எஸ்.எம்.எம்.பஷீர்
"ஷரியா சட்டங்களை காப்பாற்றுவது,முன்னேற்றுவது, கட்சி உறுப்பினர்களையும் மற்றவர்களையும் தங்களின் சொந்த வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் முழு ஷரியா சட்ட நெறிகளையும் பின்பற்ற ஊக்குவிப்பது "
( 5/7/1992 ஆண்டு இயற்றப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சி யாப்பின் உப பிரிவு ((g) ( கட்சியின் நோக்கங்கள் அத்தியாயம்-II)
முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர் தெரிவும் கற்பனை பாத்திரப் புனைவுகளும் அதன் முதல் தேர்தலுடன் தொடங்கியது தொடர் கதையாக போனது. அந்த வகையில்தான் இந்த ௨௦௦0 ஆம் ஆண்டு தேர்தல் நியமனப் பத்திரங்களும் அமைந்தனவா அல்லது உண்மையான நபர்கள் யாருமே இல்லாத பெயர்களுடன் உண்மையான பேர்வழிகளும் அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டார்களா என்ற கேள்வி எழுந்ததன் விளைவே ௨௦௦0 ஆண்டு தேர்தலில் போட்டியிட (கண்டி போகம்பரை சிறையில்) புலிப் பயங்கரவாதியாக சந்தேகிக்கப்பட்ட நபரை வேட்பாளராக எப்படி நியமித்தனர் என்பதை விட அவரின் கையொப்பம் எவ்வாறு சிறைச்சாலையில் பெறப்பட்டது . மறுபுறம் மட்டக்களப்பில் ஹிஸ்புல்லா முதன்மை வேட்பாளராக தேசிய ஐக்கிய முன்னணி ( நு ஆ) என்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் சகோதரிக் கட்சி அல்லது (பிள்ளைக் கட்சியில் ) போட்டியிட்டபோது . ( நீதிமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூலம் போட்டியிடுவது தொடர்பில் வழக்கு நடைபெர்ருக்கொண்டிருந்த படியினால் நு ஆ வில் போட்டியிட்டனர் என என் ஞாபகத்தில் உண்டு ) இலங்கையில் வாக்குரிமை இழந்து மலேசிய பிரஜையாகிப் போன முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் , -அதற்கும் முன்னாள் தமிழரசுக் கட்சியின்-தமிழர் விடுதலைக் கூட்டணியின் -மட்டக்களப்பின் முடிசூடா மன்னன் என ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்த ராஜதுரை கையொப்பமிட்டதை விட எப்படி தேர்தலில் போட்டியிட முடிந்தது. எனவே இந்த நியமனப் பத்திரம் தள்ளுபடி செய்யப்படல் வேண்டும் என்று ஒரு நீதிமன்ற ஆணை கோரும் வழக்கை , மிகத் தாமதமாக டெலோ கட்சியின் உறுப்பினர் நித்தியானந்தன் இந்திரகுமார் என்பவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் ( C.A. NO. 1017/2000.) கொண்டு வந்தார் . அந்த வழக்கில் மட்டக்களப்பு மாவட்ட நு . ஆவின் தலைமை வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் என்ன சொன்னார் என்பதும் ஹிஸ்புல்லாவின் பழைய கதையை எமக்கு ஞாபகமூட்டியது. "முந்திய காலங்களைப்போல் அல்லாது தற்கால நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டம் நியமன தினத்தன்று கட்சியின் செயலாளரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வேட்பாளர்களை சமூகமளித்திருக்க வேண்டும் என்று தேவைப்படுத்தவில்லை . ஆதலால் சட்டத்தில் ஒரு இடைவெளி இருப்பதற்காக முழு வேட்பாளர் நிரலையும் நிராகரிப்பது நீதியற்றது " என்று தான் அந்த நியமனப் பத்திரம் நிராகரிக்கப் பட்டால் அது அடாத செயல் சட்ட இடைவெளி என்றெல்லாம் தான் பெற்ற சட்ட ஆலோசனையின் படி அவர் நீதி மன்றில் கூறினார். மறு புறத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மனுதாரருக்கு ( இந்திரகுமாருக்கு ) அந்த மனுவை மேற்கொள்ளுவதற்கு அல்லது அம்மனுவினை நீதி மன்று கேட்கும் உரிமை இல்லை ஏனெனில் அந்த ஆட்சேபனைகளை கொண்டு வந்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சி ஒழிய மனுதாரர் அல்ல என்று கூறினார். இந்த வழக்கில் இலங்கையின் தேர்தல் சட்ட வழக்குகளில் பிரசித்திபெற்ற ஜனாதிபதி சட்டத்தரணிகள் பலர் ஆஜராகினர். குறிப்பாக எல் சி செனிவிரத்தின , பாயிஸ் முஸ்தபா (இன்றைய அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தந்தை ) ஆர் கே டப்லியு . குணசேகர , ஜயம்பதி விக்ரமநாயக , எஸ். சிறி பாலன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் நிசாம் காரியப்பர் (துணை மேயர் கல்முனை மாநகர சபை - இவரது மேயர் இழுபறியில் தான் இக்கட்டுரை எழுதம் தேவை எழுந்தது , அது பற்றி அடுத்துப் பார்ப்போம்) . ஹிஸ்புல்லாவை செல்வாக்கிழக்க செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிய (நான் முன்னரே குறிப்பீட்ட ) சட்டத்தரணி உமறு லெப்பை நஜீமும் இவ்வழக்கில் துணை சட்டத்தரணியாக ஆஜராகியிருந்தார் கொழும்பு மேன் நீதிமன்ற நீதிபதி ஜே என் தீ சில்வா ( J.A.N. de SILVA, J.) இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினார்.