மக்கள் நாயகனும் கைக்கூலியும்-– எஸ்.பி.ராஜேந்திரன்


35 வயதே நிரம்பிய அந்த ரகசிய மனிதன், யாருக்கும் தெரியாமல் அந்த அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறான். இரண்டு வாரம் அவனுக்கு அவகாசம் தரப்படுகிறது. அவனும் உறுதியளிக்கிறான். என்ன உதவி வேண்டுமானாலும் பெற்றுக் கொள்; என்ன வேண்டுமானாலும் செய்துகொள்; ‘அவன்’ பதவியிலிருக்கக் கூடாது என உத்தரவிடுகிறார்கள். உன்னை ஜனாதிபதியாக்குகிறோம் என்கிறார்கள். வாயெல்லாம் பல்லாக, கெக்கெலி கொட்டிச் சிரித்தவாறு கை கொடுத்து விடைபெறுகிறான்.
அது, உலகின் பல நாடுகளில் அரசாங்கங்களை கவிழ்ப்பது தொடர்பான சூழ்ச்சிகள் திட்டமிடப்படும் அமெரிக்காவின் நாசகர உளவு அமைப்பான சிஐஏவின் அலுவலக அறைகளில் ஒன்று.
அங்கிருந்து புறப்பட்டு அவன், வெள்ளை மாளிகைக்குச் செல்கிறான். டொனால்டு டிரம்ப்பை சந்திக்கிறான். அவர் முதுகில் தட்டி ஆசி வழங்குகிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைக்குள் அதிகரிக்கும் முட்டி மோதல்கள்! -சுப்பராயன்


மிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நாளுக்குநாள் உள் முரண்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது சம்பந்தமான பிரதிபலிப்புகளை அண்மைக் காலத்தில் மேலும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

கூட்டமைப்புக்குள் முரண்பாடு என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. ஆனால் முன்னர் அது கூட்டமைப்புக்குள் உள்ள சிலரின் சுயநல நோக்கங்களால் வெளித் தெரியாமல் அமுக்கி வைக்கப்பட்டிருந்தது.
முதலாவதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நோக்கமும் விதமுமே பிழையான அடிப்படையைக் கொண்டவை.

புலிகள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவர்கள் எவ்வளவுதான் இராணுவ வெற்றிகளைக் குவித்த போதும், அவர்களால் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை. அவர்களை இலங்கை – இந்திய அரசாங்கங்கள் மட்டுமின்றி, பல சர்வதேச நாடுகளும் குறிப்பாக மேற்கு நாடுகள் பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்தித் தடை செய்து வைத்திருந்தன.

இது அபாயகரமான போக்கு! – சந்திரன்



லங்கையில் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன தமது உறவுகளைக் கண்டுபிடித்துத் தரும்படி தமிழ் பொதுமக்கள் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இப்படி போராட்டங்கள் நடத்தும் பொதுமக்களை காலத்துக்காலம் அரசாங்கத் தலைவர்களும், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும், சில வேளைகளில் சில வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் சந்தித்து சில வாக்குறுதிகளை வழங்கி வருகின்ற போதிலும், அந்த மக்களின் கோரிக்கைகளில் ஒரு வீதம் தன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இந்தப் பிரச்சினை முடிவின்றி தொடர் கதையாக இழுபடுவதற்கு உண்மையான காரணம், காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் உயிருடன் இல்லை என்பதே. இந்த உண்மை சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினர்க்கும் தெரிந்திருந்தும் அதை வெளியே சொல்வதற்கு அச்சப்பட்டு மூடி மறைத்து வருகின்றனர்.

“காணாமல் போனோர்” என பொதுவாகக் கூறப்பட்டாலும், இவ்வாறு காணாமல் போனோரில் பல வகைப்பட்டவர்கள் அடங்குகின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் உண்மையான பொதுமக்கள். இன்னொரு பகுதியினர் புலிகளின் போராளிகள். அதனால்தான் புலிகளின் திரிகோணமலை முன்னாள் பொறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தி சசிதரனும் தனது கணவர் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமல் போயுள்ளார் என்று கூறி இந்தப் போராட்டங்களில் பங்குபற்றி வருகின்றார்.

ஒரு மரணத்தில் இழையோடும் துயரம் : திரு. அருணாசலம் குமாரதுரை ( பிறப்பு: 25.05.39 மறைவு: 23.01.2019) எஸ்.எம்.எம்.பஷீர்



   
                                                                                      எஸ்.எம்.எம்.பஷீர், 


"உங்கள் வார்த்தைகளை மாற்றுவதன் மூலம் உஙக்ளின் உலகத்தை மாற்றிக்கொள்ளலாம் ... நினைவிருக்கிறதா, மரணம் மற்றும் வாழ்க்கை நாக்குகளின் சக்தியாக இருக்கின்றன."     
                                                                                               ( ஜோயல் ஒஸ்டீன் )
                                                                                                                                                                          

சென்ற 23 ஆம் திகதி தை  மாதம் 2019 ஆம் ஆண்டு தனது எழுபத்தொன்பதாவது  வயதில் டென்மார்க்கில் காலமான திரு. அருணாசலம் குமாரதுரை  அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட நினைவுகளுடன்  எனது துயரத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அவரின் இழப்புக் குறித்து நான் தனிப்பட்ட வகையில் மிகுந்த துயரமடைகிறேன். ஒரு அரசியல் ஆய்வாளர் என்ற வகையில்  இலண்டனில் இயங்கிய வானொலி ஒன்றில் துணிச்சலாகவும் , துல்லியமான புள்ளிவிபரங்களுடனும் தனது பக்க நியாயங்களை முன்வைத்து கருத்தாடல் செய்து ஐரோப்பா மட்டுமல்ல மத்திய கிழக்கிலும்  ஒரு புதிய அரசியல் சிந்தனை வீச்சினை ஏற்படுத்தியவர் திரு.  அருணாசலம் குமாரதுரை. இன்றும் அவரின் மறைவு கேட்டதும் பலரின் காதுகளில்அவரின் குரல் ரீங்காரமிடும் என்பதில் எனக்கு ஐயமில்லை. அவரின் பிசிரில்லாத குரலும் ,அவரின் ஆணித்தரமான வாதங்களும் அவரின் தன்னிகரற்ற அடையாளங்களாகவே  திகழ்ந்தன.






சுமந்திரன் வகுக்கும் புதிய வியுகம் தமிழ் மக்களிடம் எடுபடுமா? -புனிதன்


ண்மைக் காலமாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியினதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் வருங்காலத் தலைவராக வரக்கூடியவர் எனக் கருதப்படுபவருமான எம்.ஏ.சுமந்திரன் விடுதலைப் புலிகளை பொது மேடைகளில் விமர்சித்து வருகின்றார். புலிகள் கோலோச்சிய காலத்தில் இந்தச் சுமந்திரன் என்பவர் யார், இவர் எங்கு இருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பொதுமக்களுக்குத் தெரியவே தெரியாது. பொதுமக்களுக்கென்ன, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பலருக்குக்கூடத் தெரியாது. அதுமட்டுமல்லாமல், புலிகள் இறுதி யுத்த நேரத்தில் அரச படைகளால் அழிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடக்கும் வரையிலும் கூட சுமந்திரன் புலிகள் மீது எந்தவிதமான விமர்சனங்களையும் முன் வைக்கவும் இல்லை.

அப்படியிருக்க, இப்பொழுது மட்டும் சுமந்திரன் புலிகளைத் திடீரென விமர்சிக்க புறப்பட்டிருப்பதன் பின்னணி என்ன என்ற கேள்வி எழுகின்றது. நீண்டகாலமாக புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து வரும் சிலர் மத்தியில் சுமந்திரனின் இந்த திடீர் நிலைப்பாடு குழப்பங்களையும் ஏற்படுத்தி இருப்பதையும் அவதானிக்க முடிகிறது. கடந்த காலங்களில் சுமந்திரனின் அரசியல் நிலைப்பாடுகளால், அவர் மேற்கத்தைய சார்பானவர், ஐக்கிய தேசியக் கட்சியின் கையாள் என்று கருதியிருந்த சிலர் கூட, சுமந்திரனின் புலி எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கண்டு ஆச்சரியப்பட்டு, “என்ன இருந்தாலும் உண்மையை வெளிப்படையாகப் பேசும் ஒரேயொரு கூட்டமைப்பு அரசியல்வாதி” எனப் புகழாரமும் சூட்டுகின்றனர்.
ஆனால் சுமந்திரனின் புலிகளுக்கெதிரான இந்த திடீர் நிலைப்பாட்டுக்குக் காரணம் என்ன என்பதை தீர ஆராய்ந்தால்தான் அவரது இந்தப் புதிய நாடகத்துக்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

புதிய அரசியலமைப்பு நிறைவேறி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்குமா?



லங்கையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்று கொண்டு வருவது சம்பந்தமான வாதப்பிரதிவாதங்கள் மீண்டுமொருமுறை ஆரம்பமாகியுள்ளது.

புதிய அரசியல் அமைப்பு நாட்டை இன அடிப்படையில் கூறுபோடப் போகின்றது என எதிர்க்கட்சியினரும், இனப் பிரச்சினைக்கு தீர்வை எட்டப் போகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பும், புதிய அரசியல் அமைப்பில் புதிதாக எதுவும் இல்லை, ஒற்றையாட்சியும் பௌத்த மதத்துக்கான முன்னுரிமையும் அப்படியே இருக்கும் என அரசாங்க தரப்பும் கூறி வருகின்றன.
இந்த முத்தரப்பினரின் பிரச்சாரங்களுக்கு மத்தியில் வரப்போகும் புதிய அரசியல் அமைப்பில் என்னதான் இருக்கப் போகின்றது என்ற தெளிவில்லாத குழப்பத்தில் மக்களும் இருக்கின்றனர்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை புதிய அரசியலமைப்புக்கான வரைபு என்ற அடிப்படையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் சமர்ப்பிக்கட்டது அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மட்டுமே என அரசாங்கத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகின்றது.
வெளிப் பார்வைக்கு அரசாங்கமும் அதன் பங்காளிக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் புதிய அரசியல் அமைப்பை முற்றுமுழதாக ஆதரிப்பது போலவும், மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சி அதை இனவாத அடிப்படையில் எதிர்ப்பது போலவும் பெரும் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடாதீர்கள் : மேற்கு நாடுகளிடம் கொழும்பு பேராயர் வேண்டுகோள். !!

Image result for ranjith malcolm

இலங்கையில் மதம் மற்றும் இனம் சம்பந்தமான சில பிரச்சினைகள்
இருக்கின்றன. இவை எமது மதங்கள் போதித்த ஆன்மீக வழிகாட்டல்கள் மூலம் தீர்வு காணப்படக்கூடியவை. இந்த விடயங்களில் தேவையில்லாத அந்நியத் தலையீடுகள் விரும்பத்தகாதவையாகும். இவ்வாறு கூறியிருக்கிறார் கொழும்பு மறை மாவட்டப் பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித். வணக்கத்துக்குரிய பனகல உபதிஸ்ஸ தேரோவின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கொழும்பு பேராயர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிடுகையில் மேற்கு நாடுகள் இலங்கை ஒரு தீவிர நாடு என சிணுங்கிக் கொண்டும், முனகிக் கொண்டும்,  தமது பொருளாதார பலத்தைச் சக்திப்படுத்துவதற்காக நாசகார விடயங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாடுகள் இலங்கையை மேலும் சீரழிக்காமல் தமது சொந்த விவகாரங்களைக் கவனித்துக் கொள்வது நல்லது.

தமிழரசு கட்சியை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்!



(புரட்சிகர இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வார ஏடான ‘தொழிலாளி’ பத்திரிகையில் 50 வருடங்களுக்கு முன் வெளியான இக்கட்டுரை, தமிழரசுக் கட்சியின் இன்றைய அரசியல் நிலைக்கும் பொருத்தமாக இருப்பதால் வாசகர்களுக்காக மீள் பிரசுரம் செய்யப்படுகிறது – வானவில்)

னது முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஊர்காவற்றுறை பாராளுமன்ற உறுப்பினர் திரு.நவரத்தினம் கூறிய அறிவுரையை ஏற்று தமிழரசுக் கட்சி எவ்வளவு விரைவாக தற்கொலை செய்து கொள்கிறதோ, அவ்வளவு தமிழ் மக்களுக்கும் முழு இலங்கை மக்களுக்கும் நல்லதாகும். தமிழரசுக் கட்சி நீண்ட காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளது. பாராளுமன்ற அரசியல் விளையாட்டில், அது விளையாட எடுத்த முயற்சியின் வங்கலோட்டுத்தனமும் நன்கு அம்பலமாகிவிட்டது.

கடந்த 1956 ம் வருடத்திற்குப் பிறகு இன்றுவரை தமிழரசுக் கட்சி மூன்று தடவைகள் சிங்கள முதலாளித்துவ கட்சிகளால் ஏமாற்றப்பட்டுள்ளது. முதலில், அது நம்பிக்கை வைத்திருந்த சிங்கள மத்தியிலுள்ள பிற்போக்கு, வகுப்புவாத, குறுகிய தேசியவாத சக்திகளின் நெருக்குதலினால், காலஞ்சென்ற எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா தான் செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார்.

இரண்டாவதாக, மாவட்ட சபைகள் ஏற்படுத்தப்படும் என்று அடுத்தடுத்து சிம்மாசனப் பிரசங்கத்தில் கொடுத்த வாக்குறுதியை திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா காப்பாற்றவில்லை. மூன்றாவதாக, இப்பொழுது கனவான் டட்லி சேனநாயக்கா, “தேசிய” அரசாங்கம் ஏற்படுவதற்கு அடிப்படையாயிருந்த தமிழரசுக் கட்சிக்குத் தான் கொடுத்த ரகசிய வாக்குறுதியை கைவிட்டுவிட்டார்.

இதுதான் ‘சம்பந்தன் ஜனநாயகம்’ போலும்! -சயந்தன்


டந்த வருடம் ஒக்ரோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் ஆக்கியதும், அவருக்கு நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் திரும்பவும் ரணிலை பிரதமராக்கியதும் முடிந்துபோன கதை.

இந்த அரசியல் குழப்பங்களின் போது ரணிலை மீண்டும் பிரதமராக்குவதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கியமானதும் தீவிரமானதுமான ஒரு பாத்திரத்தை வகித்தது. குறிப்பாக சம்பந்தனும் அவரது சகாவான சுமந்திரனும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்கள் போலவே செயற்பட்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய ஆதரவுக் கடிதம் இல்லாதுவிட்டால் ரணில் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மீண்டும் அமைந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...