தீவிர தமிழ்த் தேசியவாதத்தை சியோனிசத்தைவிட பயங்கரமாகப் பார்க்கிறேன்

சட்டத்தரணி எஸ்.எம்.எம். பஸீர்

சட்டத்தரணி எஸ்.எம்.எம். பஸீர் அவர்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளரா கவும் மனித உரிமைச் சட்டத்தரணியாகவும் பணியாற்றி வருபவர்.

முஸ்லிம் களின் மனித உரிமை மீறல்களை, அவர்களது பிரச்சினைகளை சர்வதேச தரத் திற்கு நகர்த்தியதில் சட்டத்தரணி பஸீர் அவர்களுக்கு பெரும் பங்குள்ளது. அந்தப் பணியை அவரது உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும் அவர் செய் தார். இன்றும் அதனை அவர் செய்து வருகிறார். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக துணிந்து குரல் கொடுப்பவர்களில் பஸீர் முக்கியமானவர்.மட்டக்களப்பைச் சேர்ந்த இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது கலைப்பட்டத்தை நிறைவுசெய்தார். பின்னர் கொழும்பு சட்டக் கல்லூரியிலி ருந்து சட்டத்தரணியாக வெளியேறினார். கடந்த 2 தசாப்தங்களாக லண்டனில் சட்டத்தரணியாகப் பணியாற்றுகிறார். அண்மையில் அவர் கொழும்பில் நடை பெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க வும் கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் அளிப் பதற்காகவும் இலங்கை வந்திருந்தார். அவருடன் மீள்பார்வை மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

சந்திப்பு: சிராஜ் மஷ்ஹூர், இன்ஸாப் ஸலாஹுத்தீன்

பஸீர்: முதலில் எனது கட்டுரை யொன்று தொடர்பான ஆதங்கத்தை மீள்பார்வையின் கவனத்திற்கு கொண்டு வரலாம் என நினைக்கிறேன்.

1983 ஜூலை வன்செயலில் தமிழர்களுக்கு நடந்த பிரச்சினைகளை ஒரு பகுதி யாகவும் முஸ்லிம்களுக்கு நடந்த பிரச்சினைகளை இன்னொரு பகுதியாக வும் கொண்டு என்னால் சுமார் 5 மாதங்களுக்கு முன் எழுதப்பட்ட ஒரு கட்டுரை தேனீ மற்றும் ஏனைய இணையத் தளங்களில் பிரசுரமாகியிருந்தது. இரண்டு தரப்புக்களிலும் இனப்படு கொலை நடந்திருக்கின்றது என்பது தான் கட்டுரை யின் அடிப்படை அம்சமாகும்.

அந்தக் கட்டுரையில் ஒருபகுதி எடுக்கப்பட்டு எனது பெயரில் அல்லாமல் மு. பஷீர் என்பவருடைய பெயரில் அது 2010 ஆகஸ்ட் 20 ஆம் திகதி வெளி வந்த மீள்பார்வை இதழில் பிரசுரமா கியிருந்தது. இது தொடர்பாக மின்னஞ்சல் மூலம் உங்களை வினவியிருந்தேன். இருந்தும் எனக்கு எந்தப்பதிலும் வர வில்லை. ஏன் அப்படி நடந்தது என்று உங்களிடம் வினவுகின்றேன்?

குறிப்பு: உண்மையில் இது தவறுதலாகவே நடைபெற்றுள்ளது. குறிப்பாக எஸ்.எம்.எம். பஸீர் என்ற உங்களது பெயர் தவறுதலாக மு. பஷீர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மு. பஷீர் என்ற பெயரில் இன்னொரு எழுத்தாளரும் உள்ளார் என்பதால் இது குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. அத்தோடு இடநெருக் கடி காரணமாகவே அக்கட்டுரை சுருக்கப்பட்டிருக்கிறது. இதனால் அக்கட்டு ரையில் கருத்துச் சிதைவுகள் ஏற்பட்டுள்ளன.

இது மிகத் தெளிவாக எமது தரப்பில் ஏற்பட்ட பிழைதான். தவறை முழுமை யாக ஏற்றுக்கொள்கிறோம். அதனால் உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்க ளுக்கு வருந்துகிறோம். தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதும் மாற் றுக் கருத்துக்களை மதிக்க வேண்டு மென்பதும் எமது ஆசிரிய பீடத்தின் கொள்கைகளாக உள்ளன. இவ்வாறான தவறுகள் ஏற்படாமல் இருக்கும் வகை யில் நாம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம் என்பதை உங்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சட்டத்தரணியாக பட்டம் பெற்று வெளியேறியதன் பின்னரான உங்க ளது மனித உரிமைச் செயற்பாடுகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

சட்டக்கல்லூரியிலிருந்து வெளியேறியதன் பின்னர் சிறிது காலம் தொழில் புரிந்தேன். ஆரம்ப காலங் களில் மனித உரிமைச் சங்கங்களுடனான தொடர்பு காரணமாக மனித உரிமை மீறல்கள் சம்பந்தப்பட்ட தொகுப்புக்களைச் செய் வதிலும் அது தொடர்பான தகவல்களைத் திரட்டுவதிலும் நான் அக்கறை காட்டி வந்தி ருக்கிறேன்.

அந்தக் காலகட்டங்களில் இது வொரு அபாயகரமான பணி என்று சொல்ல லாம். முஸ்லிம்களுக்குள் இப்படிப் பணி செய்பவர்கள் அப்போது இருக்க வில்லை. அந்தக் காலகட்டத்தில் இந்த விடயங்களை உயிர் அச்சுறுத்தல் காரணமாக பகிரங்கமாகச் செய்ய முடியவில்லை.

எனவே, மக்களிடமிருந்து இரகசிய மான முறையிலே தகவல்களைப் பெற்று, சர்வதேச மனித உரிமை ஸ்தாபனங்களை தனிப்பட்ட முறையில் சந்தித்தும் பேசியும் தகவல்களை வழங்கியிருக்கிறேன். அந்தப் பணியின் தொடர்ச்சி இன்றுவரை இருந்து கொண்டிருக்கின்றது.

அது தவிர லண்டனுக்குச் சென்ற பிறகு கடந்த 19 வருடமாக எனது சொந்தச் சட்ட நிறுவனத்தை நிறுவி சட்டத்தரணியாகப் பணியாற்றி வருகிறேன். அங்கும் முஸ்லிம்களின் மனித உரிமை மீறல்களை முடிந்தளவு தொகுப்ப தும் அங்குள்ள சர்வதேச ஸ்தாபனங்களுக்கு அவற்றை வழங்குவதும் அதற்கு ஏதாவது பரிகாரம் காண முடியுமா என்று சிந்திக்க வைத்ததோடு என்னை அரசியல் தளத்திலும் அது மெதுவாக நகர்த்தியது.

அந்த வகையிலே அது தொடர்பான அரசியலையும் செய்ய வேண்டியேற் பட்டது. வெறுமனே ஒரு மனித உரிமைச் சட்டத்தரணியாக மாத்திரம் அல் லாமல் அதற்கு அப்பால் சென்று அங்குள்ள அரசியல் தளத்தில் முஸ்லிம் களுடைய நிலையை உறுதி செய்ய வேண் டிய தேவை இருந்தது.

எனவே பல அரசியல் தளங்களிலும் வேலை செய்ய வேண்டியிருந்தது. அது இலக்கியச் சந்திப்புக்களினூடாகவும் சாத்தியப்பட்டது. இந்தப் பணிகளை நான் ஐரோப்பாவில் அதிகளவு நேரம் செலவிட்டு செய்து வந்தேன் வருகிறேன். அது விடுபட முடியாத ஒரு நோயாக என்னுள்ளே இருக்கிறது. அதைச் செய் வதில்தான் எனக்கு ஆத்ம திருப்தியும் இருக்கிறது.

அப்படி மனித உரிமைச் செயற் பாடுகளில் ஈடுபடும்போது உங்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருந்ததா?

உண்மையில் இந்தப் பணி ஆபத்துக்கள் நிறைந்தவை. உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் சுதந்திரம் முடக்கப்பட்டிருந்தது. லண்டனிலுள்ள பிரதான பொலிஸ் நிலையத்திலே எனக்குப் பாதுகாப்புத் தருமாறு புகார் செய்திருந் தேன். அதன்படி எனது வீட்டு முகவரி மறைக்கப்பட்டது. எனது அலுவலகம் நகரத்திலே இருந்தது. நகரத்தில் தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும் அடிக்கடி பொலிஸார் என்னை அணுகி விசாரித்துக் கொண்டனர்.

நிதர்சனம் பத்திரிகை என்னை ஒரு அல்கையிதா பயங்கரவாதியாக சித்த ரித்துக் காட்டியபோது மேற்படி நிலமை தீவிரமானது. நான் மிகக் கவனமாக வாகனம் செலுத்துவேன். என்னை யாரோ பின்தொடர்வது போல இருக் கும் போது பாதைகளை மாற்றி மாற்றிப் பயணிப்பேன். அது ஒரு சாகசத்திற்காக அல்ல அப்படி ஒரு நிர்ப்பந்தத்திற்கு நான் ஆளானேன்.

ஏனெனில், ஐரோப் பாவிலும் மத்திய கிழக்கிலும் அரசியல் ரீதியான பிரக் ஞையை ஏற்படுத்த வேண்டியிருந்தது. குறிப்பாக ஐரோப் பாவில் செய்த பணி முக்கியமானது. இதனை நான் தற்புகழ்ச்சிக்காகச் சொல்ல வில்லை. தேவை யானதுபோது நான் சமூகத்திற்குப் பயன்பட்டேன். சமூகம் அதனால் பயன் பெற்றது. ஆகவே, நான் சமூகத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

புகலிடத்தில் செயற்படக் கூடியவர்களில் நீங்கள் முஸ்லிம் என்று அடை யாளப்படுத்தக் கூடிய முக்கியமான ஒருவர். அந்த வகையில் புகலிடத்திலும் இலங்கையிலும் உங்களது செயற்பாடு மற்றும் கருத்துக்களின் பிரதிபலிப்பு எப்படியிருந்தது? அந்த அனுபவம் உங்களுக்கு எதனைச் சொல்கின்றது?

என்னைப் பொறுத்தவரை ஐரோப்பாவில்தான் தொடர்ச்சியாக வாழ்ந் திருக்கி றேன். இலங்கைக்கு இடையிடையே வந்துபோகின்ற வாழ்க்கை அனுபவங்கள் தான் உண்டு. ஐரோப்பிய அனுபவங்கள் இரண்டு தசாப்தங்களான வாழ்க்கை யைக் கொண்டது என்பதால் அந்த அனுபவங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் கருதுகிறேன்.

ஆரம்பத்தில் அங்கு போய் மனித உரிமைச் செயற்பாடுகள் சார்ந்த விடயங்க ளையே செய்யத் தொடங்கி னேன். அங்கு பல மனித உரிமை ஸ்தாபானங் கள் இலங்கைக்கு எதிரான விடயங்களில் இராணுவப் படுகொலைகளையும் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளையும் முக்கியப் படுத்தினவே தவிர, முஸ்லிம்களது விடையங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

அதில் வேலை செய்த தமிழர்களுக்கும் தமிழ் ஸ்தாபனங்களுக்கும் வேறு நிகழ்ச்சி நிரல்கள் இருந்தன. எனவே, முஸ்லிம்களையும் அவர்களோடு சேர்த்துக் கொள்ள, அதாவது முஸ்லிம்களையும் தமிழர்களாக -தமிழ் பேசும் மக்களாக - அடையாளப் படுத்தி, முஸ்லிம்களது அடையாளத் தைப் பொது மைப்படுத்தும் தன்மை காணப்பட்டது. நான் இதில் எப்போதும் முரண்பட்டுக் கொண்டே வந்தேன்.

Sri Lanka Muslim Youth Organization என்றொரு அமைப்பைத் தொடங்கினோம். அல் பஜ்ர் என்ற பத்தி ரிகையை ஆரம்பித்தோம். அதேநேரம் இலங்கை சம்பந்தமான முஸ்லிம் களின் பிரச்சினைகளை அங்குள்ள முஸ்லிம்களுக்கு மத்தியிலும் மாற்றுக் கருத்தாளர்களுக்கு மத்தியிலும் பேச முடிந்தது. ஆனால், புலிகளுக்கு மத்தி யில் இதனைச் செய்ய முடியவில்லை.

ஆரம்ப காலத்தில் நிறையப் பேர் என்னுடன் வந்தார்கள். ஆனால், தொடர்ச் சியாக இயங்கவில்லை. கூட்டங்களுக்கு வருவார்களே தவிர, பணிகளில் பங்கெடுப்பது மிகவும் குறைவாக இருந்தது. ஆகவே முழுமையான பணிகள் என்னுடைய தலையில் விழுந்தன. ஒத்துழைப்புக் குறைந்தமையால் பத்திரி கையை நடத்த முடியவில்லை. அதன் பிறகு இன்னொரு குழுவுடன் Muslim Voice என்றொரு பத்திரிகையை நடத்தினோம். அந்தப் பத்திரிகை மூன்று இதழ் கள் அளவில் வந்தன. இது தவிர இஸ்லாமிய நிகழ்ச்சிகளை வானொலியில் நடாத்தினோம்.

மேலும், புகலிடத்தில் தேசிய வாதத்தை நான் இரண்டாகப்பார்க்கிறேன். ஒன்று புலித் தேசியவாதம். மற்றது தமிழ்த் தேசியவாதம். புலித் தேசியவாதத்தில் எந்த விட்டுக்கொடுப்பும் இருக்காது. ஆனால் தமிழ்த் தேசிய வாதத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுப்பு இருக்கும் (விட்டுக் கொடுக்கலாம்.) ஏனெனில், ஒரு சில ஜனநாயக சக்திகள் அவர்களுக்குள் இருந்தன.

ஆனால் இரண்டு தரப்பும் முஸ்லிம்களுக்கு ஒரு வெளிப்படையான தளத் தைத் தரவில்லை. ஆனால், அங்குள்ள மேற்கத்தேய ஜனநாயக சூழல் எங்க ளுக்கும் கதைப்பதற்கான சந்தர்ப்பத்தைத் தந்தது. எனவே, தேசிய வாதம் ஒரு தந்திரத்தைக் கையாண்டது. முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை நிகழ்ச் சியின் கடையில் வைத்துக் கொண்டார்கள். கொஞ்ச நேரம் பேசும் போது நேரம் போதாது நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் என் பார்கள். இதை மிகவும் தந்திரமாக, அழகாகச் செய்தார்கள்.

அதேபோல இலக்கியச் சந்திப் புக்கள் அங்கு நடைபெறும். நிறைய மாற்றுக் கருத்தாளர்கள் அங்கு வரு வார்கள். இவர்கள் வெறுமனே இலக் கியத்திற்காக அங்கு வரவில்லை. இலக்கியத்தினூடாக அரசியலைக் கதைத்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் தரப்பிலிருந்து நிரம்பப் பேர் இலங்கையிலிருந்தும் வந்து போனார்கள். தமிழ் மக்களின் அன்பு, கரிசனை, மாற்றுக் கருத்தாளர்க ளின் அக்கறை காரணமாக சிலநேரம் அவர்கள் தங்களையே மறந்து விடுவார்கள். அழுத்தம் திருத்தமாக விடயங்களைச் சொல்லத் தவறிவிடுவார் கள்.

என்னைப் பொறுத்தவரை முஸ்லிம்களின் விவகாரங்களை நான் காரசார மாகத்தான் கதைத்தேன். அதில் விட்டுக் கொடுப்பையும் செய்யவில்லை. அது ஒரு பிரக்ஞையை உண்டுபண்ணியது. கற்பனை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய வாதத்தையும் புலிகளையும் யாழ்ப்பாண மைய வாதத்தையும் நான் எதிர்த்த போது முற்போக்கானவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் என்னுடன் ஐக்கியமாக வந்தார்கள். முஸ்லிம்கள் பற்றிய காத்திரமான ஒரு பார்வையை என் மூலம் பெற்றுக் கொண்டதாக அவர்கள் சொன்னார்கள்.

இலங்கை முஸ்லிம்களது விவ காரங்களை பிரித்தானியாவுக்கு அப்பாலும் எடுத்துச் செல்ல முடிந்ததா?

தமிழர்களுக்குள் உள்ள ஜனநாய கத்திற்கான சக்திகள் என்று அடையாளப் படுத்தப்பட்ட சிலர், புத்திஜீவிகள், மாற்றுக் கருத்தாளர்கள் சேர்ந்து கனடாவில் ஓர் அமர்வைச் செய்தோம். அதன் பின் இலங்கை ஜனநாயக முன்னணி என்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் பிறகு லண்டனில் கருத்தரங் குகள் வைத்தோம். முஸ்லிம்களும் தமிழர்களும் சேர்ந்து வேலை செய்யக் கூடிய தளங்களை அடையாளம் காணுவது தொடர்பான சில கூட்டங்கள் வைத்தோம்.

நியூயோர்க் York பல்கலைக்கழகத்தில் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக உரையாற்றுவதற்கு சிறப்பதிதியாக ஒருமுறை அழைக்கப்பட்டேன். அந்த உரையின் பிறகுதான் இலங்கை பிரச்சினை மூன்று பரிமாணங்களை உடை யது என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். மேலும், ஜேர்மன் வானொலி யிலும் ஒரு நிகழ்ச்சி செய் தேன். பிரான்ஸிலும் நிகழ்ச்சிகள் செய்த துண்டு. சமாதானத்திற்குப் பின் நோர்வேயிலும் இது தொடர்பாக ஓர் உரை நிகழ்த் தினேன்.

தற்போது போருக்குப் பிந்திய இலங்கையில் முஸ்லிம்களுக்கு என்ன பிரச் சினை இருக்கிறது. அவற்றைத் தீர்ப்பதற்கு என்ன மூல உபாயங்களை வகுக்க வேண்டும். எமது பிரச்சினைகளை இணக்க ரீதியாகத் தீர்ப்பதா அல்லது முரண்பட்டுத் தீர்ப்பதா என்பன பற்றிச் சிந்தித்து வருகிறோம்.

முஸ்லிம்களது பிரச்சினைகள் சர்வதேச மட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்று உள்நாட்டிலே நிறைய விவாதிக்கப்பட்டுள்ளது, பேசப்பட்டுள்ளது. ஆனால், பேசப்பட்ட அளவுக்கு அது எல்லைகளைத் தாண்டவில்லை. அந்த வகையில் நீங்கள் அறிந்த மட்டில் இந்தத் தளத்தில் யார் இயங்கிக் கொண் டிருக்கிறார்கள்?

செயற்பாட்டுத் தளத்தைப் பொறுத்த வரையில் யாரையும் காண முடிய வில்லை. எழுத்தைப் பொறுத்த வரை இம்தியாஸைச் சொல்லலாம். ஆனால், அவர் புலிகளின் ஊதுகுழ லாகவே மாறினார் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்த் தேசியவாதிகளுடன் இருக்கும் தொடர்பின் காரணமாக அவர்களு டைய அரசியலையே அவரும் எடுத்து விட்டார். அதை முஸ்லிம்களுக்காக கதைப்பதாக நினைத்துக் கொண்டார். ஆனால், அவர் கதைப்பது அவர்களுக் காகவே இருந்தது.

வேறு புலம் பெயர்ந்தவர்களில் காத்திரமாக எழுதியவர்களைச் சொல்ல முடி யாது. ஆனால், புலம் பெயர்ந்தவர்களுக்குள் வந்து வேலை செய்தவர் என்ற வகையில் கலாநிதி ஹஸ்புல்லாஹ்வைச் சொல்லலாம். வடமாகாண முஸ் லிம்களது பிரச்சினையை அதிக தளங்களுக்குக் கொண்டு வந்தவராக அவரை அடையாளப் படுத்தலாம்.

புகலிடத்தில் செயற்படுகின்ற முஸ்லிம் அமைப்புகள் பற்றி...

Sri Lanka Islamic Forum UK அங்கு செயற்படுகின்றது. அவர்கள் சமூகப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு வேலை செய்கிறார்கள். அதில் சில குறைபாடுகள் இருப்பதாக நான் உணர்கிறேன். அவர்கள் அரசியல் ரீதியாகச் செயற்பட நினைக்கிறார்கள். அரசியலை ஜமாஅத் ரீதியாக செய்யப் பார்க்கிறார்கள். எனவே, அதில் ஸ்தாபன ரீதியான முக்கியத்துவமே அதிகமாக இருக்கும். அத் தோடு அவர்கள் தமிழர்களோடு சேர்ந்துதான் அதனைச் செய்யப் போகிறார் கள். ஆனால், தமிழ்த் தேசியவாத அரசியலை நாம் மேலோட்டமாக புரிந்து கொள்ள முடியாது. அதற்கு நீண்ட காலம் எடுக்கும். இதனை சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் அவர்களது அரசியலுக்குள் நாம் அகப்பட்டு விடுவோம். இதனை அங்குள்ள அமைப்புகள் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.

ஏனெனில், நான் ஏற்கனவே சொன்னது போல அவர்களுக்குள் (தமிழர் ஜன நாயக சக்திகளுக்குள்) சில மறைமுக நிகழ்ச்சிநிரல் (Agenda) இருக்கின்றது. அவர்களுக்கு அரசிய லில் நிறையவே அனுபவம் இருக் கின்றது. எனவே, இந்த இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அவர்களுக்குத் தேவையான இடத்திற்கு எங்களைக் கொண்டு வந்து வைத்து விடுவார்கள். தமிழ் முஸ்லிம் உடன்பாடு என்கின்ற போது எதில், எந்த அடிப்படையில் உடன்பாடு என்ற அரசியல் தெளிவும் உடன்பாடுகளும் அவசியம் இருக்க வேண்டும். இல்லாதபோது ஆரோக்கியமாக இயங்க முடியாமல் போய் விடும்.

Sri Lanka Muslim Information Centre – UK பற்றிக் கூறுங்கள்.

இது முஸ்லிம்களது பிரச்சினை களை வெளிப்படுத்துவதற்காக உருவாக்கப் பட்டது. ஆரம்பத்தில் இது ஒரு தனிமனித ஸ்தாபனமாகவே உருவாக்கப்பட் டது.

ஏன் இதனைச் செய்ய வேண்டி வந்ததென்றால் அங்கு Tamil Information Centre என்ற ஒரு ஸ்தாபனம் இருந்தது. அது தமிழ்த் தேசிய வாதத்தை, புலிகளுக்கான ஆதரவை மறைமுகமாகச் செய்த சட்டபூர்வமான நிறுவனம். எனவே, நாங்கள் முஸ்லிம் தகவல் நிறுவனம் என்று பெயர் வைத்தோம். ஏனெனில், அப் போதுதான் அதே தளத்தில் சம அந்தஸ்தை எமக்கும் பெற முடியுமாக இருக்கும். அந்தக் கருத்தியல் எமக்குச் சாத்தியமாகியது.

எனவே, இலங்கை முஸ்லிம்கள் பற்றிக் கதைக்கும்போது SLMIC தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. மனித உரிமை சம்பந்தமான இந்த அமைப்பினூ டாக பிரித்தானிய அமைச்சர்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. நிறைய அமைச்சர்களைச் சந்தித்தேன். இதன் மூலம் SLMIC அவர்களுக்குப் பரிச்சயமானது. கூட்டங்களுக்கு எங்களையும் அழைக்கலானார்கள். அரசியல் தளத்தில் ஒரு பலத்தை நாம் உண்டாக்கினோம். மேலும், SLMIC இணைய தளத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைப் பட்டிய லிட்டு வந்தோம். கட்டுரைகளைப் பிரசுரித்தோம்.

பின்னர் எமது செயற்பாடுகள் குறைந்தன. Oxford நிகழ்வுக்குப் பிறகு மீண்டும் நாங்கள் தொடங்க வேண் டிய தேவை ஏற்பட்டது. தேசியவா தம் தலைதூக்கும் அளவுக்கு எதிராக நாம் போராட வேண்டும் என நான் நினைக் கிறேன். ஏனெனில், தீவிர தேசியவாதம் முஸ்லிம்களை மிக மோசமான அடக்கு முறைக்கு உள் ளாக்குகின்றது. சியோனிசத்தை விட தீவிர தமிழ்த் தேசியவாதத்தை நான் பயங்கரமாகக் பார்க்கிறேன். ஆதிக்கமாகப் பார்க்கி றேன். சியோனிஸத்திட மிருக்கின்ற ஜனநாயக உரிமை கூட இவர்களிடத் தில் இல்லை. எனவே நாம் விழிப் பாகவே இருக்க வேண்டும்.

இலங்கையிலுள்ள MIC நிறுவனத்திற்கும் SLMIC க்கு தொடர்பு இருந்ததா?

ஆம், –MIC நிறுவனம் எமக்கு உதவியாக இருந்தது. அவர்களிடமிருந்தும் சில தகவல்களை நாம் பெற்றுக்கொண்டோம்.

நன்றி : மீள்பார்வை (இலங்கை)24/01/2011
அமெரிக்காவில் நியூயோர்கிலுள்ள கோர்நெல் பல்கலைகழகமே (Cornell University) தவறுதலாக யோர்க் பல்கலைக்கழகம் என பதிவிலிடப்பட்டுள்ளது.


 • Mhm Naufel likes this.
 • Bazeer Seyed Thanks
  6 hrs · Like
 • Mhm Naufel நான் நினைக்கின்றேன் நீங்கள் ஆணைக்குழுவிற்கு முன் சாட்சிமளிக்கும் போது இந்தக் கருத்தினை ஆணித்தரமாக சொல்லியிருந்தீர்கள்
  5 hrs · Like
 • Bazeer Seyed ஆம் , இந்த விடயத்தில் அஸ்ரப் தமிழ் ஈழம் கோரி தோற்கடிக்கப்பட்டார் என்றும் கூறி இருந்தேன்
  5 hrs · Like
 • Bazeer Seyed பட்டபின்பு ஞானியாகவே அஸ்ரப் பின்னர் செயற்பட்டார். அப்பொழுது அஸ்ரபை முஸ்லிம்கள் ஆதரிந்திருந்தால் ????? சற்று கற்பனை பண்ணிப் பாருங்கள் , அந்த வழிகாட்டல் பற்றி யாரும் விமர்சிக்கத் தயாரில்லை
  5 hrs · Edited · Like
 • Mhm Naufel நிச்சயமாக, உங்களுடைய அந்த சாட்சியத்தினை முழுமையாக வாசித்து திருப்தியும், சந்தோசமும் அடைந்தவர்களில் நானும் ஒருத்தனாக இருக்க வேண்டுமென நினைக்கின்றேன்
  5 hrs · Like
 • Bazeer Seyed மிக்க நன்றிகள் . ஆயிரம் கருத்துக்கள் மலர் வேண்டும் , அவற்றில் நல்லவை நிலவ வேண்டும்
  5 hrs · Like · 1

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...