அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (7)
எஸ்.எம்.எம்.பஷீர்

சிறிய தற்காலிக பாதுகாப்பினை பெறுவதற்காய் யார் அடிப்படையான சுதந்திரங்களை  கைவிடுகிறார்களோ , அவர்கள் சுதந்திரத்திற்கோ  பாதுகாப்பிற்கோ  அருகதையற்றவர்கள்” 

                                                                                       பெஞ்சமின் பிராங்ளின் 

( “They that can give up essential liberties to obtain a little temporary safety deserve neither liberty nor safety”- Benjamin Franklin)

நிஜம், !  நிழல்!!, நிதர்சனம் !!!

ஸ்னோடென் மொஸ்கோவிலுள்ள விமான நிலையத்தில் இருப்பதனை ரஸ்சிய அரசு உறுதி செய்திருந்தது. இதுவரை அவரின் அகதி விண்ணப்பத்தை எக்குவடோர் அரசு பரிசீலனை செய்வதாக கூறியுள்ளது , அமெரிக்க உப ஜனாதிபதி எக்குவடோர் ஜனாதிபதியிடம் ஸ்னோடெனுக்கு புகலிடம் வழங்க வேண்டாம் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளார். அமெரிக்க அரசியல் மனித உரிமை, சர்வதேச சட்டங்கள் ராஜீய உறவுகள் மீறல் தொடர்பான அயோக்கியத்தனம் பற்றிய செய்திகள் வெளிவர வெளிவர , அமெரிக்க அரசு  மறு புறத்தில் ரஷ்யா சீனா என்று தனது கடுப்பினைக் காட்டி வருகிறது , ராஜீய உறவு குறித்து அச்சுறுத்தல்களையும் மேற் கொண்டு வருகிறது. விமான நிலைய வாழிட நாடற்ற மனிதனாக அமெரிக்கா தனது கடவுச் சீட்டையும் இரத்துச் செய்தவுடன் ஸ்னோடென் எத்தனை காலம் அசாஞ்சே இலண்டன் எக்குவடோர் தூதுவராலயத்தில் வாழ்வதுபோல் வாழப்போகிறார் என்கின்ற போது. முதன் முதல் பிரான்சில் விமான நிலையத்தில் வாழ்ந்த   மெஹ்ரன் கரிமி  நஸ்சரி கதை ஞாபகத்துக்கு வருகிறது.


அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (6)


எஸ்.எம்.எம்.பஷீர்

"பெரியண்ணா கண்காணிக்கிறார்" (Big Brother is watching) 

நான் ஒரு  துரோகியோ , அல்லது ஒரு வீரனோ அல்ல . நான் ஒரு அமெரிக்கன் “     எட்வர்ட்  ஸ்னோடென்
 “I am neither a traitor, nor a hero. I am an American”   ( Edward Snowden )
ஒரு புறம் பிராட்லி மான்னிங்கின் வழக்கு  விசாரணைகள் இராணுவ நீதிமன்றில் நடந்து கொண்டிருக்கும் வேளையில்   இன்னுமொரு பூதம் அமெரிக்காவிற்கு எதிராக கிளம்பியுள்ளது

அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (5)
எஸ்.எம்.எம்.பஷீர்


உண்மை  அமெரிக்காவின்  தேச விரோதி!

யார் எவர் என்ற  வேறுபாடில்லாமல்  மக்கள் உண்மையைக் காண வேண்டும் , ஏனெனில் தகவல்கள் இன்றி  பொதுமக்கள் விபரமறிந்த முடிவுகளை மேற்கொள்ள முடியாது

                                                         பிராட்லி எட்வர்ட் மான்னிங்  (Bradley Edward Manning)

அமெரிக்காவின்  அந்தரங்கங்களை  அகிலத்துக்கு எடுத்துக்காட்டி  உலகம் தழுவிய ஒரு பொது விவாதத்  தளத்தை , கலந்துரையாடலை ஏற்படுத்தப் போவதாக  நம்பியே கேபிள் (கம்பி வடம்) செய்திகளை  வெளிக் கொண்டு வந்தார் பிராட்லி மான்னிங் . அமரிக்காவின் இராணுவ பிரிவில்   ஒரு பனி ஆணையற்ற இராணுவ புலனாய்வு தொகுப்பாளராக கணனித் தகவற்  தொழிநுட்ப பகுதியில் இராக்கில்  பணியாற்றிய பொழுது  பிராட்லி மான்னிங்  அமெரிக்காவின் ஜனநாயகம் , மனிதத்துவம் பற்றிய பொய் முகத்தினை , தனது கைகளையும் கண்களையும் தாண்டிச் செல்லும் செய்திகளை   கண்டு மன உளைச்சலுக்கு மனச்சாட்சி உறுத்தலுக்கு உட்பட்டார்.

UK Tory Party threatens war against Russia, prepares class war at home By Thomas Scripps

  Warning Russian President Vladimir Putin of “what could be a very, very bloody war”, UK Defence Secretary Ben Wallace announced yesterday ...