புத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களும்எஸ்.எம்.எம்.பஷீர்  
. 
"அன்பினால் கோபக்காரனை வெல்,
நன்மையால் தீய குணத்தோனை வெல்"
                                 
தம்மபதம்  (பௌத்த நீதி நூல்)

சென்ற ஆண்டு பௌத்த மதம் இலங்கையில் காலூன்றியதாக வரலாற்று தொடர்புபடுத்தப் பட்ட நகரான அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம்களின் தைக்கா ஒன்று , துட்டகைமுனுவின் அஸ்தி தூவப்பட்ட புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாக "கண்டுபிடிக்கப்பட்டு" சிங்கள ராவய எனும் தீவிரவாத  இயக்கம் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பௌத்த மத தீவிரவாதிகளின் அழித்தொழிப்புக்கு உள்ளானது. அந்த நினைவுகள் மாறாத நிலையில் மீண்டும் சிங்கள மத தீவிரவாத பரப்புரைகளை மேற்கொண்டு வரும்   தம்புள்ளை பிரதேசத்தில் இயங்கும் இலங்கையின் முதல் பௌத்த மத பரப்புரை வானொலியான ரங்கிரி வானொலி மூலம் , அவ்வானொலியின் போஷகராக செயற்படும் ரஜ  வன. இனமுல்ல சிறி சுமங்கல தேரோ . விதைத்த தம்புள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கெதிரான நச்சுக் கருத்துக்களை உள்வாங்கிய சிங்கள தீவிரவாத சக்திகளால் தம்புள்ளையில் சுமார் ஐந்து  தசாப்தமாக இயங்கி வந்த முஸ்லிம்களின் ஒரே ஒரு பள்ளிவாசலான மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் சித்திரை மாதம் இருபதாம் திகதி வெள்ளிக்கிழமை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்
 சையட் பசீர் ::- தமிழர்கள் என்று மட்டுமல்ல முஸ்லீம்கள் என்றும் சேர்த்துப் பேசப்பட வேண்டும். இப்போது முகாம்களில் உள்ள மக்களின் அவலம் வேதனையானது. அவர்கள் மீளவும்குடியமர்த்தப்பட வேண்டும். அதேசமயம் பலவருடங்களுக்கு முன் யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் இன்னமும் புத்தளம் முகாம்களில் தான் வாழ்கிறார்கள். அதற்காக எந்தக் கூட்டமும் கலந்துரையாடலும் நடாத்தப்படாதது மனவருத்தமானது.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...