கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் என்று யாழ்ப்பாண மக்களால் அன்பாக
அழைக்கப்பட்ட அமரர் மு.கார்த்திகேசன் ஒரு சிறந்த ஆங்கில
ஆசிரியராகவும், சமூக சேவையாளராகவும்ää சுவாரசியமான ஹாஸ்ய பேச்சாளராகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார் என்பது சகலரும் அறிந்ததே. அன்னார் காலமாகி பல வருடங்கள்
கடந்துவிட்டாலும், அவருடன் சேர்ந்து வாழ்ந்தவர்கள், சேர்ந்து செயற்பட்டவர்கள், நெருங்கிப் பழகியவர்கள், அவரிடம் கல்வி கற்றவர்கள் பலர் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் சகலரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அமரர் கார்த்திகேசனுடனான தமது தொடர்புகளை நினைவுபடுத்தி தமக்கிடையில் பேசி அகமகிழ்ந்து அன்னாரைப் புகழ்ந்து அவரது நினைவுடன் பிரிந்து செல்வது வழக்கமான ஒரு விடயமாகும்.
அவருடைய பணிகளில் மிகவும் சிறந்த பணியாக அன்று அமைந்தது அவரது
அரசியல் பணி என்றால் அது மிகையாகாது. யாழ்ப்பாணத்தில்
கம்யூனிஸ்ட் கட்சியை அறிமுகப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர்.

எம்.ஏ.சி. இக்பால்