தம்பி நீ எழுவாய்! இங்கிருப்பது பயனிலை!! சென்று வருவது செயற்படுபொருள்!!!

-எஸ்.எம்.எம் பஷீர்-

நாட்டை எல்லாந் தொலைத்தாய்;:--அண்ணே!

நாங்கள் பொறுத்திருந்தோம்

மீட்டும் எமை யடிமை –செய்தாய்,

மேலும் பொறுத்திருந்தோம்”

-சுப்பிரமணிய பாரதியார் -



எனது இளம்பிராய பாடசாலை தமிழாசிரியர் பராக்காயிருக்கும் மாணவரைப் பார்த்து "தம்பி நீ எழுவாய்! இங்கிருப்பது பயனிலை!! சென்று வருவது செயற்படுபொருள்!!!" என்று “இலக்கண” சுவையுடன் குறிப்பிட்டது என் ஞாபகத்திற்கு வருகின்றது. அதுவே இக்கட்டுரையின் தலைப்பாக இன்றைய புலம்பெயர் புலிசார் மாணவர்களின் நிலையினைப் புலப்படுத்துவதாக எனக்கு தோன்றுகின்றது.

மாணவர்கள் பாடசாலைச் சீருடையுடன் ஆர்ப்பாட்டங்களில் லண்டனில் கலந்து கொள்வதுடன் பிரத்தியேகப் போதனா நிலையங்களில் பெருமளவில் செல்வது குறைந்திருப்பது கண்டு ஒருவர் தமிழ் மாணவர்கள இபபோக்கினைக் கடைப்பிடித்தால் இங்குள்ள ஆசிரியர்களும் இவ்வாறு புலன் இழந்து புலிக்கொடித் தமிழீழத்தில் கனவு காணத் தொடங்கும் மாணவர்களைப் பார்த்து என்ன கூறுவார்கள் என நினைத்தபோது இக்கட்டுரைக்கான தலைப்பும் விழுந்தது. தந்தை செல்வாவின் சாத்வீகப் போராட்டமும் அதன்பின்னரான ஆயதப் போராட்டமும் தலா இரண்டு தசாப்தங்கள்; நடந்து முடிந்தாயிற்று.

. இரண்டும் தோல்வி என்றாலும் விக்கிரமாதித்தர்கள் சளைக்கவில்லை. புலம்பெயர் நாடுகளில் கவனயீர்ப்புப் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று இல்லாமல் இப்போது அறப்போராட்டம், அறவழி முற்றுகைப் போராட்டம் என்றெல்லாம் மூன்றாவது பரிமாணப் போராட்டம் இன்று கருக்கொண்டிருக்கின்றன. இப்போராட்டங்கள் புலம்பெயர் தளங்களில் இன்னும் இரண்டு தசாப்தங்களுக்கு நீடிக்கலாமா என்னும் கேள்விக்கு அனிதாப் பிரதாப் (பிரபாகரனின் பரமரசிகை) பிரபாகரனுக்கு வயது 54 மேலும் இரு தசாப்தங்களுக்கு போராடுவாரென கட்டியங் கூறிவிட்டார் .போராட்டம் பலவிதம் போராடுவோர் புலிரகம் “வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும” என்ற எம்.ஜி ஆரின் சினிமாப்பாடலின் வரிகளை எல்லாத் தமிழர் இயக்கங்களும் வரித்துக்கொண்டன. ஏனெனில் அவர்கள் எல்லோருமே ஆயதந் தரித்துப் போராடிய படைகள்தான். ஆனால் புலிகளும் இதனை வரித்துக்கொண்டாலும் குறிப்பாக 1998ல் லண்டன் புலிகளின் முகவரும் இன்றைய பயங்கரவாத குற்றவாளியாக தண்டிக்கப்பட்டிருக்கும் சாந்தன் தலைமையிலான ஐக்கிய தமிழர் அமைப்பு (United Tamil Organisations) தனது ஈழம் ஹவுஸ் வெளியீடுகளில் புலிகளே தமிழர்கள், புலிகளல்லாதார் தமிழர்களல்ல என்ற தமது கோட்பாட்டினை உறுதி செயததால் “வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் தமிழ்படை தோற்கின் எப்படை வெல்லும்,” என்று புலிப்படைதான் தமிழ்படைஎன்று நிறுவியிருந்தனர். இன்றும் அறப்போர் தொடுத்திருக்கும் புலிகளின் முகவர்கள் அறம் என்ற சொல்லின் தமிழ் பொருள் அறியாதோர். அறவமி முற்றுகை என்று கல்லெறிந்து இந்தியத் தூதரகத்தின் சாளரக் கண்ணாடிகளை உடைப்போர்கள் கோஷமும் புலிகளின் தாகம் என்பதனை மாற்றி “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம”; என்று புலிகள் எல்லாம் தமிழர்கள்தான் என்று உறுதிசெய்கிறார்கள்.

இனிமேல் புலிகளல்லாதவர்கள் தமிழர் இல்லையா என்னும் கேள்வி என்றுமே தொக்கிநிற்கப் போகின்றது. ஆக மொத்தத்தில் புலிகளின் ஆய்வாளர்கள் இன்னும் இலங்கையிலே தமிழீழத் தனியரசு என்னும் கற்பனைக்கு ஒவ்வாத சூழல்கள் களத்திலும், தளத்திலும் நிலவும்போதும் சுருதி குறையாமல் தினமும் புலிப்படை வெல்லும் என்று உச்சாடனம் பண்ணுகின்றார்கள். வன்னியிலிருந்த வெளியேறும் மக்களைப் பார்த்தால் வயிறு பதைக்கிறது அதிலும் அங்கிருந்து வருகின்ற குரல்கள் கணிசமானவை மலையகத்திலிருந்து குடியேறியவர்களின் தமிழ் உச்சரிப்புடன்தான் ஒலிக்கின்றது குறிப்பாக 1977ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின்போது மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை அப்போதைய ஆயுதக்  குழுக்கள்  (வன்னித் தமிழர்களின்) கொண்டுவந்து குடியேற்றினர். இவர்கள் தமிழீழக் கருத்தியலை தவிர்க்கவொண்ணாமல் சுமந்து புலிகளின் கைதிகளாக வன்னியில் அல்லலுற்றவர்கள். அவர்களில் பலர் இன்று சிங்கள மொழியில் தெளிவாக எடுத்துக் கூறுவதனை கேட்க, காண, முடிகின்றது. இந்த நிலை கிழக்கிலும் காணப்பட்டது, சேனைப்பயிர்ச்செய்கை மாறுபட்ட வேலைச்சூழல், சுய தொழிலாக்கம், கருதி இடம்பெயர்ந்து உறுகாமம், புல்லுமலை போன்ற இடங்களிலும் மலையகத் தமிழர்கள் குடியேறினர். அவ்வாறு குடியேறியவர்களில் பலர் ஆயதக் குழுக்களிலும் இணைந்தனர்.

விடாக்கண்டன், கொடாக்கண்டனாக சிறீலங்காவின் அரசியலமைப்பினை நாங்கள் அங்கீகரிக்கவில்லை அதற்கு வெளியேதான் தீர்வு காணப்பட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக தமிழ் செல்வன் கூறியதுபோய் இன்று அடிமேல் அடியடிக்க அம்மி நகர்ந்த கதையாய் அரசியல் அமைப்பிற்கு உட்பட தீர்வுகாண தயார்என்பதாக நிபந்தனையற்ற யுத்த நிறுத்தத்திற்கு கோரிக்கைவிடும் புலிகளைவிட புலம்பெயர் புலிப் போஸகர்கள் ஆபத்தானவர்கள். புலிகள் அவரோகணத்தில் தமிழீழ கீதம் பாடத் தொடங்கினாலும் இந்த ஆசாடபூபதிகள் அவரோ கணத்தில்தான் பாடத் தயாராகவிருக்கிறார்கள். புலியை வளர்த்தவர்கள் புலி மாமிச வெறிகொண்டு அலைந்தபோது சபாஸ்போட்ட றிங் மாஸ்ரர்களுக்கு தேவை கோரப்புலியும் அது காவல் காக்கும் தமிழீழமும். பிரபல இந்தியப் பத்திரிகையாளர் நிருபாமா சுப்பிரமணியம் 2000 ம் ஆண்டு இறுதிப்பகுதியில் குறிப்பிட்ட ஒரு விடயம் சுட்டிக்காட்டப்படவேண்டி உள்ளது.  ஏரிக் சொல்கெய்ம் பிரபாகரனைச் சந்தித்துவிட்டு பிரபாகரன் சமாதானப் பேச்சுவார்த்தைமூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண தீவிரமாக இருக்கின்றார் எனக் குறிப்பிட்டவுடனே மேலும் சர்வதேச அழுத்தம் காரணமாக இலங்கைப் பிரச்சினைக்கு இலங்கையின் நில ஆளுகைக்கு உட்பட்டு தீர்வுகாண நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார் என்ற நிலை தோன்றியபோது புலம்பெயர் தமிழர்களிடம் இதற்கான அபிப்பிராயங்களை கேட்டுத் தொகுத்து அவர் புலம்பெயர் தமிழர்கள் ஆயத யுத்தத்தினை தொடர்ந்து நடாத்தி தனிநாடு காணுவதனையே விரும்புகிறார்கள் எனக் குறிப்பிட்டார். மேலும் அவர் அவர்களில் பலர் ஊலடிநச ளுpயஉந ஈழத்தில் ஏற்கனவே வாழ்பவர்கள் எனக்குறிப்பிட்டார். மேலும் வாரி வழங்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழீழம் சாத்தியமற்றதை அங்கீகரிக்க முடியாது எனக்குறிப்பிட்டிருந்தார். அது மாத்திரமன்றி 2006 யூனில் லண்டனில் இடம்பெற்ற புலி ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் துறைசார் கற்றவர்கள் தங்களது தமிழீழம்தான் தீர்வு என்பதனை வெளிப்படுத்தினர். குறிப்பாக விஜயதேவா என்னும் பொறியியலாளர் போர்தான் முடிவு என்பதை வலியுறுத்திக் கூறினர். இதில் ஒருவர் இதுவரை இறந்துபோன தமிழர்களுடன் இன்னுமொரு பத்தாயிரம் அல்லது அதற்கு கிட்டியவர்கள் இறப்பார்கள் அது எங்களுக்கு பெரிய வித்தியாசமில்லை என்று போரும், இழப்பும் குறித்த முரசறைந்தார். இவ்வாறு புலம்பெயர் தனிநாட்டு ஆதரவினைப பற்றி றொய்டர் பத்திரிகையாளர் பீற்ற அப்ஸ் விரிவாக பதிவு செய்துள்ளார்.

ஒருகதை ஞாபகம் வருகிறத ஒரு குருவும், சிஷியனும் ஒரு ஆற்றங்கரையைக் கடக்கநேர்ந்தபோது அக்கரையில் ஒரு இளம் பெண் இவர்களை அணுகி, தானும் அடுத்த கரைக்குப் போகவேண்டும் தனக்கு நீச்சலும் தெரியாதென்றும் தன்னை மறுகரைக்கு செல்வதற்கு உதவுமாறு வேண்டினார். அதனை குரு அபசாரம் பெண்ணைத் தொடுவது தமது துறவறத்திற்கு இழுக்கென்று ஆற்றில் இறங்கிய பின்னர் சிஷியன் இரக்கமீதியால் அப்பெண்ணையும் தன்னுடன் அக்கரைக்கு நீந்திக் கரைசேர்த்த பின்னர் தமது பயணத்தை குருவுடன் தொடர்ந்தபோது குரு தனது சிஷியனை தொடர்ச்சியாய் கண்டித்தவாறு சென்றார். இறுதியில் பொறுமை இழந்த சிஷியன் சொன்னார்.” ஐயா நான் அந்தப் பெண்ணை கரையிலே இறக்கிவிட்டேன் நீங்கள் இன்னுமா சுமக்கிறீர்கள்” என்று. தமிழீழத்தை புலி விட்டாலும் புலிப் போசகர்கள் விடுவதாய் இல்லை என்பதை இக்கதை எனக்க ஞாபகமூட்டுகின்றது.
Thenee, Unmaikal , Mahavali, Alai -April 2008

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...