யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன அரங்கு : விம்பத்தின் பதிவுகள்

யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன அரங்கு :
விம்பத்தின் பதிவுகள்

'விம்பம்' கலாச்சார அமைப்பினர் நடத்திய, தமிழகத்தின் புகழ்வாய்ந்த இலக்கிய வெளியீட்டாளர்களான ‘உயிர்மை பதிப்பகம்' வெளியிட்ட, யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் குறித்த விமர்சன நிகழ்வு, கவிஞர். திரு.மு.புஷ்பராஜனின் தலைமையில், செப்டம்பர் இருபத்து எட்டாம் திகதி, இலண்டன் ‘லேய்ட்டன் ஸ்டோன் குவாக்கெர்ஸ் ஹவுஸ்' மண்டப அரங்கில் நடைபெற்றது. விமர்சன நிகழ்வு இரு அமர்வுகளாக நடைபெற்றது.




இரண்டாம் அமர்வு ‘அரசியல் இஸ்லாம்' நூல் குறித்த திரு. எஸ்.எம்.எம். பஸீர் (7) அவர்களது விமர்சனத்துடன் துவங்கியது. வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்தும், மிகுந்த ஆர்வத்துடன் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். மிக விரிவாக நூலைக் குறித்துப் பேசிய அவர், மார்க்சிய அடிப்படையில் அரசியல் இஸ்லாமைப் புரிந்துகொள்ள முயன்றிருக்கும் யமுனா ராஜேந்திரன், இஸ்லாமிய இறையியலாளர்கள் இது குறித்து என்ன விதமான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள் என்பதிலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டினார்.

வஹாபிசம் பற்றிய எதிர்மறையான பார்வை நூலில் இருப்பதாகவும் அவர் அவதானித்தார். மேற்கத்திய அறிஞர் எல் பாஸிட்டோ, ‘இஸ்லாமில் பன்முகத்துவம்' இருக்கிறது எனக் குறிப்பிடுவதை ஒரு செய்தியாகவே யமுனா ராஜேந்திரன் நூலில் சொல்கிராறேயொழிய, இது குறித்து அவர் விரிவாக நூலினுள் பேசவில்லை என்பதனையும் பஸீர் சுட்டிக் காட்டினார்.

பாலஸ்தீனக் பெண்கவியான சுஹேர் ஹம்மத்தின், ‘செப்டம்பர் 11' குறித்த கவிதை தன்னை மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டதாகக் குறிப்பிட்ட பஸீர், அந்தக் கவிதை மொழியாக்கத்திற்காகவும் அதனது நேரடித் தன்மைக்காகவும் யமுனா ராஜேந்திரனுக்குத் தனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். ஈரானிய சினிமா பற்றிய விரிவான முழுக்கட்டுரை தனிப்பட்ட முறையில் தனக்கு மிகவும் பயனுள்ளதொன்றாக இருந்தது என்பதைனையும் அவர் குறிப்பிட்டார்.

பரந்த வாசிப்புடன் இந்த நூலை இஸ்லாமிய மார்க்சியர்களின் துணையுடன், மார்க்சியப் பார்வையில், அரசியல் இஸ்லாமைப் பாரத்திருக்கும் யமுனா ராஜேந்திரன், இன்னும் சமநிலையுடன் இஸ்லாமிய இறையிலாளர்களினதும், அதனோடு அதனது பன்முகத்தன்மையினை வெளிப்படுத்துமாறும் அடுத்து வரும் படைப்புக்களை எழுத வேண்டும் என பஸீர் தனது விமர்சனத்தில் கேட்டுக் கொண்டார்.

நன்றி: பதிவுகள் அக்டோபர் 2008 இதழ் 106

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...