“ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் பாகம் 3


எஸ்.எம்.எம்.பஷீர்

அரசியலில் தன்னை சமூகத்தின் பெயரால், நாட்டின் பெயரால் தக்க வைக்கின்ற செயற்பாடு என்பது அரசியலில் பொதுவானது ஆனால் சிறுபான்மை சமூகங்களின் அரசியலில் தன்னை தமது கட்சியை தக்க வைக்கின்ற செயற்பாடு சிலவேளைகளில் சமூகத்திற்கு பல தீமைகளும் இழைத்துவிடுகிறது. அந்த வகையில் தான் அரசியல் சில இன அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்கள் , கட்சிகள் என்பன செயற்படுகின்றன. அதற்கான காலச் சூழல்கள் "இனப்பிரச்சினை" தொடர்பான போராட்டங்களுடன் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இன ரீதியான அரசியல் அமைப்புக்கள் இன்றைய இலங்கையின் அரசியல் சூழலில் மிக ஆழமாக புரையோடி போயிருக்கும் அச்ச உணர்வின் மீது தமது தளத்தினை கட்டமைத்து , போஷித்து வருகிறது. இவ்வாறான சூழலில் சக சிறுபான்மை இனத்துடனான அரசியல் கூட்டுக்களும் பல சந்தர்ப்பங்களில் சந்தர்ப்பவாதக் கூட்டாகவே அமைகின்றன என்பதை வரலாறு நெடுகிலும் காணக்கூடியதாகவுள்ளது.

ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும்-இறுதிப் பாகம்

எஸ்.எம்.எம்.பஷீர்

1988 ஜனாதிபதி தேர்தல் முஸ்லிம் காங்கிரசை பொறுத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்காரணம் , மாகாணசபைத்தேர்தலின் பின்னர் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஜே. வீ. பீ தொடக்கம் தெற்கிலே உள்ள தேசிய சக்திகள் முடுக்கி விட்ட தேசிய வாதமும் ( இத் தேசிய வாதம் அரசியல் ரீதியில் இன முரண்பாடு கூர்மையடைந்த ஒரு புள்ளிகளில் ஒன்றாக இந்திய இலங்கை ஒப்பந்தம் அமைந்ததால் சிங்கள தேசிய வாதமாக அடாயாளப்படுத்த பட்டது ) இவ் ஒப்பந்தம் ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அரசில் உட்கிடையான கலகத்தை ஏற்படுத்தி அக்கட்சியின் முக்கிய சில உறுப்பினர்களின் எதிர்ப்புக்களுடன் நிறைவேற்றப்பட்டதால் அக்கட்சியிலிருந்து முதலில் விவசாயத்துறை அமைச்சர் காமினி ஜெயசூரிய வெளியேறி இனவாத அடிப்படையில் "சிங்கள ஆரக்சக சந்விதாணய" (Sinhala Araksaka Sanvithaanaya ) என்ற கட்சியினை உருவாக்கினார். இக்கட்சி வழக்கம் போலவே சிங்கள மக்களால் இனவாத கட்சியாக நிராகரிக்கப்பட்டது. இத்தகு முன்னரும் பல சிங்கள தேசிய வாத , இனவாத கட்சிகள் சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்டது. அப்படியாயின் எப்படி சிங்கள இனவாத கட்சியாக இன்று அறியப்படும் சிஹல உறுமய எப்படி நாடாளுமன்றத்தில் உள்ளிடும் அளவுக்கு செல்வாக்குப்பெற்றது என்பது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

ஜனதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும்

எஸ்.எம்.எம்.பஷீர்

எனது ஜனதிபத்திதேர்தலும் இனப்பிரச்சினை தீர்வு எனும் மாயமான் வேட்டையும் என்ற கட்டுரையின் பின்னர் நிகழ்ந்த சில சம்பவங்கள் எனது கட்டுரையில் குறிப்பிட்ட அனுமானங்களை பின்னூட்ட கருத்துக்களை மெய்ப்பித்திருக்கின்றன; என்பதால் அவை பற்றி எனது அண்மைய அவதானங்களை எழுதலாம் என நினைக்கிறேன் அண்மையில் ( சில தினங்களுக்கு முன்பு ) காத்தான்குடியில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் சரத் போன்சேகாவுக்கான ஆதரவுக் கூட்டத்தில் பேசும்போது ஹக்கீம் புலிகளின் சென்ற ஜனாதிபதிதேர்தல் பகிஸ்கரிப்பு குறித்து ” சென்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்க்ரமசிங்ஹா தோல்வி அடையச் செய்யப்பட்டார். அந்த அர்த்தமில்லாத பகிஸ்கரிப்பு இன்று மிகப்பெரிய அனர்த்தங்களை உருவாக்கியது “என்று குறிப்பிட்டார்.

"நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையை பெற்றேன்"”

சென்ற 12 ம் திகதி கொழும்பில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட சூழலில் நானும் அங்கு செல்ல வேண்டி நேரிட்டபோது இடம்பெற்ற நிகழ்வுகள் இலங்கையின் அரசியல் சதி பற்றிய சம்பவங்களில் இராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை மீண்டும் அரங்கேற்றும் - நினைவூட்டும்- நிலையை ஏற்படுத்தியது. சரத் பொன்சேகாவின் துணைவியார் தனது கணவனை கைது செய்தமை, தடுத்து வைத்தமை அரசியலமைப்புக்கு எதிரான செயற்பாடாகும் என தனது மனுவில் முறையிட்டிருந்தார். அந்த வழக்கு விசாரனை அன்று உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் முன்பு எடுக்கப்பட்டபோது நீதிமன்ற  அவை பொன்செகாவினை ஆதரித்த முக்கிய கூட்டு கட்சிகளின் அரசியல்வாதிகள் உட்பட , சட்டத்தரணிகள், பத்திரிகையாளர்கள் என நிரம்பி வழிந்தது.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் – ஒரு தொடர் கதையாடல் (4)

எஸ்.எம்.எம்.பஷீர்
"மே மாதம் 21ம் திகதி ஸ்ரீ பெரும்புத்தூரில் ராஜீவ்காந்திக்கு நினைவாலயம் கட்டியிருக்கிறார்கள் அதே ஸ்ரீ பெரும்புத்தூரில் எமது பத்தினி தெய்வம் தணுவுக்கு நினைவாலயம் கட்டுவோம்"
                                                                                                  தேனிசை செல்லப்பா


கனடாவில் ஆகஸ்ட் மாதம் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழர் பண்பாட்டு மாநாட்டில் புலிகளின் பிரச்சார பாடகர் தேனிசை செல்லப்பா சூளுரைத்தது. (தமிழர் பண்பாட்டுக்கும் தற்கொலைதாரி தனுவுக்கும் என்ன சம்பந்தம் என்று தயவு செய்து என்னை கேட்டுவிடாதீர்கள் )

அமைதி குலைந்த அமைதிப்படை நாட்கள்

புலிகளுக் கெதிரான தாக்குதல்களை இந்திய அமைதிப்படை ஒருபுறம் தொடுக்க தெற்கில் மறுபுறம் ஜே வீ பீ இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற சதேகத்தின் பேரில் சிங்கள இளைஞர்களும், யுவதிகளும் அன்றைய ஐ.தே.கட்சி தலைமையிலான இலங்கை அரசின் பாதுகாப்பு படையினால் வகை தொகையின்றி கைது செய்யப்பட்டும் கொல்லப்பட்டும் போயினர். ஜே வீ பீ, இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு ஆதரவானவர்களாக கண்ட அரச உத்தியோகத்தர்களை பகிரங்கமாக ஆதரவானவர்களாக தெரிந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை கொல்வதில் ஒரு புறம் ஈடுபட, மறுபுறத்தில் புலிகள் அதே செயற்ப்பாட்டினை இந்திய ஒப்பந்தத்தை ஆதரித்த தமிழ் கட்சிகள் அக்கட்சிகளில் ஆயுதம் தாங்கி செயற்பட்டவர்கள் மீது வட கிழக்கில் செய்தனர்.

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் – 14
.                                                    எஸ்.எம்.எம்.பஷீர்நான் முன்னர் குறிப்பிட்டதுபோல்  வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழ் மக்களின் ஆணையைப் பெறும் முயற்சியில் கிழக்கில் முதல் முஸ்லிம் கட்சியான முஸ்லிம் ஐக்கிய முன்னணி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்டனர். வட்டுக்கோட்டை தீர்மானத்தை உள்வாங்கி அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்ட சம்சுதீன்- அஸ்ரபின் “முஸ்லிம் ஐக்கிய முன்னணி”யின் முக்கிய பிரச்சாரகரான அஸ்ரப் ஒருபுறம்; தமிழர் கூட்டணியின் மூதூர் சட்டத்தரணி மஹரூப் மறுபுறம் என தனிநாட்டுப் பிரச்சாரங்கள் அன்றைய அரசியலில் முன்னேடுக்கப்பட்டன. எல்லோராலும் அறியப்பட்ட அஸ்ரபின் ” அண்ணன் அமிர்தலிங்கம் தமிழ் ஈழம் அடையாவிட்டால் தம்பி நான் தமிழ் ஈழம் அடைவேன்” என்ற முழக்கமும் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குப்பெறவில்லை அதனால் வட்டுக்கோட்டை தீர்மானத்தை மட்டுமல்ல அதற்கு ஒத்தூதிய முஸ்லிம் தலைமைகளையும் கிழக்கு முஸ்லிம்கள் நிர்த்தாட்சண்யமாக நிராகரித்தனர்.

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் – 13


                                                             எஸ்.எம்.எம்.பஷீர்

தமிழர் கட்சிகள் வளர்த்ததெல்லாம் இனவாதமே தவிர வேறில்லை.


“சுத்தி சுத்தி சுப்பருடைய கொல்லைக்குள்” என்று உங்களுக்குத் தோன்றினாலும் வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் வேறுபடாத தமிழ் தேசிய வாதத்தின் “ஜனநாயக” போராட்ட அரசியலில் முஸ்லிம்களை நசுக்கும்வதும் நாசூக்காக பாவிப்பதுமான விசச் சக்கரம்  மாறுபடவே இல்லை;  எனவேதான் சிலதை மீண்டும் மீண்டுன் நினைக்காமலோ, அதனை எழுதாமலோ இருக்க முடியவில்லை . மக்பூல் பற்றிய இச்ச்சம்பவமும் அத்தகையதே !

இலங்கையிலுள்ள  முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவங்களுக்கும்  மக்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான தொடர்பாடல் குறை கண்டு, அதனை  தனது வெளிப்படையான மதிப்பீடாக அவர் இவ்வாறு குறிப்பிட்டார்  “ "தன்னுடைய மதிப்பீடு என்னவென்றால் அதிகாரப்பகிர்வு செயற்பாடு தொடர்பாக நாங்கள் கலந்தாலோசிக்கும்போது முஸ்லிம்களின் அக்கறைகளை தாங்களே பிரதிநித்துவப்படுத்துவதாக  ஆகக்குறைந்தது ஐந்து குழுக்கள் உரிமை    கோருகிறார்கள்   என்னுடனும் ஜனாதிபதி ஜெயவர்தனாவுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். நான் உண்மையில் எந்த குழுவினர் குறிப்பிட்ட பிரச்சினையில் நிஜமான அக்கறையுடன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதனை தீர்மானிப்பதில் குழப்பமடைந்திருக்கிறேன்.".

இந்த நிலைப்பாடு தோன்ற அன்று தெற்கு முஸ்லிம் தலைமைத்துவங்களின் வடக்கு -கிழக்கு தொடர்பான மாறுபட்ட அக்கறைகளும் மறுபுறம் கிழக்கிலேயும் வடக்கிலேயும் காணப்பட்ட வேறுபட்ட அரசியல் அபிலாசைகளுமாகும். இவ்வாறு மாறுப்பட்ட அரசியல் அக்கறைகளும் அபிலாசைகளும் டிக்ஸ்சிட்டை (Shri Dixit)  குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கவேண்டும்.

Sri Lankan Tamil and Muslim Diaspora Community representatives met Keith Vaz


London, 29 June, (Asian Tribune.com): A press release forwarded by the Sri Lankan Muslim Information Centre (UK) to "Asian Tribune" said that the members of the Tamil and Muslim communities representing various political parties and socio -political organizations met Keith Vaz M.P on his special invitation. Representatives met Keith Vaz, head of the All Party Parliamentary Group for Tamils on 27 June, at the House of Commons Offices, Portcullis House.
The press release pointed out that Keith Vaz was enthusiastic to know about the Tamils of the North and East and Britain and the deprival of their democratic rights by the LTTE. Participants observed that Keith Vaz has had an opportunity to learn about the wider views of the Tamils and Muslims who campaign for democracy and honorable and lasting political solution to the Sri Lankan ethnic crisis.
The full text of the Press release is given below:
Sri Lankan Tamil and Muslim Diaspora Community representatives met Hon.Keith Vaz, British Member of Parliament for Leicester East of the Labour Party and the head of the All Party Parliamentary Group for Tamils (APRG-T) at 5.40 P.M on 27 June 2007 at the House of Commons Offices, Portcullis House, London. The meeting was organised by the Tamil Democratic Congress.
Members of the Tamil and Muslim communities, who represent various political parties and socio -political organisations met Mr Keith Vaz M.P on his special invitation following by the Diaspora community. Mr Keith Vaz’s political secretary Vernon Hunte was also present during the meeting and had consistently interacted with the participants to clarify issues pertaining to the peace process, human right violations in Sri Lanka.
Mr. Keith Vaz showed immense interest to know about the human right violations in general and the Tamils in particular in the North and East in Sri Lanka. He was also keen to learn about the LTTE’s human rights violations in the North and East, as most of the participant had first hand knowledge of the LTTE’s intimidation and cruelty towards the Tamil and Muslim population in the North and East.
The Participants observed that Mr.Keith Vaz has had an opportunity to learn about the wider views of the Tamils and Muslims who campaign for democracy and honourable and lasting political solution to the Sri Lankan ethnic crisis. At the end of the meeting he responded positively that he would be helpful to the Parliamentary group in their effort to contributing to a political solution in Sri Lanka.
He was content with the views of those who were present, in relation to democracy and peaceful resolution to the Sri Lankan problem. He also assured that he would ensure that the members of all the organizations who were present are included in the future meetings of the APRG-T to bring in wider perspective of Tamils and Muslim views in the process.
He was enthusiastic to know about the Tamils of the North and East and Britain and the deprival of their democratic rights by the LTTE. He emphasized that he was not reliant on Tamil votes and his concern was not based on any political mileage. At the discussion Mr. Keith Vaz expressed that his out going Prime Minister, Mr. Tony Blair, could be involved in the Sri Lankan peace Process and his Parliamentary Group hope to visit Sri Lanka soon on a fact finding mission.
The group also raised their experience about the anti-democratic and anti-social activities of the LTTE to suppress the freewill of the Tamil people in the United Kingdom and the APPG chairman showed keen interest to see documentary evidence support this claim.
When insisted that he should also visit the LTTE controlled Vanni, the closed autocratic pocket of LTTE, he made a hilarious comment that he would be incarcerated in by the LTTE.
It emerged that the meeting was timely and enlightening to all those who participated and dispelled misunderstandings of the role of APPG-T.
Forwarded by the Sri Lankan Muslim Information Centre - UK)
Source:  Asian Tribune 
2007-06-29

Funding the "Final War" (Human Rights watch Report Vol 18 No.1 -2006)

III. A Culture of Fear: LTTE Intimidation, Threats, and Violence

In Sri Lanka, there is nothing scarier than being a Tamil person of influence-whether you are a teacher, a school principal, a doctor, a journalist, a politician, or a successful businessman. Ordinary Tamils have learned to keep their heads down, do exactly what their neighbors do, and not make waves. These lessons traveled with them to Toronto and London and Paris-where the LTTE and its supporters continued to take over and monopolize social structures, from refugee relief in the 1980s to newspapers, shops and temples. A few threats, a few smear campaigns, a murder or two, and the lesson is reinforced.
"[42] In December 2005, Seyed Bazeer, a U.K.-based lawyer, was accused by an LTTE-associated website of being linked to Al-Qaeda after he had spoken publicly against LTTE killings of Muslims in eastern Sri Lanka. The website, Nitharsanam, claimed that Bazeer, a Tamil-speaking Muslim, was the U.K. representative of the Sri Lankan arm of Al-Qaeda, and was "known to incite violence by spreading Osama Bin Laden's jihad theology and ideology." The site published a photo of Bazeer and urged U.K. government action to "curb the activities of such individuals."[43]

http://www.hrw.org/en/node/11456/section/4

மீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் (பாகம்-9)
                         எஸ். எஸ். எம். பஷீர்

எம்.ஐ.எம் முகைதீன் குழவினர் இரண்டு தடவைகள் சென்னைக்கு விஜயம் செய்து முதலில் மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களுடனும் செப்டம்பர் 1987 ல் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தனர். எனினும் இரண்டாவது தடவையான   (சித்திரை 1988)  விஜயத்திற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக ஏனைய ஆயதக் குழக்களின் முஸ்லிம்கள்மீதான அடாவடித் தனங்கள் குறித்து மு.ஐ.வி முன்னணி ஹர்த்தால்களை நடாத்தியிருந்தது. குறிப்பாக ஈ.என்.டி.எல்.எப், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு எதிராகவே இவர்கள் இரண்டாவது விஜயத்தில் 17 முஸ்லிம்களை கல்முனையில் கொல்லப்பட்டமை குறித்து இவ்வாயுதக் குழுக்களின் பிரதிநிதிகள் இந்தப்படுகொலைகளுக்கு புலிகள்தான் பொறுப்பு என்று முஸ்லிம் குழுக்களிடம் குற்றம்சாட்டும் முயற்சியில் சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்த இவர்கள் தங்கியிருந்த பிரசிடன்ற் (Pசநளனைநவெ )  ஹொட்டலில் முற்பட்டனர். எனினும் மேலும்  அவர்களிடம் புலிகளை மட்டும் சந்திப்பதற்கா வந்தீர்கள் என்றும் நீங்கள் நினைக்கின்றீர்களா புலிகளிடம் மட்டும்தான் ஆயதங்கள் இருக்கின்றதா என்றும் கேள்வி எழுப்பி எங்களிடமும் ஆயுதம் இருக்கின்றதெனச் சொல்லி இவ்விரண்டு ஆயுதக் குழுக்களின் பிரதிநிதிகள் அச்சுறுத்தும் பாணியில் நடந்துகொண்டனர். இச்சம்பவம் குறித்து தமிழகத்தில் வெளிவரும் யூனியர் விகடன் (துரnழைச ஏமையவயn) என்னும் வாராந்த சஞ்சிகை முஸ்லிம் தலைவர்கள் மரியாதையுடனும். சாந்தமாகவும் அச்சுறுத்திய இளைஞர்களைநோக்கி ' இங்கே பாருங்கள் தம்பிமாரே நாங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்ற சம்பவங்கள் குறித்து சென்னையிலிருந்து அறிக்கைகளை விடுபவர்கள் அல்ல, நாங்கள் எல்லோரும் அங்கிருந்து வந்தவர்கள்தான். எங்களிடம் நீங்கள் கல்முனையில் கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்கு உங்களுடைய இயக்கம்தான் பொறுப்பு என்பதனை நிரூபணம் செய்வதற்கு எங்களிடம் சான்றுகள் இருக்கின்றன. நீங்கள் அவ்வாறு விரும்புவீhகளானால் நாங்கள் அவற்றை பகிரங்கமாகவே வெளியிடத் தயாராக இருக்கின்றோம்.'

என்றும் தங்களிடம் ஆயுதம் இருக்கின்றதென குறிப்பிட்ட இளைஞர்களை நோக்கி 'நாங்கள் ஆயுதங்களுக்குப் பயந்தவர்கள் என்று நினைத்திடவேண்டாம், நாங்கள் ஏன் புலிகளுடன் கதைக்க வந்தோமென்றால் அவர்களிடம் ஆயதம் இருப்பதென்பதற்காக அல்ல, மாறாக அவர்கள் தமிழர்களின் சட்டபூர்வமான பிரதிநிதிகள் என்பதால் நீங்கள் எங்களை ஆயதத்தினால் அச்சுறுத்த முயற்சித்தால் நாங்களும் ஏராளமான ஆயதங்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல நாங்கள் மூன்றாவது தரப்பினருக்குப் பின்னால் பாதுகாப்புத் தேடி பலத்தைக் காட்ட மாட்டோம்.'  இது (ஐ.பி.கே.எப-ஐPமுகு );டன் இவர்கள் சேர்ந்திருப்புது குறித்தே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கெல்லாம் மூலகாரணமாக அமைந்தது என்னவென்றால் இந்தியப் பத்திரிகையாளரிடம் இம்முஸ்லிம் குழுவினர்; அந்தக்காலகட்டத்தில் கல்முனையில் இடம்பெற்ற முஸ்லிம்கள் 17 பேரின் படுகொலைக்கு புலிகள் காரணமல்ல வேறுஒரு ஆயதக்குழவினர்தான் காரணமென்று வெளியிட்ட அறிக்கைதான் இவ்விரு ஆயுதக்குழுவினரது கோபத்திற்கும் காரணமாயிற்று. முஸ்லிம் குழுவினரின் மூலம் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு மறுபுறத்தில் புலிகளும் உரம் சேர்த்தனர். இவ்வொப்பந்தத்தின சில அம்சங்களை இங்கு பார்ப்பதும் ஒருவரலாற்றினைப் பின்னோக்கிப் பார்ப்பதாக அமையும் என்பது மட்டுமல்ல தமிழ் தேசியவாதம் முஸ்லிம் அரசியலை தந்திரோபாயமாக எவ்வாறு முடக்கிவந்திருக்கின்றது என்பதற்கு ஆவணப்பதிவாகவும் அமைகின்றது. இவ்வொப்பந்தத்தின் அம்சங்களாக

•    ,இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழ் மொழியினை பேச்சு மொழியாகக் கொண்டிருப்பினும் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு உட்பட்ட ஒரு தனித்துவக்குழு.

•    முஸ்லிம் மக்கள் தங்களுடைய அக்கறைகள் தங்களின் தாயகத்தில் மாத்திரமே பாதுகாக்கப்படுமென்றும் இது அனைத்து தமிழ் பேசும் மக்களிடையேயான பரந்துபட்ட ஒற்றுமையினூடாகவே அடையப்படக்கூடியது என்றும் நம்புகின்றார்கள்.

•    முஸ்லிம் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பகுத,p ஏனைய தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகம்போல் தமக்கும் தாயகமே என்று புரிந்துள்ளார்கள்.

•    முஸ்லிம் மக்கள் தமது தாயகத்தில் சிறுபான்மையினராக உள்ளதால் அவர்களது வாழ்க்கை அச்சம், பாதுகாப்பின்மையிலிருந்து சுதந்திரமாக வாழ்வதனை உறுதிசெய்வது முக்கியமானதாகும்.. புலிகள் இதனை உறுதிசெய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுடன் எதிர்காலத்தில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் சட்டவாக்கத்தினை உருவாக்குவதில் ஒத்துழைப்பு நல்குவார்கள். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் சனத் தொகையில் 33 வீதமாகவும்; இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் 18 வீதமாகவும் உள்ளனர். ஆவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பினை உறுதிசெய்யவும், நீதியான அதிகாரப் பகிர்வினை அனுபவிப்பதனை இயலுமாக்கவும், மாகாண சபையிலும் அதன் மந்திரி சபையிலும் 30 வீதத்திற்கு குறைவில்லாத பிரதிநிதித்துவத்திற்கு குறைவில்லாத பிரதிநிதித்துவத்திற்கு உரித்துடையவர்களாக இருக்கவேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

•    மேலும் எதிர்கால நிலப்பங்கீடு எல்லாவற்றிலும் முஸ்லிம் மக்கள் 35 வீதத்திற்கு ற்கு குறையாத விழுக்காட்டினை கிழக்கு மாகாணத்திலும் 30 வீதத்திற்கு குறையாத விழுக்காட்டினை மன்னார் மாவட்டத்திலும் 5 வீதத்திற்கு குறையாத விழுக்காட்டினை ஏனைய பகுதிகளிலும் பெறுவதற்கு உரித்துடையவர்கள் ஆவார்கள் என்பதனை எற்றுக்கொள்ளள

•    முஸ்லிம் ஒருவர் வடக்கு, கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக தோந்தெடுக்கப்படாதவிடத்து முஸ்லிம் ஒருவர் பிரதி முதலமைச்சராக மேற்படி சபைக்கு நியமிக்கப்படுவதனை உறுதிசெய்யும் சட்ட எற்பாடுகள் செய்யப்படவேண்டும்.


ஆகிய விடயங்கள் ஏனைய சில இங்க குறிப்பிடப்படாத அம்சங்களைவிட முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களாகும் இவ்வாறான ஒப்பந்தத்தின்மூலம் முஸ்லிம் குழுவினர் புலிகளின் அரசியல் சாமாத்தியத்திற்குள் சிக்குண்டு வெற்றிப் பெருமிதத்துடன் இலங்கைக்கு திரும்பினா.;---

தொடரும்.......
.

Professionalism, Peace Reporting and Journalists’ Safety in Sri Lanka


Seyed Bazeer, Human Rights Lawyer and member of the Sri Lankan Muslim Community in London:

"The constitution provides for freedom of speech which includes publication. Human rights violations
have been going on in Sri Lanka for a number of years. Just as under the regime of all the Sri Lankan leaders.
Martyn Lewis, a former BBC newsreader, once said: “We are very good as journalists at analyzing failure, but we are not so good at analyzing success” Sunanda mentioned about the journalists killed in Colombo but he failed to mention the violations of human rights of others killed. Who killed them? And why this has not been reflected in this meeting today. What about other journalists killed, journalists like Relangi Selvarajah and her husband, and Bala Nadarajah Iyer of Thinamurasu, a Tamil weekly. He was killed as well but nothing was said about him today. Is there any hidden agenda?

Another vexing problem is the way the media is being manipulated not to report about other human rights violations. We always talk about media freedom and democracy but when they killed people who stood for rights there, or who left the country? My photograph was published all over the place saying that I was an Al-Qaeda leader in Sri Lanka. I am a human rights lawyer but I am branded an Al-Qaeda leader by the pro-LTTE media when I criticize the LTTE. Hence our media freedom is also threatened here."


http://www.mediawise.org.uk/www.mediawise.org.uk/files/uploaded/Sri%20Lanka%20report.pdf

ரவிராஜ் என்னும் மனிதனின் அரசியல் சதிக்கொலை (Political assassination)


எஸ். எம். எம். பஷீர்

( 84 இதழ் 25 உயிர்நிழல்  ஒக்டோபர் - டிசம்பர் 2006)

அரசியற்படுகொலைகள் என்பது கீழைத்தேய வரலாற்றிலும் புதியதல்ல. சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம் அரசாட்சியின் ஒரு தவிர்க்கவொண்ணா உபாயமாக அரசியற்படுகொலை -சதிக்கொலை - குறித்து நியாயம் கற்பிப்பதனைக் கடந்து ஈராயிரம் வருடங்களுக்கு மேல் சென்றுவிட்டபோதும் ஜனநாயக விழுமியங்கள் உலகின் சட்டவாட்சியின் (Rule of Law )
அம்சங்களாக இன்று உறுதிப்படுத்தப்பட்டும் அவற்றிற்கெதிரான மீறல்கள் தண்டிக்கப்பட வேண்டியதாக அடையாளப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் பல சதிக்கொலைகள் இன்னும் உலகின் ஏதோ ஒரு பாகத்தில் இடம்பெறுவது சர்வ சாதாரணமாகும். இலங்கையில் ரவிராஜின் படுகொலை இடம்பெற்ற கால கட்டத்தில் லெபனானிலும் ரஷ்யாவிலும் இடம்பெற்ற அரசியல் வாதியினதும் பத்திரிகையாளியினதும் கொலைகள் அவற்றின்மீதான தீர்க்கமற்ற விசாரங்கள் பின்னணி குறித்த ஊகங்களாக முடிவுற்றது. துரதிர்ஷ்டவசமானவையே. நீண்ட காலத்தில் குற்றவாளிகள்போல் இழப்புக்களும் மறைந்தும் மறந்தும் போய்விடுகின்றன.


Bala: The Voice of TamilNation and Ears of Muslims!

                                                                                           
        
“There is no other way for securing yourself against flatteries, except that men understand that they do not offend you by telling you the truth, you fail to get respect”. Nicolo Machiavelli (The Prince 1513)

(December 23,London,Sri Lanka Guardian) The second anniversary of Anton Balasingham’s death is reported to have been remembered last week, by Northern Tamils under LTTE control and by the Tamil Diaspora who support the LTTE.

The writer wishes to remember Anton Balasingham in a different light.

Despite being a representative of a Terrorist organization, the British authorities took no notice of Balasingham’s public inflammatory speeches on the LTTE national Heroes’ days in London. Balasingham once made a bawdy comment about the former President Chandrika Bandaranayake when he addressed the LTTE national Hero’s day event in London.

He also once boasted about the LTTE’s might and ridiculed that “the Sinhalese would only understand beatings” when he was referring to the armed forces. It is confirmed by those who were once close to Balasingham, that MI5 had consistent contacts with him until his death, thus he enjoyed a privilege from being a spokesperson for a proscribed terrorist organization. His activities in Britain were not subject to any scrutiny but it was said that he was frequently approached by the British Authorities, whenever there were complaints against the LTTE’s activities. It is unthinkable that any spokesperson for Hamas or other proscribed terror organizations in the UK would be able to enjoy similar treatment. The spokesperson for the pro -LTTE British Tamil Forum, (BTF) claimed in his recent interview with a pro -LTTE London based radio that some of the UK parliamentary members admitted that they were branded as “White Tigers” for their participation in the campaigns of the BTF and that they were happy about it. This is the double standards British policy of subjugating small independent countries with their arrogant colonialist mindset in the name of human rights whilst they themselves are occupiers and violators of human rights of sovereign states like Iraq and Afghanistan.


As for Pirabakaran , Balsingham’s death was irreplaceable and this seems to be the case even after two years of his death. In his message of condolence he acknowledged that Balasingham was LTTE’s guiding star. He also legitimized Balasingham’s role in the movement “he (Balasingham) has a permanent historic place in the growth and the spread of our movement. He was its elder member, its ideologue, its philosopher and, above all, my best friend.” He also bestowed on him the title the “Voice of the Nation”.

The condolence message from Rauff Hakeem looked more or less similar to that of Pirabakaran and his well-expressed condolence message was well-received by the LTTE supporters. Hakeem’s accolade conveyed Balasingham as a great intellectual, philosopher, meticulous negotiator, Tamil nationalist, statesmen, the erudite, a political philosopher and the ears that ardently listened to the Muslims’ voice . The irony is that Pirabakaran said Balasingham was the voice of the nation whilst Hakeem remarked that he was the ear that listened to the voice of the Muslims. Although Balasingham listened to the Muslims, he voiced the Tamil nation. It is sad that he could not hear the cries of the thousands of Muslims who were expelled from the North by the LTTE in October 1990.

An excerpt of an interview between Anton Balasingham and a journalist from “Centre Point.” (November/ December 1993) is reproduced in order for the readers to judge as to what extent Balasingham had been truthful of the facts,

CP: It is ironic that you are restricting people, who want to leave, but it is the opposite for the Muslim community-how can you explain you’re asking them to go?

B
: The Muslim situation has to be viewed differently. In the East there was a lot of violence by armed Muslim groups and to prevent reactive violence in the North we had to ask them to leave, but we have told them that once the situation becomes normal they will be allowed to come back

CP: You are right! What About people like Professor Nuhman who taught Tamil at Jaffna University for 14 years... isn’t this exactly what the chauvinist Sinhalese in the South did? Also, isn’t this similar to the logic under lying the arrest and harassment of Tamils in Colombo now?

B:
The problem is that you are not viewing our plight in the Eastern province where Tamils were subjected to atrocities and thousands were forced to leave their villages and go to India. 8000 Tamils were wiped out in the Eastern province, many of these by armed Muslim groups with state backing.

CP: That is precisely the point. Whatever be the truth of these claims that their “Muslimness” has anything to do with their killings. See, the argument in the South is similar about terrorist attacks and bombs. Does “Tamilness” have anything to do with these attacks? Take the claim from the statistical probability which says that if there is a bomb in Colombo it is more likely that a Tamil is responsible. Does this justify the harassment and arrest on so on of hundreds of Tamils who are going about their ordinary business?

B:
Then why was there no response from the wider sections of the Sinhala public when their chauvinist government had embarked on genocidal policy?

CP: Again, surely the same question can be raised about the silence of the Tamils when 50 000 Muslims were asked to go?

B:
None of the Muslims were violently treated, nor were they subjected to any harassment or killing by the LTTE.

CP:I think what the concept of a traditional homeland shows powerfully is that to be forced to leave your home is violence, is great violence. Does the LTTE position have anything to do with “ethnic cleansing of the North East?

B:
No...

The LTTE political analyst, Sabesan from Australia, claimed in his second anniversary Remembrance Day broadcast at a London based Pro-LTTE radio that “Balasingham was the voice of the thoughts of the leader”. The reason set forth for the expulsion of the Muslims from the North is merely a repetition of what Prabakaran told the BBC. Yet Hakeem made another blunder in his message of condolence that “In a liberation organisation that has a one dimensional policy the decision of the leadership is conclusive, he (Balsingham)
took his own decisions and had the ability to stand firm in his decisions” .However the Former LTTE second in command, Karuna also admitted that neither Balasingham nor anyone else in the movement could make any decision other than Pirabakaran.
A close relationship between Balasingham and Eric Solheim was evident when he participated in his funeral in London. Eric Solheim, the Norwegian minister who attended his funeral in London claimed in his exclusive interview with the IANS.
"He was one of the persons in the peace process who never lied to me. He always spoke the truth as he saw it. I had a great amount of respect for him..."


Erick and the Balsinghams must have spent ample time together in London. When the writer contacted Eric Soleheim to verify the information as to whether he had dinner with Balasingham , his wife and a third person , presumably Shanthan , at a restaurant in Tooting, London; Eric confirmed it. Shanthan was later arrested and detained by the British authorities for his alleged involvement in the LTTE. It appears that Balasingham is no more and thus cannot see the difficult time and the rapid changes taking place in the theatre of war set in the Eastern political landscape but the UK Tamils, comprising of professionals, academics and students are teaming up with the UK parliamentarians to quench the “thirst” (Tamil Eeela Thayagam) of the LTTE. It is notable that unlike the LTTE Diaspora fanatics in the UK, Balasingham had the conscience to admit in his response to a question posed by the “Centre Point” journalist that his vague explanation would not satisfy the expulsion of the Muslims from the North by the LTTE and he eventually reinforced his remark by making clear that it was a “ political blunder”.

The majority of Diaspora Tamils who live in the UK outdo Balsingham in their efforts to get the British parliamentarians to mobilise the LTTE’s hidden agenda of “Tamil Eelam” in the name of the victims of war, both in and out of the British parliament.

( S.M.M.Bazeer is a political analyst based in London )
- Sri Lanka Guardian 
December 2008

ஊடகம் இனியும் பூடகமில்லை (பாகம் ஆறு)


 எஸ்.எம்.எம்.பஷீர்

                                
                                " நந்தவனத்தில் ஓர் ஆண்டி
                                அவன் நாலாறு மாதம் குயவனை வேண்டி
                                கொண்டு வந்தான் ஒரு தோண்டி
                                 அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி”.


இப்பகுதிக்கட்டுரையியின் முந்தியபகுதியில் முன்னாள் ஸ்ரீ பாலமுருகன்     இளைய அப்துல்லாஹ் என்றபெயரில் முஸ்லிம் மதத்தவராக மாறி வட மாகான முஸ்லிம் மக்களுக்காக புலிகளின் மிலேச்சத்தனமான முஸ்லிம் விரோத செயற்பாடுகளையும் இனப்படுகொலைகளையும் காட்டமாக கண்டிக்காது மேலுக்கு வட மாகான முஸ்லிம் வெளியேற்றம் பற்றி நாசூக்காக கண்டித்தமை தவிர புலிகளின் வேறு எந்தப்படுகொலை தொடர்பாகவோ பொதுவான மக்கள் விரோத செயற்பாடுகள் தொடர்பாகவோ கண்டிக்கவில்லை.
மேலும் வட மாகாணத்தில் சகல மக்களையும் போல் மண்சுமந்த மேனியராய் வாழ்ந்திருந்த முஸ்லிம் மக்களை புலிகள் பலவந்தமாக வெளியேற்றியதை -இன சுத்திகரிப்பு செய்ததை- இவர் தனது நூலொன்றில் செத்த ஆட்டின் உண்ணியாக கழற்றப்பட்டோம் என குறிப்பிட்டது தீபத்தில் பணிபுரிவது பற்றி தான் “முட்டாள்களின் கூடாரத்தில் இருக்கிறேன் ” என்று அவர் கூறியதைவிட முட்டாள்தனமான உதாரணமாகும் செத்த ஆட்டில் (வடபுலத்தில்) “இரத்தம் உறிஞ்சும் உண்ணிகளாக” முஸ்லிம்களை காட்டி இவர் என்ன சொல்லவருகிறார் என்பதை உங்களின் பகுப்பாய்வுக்கு விட்டு விடுகிறேன்.

“ஊடகம் இனிமேல் பூடகமில்லை! - பாகம் ஐந்து”


                                                               எஸ்.எம்.எம்.பஷீர்

இளைய அப்துல்லாஹ் என்பவர் பிரித்தானியாவில் உள்ள "தீபம்" தொலைக்காட்சியல் பணிபுரிபவர். இவர் எழுத்தாளராக கவிஞராகவிருப்பினும் ஊடகவியலாளர் என்றவகையில் புலிகளின் புளுகுப்பிரச்சார "தீபத்துக்கு" இவரும் எண்ணையை ஊற்றினார். தானும் புலிகளால் விரட்டப்பட்ட ஒரு " முஸ்லிம்" என்று கூறி முஸ்லிம்களுக்குள் அனுதாபம் தேடியவர் , பின்னர் ஏன் புலிகளின் பிரச்சாரத்துக்கு துணை போனார். ஆனால் இவர் புலிகளை எதிர்த்தவரோ அல்லது புலிகளுக்கு எதிராக குரல் கொடுத்தவரோ அல்ல , மாறாக புலிகளை வடமாகாண முஸ்லிம் வெளியேற்றத்துக்காக மட்டும் தனது எழுத்தில் "கண்டித்தவர்". ஆனால் வடபுல முஸ்லிம்களிடம் இவர் பற்றிய பின்னணி பற்றி உசாவினால் யாருக்கும் அவரை பெரிதாக தெரிந்திருக்கவில்லை. தனது நூலொன்றின் அறிமுகத்தில் "இலங்கை முஸ்லிம்களுடைய அடையாளத்தை பலர் விளங்குவதில்லை. அவர்கள் தமிழ் பேசுவதால் தமிழர்களல்ல...இஸ்லாமியர். அவர்களின் அடையாளம் தனித்துவமானது. அவர்கள் தனி இனம்." என்று எழுதியர் இவர்தானா என்று சந்தேகப்படுமளவுக்கு பின்னர் புலிபபரணி பாடியதாக கூறப்படுகிறது.

இவர் வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றம் குறித்து ஒலிப்பேழை வெளியிட்டுள்ளார் என்றும் அது குறித்து எழுதியுள்ளார் என்பதுதான் இலங்கையில் அறியப்பட்ட விடயம் , பின்னர் இங்கிலாந்து வந்து சிலகாலம் இங்கு தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராக பணியாற்றிவிட்டு இலங்கை சென்று (! )மீண்டும் இலண்டன் வந்து தீபத்தில் பணியாற்ற "வாய்ப்பு" பெற்றவர். வடபுலத்தில் முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்பிலக்கியங்களும் வட மாகான மக்களின் வெளியேற்றத்துடன் சிலகாலம் மௌனித்திருந்ததுடன், பின்னர் அது குறித்த எழுத்துக்களின் தீவிரம் முனைப்புப்பெற்ற கால இடைவெளியில் இளைய அப்துல்லாஹ் தன்னை வடபுல வெளியேற்றப்பட்ட முஸ்லிம் எழுத்தாளராக நிலைநிறுத்திக்கொள்ள முயன்றார். ஆயினும் இவர் உண்மையில் ஒரு தமிழர் என்றும் பின்னர் இஸ்லாம் மதத்தை தழுவியவர் என்பதும் அறிந்ததே. இவர் எப்போது ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்வியும் முக்கியத்துவமானது. ஏனெனில் இவர் ஒட்டிசுட்டானில் புளியங்குளத்தில் பிறந்தவர். அதேவேளை இவர் எண்பதுகளில் மாத்தளையில் வாழ்ந்தபோது சிறு கதைகளை "கனக ஸ்ரீஸ்கந்தராஜா" என்ற புனை பெயரில் எழுதியதாக அவரே தனது நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். இப்பெயர் முருகக்கடவுளின் பெயரான கந்தன் எனும் பெயரையும் உள்ளடக்கியுள்ளது.உண்மையில் அப்போது அவர் முஸ்லிமாக இருந்திருந்தால் அவ்வாறான பெயரை தனது புனைபெயராக தேர்ந்தெடுக்க காராணமில்லை. எனவே 1995 களில் அவர் முஸ்லிமாக இருந்தாரா என்ற கேள்வி எழுகிறது. அனஸ் ஓட்டிசுட்டானை சேர்ந்தவர் எனவும் அவருடைய பெயர் ஸ்ரீ பால முருகன் எனவும், ஒட்டிசுட்டானில் ராணுவம் சுற்றி வளைத்தபோது; ஆமியிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள ஒரு முஸ்லிம்வீட்டுக்குள் ஸ்ரீபாலமுருகன் ஓடியதாகவும், இலங்கை இராணுவம் அவரை துரத்திசென்றபோது , அவ்வீட்டு பெண் குளித்துகொண்டிருந்த நிலையை பார்த்து, இரரணுவம் திரும்பி சென்று விட்டதாகவும், அதன்பின் பால முருகன் காப்பாற்றப் பட்டதாகவும், அதனால், தன்னை காப்பாற்றிய அப்பெண்ணை திருமணம் செய்ததாகவும், இன்று, அவர்களது குடும்பமும் இஸ்லாம்மதம் மாறிவிட்டதாகவும் அப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம் இவர் தேர்ந்தெடுத்த அப்துல்லாஹ் என்ற பெயர், ஒருவேளை அந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவில் நாத்திகராகவிருந்த பிரபல எழுத்தாளர் நீரோட்டம் , தென்றல் பத்திரிகை ஆசிரியர் அடியார் இஸ்லாம் மத்தத்தை தழுவி தனது பெயரை "அப்துல்லாஹ் அடியார்" என்று மாற்றிக்கொண்டு முஸ்லிம்களுக்குள் பிரபல்யமாக அறியப்பட்டார். எனவே ஒருவேளை அவரது இளையவர் என்ற பொருள்பட ( Junior Abdullah ) தனது புனை பெயரை தேர்ந்திருக்கலாம். ஆனால் இவரது முஸ்லிம் பெயர் எம்.என்.எம்.அனஸ். அனாசின் சிறுவயது ஆசை முன்னாள் காலஞ்சென்ற பிரபல தமிழ் ஒலிபரப்பாளர் கே. எஸ். ராஜா எனும் கனகரத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா என்பவர் போல் வருவதாகும் , அந்த வகையில் தனது புனை புனை பெயராக அவரின் ( கே. எஸ். ராஜா ) பெயரையே தேர்ந்தேடுத்திருக்கலாம். அல்லது தனது உண்மையான பெயரான ஸ்ரீ பாலமுருகன் எனும் முருகனின் ( தமிழ் கடவுளின் ) பெயரை ஒத்த பெயரை ( முருகனின் ) இன்னுமொரு பெயருடன் வரிந்து கொண்டிருக்கலாம. எது எப்படி இருப்பினும் யார் இந்த அப்துல்லா என்பதை விட இவரது ஊடக புலிகளுடனான சல்லாபங்கள் எமது கேள்விக்கு உரியவை.இவர் புலிகளின் குரலாக , சிங்கள இனவாதத்தினை கக்குகின்ற ஊடகவியலாளராக தனது தொழில் மற்றும் இலண்டன் புலம் பெயர் வாழ்க்கைக்காக ஒரு கூலிக்கு மாரடிக்கும் ஊடகவியலாளராக செயட்பட்டாரா ?

இந்த இளைய அப்துல்லாஹ்வின் முஸ்லிம் சமூகத்துக்கான எழுத்துக்கள் குறித்து அவரின் நூலொன்றுக்கு முகவுரை எழுதியுள்ள மிகச்சிறந்த முஸ்லிம் எழுத்தாளர் , சமூக செயற்பாட்டாளர் நண்பர் ஓட்டமாவடி அரபாத் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

"தமிழ் மக்களின் வாழ்வை பகைப்புலனாகக்கொண்டு கதைகள் எழுதுய அளவிற்கு முஸ்லிம் மக்களின் வழ்வவலங்களை இளைய அப்துல்லா போதியளவு வெளிப்படுத்தவில்லை என்பதே எனது கவனிப்பு. மனிதனின் மனச்சாட்சியுள்ள குரலாக படைப்பாளி இருக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை. எனினும் தான் வாழும் சமூகத்தின் பெருமூச்சையும் துயரங்களையும் ஆக்க இலக்கியத்தின் ஊடாக அவன் பதிவு செய்வது அந்த சமூகத்திற்கு நன்றி செய்யும் நன்றிக்கடன் . அக்கடன் இளைய அப்துல்லாவை பொறுத்தவரை ஒரு "நிலுவை"யாகவே நிற்கிறது." இவ்விமர்சனமே விளக்கம் தேவையில்லாமால் அனசை விளக்கி நிற்கிறது.

அதேல்லாம் விட இவரது "புலிஷ்துதி" எல்லை மீறி பாதிக்கப்பட்ட தமிழ் அப்பாவி மக்களைக்கூட கண்டுகொள்ளாத அளவு அவரது கண்களை மறைத்து இதயத்தை இறுக்கி விட்டது என்பதற்கு இன்னுமொரு சாட்சி புலிகளின் இறுத்திக்கால நிகழ்வுகளில் போது ஈழவன் எனும் ஒரு தீபம் நேயர் எழுதிய கருத்து.

" ஊடகவியலாளர் திரு.அனஸ் முகமட் எனும் இளைய அப்துல்லாஹ் கூட தீபம் சார்பாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாரே தவிர விடுதலைப் புலிகளினால் ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் பற்றி குரல் கொடுக்கத் தவறி விட்டாரே ! (ஈழவன்)

அக்கருத்துக்கு இளைய அப்துல்லாஹ் எனப்படும் அனஸ் எனப்படும் ஊடகவியலாளர் என்ன எழுதினார் என்பதை நோட்டமிடுவோருக்கு தெளிவாகப்புரியும் இவர் முட்டாள்களின் கூடாரத்திலிருந்துகொண்டு கூலிக்கு மாரடிக்கும் ஒரு பேர்வழி என்பது. இதுவரை காலமும் புலிகளின் சார்பாக குரல் கொடுத்துவிட்டு இப்போது தான் முட்டாள்களின் கூடாரத்தில் இருக்கிறேன் என்று ஏற்றுக்கொள்வது புலிகள் பயம் இனி இல்லை என்பதை காட்டுகிறதா அல்லது புலிகளுக்காக வேலை செய்வதை தவிர்க்கமுடியவில்லை என்ற பச்சாதாபமா!. ஊடகத்தில் கூலிக்காக நிறையப்பேர் மாரடிக்கிறார்கள்

" ஈழவன் என்னைப்பற்றிய புரிதலோடு இருக்கிறீர்கள். என்னை எவ்வாறாகவாவது ஊடகத்தில் இருந்து தூக்கவே பலர் விரும்புகிறார்கள் அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் செய்கிறார்கள். உங்களுக்கு எங்கே தெரியும்? நீங்கள் புலி என்கிறீர்கள். புலி என்னை துரோகி என்கிறது குடும்பத்தை இங்கு வைத்துக்கொண்டு வேக் பேமிற்றில் இருந்து பாருங்கள் அந்த வலி தெரியும் உங்களுக்கு. முட்டாள்களின் கூடாரத்தில் இருந்துகொண்டிருக்கிறேன் ஈழவன்.”சரி அதுபோகட்டும் என்றால் தீபம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித்தயாரிப்பளராக பணியாற்றிய முன்னாள் புலிகளை விமர்சிக்கும் , நன்கு அறியப்பட்ட இலக்கிய விமர்சகர் ஒருதடவை என்னிடம் புலித்தலைவன் பிரபாகரனின் ஆளுமை கட்டுக்கோப்பு பற்றி வியந்து கூறியபோது நான் அறிந்த அவரா இவர் ! என்று குழம்பி எனது கருத்தை என்றும்போல் உறுதியாக தர்க்கரீதியாக சொல்லவேண்டி ஏற்பட்டது. தமிழ் தேசியம் என்று வந்தால் சில வேளைகளில் யார் எந்தப்பக்கம் என்று ஒன்றுமே புரியலே!

(குறிப்பு: நான் ஊடகவியலாளன் அல்ல மற்றும் எனது தொழிலும் அதுவல்ல, எனது எழுத்தும் ஊடக பங்குபற்றல்களும் ஊதியத்திற்காகவோ செய்யப்படுபவை அல்ல எனது கட்டுரைகளுக்கு தொலைபெசிமூலமும் மின்னஞ்ஞல் மூலமும் ஆதரவினை தெரிவித்துவரும் அனைவருக்கும் எனது நன்றிகள், மின்னல் ரங்காவினது இயக்கம் ஒரு அரசியல் கட்சியாக உத்தியோக பூர்வ அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது அக்கட்சி சிங்களத்தில் "புரவசி பெரமுன* (குடிசன முன்னணி ) என்ற பெயரில் ஜெயரத்தினம் ரங்காவை கட்சிச் செயலாளராக கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ) தொடரும் .. ..
Thenee (March 2010)

ஊடகம் இனியும் பூடகமில்லை -பாகம் நான்கு                                                                எஸ்.எம்.எம்.பஷீர்


"சுடரொளி" வித்தியாதரன் சென்ற வருடம் மாசியில் கொழும்பில் புலிகள் நடத்திய வான் தாக்குதல்கள் பற்றி அறிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி விடுதலை செய்யப்பட்டார். உண்மையில் இலண்டனில் புலிக்கு தீவிர ஆதரவாளராக நிதி உதவி, பிரச்சாரம் , அரசியல் ரீதியில் ஆதரவு திரட்டுதல் என பல வருடங்கள் செயற்பட்டு , பின்னர் அவர் இலங்கைக்கு சுனாமியின் பின்னர் சென்றபோது அங்கு புலிகளால் தண்டிக்கப்பட்டு, இலண்டன் திரும்பியதும் புலிகளுக்கு எதிராக மாறிய நபரை வித்தியாதரன் இலண்டனில் தன்னை சந்தித்து மீண்டும் புலிகளுடன் இணைந்து வேலை செய்யுமாறு வேண்டிக்கொண்டதாக அந்த நபரே என்னிடம் கூறினார். மேலும் வீரகேசரிப் பத்திரிக்கையில் பணியாற்றிய ஸ்ரீ கஜன் என்பவர் முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்காவினை சதிகொலை செய்ய முனைந்த கரும்புலியுடன் தொடர்புகொண்டிருந்தார் என்றதன் பேரில் கைது செய்யப்பட்டு 25 அக்டோபர் 1998 ல் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.


இவர் இப்போது வீரகேசரி செய்தி ஆசிரியராக இருக்கும் ஸ்ரீ கஜநேயாவார் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் இம்முறை இவர் யாழ்ப்பணத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் உருவாக்கப்பட்ட கூட்டணியின் சார்பில் போட்டியிடுகிறார் எனபது இன்னுமொரு சுவாரசியமான செய்தி.மேலும் வீரகேசரி பத்திர்கையில் பணியாற்றி பின்னர் ஐரோப்பாவிற்கு அகதியாக வந்த இன்னுமொருவர் , புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய வானொலியொன்றில் கருத்துரைப்பவர் இலங்கை சென்று தனது ஊரான வாழைச்சேனைக்கு சென்றபோது அங்கு வைத்து புலிகளால் இந்த ஊடகவியலாளரின் தகவலின் பேரில் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன , இவரே பின்னர் புலி ஊடகமொன்றின் முக்கிய நிகழ்ச்சி தயாரிப்பாளராக செயற்பட்டதாக செய்திகள் கூறின. இப்போதும் அக்கொலைக்கான காரணகர்த்தாவாக குற்றம் சாட்டப்படும் அந்நபர் இன்னமும் புலி சார்பு ஊடகத்தில் பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது. ஊடகவியலாளனும் இன வெறியும் புலிவெறியும் கொண்டு கொலைகளுக்கு பின்புலமாக நின்றிருந்தால் அவனை ஊடகவியலாளன் என்பதா அல்லது கொலைஞன் என்பதா பொரூத்தமாகவிருக்கும்?. முன்னாள் சுதந்திர ஊடகவியலாளராக தன்னை காட்டிக்கொண்ட இன்னுமொருவர் தற்போது ஐக்கிய ராச்சியத்தில் அகதியாக வாழ்வதாக சொல்லப்படுபவர் , முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான புலிகளின் முன்னாள் உறுப்பினர் , தீவிர முஸ்லிம் விரோத செய்தியாளர் எனக் கூறப்படும் ஜெயானந்த மூர்த்தி. இவர் இலங்கையில் செய்தியாளராக இருந்த காலத்தில் (07.01.2003) இவரது வீட்டின் மீது கைக்குண்டொன்று இவர் வீட்டில் இல்லாத சமயம் வீசப்பட்டு , இவரது வீடு சிறு சேதத்திட்குள்ளானபோது தனது வீட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவமொன்றுக்கு எவ்வித ஆதாரமுமற்று இவருக்கு சார்பாக "கிழக்கு செய்தியாளர் சங்கமும்" அக்குண்டு தாக்குதல்களுக்கு காரணம் " முஸ்லிம் சமூக மேம்பாட்டு முன்னணி" என்று தமிழ் தேசிய ஊடகங்களில் செய்தி வெளியிட்டு , வெளியிடச்செய்து தமது முஸ்லிம் விரோதப்போக்கை வெளிப்படுத்தியவர். இவர்கள் எல்லாம்தான் அன்று தமிழர் தேசியக்கூட்டமைப்பை ஆட்கொண்டிருந்தவர்கள் . இன்று வரை கடல் கடந்து அகதியாகி இலங்கையில் தமிழ் தேசம் நிர்மாணிக்க கனவு கண்டு கொண்டிருப்பவர்கள்.புலிகளின் தமிழ் தேசிய தொலைக்காட்சியான தமிழீழ தேசிய தொலைக்காட்சி இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு தொடக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு அதன் சின்னமாக தேசிய மலராக புலிகள் தேர்ந்தெடுத்த கார்த்திகை மலர் தொலைக்காட்சியில் சகல நிகழ்ச்சிகளிலும் திரையில் தோன்றுமாறு காண்பிக்கப்பட்டது. சமாதான காலத்தில் தெற்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும் ஊடகவியலார்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு படையெடுத்தனர். அவ்வாறு ஒரு தடவை சமாதான காலத்தின் பொழுது , அதுவும் புலிகளின் தனியான தமிழீழ தொலைகாட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் தெற்கிலிருந்து நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு மூவினத்திலிருந்தும் ஊடகவியலாளர்கள் கிளிநொச்சிக்கு சென்றபோது சில சிங்கள ஊடகவியலாளர்கள் , தமிழீழ தேசிய தொலைக்காட்சி நடத்தும் ஊடகவியலாளர்களிடம் ஆவல் மேலிடக் கேட்டார்கள் "மிகவும் நச்சுத்தன்மையுள்ள கார்த்திகை மலரை ஏன் தேசிய மலராக்கி கொண்டீர்கள்"


(தகவல் ; சத்தார் –நவமணி) என்று; அதற்கு அவர்கள் சொன்ன பதில் பூவின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கக்கூடாது , பூவின் மறுபக்கமுள்ள மருத்துவக்குனங்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று விளக்கமளித்ததாக கூறப்பட்டது.


உண்மையில் புலிகளின் ஊடகவியலாளர்கள் தமிழ் தேசிய ஊடகவியலாளர்களும் கார்த்திகை பூவைப்போலவே இருக்கிறார்கள் ,தன்னகத்தே மிகுந்த நஞ்சைக் கொண்டிருகிறார்கள் , தமது ஊடகப்பணி மூலம் தீவிர தமிழ் தேசிய நம்பிக்கைகளுக்காய் அவர்கள் செய்யும் நன்மையை விட அவர்கள் தமது தேசிய வெறியுடன் சிங்கள முஸ்லிம் எதிர்ப்புணர்வுடன் நச்சை உலகெங்கும் கக்கி வருகிறார்கள் அல்லது மறைத்துக்கொண்டு அவ்வப்போது தமது நச்ச்சுக்கருத்துக்களை கசியவிடுகிரார்கள்.


மானிப்பாய் மின்னல் ரங்கா (சக்தி தொலைகாட்சி) ஊடகவியலாளர் என்ற வகையில் தன்னை பற்றி மிகப் பெரிதாக நினைப்பவர் என்பதை அண்மையில் நான் இலங்கை தொலைகாட்சி நிகழ்ச்சியில் அவர் பிதற்றும் கருத்துக்களிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது. தான் இலங்கையின் ஒட்டு மொத்த அரசியலையும் தீர்மானிக்கும் சக்தி தன்னிடம் இருப்பது போல் டக்லஸ் தேவானந்தா மற்றும் தொண்டமான் போன்றோர் தனக்கு பயப்படுவது போல் எதிர் கருத்துக்களை கூறி -அதன் விளைவாய் ஏற்படும் சாதக நேர்கருத்துக்களை முதலீடு செய்யும் விதமாக நாசூக்காக தனது "ஊடகவியல்" அனுபவத்தை வெளிப்படுத்தினார்.

இவர் அரசு- புலி சமாதான காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஐரோப்பிய விஜயத்தின் போது , ஜனாதிபதியுடன் நெருங்க வாய்ப்பு கிடைத்ததென்றும். அதனைப் பயன்படுத்தி தான் ஒரு பெரிய வெகுமதியை பெரும் வகையில் செயற்பட்டு, ஜனாதிபதிக்கு நெருக்கமானபோது. ஜனாதிபதியின் சிபாரிசின்படி இவருக்கு நோர்வேயின் இலங்கை தூதுவராலயத்தில் முதன் நிலை செயலாளர் (ஊடகம்) ( First Secretary-Media ) வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டதென்றும். அந்நியமனத்தி ற் கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டனவென்றும், ஆனால் ரங்கா உண்மையில் தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வரவேண்டுமென்பதால் , தான் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் , அவ்வாறு செல்வதற்கு தனக்கு எதிரணியில் கூட பெரும் செல்வாக்கிருக்கிறது என்பதை காட்ட அவர் மேற்கொண்ட உத்திதான் தனக்கு முதல்நிலை செயலாளர் (ஊடகம்) பதவிக்கான நியமனம் பெறுவதற்கான நடவடிக்கைகள் கிடைத்தும் தான் செல்லவில்லை; நீங்கள் எனக்கு என்ன தரப்போகிறீர்கள், என்ற பேரம் பேசும் நிலையில் தன்னை உயர்த்திக்காட்டி தனது எம்.பீ பதவிக்கான சூழ்நிலைகளை ஐக்கியதேசியக் கட்சியின் ஊடாக ஏற்படுத்தியுள்ளார் என்று தெரியவருகிறது . அதேவேளை தன்னைபற்றி, தனது ஆளுமை பற்றி அதீத எண்ணம்கொண்ட ரங்கா , மாறாக தனக்கு நோர்வேயில் தூதுவர் பதவியில் அல்லது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டால் , அதனை ஏற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டதாக எனது ராஜரீய தொடர்புகள் கூறின. சரி போகட்டும் இவரது கல்வியும் தகுதியும் என்ன என்பது ஒரு புறமிருக்க இவர் தன்னை பற்றி என்ன நினைத்துள்ளார் என்பதற்கு வேறு என்ன சாட்சி தேவை!
 
thenee.com, lankamuslimscom and mahavalai.com (March 2010)


ஊடகம் இனியும் பூடகமில்லை- பகுதி மூன்று
                  

                                                                      எஸ்.எம்.எம்.பஷீர்

நாட்டைவிட்டு வெளியேறிய பத்திரிகையாளர் அமைப்பு (Exiled Journalist Network) பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தை சேர்ந்த போட்காளிஸ் ஹவுஸ் (Portcullis House) எனும் இடத்தில் அக்டோபர் மாதம் பத்தாம் திகதி 2008ல் இலங்கை பத்திரிகையாளர்கள் தொடர்பில் ' இலங்கையில் தொழில் சார்ந்த மனப்பான்மையும் , சமாதான கால செய்திகூறலும் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பும்" ( Professionalism , peace reporting and journalist safety in Sri Lanka) எனும் தலைப்பிலான கருத்தரங்கில் சில சர்வதேச சுதந்திர ஊடகவியலார்களுக்கான அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரபல ஊடகவியலார்கள்;, இலங்கையைச்சேர்ந்த சுதந்திர ஊடக அமைப்பு சார்பாக சுனந்த தேசப்பிரிய ஏ .பீ சீ வானொலி தமிழ் சேவையின் நடராஜா குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் எனக்கும் ஒரு கருத்துரையாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட சுனந்த தேசப்பிரிய அப்போதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு பதினோரு பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்ட விபரங்களை இங்கு வெளியிட்டார், அத்துடன் அவர் அந்த மண்டபத்தில் அவ்வாறு கொல்லப்பட்ட சிலரின் புகைப்படங்களையும் அன்று பார்வைக்கு விட்டிருந்தார். மேலும் அவரது உரையில் அவர் புலிகள் மேற்கொண்ட ஊடகவியலார்களின் கொலைகள் , ஊடகவியலார்கள் மீதான அச்சுறுத்தல்கள் பற்றி பெயர் விபரங்களையோ அல்லது அது குறித்து விபரமாகவோ தகவல்களை இவர் வெளியிடவில்லை. வெறுமனே புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேச மற்று ஊடக கட்டுப்பாடுகள் பற்றி பொதுவாக எல்லோரும் அவதானித்த விஷயங்களை மட்டும் தொட்டுக்காட்டினார். ஆனால் இவர் குறிப்பாக கொழும்பில் வைத்து புலிகளால் கொல்லப்பட்ட தொலைகாட்சி ஊடகவியலாளரான ரேலங்கி செல்வராஜா , அவரது கணவர்; மற்றும் தினமுரசு எனும் வாராந்த பத்திரிக்கையின் பிரதம ஆசிரியரான பாலா நடராஜ ஐயர் பற்றி ஏன் குறிப்பிடவில்லை , அதற்கு ஏதேனும் மறைமுக நிகழ்ச்சிநிரல் உண்டா என்று நான் சுனந்த தேசப்பிரியவிடம் கேள்வி எழுப்பியபோது; சுனந்த தேசப்பிரிய அப்போதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர்களின் கொலைகள் பற்றி மட்டுமே அங்கு குறிபபிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்,, மேலும் ஏன் அவ்வாறு இரண்டு வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதற்கு அவரிடம் பதிலில்லை..அரசு மீது குற்றம் சாட்டப்பட்ட பத்திரிக்கையாளர் கொலைகளில் தராக்கி சிவராம் பற்றி சுனந்தா குறிப்பிட்டு அவரது புகைப்படத்தை அம்மண்டபத்தில் காட்சிக்கு வைத்தும்; ரேலங்கி செல்வராஜா அங்கு குறிப்பிடப்படாமைக்கு கூறிய பகிரங்க காரணம் அந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரான பத்திரிக்கையாளர்களின் கொலைகளை , கடத்தல்களை மட்டும் தான் குறிப்பிடுவதாக கூறியமை அவரது பொய் முகத்தை தோலுரித்துக்காட்ட மட்டுமல்ல அவரைப்போன்ற பலர் ஒரு குறிப்பட்ட பகுதியினரான சுதந்திர ஊடகவியலாளர்கள் பற்றி மட்டும் அக்கறை கொண்டிருக்கிறார்கள் , யாரின் நலன்களுக்காக வேலை செய்கிறார்கள் என்பதையும் சொல்லாமல் சொல்லி நிற்கிறது. ஏனெனில் ரேலங்கியும் அவரது கணவரும் கொல்லப்பட்டது சிவராமுக்கு பின்னர்தான். ஏனெனில் சிவராம் கொல்லப்பட்டு  (28.04.2005) சுமர்ர் நான்கு மாதத்தின் பின்னரே நாடறிந்த பல்துறை ஊடகவியலாளர் ரேலங்கி செல்வராஜாவும் அவரது கணவரும் (12.08.2005) கொல்லப்பட்டனர். அது மாத்திரமல்ல அதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்புதான் பாலநடராஜ ஐயர் கொல்லப்பட்டார் (16.08.2004) . முதலாமவர் புலிகளுக்கெதிரான இதயவீணை நிகழ்ச்சிகளுடனும்; பின்னையவர் புலிகளை கடுமையாக விமர்சித்த ஒரே ஒரு தமிழ் வாராந்த பத்திரிக்கையினுடனும் தொடர்புபட்டவர்கள். அன்று யாருமே மறைந்த , எனக்கு நேரடியாக தெரிந்த பழகிய துரதிஷ்டமான உயிரிழப்பை சந்தித்த சிவராமுக்கு பின்னர் நடந்த புலிகளின் கொலையையும் , இரண்டு வருட கட்டுப்பாட்டு போட்டு அதற்கு முன்னர் நடந்த கொலையையும் , மறைத்து புலிகளின் வெளிப்படையான கொலைகளை மூடி மறைத்தது ஏன் என்பது சர்வதேச சுதந்திர பத்திரிக்கையாளர்களின் அமைப்புக்களின் நேர்மைத்தன்மை குறித்தும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.


அங்கு இலங்கையிலிருந்து வந்து கலந்து கொண்ட நடராஜா குமரகுருபரன் இலங்கையில் கடத்தப்பட்டு ஒரு நாள் முடிவதற்குள் விடுவிக்கப்பட்டவர் என்பதால் அவரது கருத்துக்கள் முக்கியத்துவம் வகித்தன. ஆனால் அவர் தனது உரையில் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பற்றி  குறிப்பிடும்போது தமிழ் தேசிய வாத கருத்தியலை ஊடகவியலார் என்பதற்கப்பால் நாசூக்காக வெளிப்படுத்தினார். அதாவது. "பெரும்பான்மை முஸ்லிம்கள் தமிழர்களாயினும் , நிலைமைகள் அங்கு (இலங்கையில்) அவர்களில் சிலர் தங்களது "முஸ்லிம் தேசியவாதம்" ஒன்றை உருவாக்க காரணமாகியது. அதன் ஊடாகவே அதிகமான முஸ்லிம் பத்திரிக்கையாளர்கள் தங்களை அடையாளப்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டமை அவரது ஊடகம் தாண்டிய அரசியல் கருத்தியலை முஸ்லிம்கள் தொடர்பில் வெளிப்படுத்தியதாகவே அமைந்தது.


(Although most Muslims are Tamils, the situation made some of them develop their own form of ‘Muslim nationalism’ with which most Muslim journalists identify )
மேலும் பெரும்பான்மை முஸ்லிம் ஊடகவியலாளர்களை முஸ்லிம் தேசியதேசியவாத சிந்தனையாளர்களாக காட்டும் கைங்கரியத்திலும் ஈடுபட்டார் என்றே குறிப்பிடவேண்டும். எனவே அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் நாடு நீங்கிய பத்திரிக்கையாளர் வலையமைப்பின் செயலாளராக செயற்பட்டவர் திருமதி. பேர்ல் தேவநாயகம். இவர் இலங்கையில் சண்டே லீடர் பத்திரிக்கையின் செய்தியாளராக இருந்தபோது ஜூலை 1995ல் ,தான் ஒரு ஆசிரியை என்று கூறி அரசு பத்திரிக்கையாளர்கள்   செல்வதற்கு தடையினை ஏற்படுத்தியபோது, தாண்டிக்குளம் இராணுவ சோதனைச்சாவடியை தாண்டி யாழ்ப்பாணம் செல்லமுற்பட்டு இலங்கை இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டவர். அன்றைய கருத்தரங்கில் புலிகளின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல , அரச சார்பானவர்களும் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வீரகேசரி , தினக்குரல் புலிசார்பாகவும், தமிழ் தேசியம் சார்பாகவும் மாற்று தமிழ் முஸ்லிம் அரசியல் கருத்துக்களுக்கு எதிராக செயற்படுகின்றன என்ற எனது குற்றச்சாட்டை , கூட்டம் முடிந்தப்பின்னர் என்னை சந்தித்த சுடரொளி பிரதம ஆசிரியர் (இவரும் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர்) தான் அப்படியல்ல என்று கூறி , நான் அதனால்தான் அவரது பத்திரிக்கை பற்றி குறிப்பிடவில்லையோ! என்று வியந்தபோது , அப்படியிருக்கலாம் என்று கூறி நான் நகர்ந்து விட்டேன். ஆனால் இவ்வாறு அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட சம்பாஷனை குறித்து முன்னாள் தவிர புலி ஆதரவாளராகவிருந்து, அவர்களுடன் முரண்பட்டு , அவர்களை அப்போது (இப்போதல்ல) எதிர்த்து வந்தவரிடம் கூற நேரிட்டபோது , அவர் சொன்னார். வித்தியாதரன் அவரை அணுகி புலியை எதிர்க்காமல் அவர்களுக்கு ஆதரவளிக்கவேண்டும் ஏனெனில் அவர்கள்தான் தமிழர்களின் சரியான பிரதிநிகள் என்று புலிகளுக்கும் அவருக்குமிடையில் ஒரு புரிந்துணர்வை உருவாக்க , தப்பபிப்பிராயம் நீக்க முற்பட்டார் என்று என்னிடம் கூறினார். எனக்கு இச்செய்தி ஒன்றை தெளிவாக சொல்லியது தமிழ் தேசியம் பேசும் ஊடகவியலாளர் மனித உரிமை செயற்பாட்டாளர் புலி என்ன எந்தப் பிசாசையும் தங்கள் மனட்சாட்சியை புறநதள்ளிவிட்டு ஆதரிப்பார்கள் என்பது இன்றுவரை எனது அனுபவமாகவிருக்கிறது.

தொடரும் ....
thenee.com.lankamuslims and mahavali (March 2010)

இதற்கு ஏற்றால் போல குருபரனும் அரசியல் தஞ்சம் பெற்று பிரித்தானியாவுக்கு வந்து விட்டார்."பிரித்தானியாவிற்கு வந்த பின்னரே இங்கு வைத்து குருபரன் புகலிடம் கோரி உள்ளார். இவரை இங்கு அழைக்க காரணமானவர்கள் இவருக்கு புகலிடம் பெற முடியும் என்பதற்காக , அதற்கான ஆலோசனை வழங்கி , இவரை அழைத்திருக்க வேண்டும். மேலும் "அரசால்" கடத்தப்பட்டு விடுவிக்கப் பட்டதாக அந்த நிகழ்வில் பகிரங்கமாக சொன்ன வித்தியாதரன் இலங்கை சென்று மிகவும் பலமாக அரசை எதிர்த்ததையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும் , நாடகங்கள் பலவிதம் !! பத்திரிக்கையாளர்கள் பொய் எழுதுவது , பேசுவது மட்டுமல்ல பிரித்தானிய அரசை அல்லது மேற்குலக எஜம்மானிய அரசுகளை நன்கு ஏமாற்றவும் தெரிந்தவர்கள் . பாவம் பொதுமக்கள் இவர்களின் பொய்களை விழுங்கி வாழிடமே இழந்தவர்கள்

“ஊடகம் இனியும் பூடகமில்லை!-பகுதி இரண்டு”
                                                                                                       எஸ்.எம்.எம். பஷீர்


2004ம் அண்டு புது வருடப்பிறப்பினையொட்டி அம்மாத முதல் வார இலண்டன் புலிச்சார்பு பத்திரிகை ஒன்றில் முன்னாள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன ஒலிபரப்பாளராக பணியாற்றி , அங்கிருந்து இங்கிலாந்துக்கு வந்தபின்னர் , இங்கிலாந்தில் இன்றுவரை பீ. பீ சியின் தமிழோசையில் பகுதிநேர அல்லது ஓய்வு நேர மாற்று அறிவிப்பாளராக பணியாற்றும் சட்டத்தரணியும் , சொலிசிடோருமான விமல் சொக்கநாதன் பிரபாகரனை எவ்வாறு வாழ்த்தினார் என்பதை பார்த்தால் புரியும், இவரெல்லாம் எப்படி நடுநிலை ஊடகவியலாளராக தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அல்லது ஊடக தர்மத்தின் குறைந்த பட்ச நியமங்களை கடைப்பிடிக்க இலாயக்கற்றவர்கள் என்பது. சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கையின் வடபுலத்தில் வன்னியில் நிலவிய புலியாட்சிக்காலத்தில் இலங்கைக்கு சென்று, வடக்கிலே புலியாட்சி பிரதேசத்துள் சென்று அங்கு "தமிழீழ ஊடகவியலாளர்களுக்கு " ஊடகம் குறித்து பயிற்சிபாசறை நடத்திவிட்டு வந்தவர் இவர். இவர் ஊடக (அ)தர்மத்தை எவ்வாறு பேணியிருப்பார் என்பதை நீங்களே இனி தீர்மானியுங்கள். இவரது பிரார்த்தனை என்னவாயிற்று என்பது ஒரு புறமிருக்க, இவரது இந்த புகழுரைக்கும் புலியுரைக்கும், பொழிப்புரை தேவையில்லை

“ சுயநல சிந்தனைகளை கைவிட்டு , தன் இனத்தின் நல் வாழ்வைச் சிந்தனையில் நிறுத்தி, கடந்த சுமார் 30 ஆண்டுகள் போராடும் எங்களை தலைவனைப் பாருங்கள். அவர் நினைத்திருந்தால் போசாமல் ஒதுங்கிப்போயிருக்கலாம். விடுதலைப்போராட்டும் என்று ஒன்றே இருந்திருக்காது.சிங்களப் பேரினவாதிகளுக்குச் சிம்ம சொப்பனம் (இல்லை மன்னிக்கவும்) புலிச்சொப்பனம் வந்து அச்சுறுத்தியிருக்கமாட்டது!."அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?" என்று மிக நுணுக்கமாக திட்டமிட்டு செயற்படுத்தும் மாபெரும் பொறுப்பு அந்தத் தலைவன் கையில் ! அந்தத் தலைவனே எம்மில் பலருக்கு முதல்வன் ! அவன் காட்டுவதே பாதை. சமாதானம் வந்து விட்டது , வந்து விட்டது என்று ஓய்ந்து விடாமல் ,முன்னர் வழங்கிய ஒத்துழைப்பை விட பல மடங்கு கூடுதலான ஒத்துழைப்பை பொருளுதவியாக, ஆளுதவியாக வழங்கி எங்கள் போராட்டத்தில் வெற்றி காண்போம். இது வெறும் புத்தாண்டு சங்கற்பம் அல்ல. எங்கள் முதல்வனுக்கு நாம் வணக்கத்துடன் வழங்கும் வாக்குறுதி.புத்தாண்டில் வெற்றியை எமக்கு குவிக்கப் போகும் இதய சுத்தியான , எமது பிரார்த்தனையும் அதுவே. “


இவர் இப்படி எழுதிய பின்னர் விமல் சொக்கநாதன், பிரபாகரனை சந்திக்காமல் வந்திருக்கமாட்டார் என்று ஊகிக்க முகாந்திரங்கள் உண்டு. மறுபுறம் இவர் இலங்கைக்கு சென்ற காலத்தில் பிரபாகரனை சந்தித்திருந்தால் பிரித்தானியாவில் பயங்கரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தப்பட்ட இயக்கத்தின் தலைவர் -பயங்கரவாதியை- ஒருவரை சந்தித்து விட்டு வந்திருக்கிறார் என்று கொள்ளலாமா?. மேலும் போராட்டத்துக்கு பொருளுதவியாக ( நிதியுதவி) , ஆளுதவி ( யுத்தத்திற்கு சிறார்களை -"போராளிகளை") வழங்கி உதவக்கோரும் இந்த ஊடக சட்டத்தரணி பயங்கரவாத இயக்கத்திற்கு உதவுபவராக பிரித்தானிய சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக் கூடியவரா? . இவ்வாறான வெளிப்படையான ஆதரவினை பிரித்தானியாவில் ஒரு இஸ்லாமிய பயங்கரவாதமாக் பிரகடனப்படுத்தப்பட்ட இயக்கத்திற்கு வழங்கினால் அவர் கதி என்ன ?


இன்னுமொரு பீ.பீ.சியின் அறிவிப்பாளர் ஆனந்தி குறித்து நான் ஏற்கனேவே எழுதியுள்ளேன். ஆனால் அவரை பற்றி எழுதவது என்பது இப்போது அவசியமில்லை. அதேவேளை ஐ. பீ. சீ எனும் புலிசார்பு ஊடகம் சில வருடங்களுக்கு முன்பு " அல்பிரேட் துரையப்பாவை கொன்றுவிட்டு தலைவர் பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் எங்கே ஒளித்திருந்தார்" என்று "அறிவுக்களஞ்சியம்" நிகழ்ச்சி நடத்தி நேயர்கள் பிரபாகரன் கொலையும் செய்தாரா, அது சரி எங்கே ஒளித்திருந்தார் என்று விடை தெரியாமல் தடுமாற அதற்கும் ஐ பீ சீ ஊடகவியலாளர் விடை சொன்னதும் , அண்மையில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை கொன்றவர் புலிகளின் அரவிந்தன் ; அவரது இயக்கபெயர் "விசு" என்று பகிரங்கமாக கொலைக்கதைகளை வேறு எந்த நாககரீக நாட்டில் அச்சமின்றி சொல்ல முடியும்.! இச் சுதந்திரம் பிரித்தானிய சுதந்திரத் திருநாட்டில் தமிழருக்கு உண்டு!. இதுவல்லவா ஊடக தர்மம்.

தொடரும்....
thenee.com, mahavali.com and unmaikal and lankamuslim.com.ஊடகம் இனியும் பூடகமில்லை ! (1)                                                                                           எஸ்.எம்.எம். பஷீர்

"நாங்கள் பத்திரிகையாளர்கள் என்ற வகையில் தோல்விகளை பகுப்பாய்வு செய்வதில் மிகச் சிறந்தவர்களாக இருக்கிறோம்; ஆனால் வெற்றிகளை பகுப்பாய்வு செய்வதில் அதிகம் சிறந்தவர்களாக இல்லை " . ( “We are very good as journalist at analyzing failures; but we are not so good at analyzing success”- Martyn Lewis ) மார்ட்டின் லூயிஸ் முன்னாள் பீ.பீ.சீ செய்தி வாசிப்பாளர்.“யுத்த பின் (Post-War) புதிய அரசும் மக்கள் எதிர்பார்ப்புகளும் -ஒரு சிறு அலசல்”

                                                                                                               எஸ்.எம்.எம்.பஷீர்


"குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்கக் கொளல்". ( திருக்குறள் )

இன்று இலங்கையில் அமைச்சர்கள் துணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியுடன் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிட்டு அக்கூட்டணியை வெற்றியீட்ட தாங்களும் அதிகம் பாடுபட்டதாக கூறும் சுதந்திரக் கட்சியினரரும் அதன் பங்காளிக்கட்சிகளும் சிலர் அமைச்சர் நியமனங்கள் தேசிய பட்டியல் எம் பீ நியமனங்கள் தொடர்பில் தமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக அல்லது தாம் புறக்கனிக்கப்பாட்டிருப்பதாக குறை கூறும் செய்திகளும் வந்த வன்னமுள்ளன. என்றாலும் இதில் விமல் வீரவன்ச வழக்கம்போல் மிகவும் வெளிப்படையாக தமது கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினரான முசம்மிலுக்கு எம்.பீ பதவி வழங்கப்படவில்லை என்று தமது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார். அவரது எதிர்ப்பில் முன்னாள் சமாதானச் செயலாளர் ராஜீவ் விஜயசிங்கவுக்கு எம் பீ பதவி வழங்கப்பட்டதை ஒரு பகிடியாக கூறி விலைக்கு வாங்கப்படாத அரசியல் ரீதியாக அதிகம் தீவிரமாக பங்காற்றிய முசம்மிலுக்கு எம்.பீ பதவி வழங்கப்படாதது முறையற்றது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் –பாகம் 12)


                                                      எஸ்.எம்.எம் பஷீர்1988 சித்திரையில் கிட்டு –பதியுதீன் சென்னைச் சந்திப்பின் குழவினரின் பின்னரும் முன்னருமான நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கன. அவற்றில் குறிப்பாக 1987 இறுதிப்பகுதியும், 1988 ன் முற்பகுதியும் புலிகளின் நடவடிக்கைகள் முஸ்லிம்களின் இருத்தலை கேள்விக்கு உட்படுத்தின. 1987 நவம்பரில் ஓட்டமாவடியிலும் 30 மார்கழி 1987ல் காத்தான்குடியிலும் முறையே 9 ம் 30 மாக 39 இளைஞர்கள் ஊhகாவல்படையினர் எனக்கூறப்பட்ட இளைஞர்களை ஜிஹாத் உறுப்பினர்கள் எனக்கூறி புலிகள் தாங்கள்செய்த படுகொலைகளையும் அவர்கள்மீது சுமத்தி அவர்களை சுட்டுக் கொன்றனர். காத்தான்குடியில் (4) அப்பாவித் தமிழர்களையும் தங்களது முஸ்லிம் புலி உறுப்பினர்களை கொன்றதாகவும் குற்றஞசாட்டியது தவிர தாங்களே 1987 செப்டம்பர் 3 ந் திகதி சுட்டுக்கொன்ற மூதூரின் உதவி அரச அதிபர் ஹபீப் முகமட் அவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனிததனியான நிர்வாகத்தின்கீழேயே செயற்படவேண்டுமென்னும் கருத்தினை முன்வைத்த மூதூர் பா.உ வான ஏ.எல் அப்துல் மஜீத் அவர்களையும் 1987 நவம்பர் 13 ந் திகதி புலிகள சுட்டுக்கொன்றனர்.
இந்தத் தாக்குதலின்பின்னர் இதுதொடர்பில் புலிகள் பத்திரிகை அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையில் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர்களின் கொலையை நியாயப்படுத்தியதுடன் மேலும் அந்த அறிக்கையில் புளொட்(Pடுழுவுநு) ரொலோ (வுநுடுழு) , ஈ.பி.ஆர்.எல்.எப் (நுPசுடுகு) ஆகிய இயக்கங்களையும் காட்டுமிராண்டித்தனமான செயல்களில் தமிழ்பேசும் முஸ்லிம, மக்களுடன் ஈடுபடுவதாகவும் துரொகத்தனமான செயல்களில் ஈடுபட்டு தங்களது சுயதேவைகளைப் ப+ர்த்திசெய்யமக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் எனவே தாங்கள் அவ்வியக்கங்களை தடைசெய்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர். மேலும் அந்த அறிக்கையில் அதிகமாக முஸ்லிம் இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து இயங்குவதாகவும் அவர்களின் வேண்டுகோளிலும், வற்புறுத்தலிலும். தீவிர பங்கேற்பிலுமே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இவர்கள் முஸ்லிம் மக்களின் வெறுப்பினையும், அதிருப்தியினையும் சம்பாதித்தவர்கள் என்றும் ஆடுகள் நனையும்போது ஒநாய்கள் அழுகின்ற கதைபோல் அறிக்கை விட்டனர்.
கிழக்கில் பரவலாக முஸ்லிம்கள்மீது பல தாக்குதல்கள் நடாத்தப்பட்டபோதும் சமூக ஈடுபாடுகொண்ட முஸ்லிம் நபர்கள் வேட்டையாடப்பட்டபோதும் வடமாகாணத்திலும், யாழ்பாணத்தில் பிறந்த இரண்டாவது அரச அதிபரான மன்னார் மாவட்ட அரச அதிபரான எம்.எம் மக்பூல் ஜனவரி மாதம் 1988 ம் ஆண்டு புலிகளின் விசாரணைக்குப் பின்னர் சிவில் நிர்வாகத்தினை அவர் நடாத்துவதனை வன்மையாக கண்டித்து அதிலும் குறிப்பாக இந்தியாவிலிருந்து திரும்பிய அகதிகளை அவர் மீள்குடியேற்றம் செய்வதனை நிறுத்துமாறு எச்சரித்து விடப்பட்ட சில நாட்களின் பின்னா புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். சென்னை சென்ற முஸ்லிம் குழுவினர் இவையெல்லாம் குறித்து வாய் திறக்கவில்லை. மாறாக கல்முனையில் கொல்லப்பட்ட 17 பேரும் புலிகளால் கொல்லப்படவில்லை என்று மட்டும் சான்றுதல் வழங்கினர். திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற முக்கிய இரு பிரமுகர்களின் படுகொலைபற்றி இவர்கள் வாய்திறக்கவில்லை. இந்த சென்னை விஜயத்திற்கு முன்னர் திரு பதியுதீன் அவர்கள் ஐலண்ட்; பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறான சந்தாப்பத்தில் இலங்கை –இந்திய ஒப்பந்தத்தினை; முஸ்லிம்மக்கள் இயல்பாகவே நிராகரிப்பார்கள் என்றும் ஆனால் அவர்கள் கிழக்கிலே வாழத்தான் வேண்டுமென்ற கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் சிலவருடங்களாக நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்வதாகவும் குறிப்பிட்டிருந்தாh.
வடகிழக்கு இணைந்த இலங்கை –இந்திய ஒப்பந்தத்தின் பின்னணியில் எவ்வாறான அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதே முஸ்லிம்களின் கேள்வியாகுமெனவும் குறிப்பிட்டிருந்தார். சென்னை சென்ற குழுவினரின் அரசியல் அடையாளமாக விளங்கிய முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியும், புலியும் எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தார்கள் என்பதுபற்றி பிரபல பத்திரிகையாளரான தராகி எனப்படும் சிவராம் எழுதுகையில் ஐPமுகு னாலும் ஈ.பி.ஆர்.எல்.எப்பினாலும் கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் அதிகபட்ச கட்டுப்பாடுகள் ஏற்பட்டதனால் தங்களுடைய (புலிகள்) இருத்தலுக்கு பாரிய அளவில் முஸ்லிம்கள்மீது தங்கியிருக்கவேண்டிய நிலையை ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில்தான் ஒரு செயற்பாட்டு உறவினை புலிகள் மு.ஐ.முயினருடன் ஏற்படுத்தினார்கள். புலிகளைப் பொறுத்தவரை இந்திய அனுசரணை கட்சியாகவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை கருதியதுடன் முஸ்லிம்களுக்காக (இஸ்லாமியத் தமிழர்கள); எனத் தாங்கள் குறிப்பிடும் வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கென தனித்தொரு ஸ்தாபனத்தினை கட்டியெழுப்பும் செயற்பாடாகவே மு.ஐ.வி.முன்னணியினரை மு.காங்கிரஸினருக்கு மாற்றாக புலிகள் திட்டமிட்டிருக்கலாமென தோன்றுகின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.
ஐ.பி.கே வெளியேற்றம் குறித்த கோரிக்கை முஸ்லிம் மக்களுடாகவும் வெளிப்படவேண்டுமென்பதில் புலிகள் அக்கiறாக இருந்தனர். 13 ந் திகதி ஜனவரி 1988ல் பிரபாகரன் இந்திய சமாதானப்படை தங்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டுமெனவும் சமாதானப் பேச்சுவாhத்தை தொடரவேண்டுமெனவும் இந்திய அரசுக்கு நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வாறான வேண்டுதலையே த.வி.கூட்டணியின் செயலதிபரான அமிர்தலிங்கம் அவர்களும் இந்திய அரசுக்கு விடுத்தார். இந்தக் கால கட்டத்தில்தான் புலிகளுக்கும் இந்தியாவிற்குமிடையிலான உறவுகள் அதிதீவிரமான நெருக்கடிக்குள்ளானது. 1037 ஐPமுகு படையினர் புலிகளால் கொல்லப்பட்டதாக புலிகளினால் உரிமை கோரப்பட்டது. இவ்விழப்புக்கள் குறித்து அன்றைய ஜனாதிபதியான ஜெயவர்தனா அவர்கள் வடகிழக்கில் பயங்கரவாதம் அழித்தொழிக்கப்படுவதில் உள்ள நெருக்:கடியான சூழ்நிலையில் ஐ.பி.கே தொடர்ந்து ஈடுபட்டு வருவதனை பாராட்டியும், இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின்னர் தமிழ்,சிங்கள, முஸ்லிம் படையினர் ஒருவரும் சாகவில்லை எனவும் அவர்களின் இடத்தினை இந்தியப் படையினர் எடுத்துவிட்டாhகள் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் 1987 இறுதிப்பகுதியிலும், 1988 ஆரம்பகால பகுதியிலும் இந்தியாவில் வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்த கிட்டு மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்கும் மறுக்கப்பட்டிருந்hர்.; 1988 சித்திரை முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான பேச்சுவாhத்தையின்போது வெளிப்படையாக செயற்படக்கூடியதாக இருந்ததுடன் 1988 பிற்பகுதியில் இந்திய தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சிறையிலிடப்பட்டார். அக்கால கட்டத்தில் இந்தியப் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களுக்கு சென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்து இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தம்மை விடுதலை செய்யுமாறும் சில வேண்டுகோள்களை முன்வைத்து கடிதம் வரைந்திருந்தார்.— தொடரும்
thenee, mahavali.lankamuslims.27/09/2009

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் (பாகம் -11)                                  எஸ.எம்.எம் பஷீர்


ராஜிவ்காந்திக்கு கிட்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்து, 03 .அக்டோபர் 1988  ம் ஆண்டு, எழுதிய கடிதத்தில், இந்திய, இலங்கை ஒப்பந்தத்துக்கு ஆதரவு வழங்குவதாக மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். புலிகள் வழக்கமாகவே  ஒப்பந்த மீறுதலை எதிர்தரப்பினரிடம் சுமத்தி, தங்களது நிலைப்பாட்டிற்கான நியாயப்படுத்தலை சர்வதேசமயப்படுத்தி  தமது ஆதரவு தளத்தினை தக்கவைப்பதற்குமான காரணங்களை முன்வைத்தே , இந்த ஆதரவு கோரிக்கையும் வழக்கம்போல் மறைமுகமாகவே வழங்கப்பட்டது. சமாதானப்படையினை, சண்டைப்படையாக்கிய பின்னர் எவ்வாறு தமது யுத்தநிறுத்த கடமையை தாங்கள் என்றுமே மீறவே இல்லை என காலத்துக்கு காலம் இலங்கை அரசுடன் தமது அழிவின் விளிம்புவரை செய்துவந்ததுபோல் புலிகள் தாங்கள் யுத்த நிறுத்தங்களுக்கு ஆதரவாக பின்னோக்கி கூறுகின்ற வகையில்தான், இவ்வாறு கிட்டுவினாலும் சூசகமாக இந்திய அரசிடம் கடிதத்தில் ஆதரவு வழங்குவதாக கூறப்பட்டு இருந்தது. இக்கடிதத்தில் கிட்டு “தொடர்ந்து நாம் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டோம்.

 பேச்சுவார்த்தைகளில் எமது இயக்கத்தில் பிரதிநிதிப்படுத்திய என்னை கைதுசெய்து, சிறையில் அடைத்ததின் மூலம், சமாதானத்துக்கான பேச்சுவார்த்தையை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் தடுக்கப்பட்டன. பின்னர், இந்திய அரசு தன்னிச்சையாக, 10 நாள் போர்நிறுத்தம்  அறிவித்தமை மாத்திரம் இணக்கமான தீர்வு ஒன்று உருவாவதற்கு  போதுமானதாகவும் இருக்கவில்லை. இதுவரையில் என்னுடன் சிறையில் இருக்கும் சக தோழர்களையும், விடுதலை செய்ய பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு; எமது தலைவர் வே.பிரபாகரன் அறிவித்திருந்தார் .

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் –( பாகம் 10) எஸ்.எம்.எம் பஷீர்                       

1988 சித்திரையில் கிட்டு –பதியுதீன் சென்னைச் சந்திப்பின் குழவினரின் பின்னரும் முன்னருமான நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கன. அவற்றில் குறிப்பாக 1987 இறுதிப்பகுதியும், 1988 ன் முற்பகுதியும் புலிகளின் நடவடிக்கைகள் முஸ்லிம்களின் இருத்தலை கேள்விக்கு உட்படுத்தின. 1987 நவம்பரில் ஓட்டமாவடியிலும் 30 மார்கழி 1987ல் காத்தான்குடியிலும் முறையே 9 ம் 30 மாக 39 இளைஞர்கள் ஊhகாவல்படையினர் எனக்கூறப்பட்ட இளைஞர்களை ஜிஹாத் உறுப்பினர்கள் எனக்கூறி புலிகள் தாங்கள்செய்த படுகொலைகளையும் அவர்கள்மீது சுமத்தி அவர்களை சுட்டுக் கொன்றனர். காத்தான்குடியில் (4) அப்பாவித் தமிழர்களையும் தங்களது முஸ்லிம் புலி உறுப்பினர்களை கொன்றதாகவும் குற்றஞசாட்டியது தவிர தாங்களே 1987 செப்டம்பர் 3 ந் திகதி சுட்டுக்கொன்ற மூதூரின் உதவி அரச அதிபர் ஹபீப் முகமட் அவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனிததனியான நிர்வாகத்தின்கீழேயே செயற்படவேண்டுமென்னும் கருத்தினை முன்வைத்த மூதூர் பா.உ வான ஏ.எல் அப்துல் மஜீத் அவர்களையும் 1987 நவம்பர் 13 ந் திகதி புலிகள சுட்டுக்கொன்றனர்.

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் - (பாகம் -8)

                                   எஸ.எம்.எம் பஷீர்kittuஏ.சி.எஸ் ஹமீத் அவர்கள் புலிகளைச் சந்தித்தபொழுது பிரபாகரனுடைய மிக முக்கிய நிபந்தனை வடகிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 6 வது திருத்தச்சட்டம் நீக்கப்படவேண்டும். மேலும் எம்மக்கள் மத்தியில் புரிந்துணர்வான சூழல் ஏற்படட்டும் ஜனாதிபதி பிரேமதாசாவைச் சந்திக்கலாம் என்று பிரபாகரன் கூறினார். (தகவல் அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை ---அற்புதன்) அதேவேளை 09.05.1990 ம் ஆண்டு புலிகளின் அரசியல் கட்சியான விடுதலைப் பலிகளின் மக்கள் மன்னணி விடுத்த அறிக்கையில் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் இலங்கைக் குடி மக்களே! அவர்கள் அனைவருக்கும் குடியரிமை உடனே வழங்கப்பட வேண்டும். மலையக மக்களை திருப்பி அனுப்புவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அந்த மக்களை கலந்தாலோசிக்காமல் செய்யப்பட்டவை. ராஜீவ் --ஜே.ஆர் ஒப்பந்தம் இன்று செத்துவிட்டதைப் போலவே அந்தப் பழைய ஒப்பந்தங்களும் செல்லுபடியற்றவையாகும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்தப் பின்னணியில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினதும், புலிகளினதும் ஒப்பந்த சரத்துக்களும் புலிகளின் நிர்த்தாட்சண்யமற்ற செயற்பாடுகளும் நோக்கப்படவேண்டும். இலங்கை--இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் புலிகளின் மக்கள் முன்னணியின் தலைவரான மாத்தையா என அழைக்கப்பட்ட மகேந்திரராஜா திருகோணமலையில் இடம்பெற்று ஒரு கூட்டத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் அவர்களின் தனித்துவ அரசியலுக்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாக முன்வைத்திருந்தார். மலையக மக்களின் குடியுரிமை குறித்தும் அவர்கள் திருப்பியனுப்பக்கூடாது (இந்தியாவிற்கு) என்று மே மாதம் 1990 ல் அறிக்கைவிட்ட புலிகள்தான் ஆகஸ்ட் மாதம் கிழக்கில் முஸ்லிம் மக்கள்மீதான படுகொலையையும் அக்டோபர் மாதம் வடமாகாண வெளியேற்றத்தினையும். தமிழ் மக்களுடன் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம் மக்கள்மீது மேற்கொண்டனர்.
புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திய ஏ.சி.எஸ் ஹமீத் அவர்கள் புலிகளின் நன்மதிப்பை பெற்றிருந்தமைக்கு முக்கிய காரணம் அவரது ராஜதந்திர அணுகுமுறைதான் என்றும் புலிகள் பின்னா குறிப்பிட்டனர். இவரது புலிகளுடனான கிழக்கு மாகாண சந்திப்பு குறிதது இக்கட்டுரையின் தொடர்ச்சியில் பின்னர் குறிப்பிட்டுக் காட்டவேண்டிய தேவையும் உள்ளது. இக்கால கட்டத்தில முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி புலிகளுடன் ஒப்பந்தம  ஒன்றினைச் செய்வதற்கு இந்திய --இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் செயற்பட்ட சம்பவங்கள் முஸ்லிம் அரசியல் குறிப்பாக வட, கிழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் இதன் பின்னணியிலுள்ள நோக்கங்கள், செயற்பாடுகள் ஒருபுறம் சமூகப் பாதுகாப்பையும் இன சௌகன்யத்தையும் எற்படுத்துவதற்காக செய்யப்பட்டாலும் மறுபுறத்தில் புலிகளின் தந்திரோபாய நலன்களுக்கு முஸ்லிம்களின் தலைமைததுவங்கள் எவ்வாறு பலியானார்கள்; என்ற கேள்வியும் எழுகின்றது. இந்திய---இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான குறிப்பாக ஜனாப் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சிக்கு எதிரான அரசியல் எதிர்ப்பு நிலைப்பாடுகளை கட்டமைத்து தமிழ் தேசிய பாரம்பரிய கோட்பாட்டினை முன்னெடுக்கும் செயற்பாடுகளை புலிகள் மேற்கொண்டனர்.
முஸ்லிம்களுக்கான தனித்துவ கட்சி ஒன்றினை கட்டியெழுப்பவதற்கான முயற்சியில் குறிப்பாக கிழக்கினை அடிப்படையாகக்கொண்டு கொழும்பிலே பினனர் முஸ்லிம் காங்கிரஸில் பிரபல்யமான பலரை உள்வாங்கிய தொடாச்சியான கலந்துரையாடல்களை; மேற்கொண்டிருந்த பின்னணியையும் எம்.ஐ.எம் முகைதீன கொண்டவர். அவா பின்னர் உருவாக்கிய அரசியல் கட்சியான முஸ்லிம்.ஐக்கிய. ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில் எனக்கும் இன்னும் பலருக்கும்  அனுப்பிய கடிதம் ஒனறில் குறிப்பிடுகையில்
“ எமது தீவிர செயற்பாடுகளின் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் நேரடிப் பேச்சுவாhத்தைகளை நடாத்துவதற்கான அழைப்பினையும் எமக்கு விடுத்தனர். இதனை ஏற்று நாங்கள் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தினையும் நடந்த பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகளையும் நீங்கள் அறிவீர்கள். இக்கட்டத்தில் நாங்கள் மிகப் பெருமையுடனும் மகிழ்ச்சியடனும் கூறிக்கொள்ள விரும்புவது எங்களது பேச்சுவார்த்தையின் பின்னர் இன்றுவரை தமிழீழ விடுதலைப்புலிகளால் ஒரு சிறிய அளவிலான தாக்குதலும் எற்படவில்லை என்பதைத்தான். தங்களது கட்சி மகாநாட்டிற்கு முன்னோடியாக அனுப்பப்பட்ட இக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டிருந்தது
வடக்கிலும், கிழக்கிலும் வாழும் முஸ்லிம்களாகிய எமக்கு தற்போதைய சூழ்நிலையில் எற்படக்கூடிய ஆபத்துக்களிலிருந்து எம்மைப் பாதுகாத்து, நிரந்தரமான அமைதிக்கும், உரிமைகளுக்கும், பாதுகாப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் உத்தரவாதம் அளிக்கக்கூடிய யதார்த்தபூர்வமானதும், துரதிருஸ்டி வாய்ந்ததுமான ஒரு கொள்கைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கடமைப்பாடு எங்களுக்கு இருந்தது. இதுபற்றிய ஒரு அக்கறையும், கவலையும் எங்களைப்போலவே இச்சமூதாயத்தின் புத்திஜீவிகளில் ஒருவரான உங்களுக்கும் இருந்தது. எமது சமூதாயத்தில் ஏற்கனவே ஒரு அரசியல்கட்சி (இங்கு முஸ்லிம் காங்கிரஸினரையே குறிப்பிடப்பட்டுள்ளது.) தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ளதை முழுமையாக தெரிந்திருந்தும் இன்னொரு கொள்கையினை முன்வைக்கும்போது இது முஸ்லிம்களை பிளவுபடுத்தும் முயற்சி என்ற அங்கலாய்ப்பினை பரவலாக ஏற்படுத்தும் என்பதனை பூரணமாக அறிந்திருந்தும் நாம் எமது சமூதாயத்தை குறிப்பாக வடக்கிலும், கிழக்கிலும் வாழும் முஸ்லிம்களை சரியான பாதையில் வழிநடாத்திச் செல்லவேண்டியது எமது கட்டாயக் கடமையென உணர்ந்தோம். இதன் விளைவாகவே முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாகியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாணத்திலும் பொதுவாக இலங்கையிலும் பெரிதும் மதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முதன்முதலில் தேர்தல் களத்தில் இறங்கிய டாக்டர் பதியுதீன் மஹ்மூத் அவர்களை தமது புலிகளுடனான பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைத்துவத்திற்காக மு.ஐ.வி.முன்னணியினர் அணுகினர். இவர்களின் உள்நோக்கம் புலிகளின அங்கீகாரத்துடன், அஷரப் அவர்களின் அரசியல் எழுச்சியினை தடுத்து தங்களைப் பதிலீடு செய்வதுமாகும். இவ்வொப்பந்தம் புலிகள் --முஸ்லிம் ஒப்பந்தம் என்றும் கூறப்பட்டாலும் கிழக்கில் அஷரப்பின் எதிரணியினரால் முஸ்லிம்களின் மதிப்பைப் பெற்றிருந்த அக்காலகட்டத்தில ;அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஜனாப் பதியுதீன் அவர்களின் முகவரி அவர்களுக்கு கைகொடுத்ததாயினும இவ்வொப்பந்த அறிக்கையில் எம்.ஐ.எம் முகைதீனும், கிருஸ்னகுமாரும் (கிட்டு) ஒப்பமிட்டார்கள். எனவே இது உண்மையில் முகைதீன் --கிட்டு ஒப்பந்தமெனச் சொல்வதும் பொருத்தமாயிருக்கலாம். ஓப்பந்தத்திலுள்ள முக்கிய விடயங்கள் பாதுகாப்புக் குறித்த அச்சம்கொண்ட முஸ்லிம்களின் பகைப்புலத்தில் அதன் உள்ளடக்கம் முக்கியம் வாய்ந்ததாகவே கருதப்பட்டது. புலிகள் அஷரப்பின் எதிரணியினரின் அரசியலையும் முஸ்லிம்களின் பலவீனத்தையும் பயன்படுத்திக்கொண்டனர்.
இவ்வொப்பந்தத்தின்மூலம் புலிகளின் அடிப்படை இலக்கான தமிழர் பாரம்பரிய தாயகக்கோட்பாடான இலக்கினை ஆதரிபப்தென்றும் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழ் மொழி பேசுபவர்களாயினும் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு உட்படும் தனித்துவமான ஒரு இனக்குழு என இது அடிப்படையில் தனித்தேசிய அடையாளத்தினை முஸ்லிம்களால் அவ்வப்போது முன்வைக்கப்படும் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையினை மறுப்பதாக அமைந்திருந்தது. ( வுhநல (ஆரளடiஅள ) யசந ய னளைவinஉவ நவாniஉ பசழரி கயடடiபெ றiவாin வாந வழவயடவைல ழக வுயஅடை யெவழையெடவைல ) இக்குழுவினர் இலங்கை திரும்பியதும் முதன்; முதல் எம்.ஐ.எம் முகைதீன் இந்தியப பிரதமரை யுத்த நிறுத்தம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் வடகிழக்கு மாகாணங்கள் இணைந்திருக்கும் பிரகடனத்தினை வெளியிடுமாறும் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனாவிற்கு வேண்டுகோள் விடுத்தார்.
( தொடரும் );
thenee.com (28.07/2009)

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (பாகம்- 7

.                                                                                                                எஸ்.எம்.எம் பஷீர். 

மீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் (பாகம்- 7 )

 எஸ்.எம்.எம் பஷீர். 

பிரபாகரனுக்கும் ரணில் விக்கிரமசிங்காவிற்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கையைத் தொடாந்து (22.02.2002 ) வன்னியில் சிறுவர்களுக்கான ஆயுதப்பயிற்சியினை மார்ச் மாதம் புலிகள் தீவிரப்படுத்தியமைக்கான ஆதாரங்கள் பல உள்ளன. 

சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் லண்டனில் 23 /03/2002 ல் இலண்டன் மார்லபோனிலுள்ள  ஹில்டன் ஹோட்டலில் (Hilton Hotel , Marylebone London)  ஹக்கீம் நடத்திய சந்திப்பு ஒன்றில ஒப்பந்தத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்து எனது அதிருப்தியினை நான் வெளிப்படுத்தியபொழுது ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களை ரணில் விக்கிரமசிங்கா கவனிப்பாரென்றும் ஏனைய சமூகங்களுடன் சமமாக நடத்துவதை உறுதிசெய்வாரென்றும் குறிப்பிட்டார் . ஆனால் ஹக்கீம் அந்த சந்திப்பு நிகழ்வு ஸ்ரீ.ல.மு.காவினால் ஒழுங்கு செய்யப்பட்டது என்று உண்மைக்கு மாறாக உறுதியாக குறிப்பிட்டார்.ஏனெனில் ஹோட்டல் நிர்வாகத்தினர் இக்கூட்டத்தினை ஒழுங்கு செய்தவர்கள் ஐக்கிய ராஜ்யத்திலுள்ள இலங்கை தூதவராலயத்தினர் என்று நிரலிட்டிருந்தனர். 

பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாடல் (3)                                                                                                               எஸ்.எம்.எம்.பஷீர்

" இந்திய அமைதிப்படையின் தொடர்சியான பிரசன்னம் இந்த நாட்டில் இரண்டு சமூகத்தினருக்குமிடையில் பாரிய அவநம்பிக்கை உருவாக்கத்திற்கு இட்டு செல்லும். ஆட்சியிலுள்ள குழுவினரே அவர்கள் எந்த கட்சியாகவிருந்தாலும் சரி இதன் (இந்திய அமைதி காக்கும் படையினரின் பிரசன்னத்தால்)  நன்மைகளை பெறும் நபர்களாக இருப்பார்கள், உழைக்கும் மக்கள் இழந்தவர்களாகவே இருப்பார்கள்"
                                                   மறைந்த புளட் தலைவர்  உமா மகேஸ்வரன் 
                    ( வாசுதேவ நாணயக்காரவுக்கு 1988 ல்      எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது)   .

 


லங்கையின் புவிசார் பொருளாதார நலன்களை தனது ஆதிக்க கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்திய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தவர் மறைந்த பாரத பிரதமரான இந்திரா காந்தி, ஒரு புறம் கூட்டு சேர அணியினை வலுப்படுத்திகொண்டு  மறுபுறம் கபடத்தனமாக தனிநாடு கேட்டு போராட புறப்பட்ட இளைஞர்களை ஆயுதம் வழங்கி பயிற்றுவிக்கும் பணியிலும் அவரது ஆட்சி செயற்பட்டது. உள்நாட்டு தனி நாட்டு சீக்கிய கிளர்ச்சி அவரின் ஆக்கிரமிப்பு அணுகுமுறையிலும் தமிழருக்கான தனி நாட்டு உருவாக்கத்துக்கான கொள்கையிலும்  அணுகுமுறை மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் முன்னாள் இலங்கையின் ஜனாதிபதி ஜே ஆர் .ஜெயவர்த்தன தான் "மகாத்மா காந்தி தொடக்கம் ராஜீவ் காந்தி வரை இந்தியாவை அறிந்திருந்ததாகவும் அதனுடன் சேர்ந்து நின்றதாகவும் , ஆனால் தனது இந்தியாவுடனான பிரச்சினை .என்பது இந்திரா காந்தியுடனான பிரச்சினை தான்" என்று தன்னிடம் கூறியதாக பிரபல ஹிந்து பத்திரிக்கையாளர் வீ. ஜெயந்த் குறிப்பிட்டிருந்தார்.  .  

ஆனால் அன்னையின் அதேவிதமான ஆக்கிரமிப்பு கொள்கையின் அடிப்படியில்தான் ராஜீவும் செயற்பட்டார், ஆனால் ராஜீவை சமாளிக்கும் அரசியல் அனுவபவும் ஆற்றலும் ஜே ஆருக்க இருந்தது. பூமாலை நடவடிக்கை (Operation Poomalai) என ராஜீவின் உத்தரவின் பேரில்  உணவுப்பொதிகளை இந்திய விமானங்கள் இலங்கையின் ஆகாய பிரதேசத்துள் அத்து மீறி நுழைந்து வீசியெறிந்து விரட்டியதும் ஜே ஆரும் கலங்கியே போனார். அதன் விளைவாய் திம்புவில் தொடங்கிய இந்திய அனுசரணையுடனான பேச்சுவார்த்தைக்கு வேறு விதத்தில் தீர்வுகாணும் வகையில்  இலங்கையின் அரசியலமைப்பிற்குள் இந்தியா பதின்மூன்றாவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்ற பண்ணி நுழைந்து கொண்டது. வேறு விதமாக கூறுவதானால் இறைமையுள்ள இலங்கையின் ஆட்சி அதிகார சட்டவாக்கத்துள் ஆதிக்கம் செலுத்த இந்தியாவுக்கு இடமளிக்கப்பட்டது. 

இந்தியா காஸ்மீரிய மக்களின் சுய நிர்ணய உரிமை குறித்த தனது ஐக்கிய நாட்டுடனான கடப்பாட்டை (நேருஜி ) மீறிக்கொண்டு அந்நிய நாடான இலங்கை மீது தனது ஆதிக்கத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தீவிரமாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒருபுறமும் ஜே வீ பி இன்னொருபுறமும் எதிர்க்க  ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் இவ் வொப்பந்தத்துக்கு எதிர்ப்பு  கிளம்பியது , அதிலும் குறிப்பாக இவ்வொப்பந்தம் தொடர்பில் தீவிர எதிர்ப்பினை காட்டிய அன்றைய ஐக்கிய தேசிய ஆட்சியில் விவசாய அமைச்சராகவிருந்த காமினி ஜெயசூரிய தனது பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகி சிங்கள தேசிய வாத கட்சியாக சின்ஹல ஆரக்சய சந்விதாணய கட்சியினை ஆரம்பித்து செயற்பட்டார். ஆயினும் பிரேமதாசாவின் இந்திய எதிர்ப்பு வட கிழக்கில் மாகான சபை இயங்காமல் சென்ற நிகழ்வுகள் அவாரின் கட்சியை செயலிழக்க செய்தன. இந்த ஒப்பந்தத்தினை எதிர்த்த இன்னுமொரு முக்கியமான சிங்கள தேசியவாதி சட்டத்தரணி எஸ்.எல் குணசேகரா. இவர் தனது எதிப்பினை ஜே ஆருக்கு நேரடியாக காட்டி , இவ்வொப்பந்தம் கைச்சாத்திடுவற்கு மூன்று நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஜே ஆர் கூட்டிய அது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலிருந்து வெளியேறியவர். இவர் திம்பு பேச்சுவர்த்தைகளில் அரச சட்ட குழுவினர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்.
முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தங்களின் பின்னரான துயரங்கள் பற்றி முந்திய எனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன் . அனால் ஜே ஆரின் இறுக்கமான எடுத்தெறிந்த அரசியல் போக்கு எப்போதுமே முஸ்லிம்களை அனுசரிப்பதாக இருக்கவில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் நிலவிய சூழலில் ஜே ஆர் தன்னை சந்தித்து பேசிய முஸ்லிம் தூதுக் குழுவினருடன் இறுதி முடிவுக்கு முன்னர் முஸ்லிம் சமுதாயத்தை கலந்தாலோசிப்பதாக கூறியிருந்தார் ஆனால் அவ்வாறு செய்யவில்லை , முஸ்லிம்களின் அரசியல் இந்திய மேலாதிக்க சக்திகளுக்கு ஏனைய பெரும்பான்மை சிங்கள மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பலியிடப்பட்டது, எனவேதான் ஜனாதிபதியாகும் கனவுடன் பல்லாண்டுகள் காத்திருந்த பிரேமதாசா சிங்கள மக்களின் இந்திய எதிர்ப்பினை சாதகமாக்கி கொண்டு இந்திய படை வெளியேற்ற கோசத்தை முன்வைத்தார், அதற்கு மிக முக்கியமாக தேவைப்பட்டது தமிழரின் ஆதரவு  அந்த வகையில் முரண்பட்ட புலிகள் தேவைப்பட்டனர். புலிகளுக்கு இந்தியாவை வெளியேற்ற வேண்டும், வட கிழக்கில் அரசியல் ஆதிக்கம் கொண்ட (மாகாண  சபை நிர்வாகத்தின் மூலம்)  ஏனைய தமிழ் இயக்கங்களை இல்லாதொழிக்க வேண்டும், வட கிழக்கினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இந்திய சிதைத்த தமது ஏக போக தலைமையை உறுதி செய்ய வேண்டும்.  இறுதியில் வழக்கம் போல் இலங்கை ஆட்சிக் கெதிராக திரும்பவேண்டும்  தமது சர்வதேச ஆலோசகர்களின் தூண்டுதலில் இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவினை கெதிரான ஆறாவது திருத்த சட்டத்தினை இரத்து செய்ய பிரேமதாசாவை பயன்படுத்த வேண்டும். அதே வேளையில் சர்வதேச பிரச்சாரங்களை முடுக்கி தமிழர் தாயாக திம்பு கோட்பாட்டை முன்னெடுத்து தனி நாட்டை நோக்கி நகர வேண்டும். ஆனால் பிரேமதாசா ஆறாவது திருத்தத்தினை நீக்க மறுத்து விட்டார். சர்வதேச தமிழ் தேசிய  புலிசார்பு  புலி சக்திகளின் இதற்கான ஒரு நடவடிக்கையாகவே 1988  ஏப்ரல் இறுதி நாளிலும் மே முதலாம் நாளும் சர்வதேச தமிழ் மாநாட்டை ( International Tamil conference)  "தமிழ் தேசிய போராட்டமும் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தமும்" ( Tamil National struggle and Indo-Lanka Peace Accord)  என்ற தலைப்பில்   உலகத் தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பினூடாக இலண்டனில் நடத்தினர். இந்த மாநாட்டில்தான்  பிரபாகரன் தமிழ் தேசத்தின் உண்மையான தலைவர் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது , அக்கூட்ட பிரேரணைகள் ஐக்கிய நாடுகளின் உறுப்புரிமை நாடுகளுக்கும் அனுப்ப பட்டது. பாலஸ்தீனிய தலைவர் யாசீர் அரபாத்தை எவ்வாறு பாலஸ்தீனிய மக்களின் தலைவராக சர்வதேச அங்கீகாரம் பெற முடிந்ததோ அதன் மூலம் ஐக்கிய நாடுகள் அவையில் அமர முடிந்ததோ அதனை பிரபாகரனை கொண்டு  செய்ய முயன்றனர். ஆனால் பிறக்கும் பொது முடம் பேய்க்கு பார்த்து தீருமாஎனபது போல் பிரபாகரன் தனது கட்டுக்கடங்காத பயங்கரவாதத்தை தனது அறிவுசீவிகளின் ஆசீர்வாதத்துடன் அரங்கேற்றினார்.  


முஸ்லிம்களின் பாதுகாப்பும் இயல்பான சமாதான சகவாழ்வுக்கான அவர்களின் நடைமுறை வாழ்க்கை ஓட்டமும் தமிழ் ஆயத இயக்கங்களினதும் இந்திய படையினரினதும் நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது. "இந்நூற்றாண்டின் மிகப்பெரிய ஒப்பந்தம்" என்று ராஜீவ் காந்தி பெருமிதமாக சிலாகித்த கூறிய இவ் வொப்பந்தம் சகல மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதாக இவ்வொப்பந்தத்தின் இரண்டாம் பிரிவின் பதினாறாம் உப பிரிவு (உ) பின்வருமாறு கூறியது. " வடக்கு கிழக்கு மாகாணங் களில் வாழும் அனைத்து இனங்களினதும் உடல் சொத்து , ஆகியவற்றின் பாதுகாப்பையும் காப்பையும் உறுதிப்படுத்துவதில் இந்திய இலங்கை அரசாங்கங்கள் ஒத்துழைக்கும் " . மேலும் அவ்வொப்பந்த அனுபந்தம் (II) பிரிவு  (7)  வடக்கிலும் கிழக்கிலும் உள்ள எல்லா சமூகத்தினர்களின் பவுதீக  பாதுகாப்புக்கும் தீங்கின்மைக்கும் இரு அரசாங்கங்களும் உறுதியளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் நடந்தது என்ன என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. வடகிழக்கு மாகான சபையின் ஸ்தாபிதத்துடன் முழு சமூகத்தினை சேர்ந்த மக்களுக்கும் இந்திய ஆக்கிரமிப்பு படைகளினதும் அதன் கூலிப்படைகளினதும்  அடாவடித்தனங்கள் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தனது அத்துமீறல்களை அவிழ்த்துவிட்ட புலிகளின் அடாவடித்தனங்கள் என இரு வேறுபட்ட அடக்குமுறைகளுக்கு பல சமூகங்களும் ஆளாகின என்பது வரலாறு. ( இக்கட்டுரையில்  நான் அன்றைய (1987/1988) கால கட்டத்தில் எழுதிய ஆனால் பிரசுரிக்கப்படாத குறிப்புக்கள் பல இப்போது தூசு தட்டி மீண்டும் எழுதவேண்டிய அல்லது பிரசுரிக்க வேண்டிய தேவையினை அல்லது வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளன ) . இந்திய ஒப்பந்தம் இந்திய அமைதி காக்கும் படையினரின் அடாவடித்தனங்கள் பற்றி முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடும் முஸ்லிம் மக்களின் துயர் களைவதற்கு பெரிதும் துணை புரியவில்லை . இது பற்றி நான் முன்னரே எழுதியுள்ளேன் என்பதால் விரிவாக எழுதவேண்டிய தேவை இல்லை. மொத்தத்தில்  ஜனநாயக அரசியலில் ஈடுபட்ட  கட்சிகள் யாவும் அந்த கால கட்டத்தில் வட கிழக்கில் பல உயிர் புலிகளை கொடுத்தனர். அப்பலிகளும் அக்கட்சிகளின் அரசியல் பிரச்சாரத்துக்கும் திரட்சிக்கும் துணை புரிந்தன. !! 

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...