Posts

Showing posts from May, 2017

மேதினத்தன்று காலிமுகத்திடலில் திரண்ட சன சமுத்திரம் சொல்லும் சேதி என்ன ? தோழர்மணியம்

தென்னாசிய நாடுகளிலேயே  இலங்கையில்தான் மேதினம் வெகுசிறப்பாகக் கொண்டாடும்  வழக்கம் உள்ளது எனச் சொல்லலாம். அதேநேரத்தில் இங்குதான் தொழிலாளர்களின் கட்சிகள ; மட்டுமின்றி, கடைந்தெடுத்த  முதலாளித்துவக் கட்சியான ஐக்கிய தேசியக்க ட்சியும் பிற்போக்கு தமிழ் கட்சிகளும் மேதினத்தைக் கொண்டாடும் விந்தையும் நடைபெறுகிறது. ஆனால் பிரித்தானிய ஏகாதிபத்தியம்  இலங்கையை அடிமைப்படுத்தியிருந்த காலத்தில் மட்டுமின்றி,  1948இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைதத்த பின்னர் ஐ.தே.க. ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் கூட  19656இல் எஸ் . டபிள்யு .ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் ஆட்சி அமையும் வரை இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் மேதினத ;தை சுதந்திரமாகக் கொண்டாட ஐ.தே.க. அரசு அனுமதிக்கவில்லை. பண்டாரநாயக்க ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னரே மேதினம் சம்பளத ;துடன் கூடிய விடுமுறை தினமாகக் கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் கூட 1966இல் அப்போதைய ஐ.தே.க. தலைமையிலான அரசில் பிற ;போக்கு தமிழ் கட்சிகளான தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸ ; கட்சியும் இணைந்திருந்ததால் அக்கட்சிகளின் தூண்டுதலால் யாழ்ப்பாணத்தில் மட்டும்

ஹக்கீமுக்கு ஏற்பட்ட காலம் பிந்திய ஞானோதயம்! -இத்திரீஸ

''இஸ்ரேலுக்கு எதிராக யுனெஸ்கோ அமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை கலந்து கொள்ளாமை சர்வதேச ரீதியாக தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டது. பாலஸ்தீனம் தொடர்பிலான எமது நிலைப்பாட்டை நாம் அறிவிக்க வேண்டும். பாலஸ்தீனத்துக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. இவ்விரு நாடுகளுக்குமிடையிலான நட்பு பலமாகக் காணப்படுகிறது. அந்நாட்டு மக்களின் குறிக்கோள்கள் தொடர்பாக எமது வெளிநாட்டுக் கொள்கையிலும் பிரதானமாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

‘நல்லாட்சி’ அரசு இராணுவ அரசாக உருமாறப் போகிறதா?

Image
இ ரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் “நல்லாட்சி” என்று சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இன்றைய மைத்திரி – ரணில் அரசாங்கம், தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமலும், நாட்டில் பூதாகரமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமலும் தத்தளிக்கின்ற சூழ்நிலையில், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்கின்றதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தால் தமது பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் எனக் கூடுதலாக எதிர்பார்த்தவர்கள் நாட்டின் சிறுபான்மை இனங்களைச் சேரந்த மக்களே. அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்தனர். அதற்குக் காரணம் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி மைத்திரி – ரணில் கூட்டை ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, “நல்லாட்சி”யின் மூலம் தமிழ் மக்களின் அத்தனை பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிடும் எனக் கொடுத்த அபரிமிதமான நம்பிக்கைதான்.

மோடியின் கோட்பாடான “பிரிக்கமுடியாத பரஸ்பர பாதுகாப்பு” ஸ்ரீலங்காவின் தேசிய நலன்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது கலாநிதி.தயான் ஜயதிலகா

Image
பிரதம மந்திரி மோடியின் ஸ்ரீலங்காவுக்கான இரண்டு நாள் விஜயம் அரசியல் சார்பற்றது என்று   கூறப்பட்டது. இருந்தம் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த சர்வதேச வெசாக் மாநாட்டில் அவர் உரையாற்றும்போது, இந்தோ - லங்கா உறவுகளுக்கு அதுவும்  விசேடமாக ஸ்ரீலங்காவுக்கான மோடியின் கோட்பாட்டை நிலை நிறுத்தினார். அவருடைய செய்தி அரிதாக அரசியல் அல்லாத ரீதியிலோ அல்லது முற்றிலும் கலாச்சாரம் மற்றும் நாகரிக ரீதியில் இருந்தது என்று சொல்வதை விட தர்ம அசோகனுடையதாக இருப்பதைக் காட்டிலும் அதிகம் கவுட்டிலியனுடையதாகவே இருந்தது. நாட்டின் உயர் தலைமைகள்  தற்போதைய அரசாங்கம் - எதிர்க்கட்சி என்பனவற்றுக்கு அவர் நாட்டின் இறையாண்மை இருப்புகளின் வரம்புகளை பரிந்துரைத்தார். இப்படித்தான் அவர் சொல்கிறார் “பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புஃமூலோபாயம் ஆகியன நாடுகளுக்கு இடையேயான அதிகார உறவுகள் என்னும் ஒரே அம்சத்தின் கூறுகளாக உள்ளன:

"இலங்கை – சீன உறவுகள்: 1952ஆம் ஆண்டுக்கு திரும்பி ஓடிய பிரதமர் ரணில்! "-சச்சிதானந்தன்

இலங்கையின் தற்போதைய மேற்கத்தைய சார்புஅரசாங்கத்தின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஏப்ரல் மாதத்தில்தான் விரும்பாத ஒரு நாட்டுக்குஅதாவது மக்கள் சீனத்திற்குபிச்சா பாத்திரம் ஏந்தி ஒரு நடைபோய்விட்டு வந்திருக்கிறார். சுமார்ஒன்றேகால் வருடத்திற்கு முன்னர்இதே அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட பெரும்பாலானதலைவர்கள் கிளப்பிய சீன விரோதவெறிக்கூச்சலைப் பார்த்தவர்களுக்கு, பிரதமரின் சீனவிஜயம் ஆச்சரியத்தைக்கொடுத்திருக்கும் என நம்பலாம். வரலாறு சில தனிமனிதர்கள்விரும்பியவாறு செல்வதில்லை என்பதற்கு தற்போதைய இலங்கைஅரசாங்கத்தின் சீனா பற்றிய கொள்கையில் ஏற்பட்டுள்ள 180 பாகை பல்டியடிப்பு ஒரு உதாரணம். 2015 ஜனவரி 08ஆம் திகதிஇலங்கையில் ஜனாதிபதித்தேர்தல் நடைபெற்ற போது, முன்னொருபோதும் இல்லாத வகையில் சீனாவுக்கு எதிரானபிரச்சாரம் உச்சத்தை எட்டியது. பாரம்பரியமாக சோசலிச எதிர்ப்பிலும், சீன எதிர்ப்பிலும் மூழ்கி எழுந்த ஐ.தே.க. மட்டுமின்றி, எதிரணி ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக மாறிய, சீன நட்புறவைஎப்போதும் பேணி வந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின்

காலி முகம் - பசுமையில் இருந்து எழுதுவது சி.ஏ.சந்திரபிரேம

Image
2016ல் நடந்ததை நினைவுபடுதினால், கூட்டு எதிர்க்கட்சியினர் க ிருலப்பொனயில் நடத்திய மே தின பேரணிக்கு நான் வந்தபோது நேரம் கிட்டத்தட்ட பி.ப 5.00 மணி, தொலைபேசி மூலம் நண்பர்கள் சொன்னது, ஐதேக மற்றும் ஜேவிபி என்பனவற்றின் பேரணிகளுக்கு வந்திருந்த கூட்டம் இரண்டையும் சேர்த்தால் வருவதைவிட அதிகளவு கூட்டம் அங்கு வந்திருந்தது என்று, நான் அவர்கள் சொன்னது எதையும் நம்பவில்லை. பேரணிகள் அதன் உச்சத்தை அடையும் நேரமான பி.ப 4.00 மணியில் இருந்து அந்த இரண்டு பேரணிகளையும் பார்வையிட்டதின் பின்புதான் நான் கூட்டு எதிர்க்கட்சியின் பேரணி நடக்கும் இடத்துக்கு நான் வந்தேன். ஐதேக மற்றும் ஜேவிபி ஆகிய இரண்டுக்கும் வந்த கூட்டத்தை ஒன்று சேர்த்தால் வருவதைவிட பெரிய கூட்டம் எதிர்க்கட்சிக் குழுவுக்கு திரண்டிருந்தது என்று கூறுவதை  அந்த நேரத்தில் சற்று ஆடம்பரமான அறிவிப்பாகவே கருத முடிந்தது. இது விசேடமாக எதனாலென்றால் அந்தக் கூட்டத்தில் நான் கண்ட காட்சிகள் அதை வெளிக்காட்டவில்லை. கிருலப்பொனவில் பங்குபற்றியவர்களில் பெரும்பாலானவர்கள் அந்கிருந்த மேடையின் பக்கம் ஒரு பார்வையைக் கூடச் செலுத்தாமல் சென்றுவிட்டார்கள். பேஸ்லைன் வீதியில் சி

Depeam Interview -King Ratnam-Bazeer (Part 2)

Image

Deepam Interview-King Ratnam -Bazeer (part1 )

Image

"ஜே.வி.பியும் தேசிய இனப் பிரச்சினையும்" -தோழர் மணியம்

Image
1967 இல் ரோகண விஜேவீரவினால் ஆரம்பிக்கப்பட்ட “ஜே.வி.பி” என்று அழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு (தமிழில் மக்கள் விடுதலை முன்னணி) இப்பொழுது 50 வயது. அந்த இயக்கம் 1971 எப்ரலில் நடாத்திய முதலாவது ஆயுதக் கிளர்ச்சிக்கு (இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சி ஒன்றும் 1988-89 காலப்பகுதியில் நடாத்தப்பட்டது. அப்பொழுதுதான் ரோகண விஜேவீரவும் ஜேவிபி தலைமையும் அரச படைகளால் கைது செய்யப்பட்டு அழித்தொழிக்கப்பட்டனர்) இப்பொழுது 46 வயது. ஜே.விபிக்கு இனிமேலும் ஒரு ஆயுதக் கிளர்ச்சி செய்யும் உத்தேசம் இருப்பதாகத் தெரியவில்லை. அது இப்பொழுது முற்றுமுழுதாக முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஊறிய கட்சியாக மாறிவிட்டது.