
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு ஒக்ரோபர் 16ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. இதில், தோழர் ஷிச்சின்பிங் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டியின் சார்பில் அறிக்கை வழங்கினார்.
அவர் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் கட்சி மற்றும் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 3 சாதனைகள் பெறப்பட்டுள்ளன. முதலில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 100ஆவது ஆண்டு நிறைவை வரவேற்றது. இரண்டு, சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம் புதிய யுகத்தில் நுழைந்தது. மூன்று, வறுமை ஒழிப்பு, குறிப்பிட்ட வசதியுடைய சமூகத்தின் உருவாக்கம் ஆகிய கடமைகளை நிறைவேற்றி, முதல் நூற்றாண்டு குறிக்கோளை நனவாக்கியது. இந்த சாதனைகள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மக்கள் ஒற்றுமையுடன் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி மட்டுமல்லாமல், உலகத்துக்கும் செல்வாக்கு மிக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியும் ஆகும்.
கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு, உலக மொத்த பங்கில் 18.5 விழுக்காடு வகிக்கிறது;7.2 விழுக்காட்டு புள்ளிகள் அதிகரிப்புடன், உலகின் 2ஆவது இடம் பிடித்துள்ளது. 140க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா மாறியுள்ளது. இவற்றுடனான மொத்த வர்த்தக மதிப்பு, உலகின் முதல் இடம் பிடித்தது. அந்நிய முதலீட்டை ஈர்ப்பது, வெளிநாடுகளில் முதலீடு செய்வது ஆகியவற்றிலும் சீனா முன்னணியில் உள்ளது. மேலும் பெருமளவில் விரிவான ஆழமான முறையில் வெளிநாட்டுத் திறப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில், தூய நீரும் பசுமை மலையும் செல்வம் என்ற கருத்தில் சீனா ஊன்றி நின்று, சுற்றுச்சூழல் நாகரிக அமைப்பு முறையின் கட்டுமானத்தை மேலும் முழுமைபடுத்தியுள்ளது. இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரலாறு காணாத அளவில் பன்முகங்களிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டு நிர்வாகத்தை சீனா ஆழமாக முன்னேற்றி, காற்று, நீர், நிலம் ஆகியவற்றின் தரத்தைத் தொடர்ந்து பேணிக்காத்து வருகிறது.