Posts

Showing posts from August, 2019

2019 ஜனாதிபதி தேர்தல் மூலமும் நாட்டின் நெருக்கடி நிலை தீராது டியு குணசேகர கூறுகிறார்

Image
“நமது நாடு ஆழமான அரசியல் நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுள்ளதால் 2019இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் மூலம் கூட நாட்டில் ஸ்திரத்தன்மையை மீட்டுவிட முடியாது” இவ்வாறு கூறியிருக்கிறார் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் டியு குணசேகர. டியு குணசேகரவின் 60 ஆண்டுகால அரசியல் பங்களிப்பைக் கௌரவிக்குமுகமாக கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், “நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது விட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. படம்: தோழர் டியு குணசேகர. தேசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தேசியத் தலைமை ஒரு ஆக்கபூர்வமான கொள்கையைப் பின்பற்றும் என நம்புகிறேன். நாடாளுமன்றம் இன்று ஒரு குழப்பமான சூழ்நிலையில் உள்ளது. பிரச்சினைகளைக் கையாள்வதில் உறுப்பினர்கள் ஆற்றல் அற்றவர்களாக உள்ளனர். தற்போதைய நெருக்கடிக்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நிகழும் மோதல

ஐ.நா. விசேட அறிக்கையாளர் மீது கொழும்பு பேராயர் அதிருப்தி!

Image
ஐ.நா. விசேட அறிக்கையாளர் மீது கொழும்பு பேராயர் அதிருப்தி! ஆகஸ்ட் 1, 2019 க டந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் Clement Nyalettossi Voul என்பவரை கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் விமர்சனம் செய்திருப்பதாக கத்தோலிக்க தேவாலயத்தின் பேச்சாளர் வணக்கத்துக்குரிய யூட் கிறிஸ்கந்த தெரிவித்துள்ளார். ஐ.நா. விசேட அறிக்கையாளர் வடக்கில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிப்பதற்காகச் சென்ற அதேசமயம், ஈஸ்டர் ஞாயிறன்று 250 பேரைக் கொலை செய்து, 500 பேர் வரை காயமடைய வைத்த குண்டுத்தாக்குதல்கள் குறித்து விசாரிக்கத் தவறியுள்ளமை குறித்தே கொழும்பு பேராயர் தமது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

காஷ்மீரைப் புரிந்துகொள்ளல்: சில குறிப்புகள்-தொகுப்பு: சாரி, த.ராஜன்

Image
ஆகஸ்ட் 7, 2019 இந்தியா மாநிலங்கள் கடந்துவந்திருக்கும் பாதை இந்தியாவில் ‘மாநிலங்கள்’ எனும் அமைப்பு கடந்துவந்திருக்கும் பாதையும், ‘மாநிலங்கள்’ கைகளில் உள்ள அதிகாரங்களும் மத்தியிலுள்ள ஆட்சிக்கேற்ப மாறிவந்திருக்கின்றன. 1950-ல் இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது 7 மாநிலங்கள் மட்டுமே இருந்தன. 1956-ல் மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது, மேலும் 5 மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது. 1975-ல் சிக்கிம் இந்தியாவின் ஒன்றியப் பிரதேசமாக இணைந்தது. அதன் பிறகு பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்கள் தனி மாநிலங்களாயின. வடகிழக்குப் பிராந்தியத்தில் இருந்த ஒன்றியப் பிரதேசங்களில் சில மாநிலங்களாயின. மாநிலங்களின் எண்ணிக்கை 22 ஆனது. 2000-ல் பாஜக ஆட்சியில் ஜார்க்கண்ட், சண்டிகர், உத்தராகண்ட் ஆகிய மூன்று மாநிலங்கள் உதயமாயின. இடைப்பட்ட காலத்தில் கோவா உள்ளிட்ட சில ஒன்றியப் பிரதேசங்கள் மாநில அந்தஸ்தைப் பெற்றன. 2000-ல் மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக இருந்தது. 2014-ல் தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டதால், மாநிலங்களின் எண்ணிக்கை 29 ஆனது. தற்போது ஜம்மு, காஷ்மீர்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?- பிரதீபன்

Image
ஆகஸ்ட் 21, 2019 -பிரதீபன் எ திர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னவிதமான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது பலரின் கேள்வியாக இருக்கின்றது. பொதுவாகத் தமிழ்த் தலைமைகளினதும் குறிப்பாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் கடந்தகால அரசியல் நிலைப்பாட்டைத் தெரிந்தவர்கள், ‘இதிலென்ன சந்தேகம் அவர்கள் வழமைப்பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தம் வேட்பாளரைத்தான் ஆதரிப்பார்கள்’ என எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுவார்கள். அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு முன்னர் இந்த விவகாரத்தில் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்னவென்பதை முதலில் பார்த்துவிடுவது நல்லது. கடந்காலங்களில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கங்களில் பங்காளிக் கட்சியாக இருந்ததும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்த பெரிய கட்சியுமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி இம்முறையும் மகிந்த அணி நிறுத்தியுள்ள வேட்பாளரையே ஆதரிக்கும் என்பது பலரினதும் கருத்தாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்முடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் ; டியூ குணசேகர

Image
  THENEEWEB    19TH AUGUST 2019 ஏகாதிபத்தியவாதிகளின் தலையீட்டிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்முடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி தனித்து போட்டியிடுவதால் எமக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கோத்தாபயவின் வெற்றிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பங்களிப்பு அத்தியாவசியமாகும். தனித்து இதனை மேற்கொள்ள முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன தற்போது பிரிந்து செயற்பட்டாலும் இரண்டும் ஒரே கொள்கையுடையதாகும். அதனால் சர்வதேச தலையீடுகளில் இருந்து பாதுகாத்து, நாட்டை கட்டியெழுப்ப இந்த தீர்க்கமான தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்முடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி இம்முறை தனித்து போட்டியிடுவதாக அறி

அமெரிக்காவை வரவழைக்கும் ஐ.தே.கவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணையக்கூடாது! - சுப்பராயன்-யாழ்பாணத்தில ; பேராசிரியர் ; திஸ்ஸ விதாரண

Image
ஐக்கிய தேசியக்கட்சி இலங்கையில் ஐ.அமெரிக்கத் தலையீட்டைக் கோருவதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அக் கட்சியுடன் கூட்டு வைக்கக்கூடாது” என வலியுறுத்தியுள்ளார் லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர்  பேராசிரியர்  திஸ்ஸ விதாரண  அண்மையில் யாழ்ப்பாணத்தில் முகாமைத்துவ அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு உரையாற்றுகையில், தேசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழ் தலைவர்கள்  முதலில் தாம் இலங்கையர்கள் என்றே சிந்திக்க வேண்டும,  அதன் பின்னரே தாம் தமிழர்களால் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள்  என எண்ண வேண்டும ; எனக் குறிப்பிட்டார். படம்: பேராசிரியர்  திஸ்ஸ விதாரண

முறிகள் மோசடிக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் தற்போதைய அரசாங்கம்

இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய  மோசடியான மத்திய வங்கி முறிகள் மோசடி இடம்பெற்று நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டன. இந்த மோசடி தொடர்பிலான வழக்கின் முதலாவது பிரதிவாதியான அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிப்பது தொடர்பிலான உத்தரவை ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி பிறப்பிப்பதாக மேல் நீதிமன்றம் 24.07.2019 இல் அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதியே இந்த மோசடி இடம்பெற்றது. 26.01.2015 இல் மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்ற அர்ஜுன மகேந்திரனின் பதவி,30.06.2016 இல் முடிவுக்கு வந்தது. இவர் ஆளுநராக பதவி வகித்தபோது,  நிதியைத் திரட்டிக்கொள்ளும் முகமாக,  30 வருடங்களில் முதிர்ச்சியடையும் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான முறிகளை விநியோகிப்பதாக அறிவித்தார். ஏலத்தின் நிறைவில் 20 மடங்கு அதிகரிக்கப்பட்டு, 20 பில்லியன் ரூபா வரை முறிகளை விநியோகிப்பதற்கு இவர் தீர்மானித்தார். எனினும் மத்திய வங்கி அதிகாரிகளின் எதிர்ப்பினால் அது 10 பில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டது.