நல்லதும் புதிதுமான பார்வையும் பாதையும் -எஸ்.எம்.எம்.பஷீர்


                                                                                            


( முருகேசு ரவீந்திரனின் "வாழ்க்கைப் பயணம்" சிறுகதைத் தொகுப்பு = ஒரு விமர்சனப் பார்வை )


எஸ்.எம்.எம்.பஷீர்

நாங்கள் எங்களின்  வழக்கமான பாதைகளிலிருந்து தூக்கி எறியப் பட்டவுடன்  , எல்லாம் முடிந்துவிட்டது என்று  நினைக்கிறோம் , ஆனால் இங்குதான் புதிதும் நல்லதும் ஆரம்பிக்கிறது.  “
                                                         லியோ டால்ஸ்டாய்
(Once we’re thrown off our habitual paths, we think all is lost, but it’s only here that the new and the good begins.  -Leo Tolstoy)

இப்போதெல்லாம்இலங்கையில் இலக்கிய நிகழ்வுகள் , நாவல்கள்  சிறுகதை , கவிதைத் தொகுப்பு வெளியீடுகள் என்று நாடு களைகட்டியுள்ளது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கோலாகலமாக   2011 ஆம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்று முடிந்த பின்னர் பாரதி விழாவும்  உலகத் தமிழ் இலக்கிய விழாவும் இணைந்தே 2012 ல் நடந்து முடிந்துள்ளது. எங்கு பார்த்தாலும் புத்தக வெளியீடுகள் இலக்கிய நிகழ்சிகள் நடந்து கொண்டிருக்கின்ற ஒரு சூழல் இலக்கிய ஆர்வலர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. "வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர் 
"நீ என் எலும்புகளை நொறுக்கலாம்
என் ஆத்மா வெல்லற்கரியது.
நீ என் பார்வையைப் பறிக்கலாம்
என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதது "
பாலஸ்தீன 
பெண் கவிஞர் நஷீடா இஸ்ஸத் (மொழியாக்கம் : எஸ்.எம்.எம்.பஷீர்

ஜூன் மாதம்   2ஆம் திகதி   கொழும்பு மருதானையிலுள்ள முஸ்லிம் மாதர் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற "வேர் அறுதலின் வலி" எனும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு  விழாவில் கலந்து கொள்ளும் அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது, அங்கு கருத்துரையாற்றவும் ஏற்பாட்டுக் குழுவினர் சந்தர்ப்பம் வழங்கினர். அந்நிகழ்வில் வெளியிடப்பட்ட "வேர் ஆறுதலின் வலி " எனும் கவிதைத் திரட்டு நூல் பற்றிய எனது சிறு குறிப்பே இது. 

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...