"பிரிக்க முடியாதவை தமிழும் சுவையும் –“திருவிளையாடல்”

- எஸ்.எம்.எம் பஷீர்-

பிரிக்க முடியாதவை சுயநிர்ணய உரிமையும் தமிழ் தேசிய தலைமையும் - “புலி விளையாடல்” -- (இதயச்சந்திரன் ஐ.பி.சியின் புலி ஆய்வாளர்-.15.05.2009)
முன்னாள் தென் அபிரிக்காவின் அரச அதிபர் எப்.டபிள்யூ டி கிளார்க் (F.D.De. Klark) அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று லண்டனில் சென்ற செவ்வாய்கிழமை (12.05.09) அரச பொதுநலவாய அமைப்பு மண்டபத்தில் (Royal Commonwealth Society) இடம்பெற்றது. தென் ஆபிரிக்கா மீண்டும் பொதுநலவாய நாடுகளின் ஒன்றியத்தில் இணைந்துள்ள பின்னர் இவரைக் கௌரவிக்குமுகமாக இடம்பெற்ற நிகழ்வில் தான் ஒரு தென் ஆபிரிக்கன் என்ற பெருமிதத்துடன் உரையாற்றினார். தமது நாட்டிலுள்ள குறைபாடுகளையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. இங்கே சிறுபான்மைச் சமூகத்தின் பிரதிநிதியாக மட்டுமல்லாது பெரும்பான்மைச் சமூகத்திடம் அதிகாரத்தினை ஒப்படைத்து திரு நெல்சன் மண்டேலா அவர்களுடன் இணைந்து நோபல் பரிசுபெற்று அமைதியாக வெள்ளை இன ஆட்சியினை, பெரும்பான்மை கறுப்பு இன ஆட்சிக்கு மாற்றியமைத்தவர். இந்த நிகழ்வில் அவருடைய அனுபவங்களை செவிமடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்வின் பின்னர் சோதிநாதன் என்னும் லண்டன் வாழ் தமிழ் தேசியப் பத்திரிகையாளரை சந்திக்க நேரிட்டது. அவருடனான சம்பாஷனையில் “புலிகள் அழிந்துவிடவில்லை அவர்கள் அங்கு இருப்பார்கள், அவர்களின் செயற்பாட்டினை தொடர்வார்கள் புலம்பெயர் இளையோர் போராட்டத்தினை முன்னெடுக்கின்றார்கள் தமிழக ஆதரவு திரட்சி அடைகிறது” என்று குறிபபிட்டபோது நான் இடைமறித்தேன். “ஏன் அரசியல்வாதிகள், மந்திரிமார்கள் என்று புலிகள் கொல்வதற்கா? ஏனெனில் தமிழீழத்தினை இனி அவர்களால் பெறமுடியாது என்று கடுப்புடன் சொல்லவேண்டி நேரிட்டது. ஒன்று மட்டும் துல்லியமாக விளங்குகிறது இவர்கள் தமிழீழக் கனவுடனாகுதல் சாக விரும்புகிறார்கள் என்பதுதான். அவரது முதிர்ந்த வயதில் அறன்றுபோகிற புத்தியை என்னவென்று சொல்வது. இன்று மேற்குலக அரசின் அனுசரணையைப் பெற்று இலங்கையில் தமிழீழத்தினை நிறுவிவிடலாமென்று அறவழிப் போராட்டம் என்று இளையோர் போராடி வருகிறார்கள். ஏகாதிபத்தியங்களால் வளர்க்கப்பட்டு இன்று கைவிடப்பட்டிருக்கும் புலிகளைக் காப்பாற்ற இந்த இளையோர் தலைமுறையினர் மண்டியிடுகிறார்கள.; ஆனால் இவர்களின் போதாத காலம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் மேற்குலகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இவர்களை வளர்த்த ஏகாதிபத்தியங்களே இருதலைக்கொள்ளி எறும்பாக தடுமாறுகின்றார்கள். அமெரிக்க ஜனாதிபதி திரு ஒபாமா அவர்களும், அமெரிக்க வெளியுறவுச் செயலர் கிலாரி கிளின்ரன் அவர்களும் என்ன செய்வதென்று அங்கலாய்க்கிறார்கள். ஏனெனில் அமெரிக்காவின் ஏகாதிபத்திய விஸ்தரிப்பு தொடர்பான பல்வேறுபட்ட இரகசியத் திட்டங்கள் 2001 ம் ஆண்டு அம்பலமாகின. அதில் ஹேர்ட் றூட்மன் (Herad Rudman) என்ற பெயரில் முன்நாள் ஜனாதிபதி பில் கிளின்ரனின் காலத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் வில்லியம் கோஹேண் (William Cohen) மேற்பார்வையில் அமைக்கப்பட்ட பாரிய அன்னிய கிழக்குப் பிரதேசம் (Greater Near East Area) தொடர்பான அறிக்கை 2001 செப்டம்பரில் கசிந்தது.
இந்த அறிக்கையில் இந்தியக் கண்டம் தொடர்பான இரகசிய அரசியல் திட்டங்களும் அடங்கியிருந்தது. இலங்கையிலுள்ள தமிழ், சிங்களப் போராட்டங்கள் மற்றும் இந்திய முஸ்லிம் -- இந்து முரண்பாடுகள் யாவும் நீடிக்கப்படுவதன்மூலம் தங்களது கட்டுப்பாட்டினை எவ்வாறு அத்தகைய நாடுகளின் பாதுகாப்புச் சூழ்நிலையை அழிக்கப்பயன்படுத்தலாம். எனவும் மத்திய கிழக்கிற்கு அடுத்ததாக ஆராயப்பட்டிருந்தது. எனவே இலங்கையினுடைய ஸ்திரத்தன்மையற்ற நிலையைத் தக்கவைப்பதில் அதற்கு புலிகளும் புலி சார்ந்த தமிழர்களும் செல்லப்பிள்ளையாக செயற்பட்டிருக்கிறார்கள். இவற்றில் மறுபுறம் அனுசரணையாக செயற்பட்டவர்கள் இலங்கையின் ஏகாதிபத்திய சார்புநிலை ஆட்சியாளர்களாகும். இன்னொரு பின்னணியினைக்கூடப் பார்க்கலாம் தந்தை செல்வாவின் காலத்தில் குறிப்பாக 1960 களில் சுதந்திரன் பத்திரிகை நடாத்துவதற்கு நிதி இல்லாதபோது கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதராலயத்தில் பேச்சுவார்த்தை நடாத்தியதும் பின்னர் அவர்களின் நிதி உதவியினால் பத்திரிகை நடாத்தியதும் ஒரு நம்பகரமான மூலத்திலிருந்த கேட்ட செய்தியாக இருக்கின்றது இவ்வாறான ஆதரவு தளங்களுக்கு எதிராக இன்றைய இலங்கை அரசு சீன, ரஸ்ய, ஜப்பானிய, இந்தியா என்று ஆசிய ஆதரவுத் தளங்களில் காலூன்றி இருக்கும் வேளையில் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் இன்று கவடி ஆட்டம் ஆடத் தொடங்கியிருக்கின்றார்கள். இந்தப் பின்புலத்தில் நேற்று (14.05.09) வியாழக்கிழமை(சுழலயட ஊழஅஅழறெநயடவா ளுழஉநைவல) இலங்கைக்கு சென்றுவந்த இலங்கைக்கான இங்கிலாந்து பிரதமரின் விசேட பிரதிநிதி டெஸ் ப்ரவ்ணி (Des Brownie) மற்றும் முன்னாள் அவுஸ்திரேலிய பிரதம அரசியல்வாதியும், இன்றைய சர்வதேச நெருக்கடிக்குழவின் தலைவருமான (International Crisis Group) கரட் இவான்ஸ்(Gareth Evans) கலந்து கொண்டனர். இருவரும் ஒரே குரலில் புலிகள் இயக்கத்தினை பயங்கரவாத இயக்கம்ரூப வ் அவர்களை அழிப்பதற்கு ராணுவம் நெருங்கியிருக்கின்றது என்பதையும் புலம்பெயர் தமிழர்கள் புலிகள்மீது தமது செல்வாக்கினைச் செலுத்தி இதற்கு முடிவுகட்ட வேண்டுமென்பதனையும் வலியுறுத்தினர். மக்களின் விருப்பிற்கு மாறாக புலிகள் மக்களை பலாத்காரமாக தடுத்து வைத்தமையையும் சுதந்திரமாக தாமாகவே அரசாங்கத்திடம் அடைக்கலமடைந்துள்ள மக்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை உண்மையாகவும், தெளிவாகவும் குறிப்பிடுவதாக புலி ஆதரவாளர்களின் முகச்சுழிப்பிற்கு மத்தியிலும் குறிப்பிட்டார். ஆயினும் அடிப்படையில் மக்களைப் பாதுகாக்கவேண்டிய அரசின் தேவைகளையும் அதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் செயற்படுத்தவேண்டியதன் கடைப்பாட்டையும் அவர்கள் இருவருமே வலியுறுத்தினர். இச்சந்திப்பு குறித்த டெஸ் ப்ரவ்ணி தன்னைப்பற்றி இலங்கையில் பரப்பப்பட்ட நச்சூட்டும் சிங்கள தேசியவாத ஊடகப் பிரச்சாரங்கள் பற்றியும், கேலிச் சித்திரங்கள்பற்றியும் குறிப்பிட்டது குறித்து நானும் அவரை எவ்வாறு தமிழ் ஊடகங்கள் லண்டனிலே புலிகளுக்கெதிரான கருத்துக்களை முன்வைத்தமைக்கு கேலி செய்யப்போகிறார்கள் என்பதை அவரை நோக்கிச் சொல்லாமலிருக்க முடியவில்லை, 2002 ம் ஆண்டு தேர்தலின்போதுகூட ஏன் அதற்கு முன் பிரேமதாசாவின் காலத்திலும்கூட இலங்கையின் தேர்தல்கள் குறித்து பிரித்தானியா தமது கண்டிப்பான கருத்துக்களை காலனித்துவ மனோபாவத்துடன் முன்வைத்ததும் தலையிட்டமையும் இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கது. லண்டனிலே 1988 ஏப்ரல் 30 லும் மே 1 ந் திகதியிலும் சர்வதேச தமிழ் மகாநாடு இடம்பெற்றபோது உலகின் பலபாகங்களிலிருந்தும் அரசியல்வாதிகளும், தமிழ் தேசியவாத கல்விமான்களும் வையாபுரி கோபாலசாமி உட்பட அப்போது எம்.பியல்லாது பின்னர் எம்.பியான பெரி கார்டினர் (Barry Gardiner) கலந்துகொண்ட நிகழ்வில் பிரபாகரனை உண்மையான தமிழ் தேசத்தின் தலைவராக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்கவேண்டுமென்பதும் அங்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானமாகும். இந்தப் பிரபாகரன்தான் ஜெயசிக்குறு வெற்றியின்போது “மீண்டும் இந்த வணங்கா மண்ணில் ஆக்கிரமிப்பாளர்களின் இரத்தம் ஆறாக ஓடப்போகிறது. மீண்டும் ஆயிரமாயிரம் அப்பாவிச் சிங்கள இளைஞர்கள் கண்டி பிரபுத்துவ வர்க்கத்தின் வரட்டுக் கௌரவத்திற்கும், குருட்டுக் கொள்கைக்கும் பலிக்கடாவாகப் போகிறார்கள்” என முழக்கமிட்டார். இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கின்றது இன்று யாழ் மேலாதிக்கத்தின் வரட்டுக் கௌரவத்திற்கும், குருட்டுக் கொள்கைக்கும் ஆயிரமாயிரம் அப்பாவத் தமிழ் இளைஞர்களும், அப்பாவிப் தமிழ் பொதுமக்களும் பலியாகிப்போயிருக்கின்றார்கள். இறுதியாக “என் இனிய தமிழ் மக்களே” புகழ் பாரதிராஜா “புலம்பெயர் தமிழர்களே! ஏதாவது செய்யுங்கள். கடைசிப் புலிகளைக் காப்பாற்றுங்கள்;;: கடைசியாக இதற்குமேல் எனக்குச் சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்று கையறு நிலையில் புலம்புகிறார்.முகாரிராகம் இப்பொழுதெல்லாம் ஒலி, ஒளி ஊடகங்களை ஆக்கிரமிக்கின்றது மீண்டும் ஒரு போராட்டம் தொடங்குவதற்காக முயற்சிப்பவர்கள் மூடர்களே தவிர வேறில்லை.
Unmaikal May 2009

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...