நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைய இடமளிக்கலாகாது!

 

நாட்டில் எரிபொருள் நெருக்கடி படிப்படியாகத் தணிந்து செல்லுமென்ற நம்பிக்கை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூவரிசை இன்னும் முடிவுக்கு வரவில்லை. முன்னரைப் போன்று கிலோ மீற்றர் தூரமான கியூ வரிசை தற்போது இல்லை. அவ்வரிசைகளின் தூரம் பெரிதும் குறைந்து காணப்படுகின்றது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசலுக்கான மோதல்களும் பெரிதும் குறைந்திருக்கின்றன.

இந்நிலையில் எரிபொருள் நெருக்கடியானது படிப்படியாக முடிவுக்கு வந்து விடுமென்ற நம்பிக்கை தற்போது மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. முன்னரைப் போலன்றி தற்போது கூடுதலான எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வருகின்றன. எரிபொருள் விநியோகமும் ஓரளவு சீரமைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை படிப்படியாக நீங்கி விடுமென்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேசமயம் சமையல் எரிவாயு தட்டுப்பாடும் ஓரளவு நீங்கியுள்ளது.

‘அரகலயா’வின் நிகழ்ச்சி நிரல் இன்னும் முற்றுப்பெறவில்லை


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை வீட்டிற்கு அனுப்ப வேண்டுமென்று கடந்த மார்ச் மாதம் காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட ‘அரகலயா’ (யுசயபயடயலய - போராட்டம் என்று பொருள்), ஜுலை 14ந ; திகதி கோட்டபாய பதவியைத் துறந்த பின்னரும் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. ‘அரகலயா’வின் நோக்கம் வெறுமனே தற்போதைய
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதோடு நின்றுவிடாது, தாங்கள்
அதிகாரத்திற்கும் வரவேண்டுமென்பதாகவே இருக்க முடியும்.


 

சஜித் அணியின் திட்டம் தவிடுபொடியானது!-பரிமாணன்


இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்ற
உறுப்பிர்கள் மத்தியில் யூலை 20 ஆம் திகதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்
தானும் போட்டியிடப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும்,
எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச முதலில் அறிவித்திருந்தார்.
பின்னர் தான் போட்டியிடவில்லை எனத் தெரிவித்துவிட்டு, பொதுஜன
பெரமுனவைச் சேர்ந்த அதிருப்தியாளர் டலஸ் அழகப்பெருமவுக்கு தனது கட்சி
ஆதரவளிக்கும் எனத் தெரிவித்து அவ்வாறே செய்தார். இருந்தும் டலஸ் 82 வாக்குகள் மட்டும் பெற்று படுமோசமாக ரணில் விக்கிரமசிங்கவிடம் தோற்றுப் போனார். ரணில் 134 வாக்குகள் பெற்று வெற்றியீட்டினார்.சஜித் போட்டியிடாமல் பின்வாங்கியதற்கு முக்கியமான சில காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம், தானும் போட்டியிட்டால் அது மும்முனைப் போட்டியாக மாறி தான் நிச்சயம் தோற்றுப் போவேன் என்பது சஜித்திற்கு தெரியும்.


எனவே, அவர் 2015 ஜனாதிபதி தேர்தலின் போது ஐ.தே.கவுடன் இணைந்து சந்திரிகா மேற்கொண்டது போன்ற ஒரு சதித் திட்டத்தை அரங்கேற்ற எண்ணினார். 2015 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ரணில்
போட்டியிட்டிருந்தால் நிச்சயம் தோற்றிருப்பார். எனவே, ஐ.தே.கவும் சந்திரிகவும் மைத்திரிபால சிறிசேனவை சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரித்தெடுத்து பொது வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றனர். ரணில் செய்த உபகாரத்துக்கு பரிசாக மைத்திரிபால சிறிசேனவால் அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது.
அதேபோல, இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தெரிவின் போதும் சஜித் அணியால் திட்டமிடப்பட்டது.

இலங்கையில் ஜனநாயகத்துக்கு சவக்குழி தோண்டப்பட்டுள்ளது!

 இலங்கையில் ஜனநாயகத்துக்கு சவக்குழி தோண்டப்பட்டுள்ளது!

 

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்றிருக்கிறார்.

இதுவரை காலமும் பதவி வகித்த இலங்கையின் ஜனாதிபதிகள் (டி.பி.விஜேயதுங்கவைத் தவிர) மக்களின் நேரடி வாக்களிப்பின் மூலமே ஜனாதிபதியாகத் தெரிவாகி வந்த சூழ்நிலையில் ரணில் வேறு வழியில் ஜனாதிபதியாகி இருக்கிறார்.
அவர் யூலை 20 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்கள் மத்தியில் நடத்திய வாக்கெடுப்பில் அதிகப்படியான (134) வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவாகி இருக்கிறார்.
எதிர்ப்புக் கிளர்ச்சிகள் காரணமாக ஜனதிபதி பதவியைத் துறந்ததுடன், நாட்டையும் விட்டு வெளியேறிச் சென்றுள்ள கோத்தபாய ராஜபக்சவின் எஞ்சிய பதவி காலம் (2024 வரை) முழுவதும் ரணில் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பார். (சில வேளைகளில் கோத்தாவுக்கு எதிராக எழுந்தது போன்ற எதிர்ப்புகள் போன்று ரணிலுக்கும் ஏற்பட்டு, அதனால் ரணிலும் இடை நடுவில் பதவி விலகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை)
ரணில் ஜனாதிபதியான விடயம் மிகவும் சுவாரசியமிக்கதும் எதிர்பாராததுமாகும். (ரணில் கூட சில வேளைகளில் தனக்கு இவ்வாறு ஒரு அதிர்ஸ்டம் வரும் என எதிர்பார்க்காமல் இருந்திருக்கலாம்) வரலாற்றைச் சற்று பின்னோக்கிப் பார்ப்பது இந்தச் சூழலில் பயனுள்ளது.

உணவுக்காக ஏங்கும் உலகம் – ஆயுதங்களைத் திணிக்கும் நேட்டோ

 

ரலாறு காணாத அளவிற்கு உலக அளவிலான பட்டினியில் நாம் சிக்கித் தவிக்கிறோம் என்று அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres) தெரிவித்திருக்கிறார். சுற்றுச்சூழல் மாற்றங்கள், அசமத்துவம், வறுமை, உலக நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் மற்றும் நாடுகள் மீது தடைகளைப் போடும் கொள்கைகள் ஆகியவற்றால் உணவுப் பற்றாக்குறை பெரும் அளவில் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கோடிக் கணக்கான மக்கள் உணவு கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.

தண்டிக்கப்படும் நியாயங்கள்!--சாவித்திரி கண்ணன்

 


குற்றவாளிகள் அதிகாரம் மிக்கவர்களாக ஆகிவிடுகிறார்கள்! நிரபராதிகளும், நியாயத்தை கேட்பவர்களும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்! குஜராத் கலவரத்தில் கொல்லப் பட்டவர்களுக்காக இடையறாது துணிச்சலாக குரல் கொடுத்த தீஸ்தா செதல்வாத் கைது செய்துவிட்டால் உண்மைகள் ஊமையாகுமா?

உலகையே உலுக்கிய குஜராத் மதவெறிப் படுகொலைகள் தொடர்பான பல வழக்குகளில் குல்பர்க்கா சொசைட்டி என்ற இடத்தில் 68 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் முக்கியமானது! இந்தப் பகுதியில் வசித்த காங்கிரஸ் எம்.பியான ஜாப்ரி அவர்கள்  கலவரக்காரர்கள் தங்களை சூழ்ந்துள்ளது குறித்து அந்த இக்கட்டான நேரத்தில் அன்றைய முதல்வர் மோடி மற்றும் உயர் காவல் அதிகாரிகளிடம் மன்றாடிய போதும் எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருந்து விட்டனர். நடந்த சம்பவங்களை விரிவாக விசாரித்து ஆராய்ந்த போது இது அதிகாரவர்க்கத்தின் ஆசியோடு நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி என உறுதியானது.

இலங்கை பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு எவ்வாறு இடம்பெறும்?

 

1981ஆம் ஆண்டு 2ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை தொடர்பில் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விளக்கமொன்றை அளித்துள்ளது.

அரசியலமைப்பின் 38 ஆவது சரத்தின் (1) உப பிரிவுக்கமைய, ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 40 ஆவது சரத்துக்கமைய,  வெற்றிடமாக்கிச் செல்லும் ஜனாதிபதியின் எஞ்சியுள்ள பதவிக் காலத்துக்கு மாத்திரம் அப்பதவியை வகிப்பதற்கு நாடாளுமன்றத்தினால், அதிலுள்ள உறுப்பினர்களில் ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்ந்தெடுப்பதற்குத் தகுதி உள்ள ஒருவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இதன்போது இந்தத் தெரிவு 1981ஆம் ஆண்டு 2ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தைப் பின்பற்றியதாக அமைந்திருக்கும்.

விசேடமாக இந்த நடைமுறை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், வாக்கெடுப்பின்போது சபாநாயகரும் வாக்களிப்பார்.

அத்துடன் இந்த நடைமுறைகளுக்காக நாடாளுமன்றம் மூன்று நாட்கள் கூடும். அதன்படி, சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக இந்தத் தேர்தலை நடத்துவதற்குப் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கெடுகுடிச் சிறுபிள்ளை வேளாண்மை-ரவீந்திரன் நடேசன்




முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னே, நான் பணியாற்றிய பாடசாலையில் மூத்த ஆசிரியர் ஒருவர் ‘சிறுபிள்ளை வேளாண்மை…’ என்ற பழமொழியை முழுமைப்படுத்தச் சொன்னார்; எல்லோரையும்போல ‘சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது’ என்றேன்.

அப்படியல்ல என்றவர் முழுமையான அந்தப் பழமொழியைச் சொன்னார்:
“சிறுபிள்ளை வேளாண்மை
விளைந்தாலும்
வீடு வந்து சேராது!”

அப்போதுதான் இந்திய அமைதிகாக்கும் படைக்கு எதிராக விடுதலைப் புலிகள் யுத்தத்தைத் தொடங்கி இருந்தார்கள்; ‘இவர்களுடைய போராட்டம் வென்றுவிட்டது போல வரும், ஆனால் பலனைக் கையிலெடுக்க மாட்டார்கள்’ என்ற விளக்கத்தையும் சொன்னார்.

அரசியல் ரீதியாக அந்தப் புரிதல் ஏற்கனவே இருந்தாலும் பொது மக்களது அனுபவ வார்த்தையாக அவர் சொன்னது இதயத்தைத் தொடுவதாக இருந்தது!

இப்போது மார்க்சிய வழிகாட்டலுள்ள முன்னிலைச் சோசலிசக் கட்சி (மு.சோ.க.) இன்றைய போராட்டத்தை முன்னெடுப்பதால் இது சோடைபோகாது என்று கங்கணம் கட்டுகிறவர்களைக் காண இயலுமாக இருக்கிறது;
கால தேச நிலவரங்களுடன் ஒத்து இயங்கும் (வளர்த்து எடுக்கப்பட்டதான) மார்க்சியப் பிரயோகமாக இல்லாத  கிழடுதட்டிப்போன வறட்டு வசனங்களை மார்க்சியமாக மயங்குவதால் வரும் கெடுபுத்தி இது!

மு.சோ.க. மார்க்சியம் என்ற பெயரில் ரோஹண விஜயவீரவால் குறுகத்தறிக்கப்பட்ட (சிறுமுதலாளி வர்க்க நோக்கு நிலைக்குரிய) அரைவேக்காட்டு அரசியலைப் பின்பற்றும் அமைப்பு!

ரோஹண விஜயவீரவை மதித்தால் தவறில்லை; அவரது பாதையை அப்படியே பின்பற்றுவது மீண்டும் இளைஞர் சக்தியை நெருப்பாற்றுக்குள் மூழ்கடிக்கவே வழிகோலும்.

மக்களின் நலன்களுக்கு குந்தகம் விளைவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

 

நாடு கடந்த சில மாதங்களாக முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடி, அரசியல் கொதிநிலை வரை வளர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரி ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் காரணமாக அரச நிர்வாக செயற்பாடுகளுக்கும் சேவைகளுக்கும் இடையூறுகளும் பாதிப்புகளும் ஏற்படக் கூடிய நிலைகளும் உருவாகியுள்ளன.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் ஏற்கனவே பலவித அசௌகரியங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக நாட்கணக்கில், மணித்தியாலயக் கணக்கில் காத்திருக்கும் நிலைக்கு மக்கள் உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு பொருளாதார நெருக்கடியின் பலவித அசௌகரியங்களுக்கு மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் அவர்களை மேலும் அசௌகரியங்களுக்குள் தள்ளிவிடும் வகையில் அமைந்திருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

BASL statement

 


பாசிசவாத அச்சுறுத்தலை இல்லாதொழிக்கவேண்டும்


பாசிசவாத அச்சுறுத்தலை இல்லாதொழிக்கவேண்டுமென்றும் அதற்காக பொலிஸ் மாஅதிபர் மற்றும் முப்படை தளபதிகளுக்கும் முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அச்சுறுத்தலை ஏற்படுத்தி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையும் முற்றுகையிட்டு அங்குள்ள முக்கியமான ஆவணங்களை இல்லாதொழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென்றும் பதில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பதில் ஜனாதிபதியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாட்டுமக்களுக்கு விசேட உரையொன்றையாற்றினார்.

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகையில் கைப்பற்றியவற்றை கையளியுங்கள்

 

Saliya Pieris

னாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை உரிய அதிகாரிகளிடம் கையளிக்குமாறு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அழைப்பு விடுத்துள்ளது.

சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் (Saliya Pieris) மற்றும் அதன் செயலாளர் இசுரு பாலபடபெந்தி (Isuru Balapatabendi) ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கட்டடங்களில் இடம்பெற்ற நாசகாரச் செயல்கள் குறித்து மிகவும் கவலையடைவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

வெளியிலிருந்து திணிக்கப்பட்ட பொய் ஆவணங்கள்-– அ. மார்க்ஸ்



ஜுலை 5: ஸ்டான் சாமி நினைவு நாள்

நீதியரசர் மதன் லோகூரிடம் இரு கேள்விகள்:
அருட்தந்தை ஸ்டான் சாமி (Stan Swamy) மரணத்திற்குத் தள்ளப்பட்ட சூழலைக் கடுமையாக விமர்சித்து வருபவர் நீதிபதி மதன் லோகூர். உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், இரு மாநிலங்களில் தலைமை நீதிபதியாகவும் இருந்து ஓய்வு பெற்றபின் தற்போது ஃபிஜி யின் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் உள்ள மதன் லோகூர் தொடர்ந்து ஸ்டான் சாமிக்கு இழைக்கப்பட்ட நீதியைக் கண்டித்து வருபவர். ஃப்ரண்ட்லைன் பத்திரிக்கைக்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் NIA மற்றும் பீமாகொரேகான் வழக்கு விசாரணை நீதிமன்ற அணுகல் முறை ஆகியவற்றைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இரண்டு கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் மட்டும் இங்கே:
கேள்வி (i) : சட்டவிரோத நடவடிக்கைச் சட்டத்தின் 43[டி]5 பிரிவு (UAP Section 43[D] 5) குற்றச்சாட்டு நிரூபிக்கப் படுவதற்கு முன்பே வெறும் ஊகத்தின் பேரில் ஜாமீனில் விடுதலையை மறுப்பதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. ஸ்டான் சாமி உயிருக்குப் போராடிய நிலையிலும் அவருக்குப் பிணை வழங்காவில்லை. அது மட்டுமல்ல கடைசிக் கட்டத்திற்கு முன்புவரை அவருக்கு உரிய மருத்துவ வசதி அளிக்கப்படாமல்தான் அவர் மரணத்திற்கு ஆளாகியுள்ளார். சிறைச்சாலைக்கு வரும்போது அவர் அந்நிலையில் இல்லை. இந்த ஆறு மாதாகால சிறை அவலங்கள்தான் ஓரளவு கட்டுப்பட்டிருந்த இருந்த பார்கின்சன் நோய் அவரைக் கொல்லக் காரணமாகியுள்ளது. இந்த அதிகாரத்தை அரசின் விசாரணை அமைப்பிற்கு வழங்கும் UAP Section 43[D] 5 பிரிவை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்குமா?

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், உக்கிரமடையச் செய்யும் எதிர்க்கட்சியினரது செயற்பாடுகள்!


நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகள் அதனை மேலும் உக்கிரமடைய செய்வதாகவே அமைந்துள்ளது என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் ஐந்து விடயங்களை வைத்தே ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு பாராளுமன்றத்தில் உள்ள 225பேரும் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடி, எரிபொருள் தொடர்பான ஊழல் மோசடி, 2019ஆம் ஆண்டுக்கு முற்பட்ட சூழல் மற்றும் தேர்தல் ஆகியவையே அவை என்றும் சுட்டிக் காட்டிய அமைச்சர், 225பாராளுமன்ற உறுப்பினர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, கத்தோலிக்க சமூகத்தினரின் பிரதான குற்றவாளியாக கருதப்படும் தரப்பினருடன் எதிர்க்கட்சி தலைவர் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் தலைவர் தோல்வியடைந்துள்ளார் என்பதற்காக நாடு தோல்வியடைய இடமளிக்க முடியாது என்பதற்காகவே மூன்று மாத கால அடிப்படையில் அமைச்சுப் பதவிகளை தாம் பொறுப்பேற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு எதிர்தரப்பினர் ஒத்துழைப்புக்களை வழங்காமல் குறுகிய அரசியல்நோக்கத்துடன் செயற்படுவது வெறுக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இடதுசாரிகளுக்கு என்ன ஆயிற்று?- கு.பாஸ்கர்


நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது நா முதலாளித்துவத்தின் உச்சகட்ட ஜனநாயக அமைப்பு முறைகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் இப்படிப்பட்ட ஜனநாயகம்தான் உள்ளது. வடிவங்கள் மாறினாலும் உள்ளடக்கம் ஒன்றுதான்...அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி. உலகின் பெரும்பாலான நாடுகளில் முதலாளித்துவம்தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. சீனா கொஞ்சம் வித்தியாசமான நாடு. சோஷலிஸ நாடு என்று அதைக் கூற முடியாது. மக்கள் ஜனநாயகப் பாதையில் சென்றுகொண்டிருக்கும் நாடாக அதனை நாங்கள் பார்க்கலாம். ஆனாலும், அதுவும் முதலாளித்துவம் ஆதிக்கம் செலுத்தும் நாடுதான். இந்திய முதலாளித்துவம் எந்த திசையில் அடிப்படை மாற்றம் நிகழ்ந்ததோ அதைப் போலவே இன்னொரு மாற்றம் நிகழ்ந்த ஆண்டு 2014. அதன் கூறுகள் இரண்டுதான். ஒன்று, அதிவேகப் பாய்ச்சலுடன் முதலாளித்துவம் ஓட ஆரம்பித்திருக்கிறது. 

 

EIGHT YEARS OF MODI REGIME: Relentless Attack on Democracy

 

EIGHT YEARS OF MODI REGIME: Relentless Attack on Democracy

THE BJP is conducting a fortnight campaign to celebrate the completion of eight years of the Modi government.  The campaign seeks to highlight claims of the various achievements of the government regarding economic growth, infrastructure development, foodgrain production, social welfare schemes and foreign policy. All these are attributed to the initiatives and the tireless work of Prime Minister Narendra Modi.

However, what is missing from the elaborate list of achievements are the steps taken by the Modi government to strengthen democracy and the constitutional framework to safeguard democratic rights of citizens and to ensure social and economic justice as enjoined in the directive principles of the constitution. 

This is a deliberate omission as it is in these spheres that the Modi government has worked in the past eight years to inflict immense harm to the democratic system and the constitution.

மோடி ஆட்சியின் எட்டு ஆண்டுகள்: ஜனநாயகத்தின் மீது இரக்கமற்றமுறையில் தொடர் தாக்குதல்கள்


மோடி அரசாங்கத்தின் எட்டாண்டுகள் நிறைவடைவதையொட்டி, பா.ஜ.க பதினைந்து நாட்களுக்குப் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. இந்தப் பிரச்சாரத்தின்போது அது பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, உணவு தான்ய உற்பத்தி, சமூக நலத் திட்டங்கள் மற்றும் அயல்துறைக் கொள்கை சம்பந்தமாக அரசாங்கத்தின் பல்வேறு சாதனைகளை உயர்த்திப்பிடித்திட வலியுறுத்தியிருக்கிறது. இவை அனைத்துமே பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வு ஒழிச்சலின்றி மேற்கொண்ட செயல்பாடுகளின் காரணமாகவே என்றும் பிரச்சாரத்தின்போது அது தம்பட்டம் அடிக்க முடிவு செய்திருக்கிறது.

எனினும், இவர்கள் பட்டியலிட்டுள்ள சாதனைகளில் காணப்படாதிருப்பது என்னவென்றால், மோடி அரசாங்கம், குடிமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அரசமைப்புச்சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளில் (directive principles) குறிப்பிட்டுள்ள சமூக நீதி மற்றும் பொருளாதார நீதியை உத்தரவாதப்படுத்துவதற்கும் ஏற்றவிதத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அது என்ன செய்தது என்பதேயாகும்.

இது வேண்டுமென்றேதான் விடுபட்டிருக்கிறது. ஏனெனில் மோடி அரசாங்கமானது கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டின் ஜனநாயக அமைப்புக்கும் அரசமைப்புச்சட்டத்திற்கும் அளப்பரிய அளவில் தீங்கினை ஏற்படுத்தி இருக்கிறது.

இடதுசாரி பாதையில் பயணிக்கும் இலத்தீன் அமெரிக்க நாடுகள்-– அனில் ராஜிம்வாலே (Anil Rajimwale)

 e)

லத்தீன் அமெரிக்க நாடுகள் இடதுசாரி பாதையில் தொடர்ந்து முன்னேறுகின்றன. பெரு, ஹாண்டுரஸ் மற்றும் சிலி எனும் வரிசையில் தற்போது கொலம்பியாவும் ஒரு இடதுசாரி தலைவரை அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளது. இலத்தீன் அமெரிக்க கண்டத்தில் உள்ள 12க்கும் அதிகமான நாடுகளில் தேர்தல் முறை மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசாங்கங்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ளன.

2022 மே 29 அன்று கொலம்பியாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் களத்தில் போட்டியிட்ட ஐந்து வேட்பாளர்களில் ஒருவர் கூட 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை. எனவே, ஜூன் 19 அன்று இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டாவது சுற்றில் இடதுசாரி மற்றும் இதர முற்போக்கு சக்திகளின் கூட்டணி (Historic Pact ) சார்பாக குஸ்தவோ பெட்ரோ (Gustavo Petro) மற்றும் வலதுசாரி வேட்பாளராக ரொடோல்ஃபோ ஹெர்னாண்டஸ் (Rodolfo Hernandez) ஆகிய இருவருக்கும் இடையே போட்டி நிலவியது. பெட்ரோ அணி சார்பாக துணை அதிபர் பதவிக்கு பிரான்சியா மார்க்கசும் (Francia Márquez), ஹெர்னாண்டஸ் அணி சார்பாக மெர்லின் காஸ்டில்லோவும் (Marelen Castillo) போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பெட்ரோ 1,12,81,013 (50.44%) வாக்குகள் பெற்றார். ஹெர்னாண்டஸ் 1,05,80,412 (47.31%) வாக்குகள் பெற்றார். குஸ்தவோ பெட்ரோ இதுவரையில் மூன்று முறை அதிபர் தேர்லில் போட்டியிட்டுள்ளார்.

கொலம்பியாவில் விகிதாச்சார தேர்தல் முறை நடைமுறையில் உள்ளது. கொலம்பிய அதிபரின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். அந்நாட்டு அரசியல் அமைப்பின் 191வது சரத்துப்படி, அதிபர் பதவிக்குப் போட்டியிடும் நபர், பிறப்பால் கொலம்பிய நாட்டு குடிமகனாகவும், 30 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

போகோடா மாநகரத்தின் முன்னாள் மேயராக பதவி வகித்த குஸ்தவோ பெட்ரோவை கடந்த அதிபர் தேர்தலில், இவான் டியூக் தோற்கடித்தார். அதிபர் தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பெற்றவர் செனெட் சபை உறுப்பினராகவும், துணை அதிபர் தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பெற்றவர் பிரதிநிதிகள் சபையில் உறுப்பினராகவும் பொறுப்பேற்கும் நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது.

வேலையின்மை, விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஊழல், வரி உயர்வு, சுகாதார கட்டமைப்பில் தனியார்மயம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக இவான் டியூக் அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி கொண்டிருந்தனர்.

Gustavo Petro

கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக கொலம்பிய பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்தது. மாபெரும் மக்கள் எழுச்சியானது, சுகாதாரம் மற்றும் வரி சீர்திருத்த சட்ட முன்வடிவுகளை, அரசாங்கம் வாபஸ் பெறச் செய்தது. பொது வாக்கெடுப்பு மூலமாக குஸ்தவோ பெட்ரோ அதிபர் தேர்தல் வேட்பாளரானார். வலதுசாரி உள்ளிட்ட இதர வேட்பாளர்களும் அத்தகையதொரு செயல்முறை மூலமாகவே தேர்வாகினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வெளிநாட்டில் வாழும் கொலம்பிய மக்களின் வாக்குகளும் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இந்தியாவில் உள்ள கொலம்பிய வாக்காளர்களில் 35% வாக்காளர்கள் பெட்ரோவுக்கு வாக்களித்துள்ளனர்.

பெட்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்த ஹெர்னாண்டஸ், ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் பெட்ரோ உறுதிப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, அர்ஜெண்டினா, சிலி, மெக்சிகோ, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்கள் குஸ்தவோ பெட்ரோவுக்கு வாழ்த்து தெரிவிதுள்ளனர்.

குஜராத் கலவர வழக்கு: மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் கைது-ஆதி வள்ளியப்பன்


தீஸ்தா சீதல்வாட் (Teesta Setalvad)

டந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மனுதாரராக இருந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் போலீஸார் கைது செய்தனர்.

குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கிய வழக்கில் தீஸ்தா மட்டுமன்றி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சஞ்சீவ் பட் சிறையில் உள்ளார். ஸ்ரீகுமார் கைது செய்யப்பட்டார்.

தீஸ்தா சீதல்வாட்டின் கைதுக்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும், மத்திய அரசின் இந்த கைது நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத் தலைவர் கண்டனம் தெரிவித்ததுடன், அவரை விடுதலை செய்யவும் வலியுறுத்தி இருந்தார்.

யார் இந்த தீஸ்தா சீதல்வாட்? – குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தை நிகழ்த்திய மதவாதச் சக்திகளுக்கு எதிராக அதிகமாகப் போராடியவை மனித உரிமை அமைப்புகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான். அப்படி குஜராத்தில் போராடி வருபவர்களுள் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (Citizen for Justice and Peace) அமைப்பின் சார்பில் செயல்படும் தீஸ்தா சீதல்வாட்டும் ஒருவர்.

பிரித்தானியாவின் பொருளாதாரம் சரிவடைகிறது


2023 ஆம் ஆண்டில் பிரிட்டனின் 2023 பொருளாதாரம் சரிவடையும் என்று
ஆய்வொன்றில் கிடைத்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த
புள்ளிவிபரத்தை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (ழுசபயnளையவழைn கழச நுஉழழெஅiஉ ஊழழிநசயவழைn யனெ னுநஎநடழிஅநவெ - ழுநுஊனு) வெளியிட்டிருக்கிறது. கொரோனா
பெருந்தொற்றிலிருந்து பிரிட்டன் மீண்டு வந்து கொண்டிருந்தது. அந்த மீட்சியைக் காலி செய்யும் வகையில் தற்போதைய நிகழ்வுகள் உள்ளன என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. பிரிட்டன் மட்டுமல்ல, பல்வேறு நாடுகள் மோசமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன என்று எச்சரிக்கிறார்கள்.
 

2021 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிபரங்களை வெளியிட்டே வருங்காலம் எப்படி இருக்கலாம் என்று கணித்திருக்கிறார்கள். தற்போதைய நிலையில் பிரிட்டனை விட, ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படப் போகின்றன. ஜப்பான்தான் பெரும் அடி வாங்கப் போகிறது. இருந்தாலும், 2023 ஆம் ஆண்டில் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சியே இருக்காது என்று கணித்துள்ளனர். அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளின் வளர்ச்சி 1.6 விழுக்காடாக இருக்கும்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...