ஷாப்பிங் பாக்" (Shopping Bag) புகழ் முன்னாள் ஈழவர் தலைவரும்; "தமிழ் பேசும் மக்களின் தலைமகனும்" ஒரே மேடையில் சப்பைக்கட்டு.

ஷாப்பிங் பாக்" (Shopping Bag) புகழ் முன்னாள் ஈழவர் தலைவரும்; "தமிழ் பேசும் மக்களின் தலைமகனும்" ஒரே மேடையில் சப்பைக்கட்டு.

எஸ்.எம்.எம்.பஷீர்

இப்போது எதிரிகள் சகோதர வாஞ்சைகள் பொங்கி பிரவகிக்க ஆளை ஆள் அணைத்து கொள்கிறார்கள், இதற்கு முன்பும் குறுகிய கால பகைவர்களும் குறுகிய கால நண்பர்களும் அரசியலில் காணப்பட்டனர் ; ஆனால் இன்றைய அரசியல் சூழலில் வரும் செய்திகள் தன்னை கிள்ளி நாம் காண்பது கனவா என்று நம்மையே ஒரு உணர்வுப் பரிசோதனை செய்யவேண்டி இருக்கிறது என்பது ஒரு புறம் இருக்க, எனக்கு பழைய நினைவுகளை இவ்வாறான புதினச் செய்திகள் மீட்டச்செய்கின்றன; ஒருவேளை நான் இங்கு குறிப்பிடும் சில அரசியல்வாதிகள் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த அந்த "ஆண்டிகளை" போல அமைந்துவிட்டதால் ஒரு விதத்தில் நான்அவர்களை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

அண்மையில் சம்பந்த சகோதரர்கள் முன்னாள் ஈழவ சகோதரர்கள் , தமிழ் பேசும் மக்கள் என ஒரு புதிய கூட்டு மகிந்தவை கவிழ்த்துவிடும் கனவில் மட்டுமல்ல தமது கட்சிகளின் எதிர்கால இருத்தலை உறுதிசெய்வதில் இந்த தேர்தலை தமது ஜீவ மரண போராட்ட அரசியலாக பார்க்கிறார்கள். எனவே இனவாதம் மதவாதம் என்பவற்றை தமது அஸ்திரங்களாக பாவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இவ்வாறான அரசியலில் எத்தனை அப்பாவி உயிர்களை பலிகொடுக்க இக்கட்சிகள் தயாராக இருக்கிறார்கள்!. நம்புவோம் நல்லது நடக்கட்டும் என்று.

"தமிழர் தலைமகன்" என்று முஸ்லிம் காங்கிரசால் புகழாரம் சூட்டப்பட்ட முஸ்லிம்களை தமிழ் பேசும் மக்கள் என்று பம்மாத்து காட்டிய , முஸ்லிம்களை புலிகள் கொன்றபோதேல்லாம், இடம் பெயர்த்தபோதெல்லாம் இம்மியும் அசையாது ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் ஆகத் குறைந்த விழுக்காடு மனித இயல்பின்றி மௌனமாக இருந்த இந்த புலிகளின் பூச்சாண்டி சம்பந்தன் இன்று முஸ்லிம்களுக்கும் , உலகின் வரலாற்றை கறைபடுத்திய கர்ணகடூர பயங்கரவாதிகளான புலிகளின் தலைவர்கள் குறித்து தமிழர்களே சொல்லாத அளவு புகழாரம் சூடிய ரவுப் ஹக்கீம் ஆகியோரின் கூட்டு ஜே வீ பீ -யு .என் பீ கூட்டுப்போல் விசித்திரமானதல்ல என்றாலும் விஷமானது. தமிழ் பேசும் மக்களின் கூட்டை வட கிழக்கில் முஸ்லிம்களை தேசிய அரசியல் அபிலாஷைகளிளிருந்து வேறுபடுத்தி நாசமருக்கும்.

முன்னாள் பயங்கரவாதிகளின் சகோதர இயக்கமான ஈரோஸ் இயக்கத்தின் தலைவராக செயற்பட்ட , இன்றைய முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகு தாவூத் ஷாப்பிங் பாக்கை காட்டி முஸ்லிம் மக்களை பயமுறுத்தும் கைங்கரியத்தை கடந்த இரண்டு தசாப்தங்களாக செய்து வருகிறார். இவர் தொடர்சியாக தனது எதிர் அரசியல் பிரச்சாரத்தில் முஸ்லிம்களை விரட்ட ஷாப்பிங் பாக் உதாரனத்தை பயன்படுத்தி வருகிறார். இவர் தான் ஈரோஸ் இயக்கத்தின் ஏறாவூர் தலைவராக 1988 தேர்தல் காலத்தில் முஸ்லிம் மக்கள் ஈரோஸ் இயக்கத்திற்கு வாக்களிக்காவிட்டால் செங்கலடிப் பாலத்தை தாண்டி ஷாப்பிங்பாக்குடன் ஓட வேண்டி வரும் என்று பயமுறுத்த தொடங்கியவர்; முஸ்லிகளும் "ஈழவர்கள்" என்றவாறான கருத்துக்களை முஸ்லிம்கள் மீது திணித்தவர். இவரையும் இவரின் அன்றைய குரு வே. பாலகுமாரனுடன் ஏறாவூரில் அவரின் இல்லத்தில் 1989 தேர்தல் காலத்தில் சந்தித்து அவர்களின் இன வகைப்படுத்தல் குறித்து நான் கேள்வி எழுப்பியபோது பசீர் இடைபுகுந்து முஸ்லிம்களை எவ்வாறு அழைப்பது என்பது குறித்து ஒரு மௌலவியிடம்தான் ஆலோசனை வேண்டி இருப்பதாக கூறியவர்., "ஈழவர் தேசிய" ஒற்றை பரிமாண தேசியத்தை தமிழ் பேசுகின்ற சகல சமூகங்களுக்கும் சந்தைப்படுத்தியவர் . இன்றுவரை முஸ்லிகளை அவ்வாறுதான் பயமுறுத்தி வருகிறார்.

ஏறாவூர் பட்டினாட்சி மன்றத்தை நிர்வகித்த அன்றைய ஆணையாளர் ரம்லானுடன் முரண்பட்டு முறுகி எதிராக செயற்பட்ட சேகு தாவூத் பசீர் ஈரோஸ் இயக்க ஏறாவூர் தலைவராக இருந்தபோதான் அவரது இயக்கத்தால் ஈவிரக்கமின்றி ஏறாவூர் அரசினர் வைத்தியசாலையில் நோயாளியாக வைத்தியசாலை கட்டிலில் அதிகாலையில் தூக்கத்திலிருந்த ஆணையாளர் ரமலான் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார். . இவரது கொலையை அடுத்து அன்று அதிகாலையில் எனது வீட்டு கதவை தட்டிய அன்றைய ஏறாவூர் மருத்துவ அதிகாரியின் பேயறைந்த முகம் இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது.

இந்த சேகு தாவூத்தின் அடியாட்கள்தான் 1989 நாடாளுமன்ற தேர்தல் நடப்பதற்கு முந்திய இரவு ரஷீத் எனும் முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் முகவர் ஒருவரை தமது கட்சியின் " சித்திரவதை" கூடத்துக்கு கடத்தி சென்றனர் . அங்கு வைத்து ரஷீத் மிக மோசமாக சேகு தாவூதின் ஆட்களால் தாக்கப்பட்டார். பின்னர் சேகு தாவூதின் காரிலே ரஷீதை கொண்டு வந்து ஏறாவூர் வைத்திசாலை வாசலில் உருட்டி விட்டனர் . இன்று ஜனநாயகம பற்றி வாய் கிழியக்கத்தும் இவரின் ஜனநாயக மீறல்கள் ஓன்று இரண்டல்ல, யாவும் எமது பதிவுகளில் உறைந்துள்ளது. சென்ற மாகாணசபை தேர்தலிலும் இவரது ஆதரவாளர் துபாயில் தொழில் புரியும் ஒருவர் சுதந்திரக் கட்சியினருக்கு ஆதரவானவர் ஒருவரின் மீது முதல் தாக்குதலை நடைத்தினார் என்று அன்றைய செய்திகள் கூறின, மேலும் போலீசார் இவரை தேடத்தொடங்க இவர் தலைமறைவாக சிலகாலம் வாழ வேண்டி நேரிட்டதாகவும் அறியப்பட்டது. ஆட்டை கடித்து மாட்டைக்கடித்து மனிசனை கடித்த கதையாய் அவரது அடியாட்கள் எனக்கும ஈரோஸ் பற்றி விமர்சித்தால் நான் கொல்லப்படுவேன் என்று எச்சரிக்கை விடுத்தவர்கள் இப்போது ஏ .எச். எம் . அஸ்வர் தனது அரசியல் உரை ஒன்றில் பசீரின் ஷாப்பிங் பாக் அச்சுறுத்தல் குறித்து பின்வருமாறு சிலாகித்து பேசியுள்ளார். அதனால் எனது ஞாபகங்களும் முடுக்கி விடப்பட்டன. இப்போது அஸ்வர் தனக்குத் தெரிந்த பசீர் கூறியதை பின்வருமாறு  குறிப்பிடுகிறார்.

"ரணில் வந்தால் 'ஷொப்பிங்' பாக்குடன் ஓடவேண்டி வரும்' என்பது மு.கா.வின் அன்றைய கோஷம்.

சந்திரிகா அம்மையாரின் ஆட்சியின் இரண்டாவது முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.வில் போட்டியிட்ட ரணில் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் 'ஷொப்பிங்' பைகளோடு கிழக்கை விட்டு ஓடவேண்டி வரும் என்று அன்று கிழக்கு மாகாணத்தில் பிரசாரம் செய்தவர்கள் மு.கா.வினர்.

ஆனால், வடக்கிலிருந்து 'ஷொப்பிங்' பைகளோடு விரட்டப்பட்ட முஸ்லிம்கள் இன்று மீண்டும் நிம்மதியாகத் தமிழ் மக்களோடு ஒன்றிணைந்துள்ளமையை நோக்கும்போது ரணிலின் தந்திரோபாயத்தினால் நிறுத்தப்பட்டுள்ள பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டுமென ரவூப் ஹக்கீம் கூறுவது விந்தையாகவிருக்கவில்லையா?

Thanks: Thenee 29.01.2010


wann

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...