கடைசி நிமிடம் வரை எனக்குத் தெரியாது” – ராஜபக்ஸ


“கடைசி நிமிடம் வரை எனக்குத் தெரியாது” – ராஜபக்ஸ
விவாதத்துக்குரிய முன்னாள் பிரதம மந்திரியும் தற்போது விவாதத்துக்குரிய எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ள மகிந்த ராஜபக்ஸ, ஒக்ரோபர் 26 நியமனத்தை (பிரதம மந்திரியாக) பற்றி கடைசி நிமிடம் வரை தன்னைத்தான் நியமிக்கப் போகிறார் என்று தனக்குத் தெரியாது என்று சொல்கிறார். ராஜபக்ஸ மேலும் தெரிவிப்பது பரந்த அளவில் நடத்தப்படும் அரசியல் கருத்துக்கு முரணாக தான் எஸ்எல்.பி.பி (பொஹொட்டுவ) கட்சியின் அங்கத்துவத்தைப் பெறவில்லை என்று.

நோர்வேயும் சவூதி அரேபியாவும் சிங்கள – முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களின் பின்னால் இருக்கின்றன! பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு!! – இத்ரீஸ்


பொதுபல சேனாவை அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க நோர்வே ஆதரிக்கின்றது. அதுபோல இலங்கையில் செயல்படும் வகாபி (Wahabi) இயக்கத்தை சவூதி அரேபியா ஆதரிக்கின்றது. எனவே தமிழ் – முஸ்லிம் மக்கள் தேசிய ரீதியான இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து செயல்பட முன்வர வேண்டும்”. இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண. கல்முனையில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றுகையிலேயே விதாரண இவ்வாறு கூறியிருக்கிறார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஐ.தே.க. தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பின்பற்றும் வெளிநாட்டு ஆதிக்கத்திலான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாட்டின் தேசிய சுதந்திரமும், சுயாதிபத்தியமும் பாதிக்கப்பட்டு, நாடு அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் அரைக் காலனி நாடாக மாற்றப்பட்டுள்ளது.

யார் இந்த சிவில் சமூகம்? -புரத்தான்


லங்கையில் ஏதாவது நல்ல விடயங்கள் நடக்கும் போதெல்லாம் அதை சில அரசியல்வாதிகள் மட்டும் எதிர்ப்பதில்லை. மதவாதிகளும் எதிர்ப்பார்கள். இந்த மதவாதிகள் அநேகமாக உள்ளுர் தயாரிப்பாகவே இருப்பார்கள். இவர்களது கவலை எல்லாம் தங்களது மதம், மொழி, கலாச்சாரம் எல்லாம் பறிபோகிறது என்பதாகத்தான் இருக்கும். தமது நாட்டின் வளங்களை ஆட்சியில் இருப்பவர்கள் அந்நிய நாடுகளுக்குத் தாரை வார்ப்பதையோ, அந்நிய கலாச்சார ஊடுருவல் நடப்பதையோ இவர்கள் பார்க்கமாட்டார்கள். இவர்கள் தமது எதிரிகளை எப்பொழுதும் சக இனத்தவரிடையிலேயே தேடிக் கொண்டிருப்பார்கள்.

இவர்களைத் தவிர கடந்த சில தசாப்தங்களாக இன்னொரு தரப்பினரும் ஏதாவது நல்ல விடயங்கள் நடந்தால் அதை நாகரீகமான முறையில் எதிர்ப்பதற்கெனறு உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தம்மை “சிவில் சமூகம்” (Civil Society) என பெருந்தன்மையோடு அழைத்துக் கொள்வார்கள். இவர்களில் கொஞ்சம் கீழ்மட்டத்தவர்கள் தங்களை “பிரஜைகள் குழு” (Citizens Committee) என்று அழைப்பதுமுண்டு.

ஜே.வி.பி. மேற்கொள்ளும் தொடர் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளும் அதனால் பிளவுபடும் நிலையும்! -இராசேந்திரம்


லங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் குழப்ப நிலைமைகளில் போலி இடதுசாரிகளான ஜே.வி.பியின் நடவடிக்கைகள் வழமைபோல எதிரப்புரட்சிகரமானதாகவும், சந்தர்ப்பவாதரீதியாகவும் அமைந்திருப்பதைக் காண முடிகிறது. ஜே.வி.பியிடம் இருந்து இதைத் தவிர வேறு ஒரு நிலைப்பாட்டை எதிர்பார்த்திருக்க முடியாது என்பதே உண்மை.
ஏனெனில் 2015 ஜனவரி 8இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, ஏகாதிபத்திய சக்திகள் தீட்டிய ஆட்சி மாற்றத்துக்கான திட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பிற்போக்கு சக்திகளுடன் ஜே.வி.பியும் கைகோர்த்தது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, ஜே.வி.பி. அப்பொழுது எடுத்த நிலைப்பாட்டை வைத்தே தொடர்ந்து ஜே.வி.பியின் செயல்பாடுகள் எப்படி அமையப் போகின்றது என்பதை ஊகிக்க முடிந்தது.

நாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்குத் தயாராவீர்!


மது தாய்நாட்டில் மீண்டும் ஓர் ஆட்சி மாற்றத்துக்கான சூழல் உருவாகி வருகிறது. இது திடீரென ஏற்பட்ட ஒரு நிலைமை அல்ல. 2015 ஜனவரி 8 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏகாதிபத்திய சார்பு பிற்போக்கு வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள வலதுசாரிப் பிரிவும் சேர்ந்து ‘நல்லாட்சி’ என்ற பெயரில் உருவாக்கிய அரசின் தொடர்ச்சியான தோல்வியின் உச்ச கட்டமாகவே தற்போதைய ஆட்சி மாற்றத்துக்கான சூழல் உருவாகியுள்ளது.

இந்தச் சூழலைப் பற்றி ஆராய்வதற்கு முன்னர் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது, 2015 ஜனவரி 8 ஆட்சி மாற்றத்துக்கான சூழல் நாட்டின் இயல்பான மாற்றம் காரணமாக ஏற்பட்ட ஒன்றல்ல. அது, இலங்கையில் தமக்குச் சார்பான ஆட்சி ஒன்று அமைய வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளினால் தமது உள்நாட்டு ஆதரவுச் சக்திகள் மூலம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

முன்னைய ராஜபக்ச தலைமையிலான ஆட்சி ஒரு எதேச்சாதிகார ஆட்சியாக செயற்பட்டதினால்தான் அந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என அந்நிய ஏகாதிபத்திய சக்திகளினதும், அவர்களது உள்நாட்டு அடிவருடிகளினதும் பிரச்சார ஊடகங்கள் திரும்பத் திரும்பப் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தபோதிலும், உண்மை அதுவல்ல.
பொதுவாகவே, இலங்கையில் இடதுசாரி சக்திகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசுகள் எல்லாமே பல குறைபாடுகள் இருப்பினும் ஏகாதிபத்திய விரோத அரசுகளாகவே இருந்து வந்துள்ளன. அந்த வகையிலான ஒரு அரசே இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசும் ஆகும். அவருடைய அரசிலும் இடதுசாரிக் கட்சிகளான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பன பங்காளிகளாக இருந்தன. இந்த விடயம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஒரு கசப்பான விடயம். ஏனெனில் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டரசில் இருந்த காலங்களிலேயே சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் அதிகளவான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை எடுத்திருந்தன.

தமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்! -புனிதன்



மிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தமிழர் அரசியலில் இதுவரை காலமும் இல்லாத சாதனைகள் பலவற்றைப் படைத்து வருகின்றார். அவருடைய சாதனைகளை எவரும் இலேசில் முறியடித்துவிடவோ பட்டியலிட்டுவிடவோ முடியாது. ஏனெனில் இந்த நிமிடம் வரையிலான அவரது சாதனைகளைப் பட்டியலிட்டு முடித்துவிட்டோம் என நினத்தால் அவர் அடுத்த நிமிடம் மேலும் சாதனைகளை நிலைநாட்டி இருப்பார்.

2015இல் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசாங்கம் பதவிக்கு வந்த நாளிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உத்தியோகபூர்வமாக எவ்வித முடிவுகளையும் எடுக்காமலே இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் வைத்துக் கொண்டே ரணில் அரசாங்கத்துக்கு முண்டு கொடுப்பதையே தொடர்ந்து செய்து வந்தனர். இதில் சுமந்திரனே முன்னோடியாகச் செயல்பட்டார்.
இவர்களது இந்தச் செயல்பாட்டால் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ் Nதியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறியது. வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்புடன் முரண்படத் தொடங்கி இறுதியில் கூட்டமைப்பை விட்டு விலகி தனிக் கட்சி ஆரம்பித்துள்ளார். இவர்களது அரச ஆதரவுச் செயற்பாடு காரணமாக கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் பெரும் சரிவு ஏற்பட்டது. புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களும் இவர்களது செயற்பாடுகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு ஒருமுறை சுமந்திரன் போனபோது அங்குள்ள தமிழ் மக்களிடம் அடிவாங்காத குறையாக ‘வரவேற்க’ப்பட்டார். இவ்வளவு எதிர்ப்புகள் வந்தபோதிலும் இந்த மூவரும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பது என்பதில் பிடிவாதமாக இருக்கின்றனர்.
இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க, அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி இளைஞரணி மாநாட்டில் பேசிய சுமந்திரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை “நீ” என ஒருமையில் விழித்து, அவரைத் திட்டி, வசைபாடி, தனது கீழ்த்தரமான மனோபாவத்தையும், நடத்தையையும் பகிரங்கப்படுத்தியதுடன், தமிழ் மக்களின் மானத்தையும் கப்பலேற்றியிருக்கிறார்.
தமிழ் மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியின் பிரதிநிதி நாட்டின் பிரதான நிர்வாகியான ஜனாதிபதியை இவ்வாறு கீழ்மைப்படுத்தி விழித்ததை கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தனோ, மாலை சேனாதிராசாவோ இதுவரை கண்டிக்காமல் மௌனம் காக்கின்றனர். இந்த இடத்தில்தான் சிங்கள அரசியல்வாதிகளின் பெருந்தன்மையை சுட்டிக்காட்ட வேண்டும். அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தமது பரம வைரியைக்கூட “திரு” என்றே விழித்துப் பேசும் மரபைக் கொண்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதி கொலை முயற்சியே இலங்கையில் எழுந்துள்ள நிலைமைக்கு அடிப்படைக் காரணமாகும்!


மது கடந்த மாத (ஐப்பசி – 2018) வானவில் இதழின் முன்பக்க கட்டுரையின் தலைப்பு இவ்வாறு அமைந்திருந்தது:

“நாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்கு தயாராவீர்!”

அந்தக் கட்டுரையில் நாம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்:

“இந்த அரசு எந்த நேரமும் கவிழலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. ஆட்சியின் வீழ்ச்சி என்பது ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் என்பனவற்றின் மூலமும் நடைபெறலாம் அல்லது அதற்கு முதல் வேறு வழிகளிலும் நடைபெறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் நாட்டு மக்கள் ஆட்சி மாற்றமொன்றை விரும்பினாலும், இந்த அரசைப் பதவிக்கு கொண்டு வந்த ஏகாதிபத்திய சக்திகளும், அவர்களது உள்நாட்டு அடிவருடிகளும் அதற்கு இலேசில் இடம் கொடுக்க விரும்பமாட்டார்கள். அவர்கள் சகல வழிகளிலும் நாட்டில் ஒரு ஏகாதிபத்திய விரோத, முற்போக்கு அரசு ஏற்படுவதைத் தடுக்கும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபடுவர்.

எனவே, மக்கள் விரோத சக்திகளைக் குறைத்து மதிப்பிடாமல், சகல ஏகாதிபத்திய விரோத, முற்போக்கு, ஜனநாயக சக்திகளையும் ஒரு பரந்துபட்ட அணியில் திரட்டுவது முற்போக்கு சக்திகளின் வரலாற்றுக் கடமையாகும். இந்தப் பணி இன்றைய ஆட்சியின் கீழ் பல இன்னல்களைச் சந்தித்து வரும் தமிழ், முஸ்லீம், மலையக மக்களினதும் கடமையாகும்.
“ஆட்சி மாற்றம்” என்ற சொல் அனைத்து மக்களினதும் தாரக மந்திரமாக ஒலிக்க வேண்டும்”.
எமது இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து நாட்டில் யாருமே எதிர்பாராத வகையில் பல அரசியல் மாற்றச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

அமல்-எதுவரை? எழுகதிரோன்


அரசியல் வரவு 
தமிழீழ  மக்கள் விடுதலை கழகம் (புளட்) சார்பில் தேசிய கூட்டமைப்பில் இணைந்து கடந்த 2015ஆம்  ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற தேviyalendran5ர்தலில் போட்டியிட்டார்  சதாசிவம் வியாளேந்திரன். கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது இளமானி பட்டத்தையும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுமானி பட்டத்தையும் பெற்றுக்கொண்ட இவர்  அரசியலுக்கு புது முகமாகவே களமிறங்கினார்.ஆனால் தனது முதல் வரவிலேயே அத்தேர்தலில் அவருடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரையும் ஓரங்கட்டி வெற்றியீட்டினார்.

அரசியல் அனுபவமும்  மக்களிடையே பிரபலமும் கொண்டிருந்த  கொண்ட செல்வராஜா அரியநேந்திரன் போன்றவர்கள் இந்த தேர்தலில்  தோல்வியை தழுவினர். ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த  யோகேஸ்வரன் வெற்றியீட்டிய போதிலும் கூட   அவரால்  குறைவான விருப்பு  வாக்குகளையே (34039 ஆயிரம்)  இத்தேர்தலில் பெற முடிந்தது. இளம் வாக்காளர்களை கவர்வதிலும்  இளம் சந்ததியினரின் தேவையறிந்து செயற்படுவார் என்கின்ற நம்பிக்கையை மக்களிடத்தில் பரப்புவதிலும் வெற்றியடைந்த சதாசிவம் வியாளேந்திரன் 39321 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெற்று தனது வெற்றியை உறுதி செய்தார்.

"Lankan President mulls cancelling gazette dissolving parliament ahead of court verdict" By Editor Newsin.asia

Colombo, November 30 (Reuters): Sri Lankan President Maithripala Sirisena is considering dropping an attempt to dissolve parliament, sources close to the president said, The sources said the president may now rescind the order, effectively pre-empting a court ruling that they expect to overturn his decision anyway.
The country has been in a crisis since Sirisena replaced Prime Minister Ranil Wickremesinghe with Mahinda Rajapaksa last month, and then issued an order dissolving parliament and called for a general election.
Sri Lanka’s top court stayed the dissolution order pending a hearing on its constitutionality that starts on Tuesday, allowing parliament to resume meeting.
Rajapaksa, a former president, has lost two confidence votes in parliament but has refused to resign.

Lankan President mulls cancelling gazette dissolving parliament ahead of court verdict
“There is a possibility of withdrawing the gazette,” said a source in regular discussion with Sirisena, referring to the official announcement by which the president dissolved parliament. “I have no doubt that the Supreme Court would say that dissolution was wrong.”
But a spokesman for Sirisena, Dharmasri Ekanayake, said he was unaware of any such plans.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...