுததாரிகளின் ஆக்கிரமப்புக்கு உட்பட்டு இவரது குடும்பமும் லெபனானுக்கு தப்பி ஒடியது. மீண்டும் இவரது குடும்பத்தினர் தமது கிராமத்திற்கு அண்மிய கிராமமொன்றிற்கு இரகசியமாக இடம்பெயர்ந்து வாழ்ந்தனர். எனினும் இஸ்ரேலிய இராணுவ சட்டத்தின்படி அவ்வாறு திரும்பியவர்கள் உள்நாட்டு அகதிகள் எனக் கருதப்பட்டதுடன் ”ஆஜரான- சமூகமளிக்காத அன்னியர்கள்” (;” (Present-absent aliens) என் வகைப்படுத்தப்பட்டு அவர்களது ஆதனங்கள் மீதான உரிமை மறுக்கப்பட்டது. இவரது முதல் கவிதை நூல் இவரது 19வது வயதில் வெளிவந்தது. அவற்றில் அதிகமான கவிதைகள் அரசியல் கவிதைகளாக கானப்பட்டன. பிரபல்யமான இவரது கவிதைகளில்:

“எழுதிக்கொள் நான் ஒரு அரப் என் அடையள அட்டை இலக்கம் 50000

இக் கவிதை அடையாள அட்டை இல்லாது இஸ்ரவேலுக்குள் பிரவேசிக்கும் பாலஸ்தீனியர்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறது. இவர் இஸ்ரவேலின் கம்யுனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்ததுடன், அதற்காக பலதடவை கைது செய்யப்பட்டுள்ளார். 1970இல் மாஸ்கோ பல்கலைக்கலகத்தில் ஒராண்டு கல்வியின் பின் இஸ்ரவெலுக்கு திரும்பாமல் எகிப்துக்கும், பின்னர் லெபனானுக்கும் சென்று வாழ்ந்தார். லெபனனில்தான் இவருக்கு பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்திற்கும் தொடர்பு ஏற்பட்டது. 1973ல் பா.வி.இ (பி எல் .ஒ. ) சேர்ந்ததார்.ஆரம்பக கால அரசியலலில் ஆக்கிரமிப்பிற்கெதிரான கவிஞராக திகழ்ந்தார்.

இவர் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் நிறைவேற்று உறுப்பினராக தெரிவு செயயப்பட்டார். எனினும் 1993ல், ஒஸ்லோ சமாதான ஒப்பந்தத்தினை யசிர் அரபாத் கையொப்பமிட்டவுடன் தனது கட்சிப் பதவிலிருந்து இராஜினமா செய்தார். பாலஸ்தீனியர்களின் உண்மையான சுதந்திரத்தினையும் , இஸ்ரவேலர்களின் ஆக்கிரமிப்பினையும் முடிவுக்கு கொண்டு வரும் அடிப்படையில் நாங்கள் உண்மையான சமாதானத்தினை அடைவதற்கான வாக்குறுதியை இந்த ஒப்பந்தம் வழங்காது என்பதை நான் புரிந்துகொண்;டேன் என இவர் குறிப்பிட்டார். ஒஸ்லோ ஒப்பந்த அனுகூலங்களை வெளிப்படையாக சுட்டிக்காட்டவும் இவர் தவறவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையில் 1974ல் யசிர் அரபாத் தொடங்கிய உரையில் கூறிய வார்த்தைகள் தர்விஷ் உடையதாகும்” இன்று ஆலிவ் கிளையையும் ஒரு சுதந்திர போராளியின் துப்பாக்கியையும் சுமந்து வந்திருக்கிறேன், ஆலிவ் (மரக்) கிளயை எனது கையிலிருந்து விழுந்து விட செய்யாதீர்கள்” என 1988ல் தர்விஸ் பாலஸ்தீனிய சுதந்திர பிரகடனத்தை எழுதினர். பாலஸ்தீனிய தலைவர்கள் ஒருதலைபட்சமக சுதந்திரபிரகடனம் அல்ஜீரியவில் செய்தபோது இப்பிரகடனத்தினையே வாசித்தார்கள். சென்ற வருடம் ஹமாசும் அல்-பாதாவும்  சண்டையிட்டுக்கொண்டபொழுது இது தெருவில் செய்யும் தற்;கொலை என கண்டித்தார். இவர் 30கவிதை தொகுதிகளையும் பல உரை நடை நூல்களையும் வெளியிட்டு;ள்ளார். இவரது கவிதைகளில் பல பாடல்களாகவும் வெளிவந்துள்ளன. ” எனது தாயின் ரொட்டிக்காக ஏங்குகிறேன் ;” என்கிற கவிதை தாய் என்பது பாலஸ்தீனத்தை குறிப்பிடுவதாகவே கருதப்படுகிறது.;.

இவரது மரணத்தையொட்டி பாலஸ்தீனத்தில் இஸ்லாமிய மரபின்படி மூன்று நாட்கள் துக்கம் அனுஸ்டிக்கப்பட்டது. கவிஞர்களில் பலர் காலத்தில் வாழ்கிறார்கள் ஆனால் சிலர் காலத்தை வாழவைக்கிறார்கள். அந்த வகையில் தர்வீஸ் காலத்தை வாழவைத்த கவிஞர் ஆகவே கருதப்படவேன்டும். பாலஸ்தீனத்தில் இவரது கவிதைகள் மட்டுமல்ல இவரது அரசியல் நிலைப்பாடும் கருத்துக்களும் பாலஸ்தீனத்து வரலாற்றிலிருந்து பிரித்து பார்க்கப்பட முடியாததாகிவிட்டது என்பது மிகையாகாது.

“எல்லா அராபியர்களையும் உலகத்திலுள்ள எல்லா நேர்மையான மக்களையும் வருத்தும் பாலஸ்தீனிய காயத்தின் கவிஞராக மட்டுமல்லாது இவர் ஒரு கவிஞர் திலகம்” என எகிப்திய பிரபல இரு மொழிக் கவிஞர் (அரபு – ஆங்கிலம்), அஹமட் புவாட் நையிம் குறிப்பிட்டமையும், பிரெஞ்ச் வெளிவிவகார அமைச்சர் ” மஹ்மூட் தர்வீஸ். முழு மக்களதும் நிலத்துடனான இணைப்பினை , அவர்களது சமாதானத்திற்கான அவாவினை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதனை தெரிந்து இருந்தார்.அவரது சக சீவியத்துக்கான அழைப்பு விடுக்கும் செய்தி எதிரொலிக்கும் இறுதியில் கேட்கப்படும்” என்கிற செய்தி இவரது மரணத்துடன் மறைந்துவிடாது.

உதவி ஜோர்ஜ் கிஷ்மி (வாஷிங்டன்)
AUGUST 2008

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...