எஸ்.எம்.எம்.பஷீர்
"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ - கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடீ."
சுப்ரமணிய பாரதி
ஐ.நா
.மனித உரிமை ஆணையகம் இலங்கையில் 2002 தொடக்கம் 2011 வரை , சுமார் ஒன்பது
ஆண்டுகளில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் , குறிப்பாக 2009 ஆம்
ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத ஒழிப்பு யுத்தத்தின் பொழுது நடைபெற்றதாக
சொல்லப்படும் யுத்தக் குற்றங்கள், தொடர்பில் இலங்கை அரசின் உடன்பாட்டுடன்
ஒரு உள்நாட்டு விசாரணையை நடத்த தீர்மானம் மேற் கொண்டுள்ளது. வரைவுத்
தீர்மானத்தில் சொல்லப்பட்ட "கலப்பு" என்ற சொல்லை "கலைத்து" விட்டேன்,
தீர்மானத்தை வென்று விட்டோம் , இனி எப்படி விசாரணை நடத்துவது என்பது எமது
உள்நாட்டு விவகாரம் என்று ஜனாதிபதி உள்நாட்டுப் பொறிமுறைக்கு அங்கீகாரம்
கொடுத்துவிட்டதாக பெருமிதம் கொள்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை என்பதை
வரும் நாட்கள் சொல்லப் போகின்றன!