Skip to main content

Posts

Showing posts from 2012

“இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் புலம்பெயர்வாழ் தமிழ் பேசும் மக்களும் “

ஸ்ருட்கார்ட் கருத்தரங்கு
11-12 நவம்பர் 2006-சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை
ஸ்ருட்கார்ட் (ஜேர்மனி )
இளஞ்சேய்

“இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் புலம்பெயர்வாழ்தமிழ் பேசும் மக்களும்“

பாரதி நூற்றாண்டு விழா -1982 மட்டக்களப்பு சென்ட் மைக்கல் கல்லூரி

பாரதி நூற்றாண்டு விழா -31/03/1982
மட்டக்களப்பு சென்ட் மைக்கல் கல்லூரி
பாரதியின் சமூகப் பார்வை :எஸ்.எம்.எம்.பஷீர்

நிகழ்ச்சிகள்

சொற்பொழிவுகள்
தலைமை : உயர் திரு வித்துவான் எப்.எக்ஸ்.சி நடராசா

"துப்பாக்கிகளின் காலம்" : நூல் வெளியீடு =16/10/2005

இளைய அப்துல்லாவின் "துப்பாக்கிகளின் காலம்" நூல் வெளியீடும் பெண்ணிய எழுத்துக்கள் பற்றிய உரைகளும் தேசம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் அக்டோபர் 16ல் இடம்பெற்றது.இந்நிகழ்வு இலங்கை , இந்தியா , கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த பெண்ணிய வாதிகளையும் இலக்கிய     ஆர்வலர்களையும் சந்திப்பதற்கான  வாய்ப்பாக அமைந்திருந்தது.


பாலஸ்தீன பிறப்புச் சான்றிதழும் பரிதவிக்கும் பாலஸ்தீன மக்களும்

எஸ்.எம்.எம்.பஷீர்
“I give you the end of golden string;
Only wind it into a ball,
It will lead you in at Heaven’s gate,
Built in Jerusalem’s wall ”.
                                 William Blake (Jerusalem 1820)

"உனக்கு தங்கக் சரட்டின் அந்தத்தை தருகிறேன்
அதனை பந்தாக மாத்திரம்சுற்றிக் கொள் ;
அது உன்னை ஜெரூசலம்மதிலில்எழுப்பப்பட்ட
சுவர்கத்தின் வாயிலுக்கு இட்டுச் செல்லும் "
ஆங்கிலக் கவிஞர்வில்லியம் ப்ளேக்  (கவிதை : "ஜெருசலம் 1820" )
மொழியாக்கம் எஸ்.எம். எம். பஷீர் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன அரசுஅங்கத்துவம்கோரும் விண்ணப்பத்தைபாலஸ்தீன அரசின் தலைவர் என்ற வகையிலும் , பாலஸ்தீனவிடுதலை அமைப்பின் நிறைவேற்றுக்குழுவின் தவிசாளர்என்ற வகையிலும்மஹ்மூத் அப்பாஸ் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு 2011 ஆண்டு  சமர்ப்பித்திருந்தார் . அந்த விண்ணப்பத்தில்ஐக்கிய நாடுகள் சபையின்பொதுக் குழுக் கூட்டத்தில் 29/11/1947 அன்று கொண்டு வரப்பட்ட 181  வது தீர்மானத்தின் அடிப்படையிலும் , அதன் பின்னர்    15/11/1988 அன்றுபாலஸ்தீனம் மேற்கொண்டபாலஸ்தீன தனிநாட்டுப்பிரகடனத்தை  , 15/12/1988…

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )

எஸ்.எம்.எம்.பஷீர் “ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மைதப்பாகிவிடமுடியாது.” -மஹாத்மா காந்தி - “An error does not become truth by reason of multiplied propagation, nor does truth become error because nobody sees it.”    - Mahathma Ghandi
இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்றுசொல்வர் எனக்கு பாடசாலையில் சமஸ்கிருதம் கற்பித்த தியாகராஜ குருக்கள் கற்பித்த பல சம்ஸ்கிருதசொற்களும் , வாக்கியங்களும் மனதில் இடம் பிடிக்க தவறிவிட்டன ஒரு பாடம் என்ற வகையில் மட்டுமே சொல்லவும் எழுதவும் நேரிட்டவைகள் அவை., ஆனால் ஓரிரு சொற்கள் அல்லது வசனங்கள் மட்டும் மனதில் செதுக்கப்பட்டதுபோல் பதிந்துவிட்டன அவற்றில் பிரதானமானது எனது கட்டுரைத் தலைப்பான "சத்யமேவ ஜெயதே" எனும் "சத்தியமே வெல்லும்" என்ற அறம்சார் கோட்பாடாகும்.

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (World Tamil Literary Conference -2012 -S.M.M.Bazeer)

Scholars, academics and cultural proponents explore aspects of Tamil Literature and it’s current status at the “World Tamil Literary Conference”, organized by the Colombo Tamil Sangam in Colombo.

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு -கொழும்பு தமிழ்ச் சங்கம்

Courtesy: Young Asia TV

புலம் பெயர் தேசங்களில் புரையோடிப்போயுள்ள புலிப் பயங்கரவாதம்

எஸ்.எம்.எம்.பஷீர் “பயங்கரவாதத்துடன் வாழ நேரிடும் எங்களுக்குகாலையில் வீட்டை விட்டு செல்லும் பொழுது திரும்பி வருவோம் என்று எந்த உத்தரவாதமும் இல்லை“
லக்ஸ்மன்கதிர்காமர் “For those of us who have to live with terrorism, when we leave home in the morning there is no guarantee that we will come back.”Lakshman Kadirgamar

அண்மைக்காலங்களில் புலிகளின் வன்முறை செயற்பாடுகள்இலங்கைத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் குறிப்பாக ஐரோப்பாவில்அடிக்கடி தங்களுக் கிடையிலான நிதி நிர்வாகம் , இயக்கஅதிகாரபோட்டியின் காரணமாக வெளிப்பட்டு வருகிறது. இலங்கையில் புலிகளின் அழிவோடுபுலிப் பயங்கரவாதமும் புலிகளின் வன்முறையும் முடிவுக்கு கொண்டு வந்த பின்னரும் புலம்பெயர் தேசங்களில் புலிகளின்வன்முறைகள்ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகள் ஓய்ந்தபாடில்லை என்பதையே அண்மையில் பாரிஸில் கொல்லப்பட்ட பரிதியின் கொலையும்சொல்லி நிற்கிறது.

With Rauf Hakeem

With Rauf Hakeem

With Prof. Amarks

With Prof. Amarks

IC 2 + IC3 = H2O சூத்திர(ம்)தாரிகள் !!

எஸ்.எம்.எம்.பஷீர்

“What Stephen Lawrence has taught us? ”
“……………………………………………… What are the trading standards here? Why are we paying for a police force That will not work for us? The death of Stephen Lawrence Has taught us That we cannot let the illusion of freedom Endow us with a false sense of security as we walk the streets, The whole world can now watch The academics and the super cops Struggling to find the definition of institutionalised racism As we continue to die in custody As we continue emptying our pockets on the pavements, And we continue to ask ourselves Why is it so official That black people are so often killed Without killers? ” Benjamin Zephaniah ("What Stephen Lawrence has taught us") “ஸ்டீபன் லோரன்ஸ்எதனை எங்களுக்கு கற்பித்தான்?”

இலக்கியச் சந்திப்பு : தேவதாசன் , பஷீர் -பாரிஸ் 2006

இலக்கியச் சந்திப்பு : தேவதாசன் , பஷீர் -பாரிஸ் 2006

மட்டக்களப்பு மாநகராட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பொழுது -2008

மட்டக்களப்பு மாநகராட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பொழுது -2008

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு -கொழும்பு 08-01-2011

வரலாறு எழுதி வரலாறானவன் : முற்போக்கு அரசியல் சிந்தனையாளன் எரிக் ஹோப்ஸ்போம் (ERIC HOBSBAWM)

எஸ்.எம்.எம்.பஷீர்

"சமூக அநீதிகள் இன்னமும் கண்டிக்கப்படவும் போரடப்படவும்  வேண்டும்" எரிக் ஹோப்ஸ்போம் ( "Social injustice still needs to be denounced and fought,"Eric Hobsbawm-மேற்சொன்ன கருத்து அவர் இலண்டனிலும் மேற்குலகிலும் அண்மைக்காலங்களில் அவ்வப்போது ஏற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டது.
உலகின் புத்திஜீவித்தளத்தில், முற்போக்கு அரசியல் சிந்தனைத்தளத்தில் , நவீன உலக வரலாற்று எழுத்துக்களில்தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருந்த அரசியல் சிந்தனையாளர் எரிக் ஹோப்ஸ்போம்இம்மாதம் (அக்டோபர்) முதலாம் திகதி தனது  95 வயதில் இலண்டனில் காலமானார்.

பூபாளம் சார்பில் கற்சுறா(கனடா ) - எஸ்.எம்.எம்.பஷீர் சந்திப்பு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினது தோல்வி என்பதின் விளைவுகள் நீண்டகால விளைவுகளாக இருக்கும்

எஸ்.எம்.எம்.பஷீர் அவர்கள் லண்டனில் வசித்து வருகிறார். இலங்கை அரசியலில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து எழுதிவருபவர்.
இவர் ஒரு சட்டத்தரணியாவர். கடந்த வாரம் ரொறன்ரோவில் நடைபெற்ற வாழும் மனிதம் கருத்தரங்கிற்காக வருகை வந்த போது பூபாளம் சார்பில் கற்சுறா இவரைச் சந்தித்திருந்தார். அந்தச் சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் இங்கே பிரசுரமாகின்றன.
பஷீர் அவர்களின் இணையத்தள முகவரி : http://www.bazeerlanka.com/


படம் : ரவூப் ஹக்கீம்  , எஸ்.எம். எம்,பஷீர்  

Read more!
படம்: "வேர் அறுதலின் வலி  " நூல் வெளியீட்டு விழா -கொழும்பு
இடமிருந்து வலம் : சட்டத்தரணி ரமீஸ் , (பிரதி மேயர் யாழ் மாநகர சபை )  , எஸ். .எம்.எம்.பஷீர் , மாவை சேனாதிராஜா (எம்.பீ) , பத்திரிக்கையாளர்  என்.எம்.அமீன்

ஊர்ப்பட்ட ஊகங்களும் கிழக்கின் இரண்டாவது முதல்வர் தெரிவும்!!

எஸ்.எம்.எம்.பஷீர்

“ என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி யார் பெறுகிறார்கள்என்பதே அரசியல் " ஹரல்ட் லாஸ்வெல் கிழக்கின் மாகான சபைத் தேர்தல் மிகுந்த பரபரப்புடன் , இலங்கையின் தேர்தல் உற்சவங்களில் நடைபெறும் களியாட்டங்களுடன் மட்டுமல்ல ஆங்காங்கே சிலவன்முறைகளுடனும்நடைபெற்று முடிந்திருக்கிறது, முடிவுகள் ஒன்றும் பிரமிப்பூட்டுவனவாக இல்லைபோட்டியிட்ட சகல தரப்பினருக்கும் தேசிய சுதந்திரமுன்னணி (NFF) தவிர தேர்தல் முடிவுகள்பொதுவாகவே சகல கட்சியினருக்கும்ஏமாற்றத்தையேஅளித்திருக்கிறது. எனினும் தேர்தலின் முடிவின் பின்னர் ஆட்சி அமைப்பதிலும் முதலமைச்சரைத் தேர்வதிலும் உள்ள அரசியல் போட்ட போட்டிகளும் , ஆதங்கங்களும் , ஊகங்களும் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.நாளுக்கு நாள், கிழக்கில் தங்களை ஆட்சி செய்யப்போகும் முதலமைச்சர் யார் என்றஊகங்கள் மக்களை ஆட்சி செலுத்ததொடங்கியுள்ளன.

அரசியல் கயிறிழுப்பில் அல்லாஹ் யாரின் பக்கம் ?

 எஸ்.எம்.எம்.பஷீர்
'அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! திருக்குர்ஆன் -அல் இம்ரான் 3:103)
சுமார் 23 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் தனது சொந்த மரச் சின்ன அடையாளத்துடன் போட்டியிட்ட வட கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் மீண்டும்தனித்து பிரிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்மரச் சின்னத்தில் மீண்டும் முதன் முறையாகப் போட்டியிடுகிறது . இம்முறை நடைபெறும் கிழக்கு மாகான சபைத் தேர்தலில்இஸ்லாமிய மத அடிப்படையிலான அரசியலை செய்பவர்கள் நாங்களே என்று பிதுரார்ஜித உரிமை கோரும் மத முனைப்புப் பெற்ற அரசியல் கருத்துக்களை முன்வைக்கும் ஒரு சூழல் முன்னைய தேர்தல்களை விட இப்போது அதிகமாகக் காணப்படுகிறது.

எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்-கள்ளியங்காட்டு பள்ளிவாசல்

"தமிழன் என்ற முறையிலும், பிறப்பால் இந்து என்ற முறையிலும் இச் செயலுக்கா வெட்கித் தலை குனிகிறேன். புரிந்துணர்வு, மனிதாபிமானம் இவற்றை அடிப்படையாகக் கொண்டதே மனிதம்."
                                                                                                  சஞ்சயன்"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… "

எஸ்.எம்.எம்.பஷீர்
“ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ ?” கண்ணதாசன்

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களத்தில் இறங்கியுள்ள சகல கட்சிகளும்பல்வேறு அரசியல் யுக்திகளைப் பயனபடுத்தி எப்படியாவது அதிக பட்சவெற்றியை பெற்றுவிட வேண்டும் என்று ஆலாப் பறக்கின்றன. பொதுவாகவேசுயேட்சை வேட்பாளர்கள் என்று கட்டுப்பணம் கட்டுபவர்கள் பலர் வழக்கம்போல வாக்கு எண்ணும் வேளைகளில்ஏதோஒருகட்சியின் துணைக்குழுவாக செயற்படவே போட்டியிடுகிறார்கள். எனவே உண்மையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தவிர எந்தச் சுயேட்சைக் குழுவும் களத்தில்குதித்திருக்கவில்லை என்று சொல்லப்படுகிறது, அப்படி ஏதேனும் அபூர்வமாக ஒன்றிரெண்டு சுயேட்சைக்குழுக்கள் இருந்தாலும் , இறுதி நேரத்தில் அவையும் தமது ரிஷிமூலத்தை வெளிப்படுத்தி விடுவார்கள்.

உண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளும் !! ( பாகம் ஐந்து )

எஸ்.எம்..எம்.பஷீர்
ஊதாரி மைந்தனின் கதை ஒன்றும் மொட்டத் தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போடும் கதையல்லஎன்பதை இப்போது பாப்போம்.

முஸ்லிம் காங்கிரஸ் சென்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் , தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாததால் கணிசமான செல்வாக்குடன் திகழந்த ரணில் விக்ரமசிங்க கூட்டணியுடன் சேர்ந்து சம்பந்தனின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்ஆசீர்வாதத்துடன் போட்டியிட்டுஇரண்டு ஆசன வித்தியாசத்தில்கிழக்கு மாகான சபையை கைப்பற்ற முடியாமல் போனதும் , ஒருபுறம் "சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்"என்ற விதத்தில் , முதலமைச்சர் பதவி பற்றி ஹக்கீம் பரிகசித்துக் கொண்டு  , மறுபுறம் தேர்தலில் முறைகேடு நடைபெற்றது என்றும் நீதிமன்றம் வரை சென்று போராடுவோம் என்று முஸ்தீபுகளில் இறங்கினார்.

குரூரப் படுகொலைகளும் குருதியாய்ச் சிவந்த கீழ்வானமும்!!

எஸ்.எம்.எம்.பஷீர்
"காத்தான்குடிப்
பள்ளிவாசலில்
எங்களின் மானுடக்
கனவுகள் அழிந்தன
எமது வேர்களில்
எஞ்சியிருந்த
மனிதமும்
அன்றுடன் தொலைந்து போனது

கல் தோன்றி மண் தோன்றாக்
காலத்து முன் தோன்றியதால்த்தான்
பின்னர் தோன்றிய
"கல்" எங்கள் இதயத்திலும்
"மண்" எங்கள் தலைக்குள்ளும்
புகுந்து கொண்டதோ "                                          (கவிஞர் அருந்ததி - பிரான்ஸ்)

வடக்கு கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரை 1990 ஆகஸ்து மாதம் முழுவதும் புலிகளின்திட்டமிடப்பட்டஇனப் படுகொலைக்கும் இனச் சுத்திகரிப்புக்கும் உட்பட்டமாதமாகும் .

உண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளும் !! ( பாகம் நான்கு )

எஸ்.எம்..எம்.பஷீர்
குரான் ஹதீஸ் எங்களின் யாப்பு என்று மேடைக்கு மேடை முழங்கியவர்களால்மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியைக்காப்பாற்றமுடியவில்லை , கட்சியில் முதலாவது பிளவு ஹிஸ்புல்லாவால்1990களின் ஆரம்பத்தில்உருவாக்கப்பட்டது , ஊர்கள் பிரிக்கப்பட்டன. ஒற்றுமை என்பது வெறும் ஆரசியல்கோசமே என்பதை மிகத் துரிதமாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்கள்புரிந்து கொண்டார்கள். ஹிஸ்புல்லாஹ் மீண்டும் கட்சிக்குள் இணைக்கப்பட்டுதங்களின் உயர் கட்சி பீட போராளியாக மாற்றப்பட்டார் . புலிகளைப் போல் தமதுகட்சியிலிருந்து (ஹக்கீமின் பாசையில் முஸ்லிம் காங்கிரஸ் இயக்கத்திலிருந்து ) வெளியேறி தங்களுக்கு சவாலாக மாறுவோரைதுரோகியாக்குவதும் , அவர்கள்மீண்டும் இணைந்ததும் தியாகியாக்குவதும் மிக சாதாராண முஸ்லிம் காங்கிரஸ்அரசியல் நடைமுறையாக அங்கீகரிக்கப்பட்டது. 

உண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளும் !! ( பாகம் மூன்று )

எஸ்.எம்..எம்.பஷீர்
1992 ஆம் ஆண்டின் முஸ்லிம் காங்கிரஸின்கட்சி அரசியல் யாப்பில் இலங்கையின்இஸ்லாமிய மத விவகாரங்களில் உச்ச அதிகாரம் கொண்ட மத அறிஞர்களைக் கொண்டஜம்மியத்துல் உலமாபிரதிநிகள் முஸ்லிம் காங்கிரஸின்மஜ்லிஸ் ஏ சூராஹ் (MAJLIS –E-SHOORA6.9a. All Ceylon Jamiyathul Ulama would constitute the Majlis-e-Shoora of the Sri Lanka Muslim congress ) கலந்துரையாடல் கூட்டங்களில்கலந்துகொண்டு ஆலோசனை வழங்கும் சந்தர்ப்பம்பின்னர் 2011 வந்த யாப்பில் (MAJLIS –E-SHOORA 7.4a.The leader in consultation with the High Command of the party constitute an Advisory Council of the party known as the Majlis–e-Shoora from among the past members of the High Command and or the High Command who continue to be actively involved in party activitiesநீக்கப்பட்டதன் முக்கிய காரணங்களில் ஒன்று முஸ்லிம்கட்சிகள் ஒன்றுபடவேண்டுமென்ற அழுத்தங்களை ஜம்மியத்துல் உலமாபிரயோகிக்கக் கூடியசூழல்கள் நிலவியமையும் அவதானிக்கப்படக் கூடியதாகவிருந்தது.

உண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளும் (பகுதி இரண்டு)

எஸ்.எம்.எம்.பஷீர்

முஸ்லிம் காங்கிரசின் தலைவர் மறைந்த அஸ்ரப்  " எந்தவொரு உண்மை முஸ்லிமின் வாக்கும் யு என்.பீ யின் யானைச் சின்னத்திற்கு போடப் படக் கூடாது." என்று முஸ்லிம்களை “உண்மை முஸ்லிம்கள்”“உண்மையற்ற முஸ்லிம்கள்” என்று பாகுபாடு படுத்தும் விதத்தில் அரசியல் பத்வாவை முன்மொழிந்த அந்த பழையநினைவுகளுடன் இப்பொது முபீன் எனும் போராளி முஸ்லிம்கள் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிக்க முடியாது என்று கட்டளை பிறப்பிக்கின்றார். அதனால்தான் இனிமேல் யாரேனும் தேர்தல்களில் வாக்களிக்கும் போது அவர் “உண்மை முஸ்லிமா” அல்லது வெறுமனே சகட்டுமேனிக்கு “முஸ்லிமா” என்ற தீர்மானங்களை எடுப்பவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஒரு தனிமனித மத உரிமையின் மீதான அரசியல் அத்துமீறலாக ஒரு தலையீடாக பார்க்கப்படல் வேண்டும்.

உண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளும் !!

எஸ்.எம்.எம்.பஷீர்
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் “ - குர்ஆன் 2:42. .
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் இனவாத மதவாதஅரசியல் கலவையுடன் களை கட்டத் தொடங்கி விட்டது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவும் , தமிழர் பிரச்சினையில் சர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைக்கவும் கிழக்கு மாகான சபைக்கான தேர்தல் ஒரு சந்தர்ப்பம்என்றுதமிழ் தேசியத் தரப்பு தம்பட்டம் அடிக்க ( தம்பட்டம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் ஒரு பக்கம் தோலால் மூடப்பட்டிருக்கும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும்.)முஸ்லிம் காங்கிரஸ் தரப்பு தம்புள்ளை பள்ளிவாசலை ,  தெகிவளை பள்ளிவாசலைஅவ்வப்போது , ஆங்காங்கே நடைபெறும்பௌத்த தீவிரவாத சக்திகளின் அடாவடித்தனங்களை, தமது கட்சியின் உள்ளூர் மட்ட அரசியல் வாதிகள் மூலம் ,கிழக்கில் மட்டும் தேர்தல் பிரச்சாரத்துக்காக றபான் அடிக்க  ( றபான் ஒரு தோல் இசைக் கருவி ) தெஹியத்தகண்டியசிங்களவர்கள் சிலரும்முஸ்லிம் காங்கிரஸின் " சிங்களப் போராளிகளாக " பேரினவாதிகளாகவிருந்து அல்லது பேரினவாதிகளின் கட்சிகளிலிருந்து விலகி புனர் ஜென்மம் எடுக்கிறார்கள்.

கருத்தரங்கு தேசம்நெற் பின்னூட்டம் : தேசம்நெற் 27/12/2008

"இந்த சந்திப்பிற்கான அழைப்பிதழிலிருந்து  வோல்ரோயரின்(Voltaire) மேற்கோளைக் குறிப்பிட்டு I do not agree with a word you say, but I will fight to the death for your right to say it . வோல்றோயர் (Voltaire) அவ்வாறு சொல்லி இருக்கவில்லை என்றும்அவர்  “ I do not agree with a word you say but I will defend to the deathfor your right to say it” இவ்வாறே தெரிவித்து இருந்தார் என்றும் பசீர் சுட்டிக்காட்டினார் "
                          தேசம்நெற் 27/12/2008
அதனைத் தொடர்ந்து தேசம்நெற் பின்னூட்டம என்ற தலைப்பில் சையட் பசீர்உரையாற்றினார். தேசம்நெற் தொடர்பான அறிக்கையில் கையெழுத்திட்டதை அங்குசுட்டிக்காட்டிய அவர் ஜனநாய சக்திகளிடையே உள்ள முரண்பாடுகள் நேசமுரண்பாடுகளாக அமைய வேண்டியதன் அவசியத்தை அங்கு வலியுறித்தினார் . இந்த சந்திப்பிற்கான அழைப்பிதழிலிருந்து  வோல்ரோயரின்(Voltaire) மேற்கோளைக் குறிப்பிட்டு I do not agree with a word you say, but I will fight to the death for your right to say it . வோல்றோயர் (Voltaire) அவ்வாறு சொல்லி இருக்கவில்லை என்றும்அவர்  “ I do not agree with a word you say but I will …

"நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் ! " -எஸ்.எம்.எம்.பஷீர்

"ஊரில் அக்கறை உள்ளவர் நடப்பாய்
மாரித் தவளை முகாரி எடுப்பாய்
நாரியுந் தெறிக்க முழக்க மிடுவார்
சேரியைச் சுற்றி சேவையும் தொடுப்பார்"
கவிஞர் அனலக்தர்
முஸ்லிம் காங்கிரஸ் உட்பட்ட சகல முஸ்லிம் கட்சிகளும் இவ்வருடரமலான்மாதத்தில் அரசியல் நன்மைகளை கொள்ளை கொள்ள தங்களின் மாகான சபைத் தேர்தல்பணிகளைபிள்ளையார் சுழி போட்டு , மன்னிக்கவும்  786 போட்டு ( இந்த இலக்கம்எண்ணியல் படி இறைவனின் பெயரால் ஆரம்பிப்பதாக உள்ள அரபு சொற்றொடரான "பிஸ்மில்லா .. " எனும் சொற்றொடரின் எழுத்துக்களின்எண் கூட்டுத் தொகையே  786 என்று கூறப்பட்டாலும் இது ஒரு பிழையான சமாச்சாரம் என்பது ஒருபுறமிருக்க )தங்களின் தேர்தல் பணிகளை பூர்வாங்கமாக ஆரம்பித்து வைத்துள்ளார்கள் .எதுவாயினும் நமது முஸ்லிம்அரசியல்வாதிகளுக்கு பிழையான சுயநல வியாபார அரசியலுக்கு பிழையானதேசரியானதுதான்.

புலிகளின் இணையத்தள பிரச்சாரத்துக்கு புத்திஜீவிகள் கண்டனம்-நவமணி

நவமணி: 19.02.2006

நவமணி செய்தியாளர்

லண்டனிலுள்ள இலங்கை முஸ்லிம் நிலையத்தின் பணிப்பாளரான கிழக்கு மாகான சட்டத்தரணி பஷிரை ஒஸாமா அணியுடன் இணைத்து புலிகளின் இணையத்தளம் பிரசாரம் செய்தததை முஸ்லிம் புத்திஜீவிகள் கண்டித்துள்ளனர்.

வடக்கு - கிழக்கு முஸ்லிம்களின் பிரித்தானிய ஒன்றியம் நோர்வே தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு-வீரகேசரி 28/04/2006

தீர்வு ஆலோசனைகளில் முஸ்லிம்களின் நலன்களையும் உள்ளடக்க வலியுறுத்து

வீரகேசரி 28/04/2006
வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பிரித்தானிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவொன்றுபிரித்தானியாவில் உள்ள நோர்வே தூதராலய உயர் அதிகாரிகளை கடந்த19 ஆம் திகதிவியாழக் கிழமை காலை லண்டனில் சந்தித்து, இலங்கை தேசிய இனப்பிரச்சினை தீர்வு ஆலோசனைகளில் இலங்கை முஸ்லிம்களின் நலன்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

SLDF- Inaugural Meeting Canada

With Dr. Christian Wagner -Munich , Germany.

ASSOCIATION OF MUSLIM COMMUNITIES OF SRI LANKA

A RECEPTION AT ALIGHAR NATIONAL SCHOOL