அரசியல் சோதிடர்களும் சோப்ளாங்கி அரசியல் ஆய்வாளர்களும்

எஸ். எம். எம் . பஷீர்

Rajapaksa-2இலங்கையின் ஆறாவது ஜனாதிபதி தேர்தல் இதுவரை நடைபெற்ற எல்லா ஜனாதிபதி தேர்தல்களையும் விட சுமூகமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இத்தேர்தலில் வழக்கமாக யார் வெல்லுவார் என்று பலர் இலங்கையிலும் புலம் பெயர் தேசத்திலும் வெறுமனே ஆரூடம் கூறிகொன்டிருக்காமல் யார் வெல்ல வேண்டும் என்பதில் கூடிய சிரத்தை காட்டியமைக்கு மிக முக்கிய காரணம் . இந்த தேர்தல் இலங்கை மீது இதுவரை மறைமுகமாகவோ நேரடியாகவோ ஆதிக்கம் செலுத்திவந்த அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் இலங்கை மீதான பிடியை மீண்டும் இறுக்கிக்கொள்ள ஒரு புறம் யார் வெல்லவேண்டும் எனத் தீர்மானிக்க அதற்கு இலங்கையின் முதலாளித்துவ பிற்போக்கு அரசியல் சக்திகளின் துணையுடன் ஒருபுறம் முயற்சிக்க மறுபுறம் அத்தகைய புறச்சக்திகளின் உதவியுடன் மீண்டும் தமது தேசியக்கனவுக்கும் பழிவாங்கலுக்கும் ஒரு சரியான சந்தர்ப்பமாக புலம் (புலன்) )பெயர் தமிழ் தேசிய (தனி ராட்சிய ) புலி வால்களும் வரிந்து கட்டிக்கொண்டு மஹிந்த எதிர்ப்பு அரசியலை மட்டுமே செய்து வந்தனர். "பிறக்கும் போது முடம் பேய்க்கு பார்த்து தீராது" என்பதுபோல் இனவாத மதவாத சிறுபான்மை என்று எண்ணிக்கை அரசியலில் அதிகாரச்சுகம் கண்ட அரசியல் தலைமைத்துவங்கள் தாங்கள் சொஸ்தப்படாத சுகவீனர்கள் என்பதையும் இத்தேர்தல் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்; பாவம் இவர்களுக்கு பின்னாலும் இந்த வெறியூட்டப்பட்ட நிஜத்தை பார்க்க விரும்பாத இவர்களின் ஆதரவாளர்கள் "தலைவன் எவ்வழியோ நாமும் அவ்வழியே " என்று பயணித்திருக்கிறார்கள் , மேலும் எதிர்காலத்திலும் கண்ணை மூடிக்கொண்டு பயணிக்க இருக்கிறார்கள் . குருடர் குருடருக்கு வழிகாட்டினால் இருவரும் குழியில் விழுவர் ( If the blind leads the blind both shall fall into the ditch. Mathew 15.14 ) என்று இயேசு தனது சீடர்களுக்கு சொன்ன தலைவர்கள் பலரை இப்போது சிறுபான்மை சமூகங்களுகிடையே நாம் தரிசிக்கமுடிகிறது. தமிழ் தேசியவாத புலம் பெயர் தமிழர்களின் ஞானக் கனவுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று தமது பரம வைரி பொன்சேகாவை தமது மானங்காக்க வந்த (திரோவ்பதையை துச்சாதனன் துகிலுரிய அவள் மானங்காக்க சேலை வழங்கிய கண்ணன் போல் ஒப்பிடாமல் ) தமிழருக்கு ( சம்பந்தருக்கு ) பொன்சேகாவே ஒரு கோவணம் என்று தமிழும் இதிகாசமும் கற்பித்த ரவூப் ஹக்கீம் உட்பட அனைவரும் மீண்டும் சளைக்க மாட்டார்கள் ஏனெனில் அரசியல்வாதிகளும் சளைக்காது பிணம் தூக்கும் விகிரமாதிதன்கள்தான், வேதாளக் கேள்விகளுக்கு பதில் சொல்வதில் அவர்கள் சமர்த்தர்கள்

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் "சிறி லங்கா மன்னனுக்கு அநேக மகிழ்ச்சியான மீளவரல் ( வெற்றி) நிகழட்டும்." என்று இந்திய புகழ்பெற்ற சோதிடர் கே .கே. தேவந்திர ராஜ் ( K.K. Thevanthra Rajh ) மஹிந்த ராஜ பக்ச ஆட்சிக்கு வருவார் என்று ஆரூடம் கூறியிருந்தார். அவ்வாறே மறுபுறத்தில் பொன்சேகா எட்டாம் என்னில் பிறந்தவர் அவரின் சகல் கூட்டுத் தொகைகளும் , தேர்தல் திகதியின் கூட்டுத தொகை உட்பட எட்டாக அமைந்திருக்கிறது; எனவே அவர் இராவணன் போல் இலங்கைக்கு மன்னனாவார் என்று இந்திய இராவண மடாலய தலைமைச் சோதிடர் அணில் கவ்ஷிக் (Anil Kaushik) குறிப்பட்டார். எனக்கும (இக்கட்டுரையாளருக்கும் ) சோதிடத்துக்கும் சம்பந்தம் கிடையாது என்றாலும் எதை ஏன் எழுதுகிறேன் என்றால் நாங்கள் ஆரூடம் கூறவில்லை இலங்கையன் என்ற தேசிய உணர்வுடன் பெரும்பாலான தேச அபிமானம் கொண்ட சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களின் அடிப்படை தேசிய உணர்வுகளுடன் உலக சதிக்கெதிரான பெரிய வெற்றியினை பயங்கரவாதத்தை ஒழித்து மீட்ட சுதந்திரத்தை சுதேசிய உணர்வு கொண்ட அறிவும் கொண்ட மக்கள் தக்க வைத்துள்ளனர். பொன்சேகாவுக்கு பத்து அம்சம் கொள்கை பிரகடனம் தயாரித்து பொது மக்கள் அபிப்பிராய மேம்பாட்டுக்கு இத்தேர்தலில் பின்னணியில் இருந்தவர் அவுஸ்திரேலிய நாட்டு லிபரல் கட்சி முக்கியஸ்தர் என்பது மட்டுமல்ல , தான் தோல்வியுற்றதும் பொன்சேகா உலக நாடுகள் உடனடியாக இலங்கையில் தலையிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆக மொத்தத்தில் இலங்கை சுதேசிய சக்திகள் வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராக இத்தேர்தலில் வெற்றி ஈட்டி இருக்கிறார்கள்.

இரண்டு பக்க சோதிடர்களும் இத் தேர்தலில் தமது சோதிட ஆளுமையை காட்டியதுடன் இருவரையும் "மன்னர்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்கள். இந்த இரு சோதிடர்களும் என்ன மன்னராட்சி காலத்திலா அல்லது மன்னராட்சி நாட்டிலா வாழ்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. நிறைவேற்று ஜனாதிபதி என்பவர் ஒருபுறம் மன்னர் போலத்தான் அதிகாரங்களை குவித்து வைத்திருக்கிறார்.ஆனால் ஜனாதிபதி ஆட்சிக்கு தேர்தல் காலக்கெடு விதிக்கிறது , மக்கள் ஒரு நாளைக்காயினும் மன்னராகி விடுவார்கள். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு சாதகமானது என்று அஸ்ரப் போன்றோர் நியாயப்படுத்திய சம்பவங்கள் எனக்கும் ஞாபகத்தில் உண்டு.

எவ்வாறெனினும் ஜனாதிபதி "தான் மன்னன் அல்ல உங்களின் காவலன்" என்று கட் அவுட் வைத்து கூறிய பிரகடனங்கள் நடைமுறையில் பாமர சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது என்பதையும் இந்த தேர்தல் சொல்லாமல் சொல்லி நிற்கிறது என்றாலும் எங்களுக்கு தேவை மக்களின் பாதுகாவலன், (Guardian) அந்நிய சக்திகளுக்கும அவற்றின் முகவர்களுக்கும் எதிராக நாட்டின் பாதுகாவலன் இதுவே இன்றைக்கு எமது எதிபார்ப்பு.

Thenee: 29/01/2010

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...