"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்." திருக்குறள்
25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்து எம
து குடும்பத்தினர் ஒருவர் , எம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ் மரணித்துவிட்டார் என்ற செய்தியை சொன்னார். காலையில் கேட்ட முதல் செய்தி , காதுகளில் ஊடாக எனது இதயத்தை துளைத்தது , அந்த செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா என்ற கையறு நிலையில், மனசு சங்கடப்பட்டது.
பொன்றாது நிற்பதொன் றில்." திருக்குறள்
25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்து எம

சற்று நேரத்தில் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் நேற்று ( 25/08/2018 ) யாழ் பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். அவரின் உடல் அவரின் பிறந்த இடமான எருக்கலப்பிட்டியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது என்ற செய்தி பரவியது. அனுதாபத் செய்திகள் வரத் தொடங்கின, அவருக்கும் எனக்குமிடையிலான தொடர்புகள் மிக நீண்டவை , அவருடனான சந்திப்புக்கள் , அளவளாவல்கள் பிரயாணங்கள் என ஒவ்வொன்றாக ஞாபகத்துக்கு வந்து என்னை மட்டுமல்ல எனது குடும்பத்தினரை கூட துயரத்தில் ஆழ்த்தியது.