http://www.padalay.com/2014/06/06-06-2014.html

"தீண்டாமைக் கொடுமையும் தீமூண்ட நாட்களும்" -இராமன். யோகரட்ணம்


தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் புலம்பொயர்ந்த பின்னரும், தனது வயோதிப காலத்திலும்கூட தமிழ் மக்கள் மத்தியிலே வேரோடிக்கிடக்கும் சாதியத்தின் கொடுமைகளையும், அதற்கு எதிரான கருத்துக்களையும் அம்பலப்படுத்தி வந்தவர். சிங்களப் பேரினவாதம் என்று பேசப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை எமக்கு அருகிலேயே உள்ள இனவாதம் எனும் சாதியமே எனக்கு மிக கொடுமையாக தெரிகின்றது என கனடாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பகிரங்கமாக உரையாற்றியவர்.

ஆமிக்குக் காணி - 04-வடபுலத்தான்

ஆமிக்குக் காணி - 04
இந்த நாடு எப்பதான் எல்லாத் தரப்பின்ரை உண்மைகளையும் மனசையும் புரிஞ்சு போகுதோ....!
வடபுலத்தான்
"வெளிநாடுகளுக்குப் பெடியளை அனுப்ப வேணும் எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிற தாய் தகப்பன்மாருக்கு எல்லாம் ஆமிக்காரர் இஞ்ச இருக்கவேணும். அவை நாலுபேரையாவது மாதம் ஒருதடவை பிடிக்கோணும். அல்லது சந்தியில மறிச்சு அடிக்கோணும் எண்டு விரும்புகினம்.

ஏனெண்டால், அப்பதான் இலங்கையில பிரச்சினை எண்டு வெளியில பிரச்சாரம் பண்ணலாம். வதிவிட உரிமை கோரலாம். வெளிநாடுகளில தஞ்சம் கோரலாம்"...

The Singing Fish of Batticaloa - BBC 4


"It is said to be heard the clearest on a full moon night... One has to go by boat, plunge an oar into the water, put the other end of the oar to one's ear, and listen..."

25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் -டி.பி.எஸ் ஜெயராஜ்

25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்
-டி.பி.எஸ் ஜெயராஜ்
பகுதி - 2
அரவிந்தராஜா என்கிற விசு
யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி பகுதியை சேர்ந்த வதிரியில் உள்ள ஒரு உயர்தர நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர் இராசையா அரவிந்தராஜா என்கிற விசு. 1983 ஜூலையில் நடந்த தமிழர் விரோத படுகொலைகளின் பின்னர் அவர் தனது உயர் படிப்பினைக் கைவிட்டு எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்தார். எல்.ரீ.ரீ.ஈயின் இரண்டாவது தொகுதி அங்கத்தவர்களுக்கு வட இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஜூவாலமுகியில் இந்திய இராணுவம் பயிற்சி அளித்தபோது அதில் ஒருவனாக விசு தனது ஆயுதப் பயிற்சியை பெற்றுக் கொண்டார்;.

தூண்டலும் தொக்கிய விளைவுகளும் ! (4)

தூண்டலும் தொக்கிய  விளைவுகளும் ! (4)
எஸ்.எம்.எம்.பஷீர்

யாழ் நூலகத்தை சிங்கள காடையர்களோ அல்லது இலங்கை இராணுவமோ தீக்கிரையாக்கியது என்பதற்காக புத்தரையே சிங்களவர்கள் கொன்றுவிட்டதாக நுஹுமான் கண்ட கனவு ஒரு  " கெட்ட கனவு " தான் !.  புத்தரை சுட்டுக் கொன்று, அவரின்  குருதி தோய்ந்த உடலத்தை இழுத்துச் சென்று அவரின்  தர்மங்களைப் போதிக்கும் புத்தகங்களையும், சுவடிகளையும் சேர்த்து புத்தகச் சிதையில் அவரை எரித்தது  என்பது பௌத்த சிங்கள முற்போக்கு சமூகத்துள் ஓரளவு மன உறுத்தலை ஏற்படுத்திய கவிதை என்ற வகையில் மட்டும் ஆதரவை பெற்று , மத நிந்தனைபௌத்த பேரதிர்ப்பு போன்ற பிரச்சினைகளுக்குள்  சிக்குவதில் இருந்து தப்பிக் கொண்டது. இலங்கையின் பெரும்பான்மை மக்களின் , அதுவும் ஆட்சி அனுசரணை அளிக்கும் வகையில் அரசியல் அமைப்பில் முதன்மை ஸ்திதி கொண்ட பௌத்த மதத்தின் ஸ்தாபகரான புத்தர் கொடூரமாக கொல்லப்படுவதாக , எரியூட்டப்படுவதாக கனவு காண்பது என்பது ஒரு கவிஞனின் உரிமப் பிரயோகம் எனக் கொள்ளப்படுகிறது. இன்றுவரை அக்கவிதை பற்றிப் பேசப்படுகிறது. !   

வாழ்க தமிழ்க்குடியும் தமிழ்க்குணமும்-வடபுலத்தான்



என்னதான் அரசாங்கத்தைச் சிலபேர் குறை குறையாகச் சொன்னாலும் Jaffna now2அது செய்திருக்கிற ஆயிரம் நல்ல காரியங்களை ஆரும் மறுக்கேலாது.

ஆனால், இந்த நல்ல காரியங்களை எங்கட தமிழ்க்கண்களுக்கும் தெரியாது. தமிழ் மனசும் பாக்காது. ஏனெண்டால் தமிழ் மனசும் தமிழ்க்கண்ணும் ஊனம் விழுந்ததொண்டு. 

தலைமைத்துவ முரண்பாடுகளும் சிவில் சமூகத்தின் பாத்திரமும் -சுயம்: 12 மார்ச் 2003

தலைமைத்துவ முரண்பாடுகளும் சிவில் சமூகத்தின் பாத்திரமும்-

எஸ்.எம்.எம்.பஷீர்





   




ஜெரமி பக்ஸ்மன் எனும் "பெரும் சிங்கம் இன்று தூங்குகிறது" !!

எஸ்.எம்.எம்.பஷீர்

ஏன் பிரித்தானியாவிற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ஆசனம் இருக்கிறது என்பதும் ,  வெளிநாடுகளில் நடைபெறும் யுத்தங்களில் பிரித்தானிய துருப்புக்களை ஈடுபடுத்த பிரித்தானிய பிரதமர் தயார் நிலையில் இருப்பதும் (பிரித்தானியாவின் ) ஏகாதிபத்திய வரலாற்றை விளக்குகிறது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை பார்ப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது முற்றிலும் ஒரு தவறான விடயமாகும் , நிச்சயமாக எவரும்  அன்னியர்கள்  தங்களை காலனித்துவப்படுத்தி ஆள்வதை விரும்ப மாட்டார்கள், “                 
                                                               ஜெரமி பக்ஸ்மன் (Jeremy Paxman)                                                                                     

முஸ்லிம்களுக்கெதிரான பெளத்த மேலாதிக்கம் இணக்க அரசியலை கேள்விக்குள்ளாக்குகிறதா? - மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்


பாகம் 2
1988ல் முஸ்லிம்களின் முதலாவது தனித்துவ அரசியல் வரவான முஸ்லிம் காங்கிரசின் பிரவேசம் வடக்கு கிழக்கில் "தமிழ் பேசும் மக்கள்"அல்லது "தமிழர்கள்" என்று அதுவரைகாலமும் சொல்லப்பட்டுவந்த பதத்தின் அரசியல் அர்த்தத்தை புதியதொரு பரிணாமத்துக்கு நகர்த்தியது.அதாவது முஸ்லிம்கள் அல்லாத "தமிழ் பேசும் மக்கள்"அல்லது முஸ்லிம்கள் அல்லாத "தமிழர்கள்" என்று அர்த்தப்பட வழிகோலியது.அன்றிலிருந்து நாங்கள் வேறு உங்களின் தமிழ் பேசும் அடையாளத்துக்குள் நாங்கள் இல்லை என்று அது தமிழ் தேசியத்தை நோக்கி உரத்து சொன்னது. இந்த விலகலின் காரணங்களையிட்டு தம்மீதான சுயவிமர்சனம் எதையும் தமிழ் தேசிய வாதிகளோ தமிழ் தேசியவாதத்தின் தலைமையை தம்பிடியில் வைத்திருந்த தமிழீழ விடுதலை புலிகளோ மேற்கொள்ளவில்லை.மாறாக மீண்டும் மீண்டும் முஸ்லிம்கள் மீது ஆளுமை செலுத்தி தமது அரசியலுக்கு ஆதரவாக அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கவே தமிழீழ விடுதலை புலிகள் முயன்றனர்.

‎நானும் கையாலாகாத தமிழன்‬!!

Jaffna Today

கலவரம் நடந்து கொண்ருக்கும் போது பல தன்மானத் தமிழனின் status நாங்கள் அடிவாங்கேக்க பாத்து கொண்டிருந்தனீங்கள் தானே இப்ப நீங்கள் வாங்குங்கோ என்பதை மையப்படுத்யே இருந்தது... அடேய் அந்தப்பெரிய இராணுவத்தை வைச்சிருக்கிற உங்களுக்கு அவங்கள் என்னடா செய்ய முடியும்.. சரி status போட்ட நீ என்ன செய்தனி அந்த நேரம்?? ஏதும் செய்திருந்தா இப்ப நீ status போட இருந்திருக்க மாட்டாய்....
சரி அந்த நேரம் அவங்கள் ஏதும் உதவி செய்திருந்தா இப்ப நீ என்ன செய்திருப்பா??
அளுத்கம போய் போராடியிருப்பியா??
போங்கடா டேய்.....
‪#‎நானும்_கையாலாகாத_தமிழன்‬.


‎நானும் கையாலாகாத தமிழன்‬ எனும் முகப்  புத்தகத்தில் இருந்து 

முஸ்லிம் சகோதர மக்களுக்கு!....சிவசெல்வம் செல்லத்தம்பி விந்தன்


      சிவசெல்வம் செல்லத்தம்பி விந்தனின் முகப் புத்தகத்தில் இருந்து  

    பிணம் செய்யும் தேசம் நூல் வெளியீட்டு விழா 27 -12-2004



    27/12/2004 அன்று ப்ரெண்ட் ஹாலில் நடைபெற்ற "பிணம் செய்யும் தேசம் " நூல் விமர்சன நிகழ்வில் : எஸ்.எம்.எம்.பஷீர் 

    தூண்டலும் தொக்கிய விளைவுகளும் ! (3)


    எஸ்.எம்.எம்.பஷீர்

    எனது "தூண்டலும் தொக்கிய  விளைவுகளும்" என்ற கட்டுரைத் தொடரில் பௌத்த மதத்தின் மனிதாபிமான கோட்பாடுகள் சில நூறு புத்த  மத துறவிகளின் அனுசரணையுடன் வழிநடத்தப்படும் பௌத்த சிங்களவர்களால் தகர்க்கப்பட்டு வருகின்றன,   என்பதையும் வரலாற்று ரீதியில் பௌத்த மதத்தின் மீதான , சிங்களவர்கள் மீதான ஏனைய இனத்தவரின் எதிர்ப்புணர்வுகள் புத்தரின் மீதான எதிர்ப்புணர்வாய் வெளிப்பட்டு வந்ததையும், இலங்கையில் பொதுசன தொடர்பு சாதனங்கள் குறிப்பாக திரைப்படங்கள் ஊடாக முஸ்லிம் மக்கள் மீது நாசூக்காக விதைக்கப்பட்டு வரும் காழ்ப்புணர்வு பற்றியும், எழுதிக் கொண்டிருந்த வேளையில், அழுத்தகம வேருவளை இன வெறியாட்டம் மிக விரைவாக நடந்து முடிந்து விட்டது. 

    இலங்கையில் ராஜபக்சேவிற்கு ஆதராவாக பிஜே பிரச்சாரம் செய்தாரா ?

    புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் ப.ஜ.க சார்பாக கலந்துகொண்ட ராகவன் என்பவர் பேசும்போது இலங்கை தேர்தலில் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் பி.ஜே பிரச்சாரம் செய்து விட்டு இப்போது ஆர்பாட்டம் செய்கின்றார் என்ற குற்றச்சாட்டை உங்கள் மீது வைத்துள்ளாரே?
    - கடையநல்லூர் மசூது
    பதில்:- சந்திரிகா அவர்கள் இலங்கையில் பிரதமராக இருந்த போது 2005 ஆம் ஆண்டு நான் இலங்கை சென்றேன். அங்கே பல ஊர்களில் பிரச்சாரம் செய்தேன். கடைசியாக தலைநகர் கொளும்புவில் முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் வகையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    தமிழர்களுக்காக போராடாதவர்கள் முஸ்லிம்களுக்காக மட்டும் போராடுவது நியாயமா ?


    கேள்வி :- இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்பாட்டங்களில் பங்கேற்காத தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம்கள் தாக்கப்படும் போது மட்டும் கண்டிப்பது என்ன நியாயம்? என்று பரவலாக கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு உங்கள் விளக்கம் என்ன?
    இலங்கையிலே தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட பொழுது அனைத்து இயக்கங்களும் போராடிய பொழுது தமிழ் நாடு தௌஹீத் ஜமா அத் மௌனமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு இஸ்லாமியர்கள் என்றவுடன் போராடுவது சரியா? 
    பதில்:- இலங்கைப் பிரச்சனை தொடர்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பட்டங்களின் தவ்ஹீத் ஜமாஅத் பங்கேற்கவில்லை என்பது உண்மைதான். அதற்கான காரணங்களைக் கூறுவதற்கு முன்னால் இப்படி கேள்விகேட்பவர்களை நோக்கி நாமும் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம்.

    முஸ்லிம்களுக்கெதிரான பெளத்த மேலாதிக்கம் இணக்க அரசியலை கேள்விக்குள்ளாக்குகிறதா?


    - மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்
    பாகம் 1
     கடந்த சில வருடங்களாக  தென்னிலங்கையில் பரப்பப்பட்டுவரும் முஸ்லிம்களுக்கெதிரான பெளத்த  மேலாதிக்க சிந்தனைகள் இப்போது வன்முறைகளாக வெளிப்பட தொடங்கியுள்ளன.அதன்  உச்சமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அளுத்கம வன்முறைகளை  அடையாளம் காணலாம். இந்த வன்முறை சூழல் கருக்கொண்ட கடந்த சில வருட  காலங்களிலிருந்து அளுத்கம வன்முறைகள் வரைக்கும் முஸ்லிம் மக்களை  பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்தே  வருகின்றன. பிரதான கட்சியான முஸ்லிம் காங்கிரஸ்(ரஹுப் ஹக்கீம்) தேசிய  காங்கிரஸ் (அதாவுல்லா) அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (ரிச்ஹாத்  பதியுதீன்)போன்ற கட்சிகள் சார்ந்த பலர் மத்தியிலும்  மாகாணங்களிலும் இலங்கையில் அதிகாரம் செலுத்தும் பொதுசன ஐக்கிய முன்னணி  சார்ந்து அமைச்சர்களாக இருக்கின்றனர். இதனடிப்படையில் இது ஒரு முழுமையான  அரசுசார் இணக்க அரசியலாக பார்க்கப்படுகின்றது.

    சாத்தான் வேதம் ஓதுது

    -  வடபுலத்தான்
    அன்பான வாக்காளப்பெருமக்களே! தமிழ்த்தேசியவாதிகளே!TNA in election

    என்ன திடீரெண்டு இருந்தாப்போல இப்பிடிச் சொல்லுறன் எண்டு யோசிக்கிறியளோ...

    இன்னும் கொஞ்ச நாளில எலெக்ஸன் வரப்போதுதெல்லோ... அதுதான்... அநேகமாக ஒரு ஏழெட்டு மாசத்தில பாராளுமன்றத் தேர்தல் நெருங்கப்போகுதெண்டு கதைக்கினம்....

    மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

            எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...