Skip to main content

Posts

Showing posts from August, 2012

எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்-கள்ளியங்காட்டு பள்ளிவாசல்

"தமிழன் என்ற முறையிலும், பிறப்பால் இந்து என்ற முறையிலும் இச் செயலுக்கா வெட்கித் தலை குனிகிறேன். புரிந்துணர்வு, மனிதாபிமானம் இவற்றை அடிப்படையாகக் கொண்டதே மனிதம்."
                                                                                                  சஞ்சயன்"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… "

எஸ்.எம்.எம்.பஷீர்
“ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ ?” கண்ணதாசன்

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களத்தில் இறங்கியுள்ள சகல கட்சிகளும்பல்வேறு அரசியல் யுக்திகளைப் பயனபடுத்தி எப்படியாவது அதிக பட்சவெற்றியை பெற்றுவிட வேண்டும் என்று ஆலாப் பறக்கின்றன. பொதுவாகவேசுயேட்சை வேட்பாளர்கள் என்று கட்டுப்பணம் கட்டுபவர்கள் பலர் வழக்கம்போல வாக்கு எண்ணும் வேளைகளில்ஏதோஒருகட்சியின் துணைக்குழுவாக செயற்படவே போட்டியிடுகிறார்கள். எனவே உண்மையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தவிர எந்தச் சுயேட்சைக் குழுவும் களத்தில்குதித்திருக்கவில்லை என்று சொல்லப்படுகிறது, அப்படி ஏதேனும் அபூர்வமாக ஒன்றிரெண்டு சுயேட்சைக்குழுக்கள் இருந்தாலும் , இறுதி நேரத்தில் அவையும் தமது ரிஷிமூலத்தை வெளிப்படுத்தி விடுவார்கள்.

உண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளும் !! ( பாகம் ஐந்து )

எஸ்.எம்..எம்.பஷீர்
ஊதாரி மைந்தனின் கதை ஒன்றும் மொட்டத் தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போடும் கதையல்லஎன்பதை இப்போது பாப்போம்.

முஸ்லிம் காங்கிரஸ் சென்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் , தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாததால் கணிசமான செல்வாக்குடன் திகழந்த ரணில் விக்ரமசிங்க கூட்டணியுடன் சேர்ந்து சம்பந்தனின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்ஆசீர்வாதத்துடன் போட்டியிட்டுஇரண்டு ஆசன வித்தியாசத்தில்கிழக்கு மாகான சபையை கைப்பற்ற முடியாமல் போனதும் , ஒருபுறம் "சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்"என்ற விதத்தில் , முதலமைச்சர் பதவி பற்றி ஹக்கீம் பரிகசித்துக் கொண்டு  , மறுபுறம் தேர்தலில் முறைகேடு நடைபெற்றது என்றும் நீதிமன்றம் வரை சென்று போராடுவோம் என்று முஸ்தீபுகளில் இறங்கினார்.

குரூரப் படுகொலைகளும் குருதியாய்ச் சிவந்த கீழ்வானமும்!!

எஸ்.எம்.எம்.பஷீர்
"காத்தான்குடிப்
பள்ளிவாசலில்
எங்களின் மானுடக்
கனவுகள் அழிந்தன
எமது வேர்களில்
எஞ்சியிருந்த
மனிதமும்
அன்றுடன் தொலைந்து போனது

கல் தோன்றி மண் தோன்றாக்
காலத்து முன் தோன்றியதால்த்தான்
பின்னர் தோன்றிய
"கல்" எங்கள் இதயத்திலும்
"மண்" எங்கள் தலைக்குள்ளும்
புகுந்து கொண்டதோ "                                          (கவிஞர் அருந்ததி - பிரான்ஸ்)

வடக்கு கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரை 1990 ஆகஸ்து மாதம் முழுவதும் புலிகளின்திட்டமிடப்பட்டஇனப் படுகொலைக்கும் இனச் சுத்திகரிப்புக்கும் உட்பட்டமாதமாகும் .

உண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளும் !! ( பாகம் நான்கு )

எஸ்.எம்..எம்.பஷீர்
குரான் ஹதீஸ் எங்களின் யாப்பு என்று மேடைக்கு மேடை முழங்கியவர்களால்மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியைக்காப்பாற்றமுடியவில்லை , கட்சியில் முதலாவது பிளவு ஹிஸ்புல்லாவால்1990களின் ஆரம்பத்தில்உருவாக்கப்பட்டது , ஊர்கள் பிரிக்கப்பட்டன. ஒற்றுமை என்பது வெறும் ஆரசியல்கோசமே என்பதை மிகத் துரிதமாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்கள்புரிந்து கொண்டார்கள். ஹிஸ்புல்லாஹ் மீண்டும் கட்சிக்குள் இணைக்கப்பட்டுதங்களின் உயர் கட்சி பீட போராளியாக மாற்றப்பட்டார் . புலிகளைப் போல் தமதுகட்சியிலிருந்து (ஹக்கீமின் பாசையில் முஸ்லிம் காங்கிரஸ் இயக்கத்திலிருந்து ) வெளியேறி தங்களுக்கு சவாலாக மாறுவோரைதுரோகியாக்குவதும் , அவர்கள்மீண்டும் இணைந்ததும் தியாகியாக்குவதும் மிக சாதாராண முஸ்லிம் காங்கிரஸ்அரசியல் நடைமுறையாக அங்கீகரிக்கப்பட்டது. 

உண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளும் !! ( பாகம் மூன்று )

எஸ்.எம்..எம்.பஷீர்
1992 ஆம் ஆண்டின் முஸ்லிம் காங்கிரஸின்கட்சி அரசியல் யாப்பில் இலங்கையின்இஸ்லாமிய மத விவகாரங்களில் உச்ச அதிகாரம் கொண்ட மத அறிஞர்களைக் கொண்டஜம்மியத்துல் உலமாபிரதிநிகள் முஸ்லிம் காங்கிரஸின்மஜ்லிஸ் ஏ சூராஹ் (MAJLIS –E-SHOORA6.9a. All Ceylon Jamiyathul Ulama would constitute the Majlis-e-Shoora of the Sri Lanka Muslim congress ) கலந்துரையாடல் கூட்டங்களில்கலந்துகொண்டு ஆலோசனை வழங்கும் சந்தர்ப்பம்பின்னர் 2011 வந்த யாப்பில் (MAJLIS –E-SHOORA 7.4a.The leader in consultation with the High Command of the party constitute an Advisory Council of the party known as the Majlis–e-Shoora from among the past members of the High Command and or the High Command who continue to be actively involved in party activitiesநீக்கப்பட்டதன் முக்கிய காரணங்களில் ஒன்று முஸ்லிம்கட்சிகள் ஒன்றுபடவேண்டுமென்ற அழுத்தங்களை ஜம்மியத்துல் உலமாபிரயோகிக்கக் கூடியசூழல்கள் நிலவியமையும் அவதானிக்கப்படக் கூடியதாகவிருந்தது.

உண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளும் (பகுதி இரண்டு)

எஸ்.எம்.எம்.பஷீர்

முஸ்லிம் காங்கிரசின் தலைவர் மறைந்த அஸ்ரப்  " எந்தவொரு உண்மை முஸ்லிமின் வாக்கும் யு என்.பீ யின் யானைச் சின்னத்திற்கு போடப் படக் கூடாது." என்று முஸ்லிம்களை “உண்மை முஸ்லிம்கள்”“உண்மையற்ற முஸ்லிம்கள்” என்று பாகுபாடு படுத்தும் விதத்தில் அரசியல் பத்வாவை முன்மொழிந்த அந்த பழையநினைவுகளுடன் இப்பொது முபீன் எனும் போராளி முஸ்லிம்கள் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிக்க முடியாது என்று கட்டளை பிறப்பிக்கின்றார். அதனால்தான் இனிமேல் யாரேனும் தேர்தல்களில் வாக்களிக்கும் போது அவர் “உண்மை முஸ்லிமா” அல்லது வெறுமனே சகட்டுமேனிக்கு “முஸ்லிமா” என்ற தீர்மானங்களை எடுப்பவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஒரு தனிமனித மத உரிமையின் மீதான அரசியல் அத்துமீறலாக ஒரு தலையீடாக பார்க்கப்படல் வேண்டும்.

உண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளும் !!

எஸ்.எம்.எம்.பஷீர்
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் “ - குர்ஆன் 2:42. .
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் இனவாத மதவாதஅரசியல் கலவையுடன் களை கட்டத் தொடங்கி விட்டது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவும் , தமிழர் பிரச்சினையில் சர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைக்கவும் கிழக்கு மாகான சபைக்கான தேர்தல் ஒரு சந்தர்ப்பம்என்றுதமிழ் தேசியத் தரப்பு தம்பட்டம் அடிக்க ( தம்பட்டம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் ஒரு பக்கம் தோலால் மூடப்பட்டிருக்கும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும்.)முஸ்லிம் காங்கிரஸ் தரப்பு தம்புள்ளை பள்ளிவாசலை ,  தெகிவளை பள்ளிவாசலைஅவ்வப்போது , ஆங்காங்கே நடைபெறும்பௌத்த தீவிரவாத சக்திகளின் அடாவடித்தனங்களை, தமது கட்சியின் உள்ளூர் மட்ட அரசியல் வாதிகள் மூலம் ,கிழக்கில் மட்டும் தேர்தல் பிரச்சாரத்துக்காக றபான் அடிக்க  ( றபான் ஒரு தோல் இசைக் கருவி ) தெஹியத்தகண்டியசிங்களவர்கள் சிலரும்முஸ்லிம் காங்கிரஸின் " சிங்களப் போராளிகளாக " பேரினவாதிகளாகவிருந்து அல்லது பேரினவாதிகளின் கட்சிகளிலிருந்து விலகி புனர் ஜென்மம் எடுக்கிறார்கள்.

கருத்தரங்கு தேசம்நெற் பின்னூட்டம் : தேசம்நெற் 27/12/2008

"இந்த சந்திப்பிற்கான அழைப்பிதழிலிருந்து  வோல்ரோயரின்(Voltaire) மேற்கோளைக் குறிப்பிட்டு I do not agree with a word you say, but I will fight to the death for your right to say it . வோல்றோயர் (Voltaire) அவ்வாறு சொல்லி இருக்கவில்லை என்றும்அவர்  “ I do not agree with a word you say but I will defend to the deathfor your right to say it” இவ்வாறே தெரிவித்து இருந்தார் என்றும் பசீர் சுட்டிக்காட்டினார் "
                          தேசம்நெற் 27/12/2008
அதனைத் தொடர்ந்து தேசம்நெற் பின்னூட்டம என்ற தலைப்பில் சையட் பசீர்உரையாற்றினார். தேசம்நெற் தொடர்பான அறிக்கையில் கையெழுத்திட்டதை அங்குசுட்டிக்காட்டிய அவர் ஜனநாய சக்திகளிடையே உள்ள முரண்பாடுகள் நேசமுரண்பாடுகளாக அமைய வேண்டியதன் அவசியத்தை அங்கு வலியுறித்தினார் . இந்த சந்திப்பிற்கான அழைப்பிதழிலிருந்து  வோல்ரோயரின்(Voltaire) மேற்கோளைக் குறிப்பிட்டு I do not agree with a word you say, but I will fight to the death for your right to say it . வோல்றோயர் (Voltaire) அவ்வாறு சொல்லி இருக்கவில்லை என்றும்அவர்  “ I do not agree with a word you say but I will …