புலியை பிடித்து கூண்டிலடைத்து போற்றிப் புகழுகிற உலகம் !!




எஸ்.எம்.எம்.பஷீர்

நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே   
                                                             (அதிவீரராம பாண்டியர்)

இலங்கை அரசின் தகவல்களின் அடிப்படையிலேயே  நெதர்லாந்தில் புலிப் பயங்கரவாதிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் தொடராக கைது செய்யப்பட்டுவருவதனை செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால் இந்த பயங்கரவாதிகள் மீண்டும் புலிகளின் பயங்கரவாதத்தை இலங்கையில் கட்டியெழுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் என்றும் இவர்கள் மீது நெதர்லாந்து தமிழ் மக்கள் வழங்கிய புகார்களை அடிப்படையாகக் கொண்டே இவர்களை கைது செய்யப்பட்டதாகவும் முதலில் செய்திகள் வந்தன. என்றாலும் இவர்களின் கைதுகள் நெதர்லாந்து நாட்டின் பயங்கரவாத தடை சட்டப்படி நடை பெற்றதாக குறிப்பிடப்படுகிறது.

இரைக்காக கொல்லப்படும் முஸ்லிம்கள்

எஸ்.எம்.எம்.பஷீர்


ilamparuthy bazeer bazeer-2
படம்: இளம்பருதி        புலிகளின் அக்குரஸ்ஸ   பள்ளிவாசல் குண்டு வெடிப்பு காட்சிகள்

1990 ம் ஆண்டு யாழ் குடாநாட்டில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை அம்மக்களின் அனைத்துச் சொத்துக்களையும் சூறையாடிவிட்டு உடுத்த உடையுடன் விரட்டிய இளம்பரிதி 2003 ல் யாழ்ப்பாணம் ஐந்து லாம்பு  சந்தியில் நடைபெற்ற மீலா துன்னபி விழாவில் சிற்ப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் பொழுது  " இன்று இஸ்லாமிய மக்கள் தமது தூதரான நபி(ஸல்) அவர்களின் பிற்ந்ததினத்தை கொண்டாடுகிறார்கள். சிலர் அவர்களை சமயக்கண் கொண்டு நோக்குகின்றனர். அவர்கள் மனிதகுல மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து காட்டிய பெரும் மகான் என்று கருதுகிறேன். நான் நபி ஸல்லல்லாஹ¤ அவர்களை நேசிக்கிறேன். ஏனெனில் அவர்கள் போரடியது மனிதகுல விடுதலைக்காக இந்த மண்ணில் தமிழ், முஸ்லிம்களின விடுதலைக்காகவும் 17 ஆயிரம் போரளிகள் தமது இன்னுயிரை நீத்து இருக்கிறார்கள்.” இவ்வாறு அன்று அவர் பேசியிருந்தார்.

JOINT PRESS RELEASE


24 August 2010

It is noted that the Commission of Inquiry on Lessons Learnt and Reconciliation appointed by the President of Sri Lanka, has commenced its sittings in August 2010.

The Commission will inquire and report into events which took place between February 21, 2002 and May 19, 2009; namely the facts and circumstances which led to the failure of the ceasefire agreement and the events which followed thereafter up to the end of the war. It will also recommend methods of compensating those affected by the conflict or their dependents.

It is also noted that the truce between the government and the LTTE went into effect from February 23, 2002, followed by the monitoring of the ceasefire a few weeks later.

புலிகளின் நான்காம் ஈழப்போருக்கான முஸ்தீபும், முஸ்லிம் மக்கள்மீதான இரண்டாம் இனச்சுத்திகரிப்பிற்கான ஒத்திகையும்.

 
 எஸ்.எம்.எம்.பஷீர்

தேசம் இதழ் -29

தம் தாயகப் பிரதேசமான யாழ் குடாவில் இருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதை கவனயீர்ப்பு ஊர்வலம்மூலம் முஸ்லிம் மக்கள் நினைவு கூர்ந்தனர். கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் டிசம்பரில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நிரந்தர சமாதானத்தை அடைய அரசையும், புலிகளையும் வற்புறுத்தினர்.

மறுபுறம் மாவீரர் தின உரையில் தமிழர்கள்மீதான சிங்கள அடக்குமுறை குறித்து புலிகளின் கருசனையை பிரபாகரன் வெளிப்படுத்தினார். அதேபோல் புலிகளின் முஸ்லிம்கள்மீதான அடக்கு முறையினையையும் பிரதியீடு செய்யும் சந்தர்ப்பமும் ஏற்படுகின்றது. குறிப்பாக மூதூரை ஒரு பிரமாண்டமான வதை முகாமாக மாற்றிய புலிகளின் அடக்குமுறை பலிகளின் முஸ்லிம்கள்மீதான அடக்கு மறையின் கிட்டிய உதாரணமாகும். எனினும் காலியிலும், மூதூரிலும் தமிழர்கள்மீதான பதில் தாக்குதல்களை பாரிய அளவில் எதிர்பார்த்த புலிகளின் தோல்வியும் இவ்வுரையில் புலப்படாமல் இல்லை.

எந்தத் திருமலையில் 1960களில் முஸ்லிம் அரசும், தமிழ் அரசும் என இரு அரசுகள் குறித்து தந்தை செல்வா பிரகடனஞ்செய்தாரோ அந்தப் பிரதேச மக்கள் புலிகளின் இனச்சுத்திகரிப்பின் கெடுபிடிகளுக்கு உள்ளாகி துயர்பட்டனர். மேலும் கிழக்கிலே ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரதேச சபைகள் குறித்து பல்லினச் சூழலை கருத்தில்கொண்டு பண்டா ஒப்பந்தம் செய்த தந்தை செல்வாவின் கருத்துக்கள் இன்று தீர்க்க தரிசனமாக புலப்படுகையில் காலாவதியான தனித் தமிழீழ அரசு சிந்தனைகளில் பிரபாகரன் இன்னும் மூழ்கியிருக்கின்றார். சுய நிர்ணய உரிமைகோரும் சமூகங்களை கிள்ளுக் கீரை என நினைத்திருக்கின்றார்.

மேற்குலக (தமிழரின்) மே பதினெட்டும் மேன்மையிழந்த (தமிழ்) சிறார்களும்




                                                                                        
எஸ்.எம்.எம்.பஷீர்


பிள்ளைபேய் பித்தன் பிணியாளன் பின்னோக்கி
வெள்ளைகளிவிடமன் வேட்கையான் - தெள்ளிப்
புரைக்கப் பொருளுணர்வான் என்று இவரே நூலை
உரைத்தற்குரிமையிலாதார்.  
                                           (முனைப்பாடியார்-அறநெறிச்சாரம்)



பயங்கரவாதத்துக் கெதிரான இலங்கை அரசின் யுத்தத்தில் வெற்றி பெற்ற நாளாக பிரபாகரனை கொன்ற மே பதினெட்டாம் திகதியை இலங்கை அரச படைகளின் வெற்றி நாளாக  பிரகடனப்படுத்தினார்கள் , ஏனெனில் அன்றுதான் புலிப்பயங்கரவாததுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மே மாதம் முழுவதும் அல்லது அதற்கு சற்று முன்பாகவும் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான அழைப்பையும் மீறி புலிகளுடன் இழுத்து செல்லப்பட்ட மக்கள் இறுதியில் பரிதாபகரமாக தங்களின் உயிர்களை அவயங்களை இழந்து போன துயரமான மாதமாக மே மாதம் திகழ்கிறது. அவ்வாறே இலங்கையின் இறைமையை மீட்க பயங்கரவாத புலிகளுடன் மோதி உயிரிழந்த , அவயமிழந்த இலங்கை இராணுவத்தினரும் அவர்களின் குடும்பங்களும் அந்த மாதத்தின் துயர இழப்புக்களை சந்தித்தவர்கள். பிரபாகரனும் அவரின் முக்கிய தலைவர்களும் அழிக்கப்பட்டு புலிகள் இராணுவ ரீதியில் முற்றாக தோல்வியுற்றதால் இலங்கை மக்கள் மீண்டும் சுதந்திரம் அடைந்ததாக கருதி சகல மக்களும் கடந்த மூன்று தசாப்பதங்களாக அனுபவித்த துயரங்களுக்கு முடிவு காணப்பட்டதாக  இந்த மே பதினெட்டை  ஒரு வெற்றி நாளாகவே கொண்டாடினார்கள். இப்போது பிரபாகரன் உயிரிழந்ததை வெளியே சொல்ல முடியாமல் விழுங்கி கொண்டு புலிகள் அந்த யுத்தத்தில் செய்த மனித படுகொலைகளை மனச்சாட்சியற்று மறைத்துக்கொண்டு புலிகளின் தாகத்தை தமது (தமிழரின்) தாகமாக வரித்துக் கொண்டு மீண்டும் மிடுக்குடன் மேற்குலக நாடுகளின் நகரங்களை புலம் பெயர் புலிகள் ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கிரார்கள். ஆக இந்த நேரத்தில் இவர்களின் பயணத்துக்கு பக்க பலமாக இருப்பது ஐக்கிய நாடுகளின் அறிக்கையும் மேற்குலக நாடுகளிலுள்ள அரசியல்வாதிகள் சிலரும்.மேற்குலக நாடுகளின் இராக் ஆப்கானிஸ்தான் பாலஸ்தீனம் மீதான மனித உரிமை மீறல்களை கண்டிக்க திராணியில்லாத மனித உரிமை நிறுவனங்களும்தான் .   

"I’m for Peace not for War"

Asian Tribune -Mon, 2005-11-07
                        
                                     By Seyed Bazeer




“Thy fate is the common fate of all ,
   Into each life some rain must fall,
   Some days must be dark and dreary
                                                      -Long Fellow- 1842


The writer wonders why on earth Mr. Santhirasegara dragged up Seyed Bazeer’s views in his letter to your on line news daily, when he wrote about who would be the best president of Sri Lanka. It looked something like “tying the balding head to the knee” ( Mottathalikum mulankalukkum Mudichu Podurathu) . The writer checked the name once again to ensure whether his name was ending with a letter “N” or “M”, as he has met hundreds of Tamil people who condemn the “Expulsion of Muslims from the Northern Province and the genocide of Muslims in the East,” without reservation.
If it was Santhirasegara(n) or Sathirasegara(m) he would have probably not made such a comment, rather he would have at least kept silent about it.

ஒரு துயர நினைவோடும் தன்னை நொந்துகொள்ளும் சுயபரிசோதனையும்..

எஸ். எஸ். எம். பஷீர்

இன்று ஆகஸ்ட் 11 ம திகதி புலிகளின் நர மாமிச வேட்டையில் ஏறாவூரில் தூக்கத்திலிருந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 104 முஸ்லிம்கள் ஏறாவூர் 3 ம் 6ம் குறிச்சியிலும் சதாம் ஹுசைன் நகரிலும் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட சம்பவம் பின்னர் தொடர்ந்த பல புலிகளின் ஆகஸ்ட் கொலைகள் இம்மாதத்தை ” கருப்பு ஆகஸ்ட்” என நினைவு கூறவைக்கிறது. “கருப்பு ஜூலை” நினைவுகளை தமிழர்கள் நினவு கூருவதுபோல் முஸ்லிம்களை பொறுத்தவரை இந்த நிகழ்வுகள் தமிழர்களின் பயங்கரவாத சமூக விரோத சக்திகளின் வெளிப்படாக அமைகிறது. காத்தான்குடி படுகொலை நடந்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் இந்த கொடூரம் நடந்தது..

Tamils campaign for Human Rights in British Parliament


"This gives us an insight as to their Eelam project; the expelling of the Muslims from the North and the killing of  the Muslims in the east, in the mosques, in our villages, while we were asleep, and while we were worshipping. This was mass murder."

Bazeer asked, "What has the international community done for these acts of genocide against the Muslims by the LTTE?"

மாபெரும் இலக்கியமும் மாவீரர் இலக்கணமும்


 

                                                                       எஸ்.எம்.எம்.பஷீர்


"என்னுடைய பெயர்
என்னவென்று
எனக்கு தெரியாது
நான் யாரென்பதும்
மறந்து விட்டது
ஆனால் -
ஒன்று மட்டும்
எனக்கு நல்ல ஞாபகம்
நான்
மரணமாகவில்லை
அகால மரணமானேன்"

             
எஸ். சண்முகதாசன் (கல்லறை கீதங்கள் )


மாவீரர் தினம் இலங்கையில் புலிகளின் தலைவரின் அஸ்தமனம் வரை வட புலத்தில் இறுதியாக கொண்டாடப்பட்டது. புலம் பெயர் தேசங்களில் இன்றுவரை கொண்டாடப்படுகிறது ஆனால் மீண்டும் அண்மையில் மாவீரர் தினம் கிழக்கில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த மாவீரர் தினம் அதே புலிகளில் இருந்தவர்கள் , அதிலிருந்து பிரிந்து ஜனநாயக வழிக்கு திரும்ப , முனைந்தபோது வன்னியை தளமாக கொண்ட பிரபாகரனின் புலிகள் கிழக்கிலிருந்த தமது சகோதர "புலிகளை" வெருகல் ஆற்றில் சொர்ணம் தலைமையில் அன்று அமுலிலிருந்த நோர்வேயின் சமாதான ஒப்பந்தத்துக் கெதிராக கிழக்குக்கு சென்று முழுமையாக அழிக்க முற்பட்டு முடிந்தவரை அழித்த  நாள் அண்மையில் இன்றைய தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவர், கிழக்கு மாகான முதலமைச்சர் சந்திரகாந்தனின் தலைமையில் நடைபெற்றிருக்கிறது. புலம் பெயர் யாழ் மையவாத புலிகளின் அறிவு ஜீவிகளின் ஆலோசனையின் பிரகாரம் அதுவும் குறிப்பாக இலண்டனிலுள்ள தமிழ் மனித உரிமை வாதிகளின் ஆதரவுடன்  அன்றைய ஜனாதிபதி சந்திரிகாவை அணுகி அன்றைய காலகட்டத்தில் அமுலிலிருந்த நோர்வே சமாதான ஒப்பந்தத்துக் கெதிராக சொர்ணத்தை கிழக்குக்கு ஆயுதங்களுடன் பயணிக்க அனுமதி பெறப்பட்டது.

SLMC BLUNDERS




The Sunday Leader 17th August 1997

I have been prompted by the series , Muslim perspective  by Omar Khayyam , to look back at my time in
the SLMC politics in the light of the current minority political gimmicks  in Sri Lanka.

பல்கலைக்கழகங்களும் பாலியல் வக்கிரங்களும் !!

 

                                 எஸ்.எம்.எம்.பஷீர்


உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய
நிரை உள்ளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்
வரைதாழ் இலங்கு அருவி வெற்ப – அதுவே
சுரை ஆழ அம்மி மிதப்ப.”


                                                       ( பழமொழி நானூறு )

இப்போது பெரும் பரபரப்பாக தமிழ் இணையத்தளமொன்றில் வெளியான யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்  பேராசிரிய பெருந்தகைகள் சிலரின் பாலியல் சேஷ்டைகள் சில்மிஷங்கள்  எம்மை முகம் சுளிக்க வைக்கின்றன. அந்த தமிழ் இணையத்தளத்தில் நட்சத்திர செய்விந்தியன் எழுதிய கட்டுரையில் செல்லையா இளங்குமரன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் எனது புருவத்தை உயர்த்தின , அதன் விளைவாகத்தான் இந்தக்கட்டுரையும் உருவாயிற்று

bazeer.lanka blog வாசகர்களுக்கு!!

வாசகர்களுக்கு!!

இவ்வலைத்தளத்தில் ஏதேனும் ஆக்கங்களை வாசிப்பதில் சிரமமிருப்பின் அன்புடன் எமது கவனத்துக்கு கொண்டுவருமாறு வேண்டுகிறோம். சில தமிழ் இணைய எழுத்து வடிவங்கள் குறித்து உள்ள சிரமங்களை இதுவரை தெரிவித்தவர்களுக்கு எமது நன்றிகள்.

வலைத்தள ஆலோசனை குழு -பசீர் லங்கா ப்ளாக்  

மீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் எஸ்.எம்.எம்.பஷீர் (பாகம் 15)

வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கெதிரான -தனித்தமிழ் கோஷத்தை - முன்வைத்து நடத்தப்பட்ட தேர்தலுக்கு எதிராக கிழக்கு தமிழர்களும் முஸ்லிம்களும் வாக்களித்தனர் என்பதை நான் சென்ற கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். அதில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலில் முஸ்லிம் தேசத்தை பற்றிய "கிழக்கிஸ்தான்" கோரிக்கை எவ்வித முகாந்திரமுமின்றி வெறும் கவர்ச்சி கோசமாக முவைக்கப்பட்டதை தமிழர்களோ முஸ்லிம்களோ கண்டு கொள்ளவில்லை. அதற்கான நிர்பந்தங்கள் எதுவும் அன்று காணப்படவுமில்லை. மாறாக பதியுதீன் மஹ்மூத் அவர்களும் ராஜன் செல்வநாயகமும் சிறீலங்கா சுதந்திரகக்ட்சியில் ஒரே தேர்தல் தொகுதியில் தங்களது சமூகங்களை தனித்தனியாக முன்வைத்து தேசிய அரசியலை முன்னெடுத்தபோதும் தமிழ் மக்களும் ஏறாவூர் முஸ்லிகளும் அதிகளவில் அன்று ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட மறைந்த டாக்ட்ர். பரீத் மீராலெப்பைக்கு வாக்களித்தனர். இந்த தேர்தலில் அதிக வன்முறைகள் இடம்பெற்றன என்பதுடன் காத்தான்குடியில் சத்தார் என்பர் கொடூரமாக வாளினால் வெட்டப்பட்டார்.

சாருமதியும் தோழர்களும்: ஒரு பரந்த ஆய்வின் அவசியமும்




எஸ்.எம்.எம்.பஷீர்    

கண்ணகியே தாயே
கற்பின் பேரரசே
தீத்திற‌த்தார் தம்மைத்
தீயீட்டுஅழித்தவளே!
கொங்கை தீயால்
கொடுநகர் எரித்தாய்
மீத‌ முலையொன்று உன்னிடத்தே
மிச்சமிருக்குதம்மா!
அதையும் பிச்செறி இந்த
பினந்தின்னும் நாடெரிய
                               மறைந்த கவிஞர் வீ .ஆனந்தன் (சம்மாந்துறை) 
 
சாருமதி (இயற்பெயர் க. யோகநாதன்- 28.09.1998 ) என்றொரு மானுடன் என்ற லெனின் மதிவானம் எழுதிய நினைவுக் குறிப்பு தேனீயில் அன்மையில் பிரசுரமாகியிருந்தது.சாருமதியுடன் சில நாட்கள் பழக நேரிட்ட போதும் சாருமதியின் இலக்கிய பங்களிப்பு இடதுசாரி  சார்பு அரசியல் நிலப்பாடு என்பவற்றுக்கப்பால் அவரின் கொள்கைப்பிடிப்பு, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு என்பன பற்றி எனது சிறிய பார்வைப் பதிவு இது. சாருமதி மட்டுமல்ல அன்று குறிப்பாக எழுபதுகளின் பிறபகுதி தொடங்கி எண்பதுகளின் பிற்பகுதிவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஆரோக்கியமான இளைஞர் கூட்டம் ஒன்று இனவாத தமிழ் தேசிய வாத அரசியலுக்கு அப்பால் தீவிர எழுச்சிபெறும் குறுகிய இனவாத அரசியல் ஆபத்துக்களை பற்றிய எதிர்வு கூறல்களுடன் முழு இலங்கையின் உழைக்கும் மக்களின் விடுதலை குறித்து ஆர்வமும் ஈடுபாடும் காட்டிய கால கட்டங்கள் அவை. தமிழ் தேசிய இனவாத அரசியல் வெறி மாற்று அரசியல் கருத்து தளங்களை ஆக்கிரமித்துக்கொண்டு சென்ற வேளையில் வீரியம் மிக்க இந்த இடது சாரி இளைஞர்கள் சிலர் அவ்வாறான அன்று தோன்றிய தமிழ் அரசியலுக்குள்ளும் ஒத்திசைவான அம்சங்களை கண்டு தங்களை இணைத்துகொண்டதும் அல்லது அடையாளப்படுத்தியதும் ஒரு மெதுவான நிகழ்வாக நடந்தேறியது. ஆனால் சிலர் மிகவும் கொள்கை உறுதி கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள், இன்னும் சிலர் பின்னாளில் தமது அரசியல் சமரசத்திற்காக கழிவிரக்கம் கொண்டு சுய விமர்சனம் கூட செய்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பாக மறைந்த காத்தான்குடி கபூர் ஆசிரியர் , கே. சிவராஜா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...