Wednesday, 16 March 2011

ஜனாதிபதி தேர்தலும் இனப்பிரச்சினை எனும் மாயமான் வேட்டையும் பாகம் 1

எஸ்.எம்.எம்.பஷீர்

இப்போது இலங்கையில் ஜனாதிபதிதேர்தல் சூடுபிடித்துவருகிறது , தான் குடிக்காவிட்டால் கவிழ்துவிடுவோம் என்ற பாணியில் இலங்கை தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் புலிகளின் அனுதாபிகள் அடங்காத்தமிழரின் வாரிசுகள், வறட்டு தமிழ் தேசிய வாதிகள் இரண்டு சிங்களவர்களும் அடித்துக்கொண்டு சாகட்டும் என்று செயற்படுகின்ற வேலையில் , சென்ற ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு முறைமை ஒரு செய்தியை கோடிட்டு காட்டுகிறது. சென்ற தேர்தலில் பதினோரு மாவட்டங்களில் ரணிலும் மிகுதி பதினோரு மாவட்டங்களில் மகிந்தவும் வெற்றிபெற்றார்கள்.சென்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச கம்பஹா, மொனராகல, காலி, அம்பாந்தோட்டை ,மாத்தறை, குருநாகல்,அனுராதபுரம், பொலன்னருவ, கேகாலை, இரத்னபுரி களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதி கூடிய வாக்குளை பெற ஏநைய 11 மாவட்டங்களான; கொழும்பு, கண்டி, மாத்தளை, நுவரேலியா, மட்டக்களப்பு,வன்னி, திகாமடுல்ல , திருகோணமலை, புத்தளம், பதுளை ஆகிய மாவட்டங்களில் ரணில் விக்ரம்சிங்ஹா அதிக வாக்குகளை பெற்றிருந்தார். இன்று பயங்கரவாதிகள் அழிக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிக்கும் தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா எனதை இத்தேர்தல் புலப்படுத்தப்போகிறது, மறு புறத்தில் வழமையான மாவட்ட ஆதரவுத்தளங்கள் அவ்வாறே அமையும் என ஊகிக்கமுடிகிறது. சென்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் - மகிந்தவுக்கிடையில் நிலவிய தீவிர போட்டி புலிகளின் வாக்குப்பகிஸ்கரிப்பினால் மகிந்தாவை ஆட்சியில் அமர்த்தியதாகவும் , அது புலிகள் விட்ட பெரும் பிழை என்றும் அன்று தமிழ் மக்கள் வாக்குகளை பகிஸ்கரிக்காமல் விட்டுருந்தால் இந்தப்போர் நடந்திருக்காது பிரபாகரன் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பார், "தமிழர் பிரச்சனை"தீர்ந்திருக்கும் என்றெல்லாம் பின்னோட்டம் (Flashback) விடுபவர்கள், அன்று ரணில் ஜனாதிபதியாகி இருந்தால்; இதே பொன்சேகா யுத்தம் நடத்தி இருக்கமாட்டார்;,ஒருவேளை புலிகளினால் இலகுவாக கொல்லப்பட்டிருக்கலாம், நாடு பூராவும் புலிகளின் நர மாமிச வேட்டைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும். ஒருவேளை , ரணில் புலிகளின் ( புலி+ தமிழ் மக்கள்=தமிழ் தேசிய கூட்டமைப்பு ) பிரதிநிதிகளான தமிழர் தரப்பு புலிகளின் இடைக்கால தீர்வுத்திட்டத்தை முன்னெடுத்திருக்கும் ; , அதனை அவர் செய்யமுடியாமல் இருப்பதாக கூற அல்லது இழுத்தடிக்க ;, அவரை புலிகள் கொண்டிருக்கலாம். நாடு புலிகளின் பாஷையில் " பற்றியும் எரிந்திருக்கலாம்" ( புலி அழிப்பாளர் தமிழேந்தி கூறியதுபோல் ), மறுபுறம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் புலிகளுடன் மீண்டும் சமரசம் பேச;, "தமிழ் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஓன்று படவேண்டும்" என்று பசீர் சேகு தாவூத் தனது முன்னாள் ஈரோஸ் ஒருதேசிய கருத்தியலை மாற்றி புதிதாக இப்போது இரண்டு தேசியமாக பிரகடனம் செய்ய;, சமாதான ஒப்பந்தம் அமுலிலிருக்க;, முஸ்லிம்கள் கிழக்கில் தொடர்ந்தேர்ச்சியாக புலிகளுக்கு இரையாக்கப்பட;, ஹக்கீம் அவ்வப்போது புலிகளை கண்டிக்க;, வடக்கு முஸ்லிம்கள் மெதுமெதுவாக தமது "பாரம்பரிய" இடத்துக்கு மீள் திரும்பும் அபிலாஷைகளை முற்றாக கைவிட ;, வடக்கு கிழக்கில் வறுமை தலைவிரித்தாட;. ஜனநாயக மீறல்கள் மீண்டும் நாடு முழுவதும் தலைவிரித்தாட மீண்டும் புலிகள் தமது உறுதியானதும் தீர்க்கமானதுமான தனிநாட்டு கோரிக்கைக்கு மீள ;, யுத்தம் தொடர;, மீண்டும் சமாதானம் பேச;, .........நிச்சயமாக இது வெறும் கற்பனை நிகழ்வாக இருந்திருக்காது. சரித்திரமாக எழுதப்பட்டிருக்கும்.


இப்போது எனக்கு தவிர்க்க முடியாமல் புலிகளின் அல்லது புலிகளை தோற்றுவித்த தமிழ் தேசிய சக்திகளின் சூழ்ச்சிக்கும் நயவஞ்சகத்தனத்திற்கும், முஸ்லிம்களை கறிவேப்பிலையாக நடத்தும் செயலுக்கும் பல சம்பவங்கள் ஞாபக்கத்திற்கு வருகின்றன, ஆனால் அவற்றில் புலிகள் எவ்வாறு இந்திய படையை வெளியேற்றி, தமது திட்டங்களை நிறைவேற்ற முயல, எவ்வாறான நம்பிக்கையினை பிரேமதாசவுக்கு அளித்தனர் என்பதே போதுமானதாகும். 30 ம் திகதி ஜூன் 1989 ம ஆண்டு இலங்கை ஜனாதிபதி பிரேமதாச அன்றைய இந்திய பிரதம மந்திரிக்கு எழுதிய கடிதம் உதாரணமாகும். இக்கடிதத்தில் " சம்பந்தப்பட்ட எல்லா இன மக்களோடும் குளுக்களோடும் அறிவுரை கோருதல் மூலமும் சமரச இணக்கத்துக்கு வருவதன் மூலமும் கருத்தொருமைப்பாட்டின் மூலமும் இனப்பிரச்சினையோடு தொடர்பு கொண்ட இதுவரை தீர்க்கப்படாத விடயங்களைத் தீர்ப்பதற்கான சூழல் இப்போது அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருகிறது.. நான் ஏலவே தெரிவித்தவாறு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போர் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளமையை பிரகடனப்படுத்தியுள்ளனர். பேச்சு வார்த்தைகளின் மூலமும், கலந்துரையாடல்களின் மூலமும் எஞ்சியுள்ள பிரச்சனைகளைத தீர்த்துகொள்ளவும் அவர்கள் உறுதி பூண்டுள்ளனர்" . மேலும் எவ்வாறு புலிகள் ஜனநாய வழிக்கு வரப்போவதாக இந்திய அரசுக்கு பிரேமதாசா புலிகளின் வார்த்தைகளை நம்பி தனது பிந்திய 4ந் திகதி ஜூலை மாதம் 1989 ம ஆண்டு அனுப்பிய ரேலாக்ஸ் (Telex) செய்தியில் "..........தமிழீழ விடுதலைப புலிகள் இயக்கத்தினர் இதுவரை தீர்க்கப்படாதுள்ள பிரச்சனைகளை பேச்சு வார்த்தைகளின் மூலமும் தீர்த்துக்கொள்ள திடசங்கற்பம் பூண்டுள்ளனர் என்பதையும் சனநாயக வழிக்கு வர அவர்கள் ஆயத்தமாக இருக்கின்றனர் என்பதையும் வலியுறித்தியுள்ளனர்.”

இச்செய்திகளை கவனமாக வாசித்தால் எவ்வாறு புலிகள் இந்தியப்படைகள் வெளியேறவேண்டும் என்ற பிரேமதாசவின் அரசியல் நிலைப்பாட்டை அவரது தேர்தல் விஞ்ஞாபனம வலியுறுத்த புலிகள் தமது இலக்குகளை எய்தினர், இறுதில் ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிசனை கடித்த கதையாய் பிரேமதாசவையும் கடித்து குதறினர்.


ஒவ்வொரு சமாதான காலங்களின் போதும் சமாதானம் வாழ்வதற்கு முஸ்லிம்களை வடக்கு கிழக்கில் புலிகளுக்கு "பலி" கொடுக்க வேண்டிஇருந்தது. பிரேமாவுடன் யுத்தம் பண்ண ஒரு முஸ்லிம் தையற்காரர் மட்டக்களப்பில் புலிகளுக்கு சாட்டாக அமைந்தார், புலிகள் அவருக்கு (தையற்காரர்) போலீசார் இழைத்த அநீதிக்காக முஸ்லிம்கள் மீது "பரிவு" கொண்டு யுத்தத்தினை தொடக்கி வைத்தனர். (இதனை விவரிக்க இது தொடர்பில் ஆடு நனையுதென்று ஓநாய் அழுதகதை என்றோ, முதலை வடித்த கண்ணீர் என்றோ சொல்லமுடியாது.)

இன்னுமொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் பிரேமதாசாவினை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்சியின் சார்பில் பிரேரித்த லலித் அதுலத் முதலியும் காமினி திஸ்ஸநாயகாவும் விரைவிலே பிரேமதாசாவின் அரசியல் விரோதிகளாகினர் என்பது மற்றுமொரு செய்தி. இவர் 1993 மே 1ஆம திகதில் புலிகளால் கொல்லப்பட்டவுடன், டிங்கிரி பண்டா விஜேதுங்க 1994 ஜனதிபத்தி தேர்தலில் இரண்டு பிரபலங்களின் விதைவைகள் இரண்டு பிரதான கட்சிகளிலும் போட்டிட நேர்ந்தது, ஒருபுறம் ஸ்ரீ லங்கா சுதநதிரக் கட்சி சார்பில் சந்திரிக்கா போட்டியிட , மறுபுறம் போட்டியிட்ட காமினி கட்சிப் பிரச்சார மேடையில் புலிகளின் தற்கொலைதாரி பெண்ணால் கொள்ளப்பட, அந்த இடத்தை நிரப்பி ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அவரது மனைவி சிறிமா திஸ்சனாயாக போட்டியிட்டார். இதில் 62.28% வாக்குகளை சந்திரிகா பெற சிறிமா திஷ்சநாயக 35.91 % வாக்குகளை பெற்றார். அன்றிலிருந்து ஜனாதிபதி ஆட்சி ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியிடமே அடுத்தடுத்து இருந்து வருகிறது. அப்போதும் முப்பது வீதமான வாக்குகள் அளிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குண்டு வெடிப்பில் காயப்பட்ட எஸ்.எல்.எம்.பி (SLMP) கட்சியின் தலைவர் ஓசி அபெய்குனசெகர கூட பின்னர் இறந்து போனார்.தொடரும்...

No comments:

Post a comment

Twitter and Facebook censor New York Post report on Hunter Biden- By Kevin Reed

  Kevin Reed 16 October 2020 Social media censorship prior to the 2020 US presidential elections reached new heights on Wednesday, when both...