Friday, 25 March 2011

"ஆவதறிவது " கவிதை நூலுக்கு பேராசிரியர் எம். ஏ. நுஃமானின் அணிந்துரை

அணிந்துரை

1950ää 60களில் ஈழத்தில் நவீன தமிழ்க் கவிதை எழுச்சியடைந்தபோது அதன் முக்கிய தூண்களுள் ஒன்றாக நிமிர்ந்து நின்றவர் புரட்சிக்கமால். ஐரோப்பாவின் நோயாளி என்று கருதப்பட்ட துருக்கியை மதச்சார்பற்ற ஒரு நவீன துருக்கியாக மாற்ற முயன்ற முஸ்தபா கமாலை ஆதர்சமாகக் கொண்டு சாலிஹ் என்ற தன் சொந்தப் பெயருக்குப் பதிலாக புரட்சிக் கமால் என்று புனைபெயர் பூண்டபோதிலும்ää முஸ்தபா கமால்போல் மதச்சார்பற்ற மேலைமயமாக்கலின் ஆதரவாளராக அன்றி ஆழ்ந்த இஸ்லாமிய உணர்வுமிக்க சமூக சீர்திருத்தக் கவிஞராகத் தன்னை நிலைநாட்டிக்கொண்டவர் புரட்சிக் கமால். 1950ää 60களில் ஈழத்து முஸ்லிம்கள் மத்தியில் இனத்துவ உணர்வு ஸ்தாபனமயப்பட்ட சூழலில் அதன் கவித்துவக் குரலாக ஒலித்தவர் இவர்.


1970ää 80களிலும் அதன் பிறகும் ஏறாவூர்ää வாழைச்சேனைää ஓட்டமாவடி ஆகிய முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட கிராமங்களிலிருந்து புரட்சிக் கமாலின் இலக்கிய வாரிசுகளாகää அவரின் பிறிதொரு கட்ட வளர்ச்சியாக சிறுகதை எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் பலர் உருவாகினர். எஸ். எல். எம். ஹனீபாää வை. அகமட்ää ஓட்டமாவடி அறபாத்ää அ~;றப் சிஹாப்தீன் ஆகியோர் புரட்சிக் கமாலைப்போல் தங்கள் பிரதேச எல்லைகளைத் தாண்டி சமகால ஈழத்து இலக்கியத்தின் குறிப்பிடத் தகுந்த இலக்கிய ஆளுமைகளாகக் கருதப்படுபவர்கள்.

1980களில் எழுச்சியடைந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கங்கள் வடää கிழக்கில் முஸ்லிம்களின் இருத்தலுக்கும் சகவாழ்வுக்கும் அச்சுறுத்தலாக உருவாகிய பின்னணியில் 1990களில் மேலும் பல இளைஞர்கள் இப்பிரதேசங்களிலிருந்து இலக்கியத் துறைக்குள் ஈர்க்கப்பட்டனர். இவ்வகையில் அனலக்தரின் பெயர் உடனடியாக என் நினைவுக்கு வருகின்றது.

ஒரு வளமான இலக்கியப் பாரம்பரியமுடைய பிரதேசத்தில் இருந்துதான் இக்கவிதைத் தொகுதியின் ஆசிரியர்களான முஹம்மது பஸீர்ää முஹம்மது நஸீர் ஆகிய இருவரும் இப்போது நமக்கு அறிமுகமாகின்றனர். இது இவர்களின் முதலாவது கவிதைத் தொகுதி. பஸீர் ஒரு சட்டத்தரணி. சமூக முன்னேற்றத்திலும்ää அரசியலிலும் அக்கறை உடையவர். புலம் பெயர்ந்து இப்போது இங்கிலாந்தில் ஒரு சொலிசிட்டராகப் பணிபுரிகிறார். கிழக்கிலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலை தொடர்பாக அடிக்கடி கட்டுரைகளும் எழுதிவருகிறார். முஹம்மது நஸீர் ஒரு மௌலவி அத்துடன் ஒரு வணிகவியல் பட்டதாரி. இருவரும் சகோதரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பஸீர் 1970களின் பிற்பகுதியிலிருந்தே கவிதை எழுதிவருகிறார் எனினும் வெளியுலகில் ஒரு கவிஞராக பரவலாக அறியப்பட்டவர் அல்ல. நஸீர் 1990களில் கவிதை எழுதத் தொடங்கினார் என்று நினைக்கிறேன். இருவரும் ஏராளமாக எழுதாவிட்டாலும் இணைந்து ஒரு தொகுதி வெளியிடும் அளவு கவிதையின் மீது ஆர்வமும் அக்கறையும் கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.

இரு சகோதரர்களின் முப்பத்திரண்டு கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இருவரின் சமூக அக்கறைää மனிதநேய உணர்வுää யுத்த எதிர்ப்புää எதிர்கால நம்பிக்கை என்பன இக்கவிதைகளில் பதிவாகியுள்ளன. இவை இத்தொகுதியின் ஆரோக்கியமான அம்சங்கள் எனக் கருதுகின்றேன். அவ்வகையில் சமகால ஈழத்துக் கவிதையின் பொதுவான கருத்துநிலைத் தடத்திலேயே இவர்களும் கால்பதித்துள்ளனர் எனலாம்.

கவித்துவம் என்பது கவிதையின் பொருளிலன்றி அந்தப் பொருளை வெளிப்படுத்தும் மொழியிலேயே பெரிதும் தங்கியுள்ளது. அவ்வகையில் இக்கவிதைகளில் கவித்துவம் சார்ந்த ஒரு பொதுவான நொய்மை காணப்படினும். பல இடங்களில் மொழியின் கட்டிறுக்கமும் கவித்துவ வீச்சும் பளிச்சிடுகின்றன. இச்சிறு அணிந்துரையில் அத்தயை சில வரிகளை எடுத்தக்காட்டி வாசகர்களை இக்கவிதைகளுக்குள் ஆற்றுப்படுத்தலாம் என்று நினைக்கின்றேன்.

பஸீரின் அத்தகைய கவிதை வரிகள் சில:

1. வர்ணச் சிறகு
குலைந்து போகாமல்
வண்ணத்துப் பூச்சியைப்
பிடிக்க முனைந்து
சிறகழிந்து போனவை
இளமைக் கனவுகள்.

2. தேவதைகளுக்காய்
நான் கைகளை
உயர்த்தியதில்லை
குனிந்தவர்களை
நிமிர்த்துவதற்காக
எனது கரங்கள்
தாழ்ந்திருக்கின்றன
மேகங்களில் மனசு
மென்மையாய் ஏறிக் குந்தியிருக்கிறது

3. உனது முகச் சுடரில்தான் இருள்
எனது வீட்டைவிட்டுக்
கரைந்தது

4. இப்போதோ
என் மனது
கிணற்றை விட்டு
சமுத்திரத்தையே
நேசிக்கிறது

5. மடிப்பிச்சைக்காரன் கூட
நாணுவதுண்டு
வாக்குப் பிச்சைக்காரர்களைக் கண்டு

6. மே முதல் திகதி
இப்போதெல்லாம்
ஏப்ரல் முதல் தேதியாய்
இடம் மாறிப்போயிற்று

7. அமாவாசை எனது அஸ்தமனமன்று
பௌரணமிக்கான
எனது அடியெடுப்பு


இவ்வரிகளில் மேத்தாää வைரமுத்து பாணிக் கவித்துவத்தை நாம் காணலாம்.


பஸீரைவிட சற்று வெளிப்படையாக உரத்தகுரலில் தன் கவிதைகளில் அரசியல் விமர்சனம் செய்கிறார் நஸீர். அதனால் அவர் பயன்படுத்தும் மொழியும் வெளிப்படையான பிரச்சார மொழியாக இருக்கின்றது. இவரிடமிருந்து சில உதாரணங்கள்:

1. மக்கள் சேவைக்கு
மக்களிடமே மன்றாடும்
மனித நேயர்களைப் பாருங்கள்
போட்டிபோட்டுக்கொண்டு
இவர்கள்
வாக்குக் கேட்பதெல்லாம்
மக்கள் சேவைக்காகத்தான்

2. தேசங்களை வரையறுக்கும்
ஏல்லைக் கோடுகள்
மானுடத்தை தேசியத்தின்
கைதியாக்கிவிட்ன

3. மண்ணை நேசிக்கும்
மதியீனர்களே
முதலில்
மானிடத்ததை நேசியுங்கள்
ஆயுதங்களை
நேசிப்பவர்களே
முதலில் மக்களை
நேசிக்கப் பழகுங்கள்


கவிதைக்குப் பல முகங்கள் உண்டு. இதுதான் கவிதை என அதன் ஒரு முகத்தைமட்டும் காட்டி கவிதையை வரையறுத்துவிட முடியாது. கவிதை வேறுபடுவதைப்போல கவிதை பற்றிய கொள்கைகளும் கவிதை ரசனையும் வேறுபடுகின்றன. ஒருவருடைய அனுபவம்ää கல்விää வாழ்க்கை நோக்குää இலக்கியப் பயிற்சிää மொழித்திறன்ää சமூகச் சூழல் ஆகியவற்றைப் பொறுத்து ஒருவருடைய இலக்கிய நோக்கும் ரசனையும் அமைகின்றன. இது படைப்பாளிக்கும் வாசகனுக்கும் பொருந்தும். தன் இயல் திறனுக்கேற்ப கவிதைபடைக்கும் ஒரு கவிஞன் இதோ என் கவிதை என்று தருவதை வாசகன் தன் இயல் திறனுக்கேற்ப வாசித்துப் பொருள் கொள்கிறான்ää ரசித்து அனுபவிக்கிறான்ää மதிப்பிடுகிறான். ஒரு கவிதை நல்ல கவிதையா இல்லையா என்பது நமது ரசனையின் பாற்பட்டதுதான். பஸீரும் நஸீரும் தம் எண்ணங்களையும் உணர்வுகளையும் கவிதைகளாகப் படைத்து ஒரு தொகுதியாக இதோ வாசகர்முன் வைத்திருக்கிறார்கள். இனி இவை வாசகர்களுக்கு உரியவை. தம் திறனுக் கேற்ப இனி அவர்கள் இவற்றுள் நுழைந்து அனுபவிக்கலாம்ää மதிப்பிடலாம்.

தம் சமூகக் கடப்பாட்டை தம் கவிதைகள்மூலம் வெளிப்படுத்தியுள்ள பஸீருக்கும் நஸீருக்கும் எனது பாராட்டுகள்.

எம். ஏ. நுஃமான்
இந்திய ஆய்வியல் துறை
மலாயாப் பல்கலைக்கழகம்
மலேசியா. 12.12.2007

No comments:

Post a Comment

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமானது மிகவும் ஆபத்தானதாகும்”

  THENEEWEB    25TH FEBRUARY 2019 பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்தி பொலிஸ் ஆட்சியை ஏற்படுத்த அரசாங்கம் திட்டுமிட்டு வருகின்றது...