ஜனாதிபதி தேர்தலும் இனப்பிரச்சினை எனும் மாயமான் வேட்டையும் -பாகம் 2

  ww.lankamuslim.lk
  
                              எஸ்.எம்.எம்.பஷீர்

புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினர் கே. வே பாலகுமாரன் புலிகளின் குரல் வானொலியில் மார்ச் மாதம் 2004 ம் ஆண்டு நிகழ்ந்த அரசியல் அரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது ஜே வீ பீ யின் எதிர்ப்புத்  தன்மையை இல்லாதிருக்கச்  செய்ய ஜே வி. பி யை தனித்து விட்டு ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஜே வி. பியின் அரசியலுக்கு எதிராக செயற்படுதல் என்பதுதான் அந்த உத்தி. ஜே. வி. பி யின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக , இந்தியாவை வெளியேற்ற விடுதலைப் புலிகளுடன் பிரேமதாசா உடன்பாட்டுக்கு வந்தாரோ அதைப்போல மகிந்தர் ( பாலகுமாரன் மகிந்தவை எப்போதும் "செல்லமாக" மகிந்தர் என்று தான் குறிப்பிடுவார்!! ) செயற்படுகிறார் வென்று குறிப்பிட்டார் .



மகிந்தவின் தேர்தல் உத்திகளை பிரேமதாசாவின் தேர்தல் உத்திகளுக்கு ஒப்பானது என்று வேறு புலிகள் ஒப்பீடு செய்திருந்தார்கள்.

ஓசி அபே குணசேகர சந்திரிகாவின் கணவர் விஜேய குமாரணதுங்க ஆகியோர் எஸ்.எல்.எம்.பி கட்சியினை உருவாக்கியபோது சந்சிரிகா அக்கட்சிக்கு 1885-1990 வரை தலைமை தாங்கினார்.

பின்னர் ஓசி அபே குணசேகர 1994 ஜனாதிபதிதேர்தலில் காமினி திசனாயாகவை ஆதரித்தார், பின்னர் எஸ்.எல்.எம்.பி கட்சி (SLMP) 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை ஆதரித்தது. பொதுவாக முன்னர் குறிப்பிட்டதுபோல் அரசியலில் இல்லாத ஓன்று சுரணை ஏனெனில் அரசியலில் நிகழும் திடீர் திருப்பங்கள் அரசியலில் நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ இல்லை என்பதற்கு அப்பால் உண்மையும் நேர்மையும் மிகவும் அரிதாகவே அரசியலில் காணப்படும் என்பதையும் சுட்டிக்காட்டி நிற்கிறது.

 இன்னொருபுறம் மக்களும் அடிக்கடி மாறி மாறி கதை பேசும் கனவான்களையும் மறந்துவிடுவதைத்தான் விரும்புகிறார்கள் . முன்னாள் ஜனாதிபதி டிங்கிரி பண்டா விஜேதுங்க "சிறுபான்மை இனங்களை" குறித்து கூறிய கருத்துக்கள் அன்று சகல சிறுபான்மை, இனக்கட்சிகளையும் ஆத்திரமூட்டியது, சென்ற வருடம் சரத் பொன்சேகா கூறியது போல்தான் விஜேதுங்காவும் தான் தற்காலிகமாக ஜனாதிபதி கதிரையில் அமர்ந்த போதும் கூறினார். ஆனால் விஜேயதுங்க 2008 ம் ஆண்டு செப்டம்பரில் இறக்கும் வரை அவருக்கு நல்ல பெயர் இருக்கவில்லை , அவரை நினைத்தாலே இன்றுவரை பலருக்கு ஞாபகம் வருவது அவரின் சிறுபான்மை இனங்கள் பற்றிய கருத்துக்கள்தான். அதனால்தான் அன்று மலையக மக்கள் கூட ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக சந்திரிகாவிற்கு ஆதரவளிப்பார்கள், என்று அரசியல் அவதானிகள் எதிர்வு கூறினார்கள், அவ்வாறே நிகழ்ந்தது. காமினி திஸ்ஸனாயக மீது புலிகள் நடத்திய தாக்குதலில் சுமார் ஐம்பதுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டபோதும் , மல்லி மாராச்சி போன்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஜாம்பவான்கள் கொல்லப்பட்டபோதும் மக்களின் ஆதரவு அன்று சந்திரிக்காவுக்கு அபரிதமாகவே  இருந்தது.

யாழ் நூல் நிலையத்தை எரித்ததற்காகவென்றும் இந்தோ- லங்கா ஒப்பந்தத்தை உருவாக்கிய சிற்பி என்ற வகையிலும் காமினி மீது ஆத்திரமுற்றிருந்த புலிகள் இதனை செய்தார்கள் என்பதே அன்று நிலவிய பலதரப்பட்ட ஆய்வாளர்களின் இந்திய உளவுப்ப்பிரிவின் உட்பட மேலோங்கிய கருத்தாகும். புலிகளும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. சந்திரிகா குமாரணதுங்க அரசியல் தீர்வு குறித்து ஆரோக்கியமான முயற்சிகளை மேற்கொள்கையில் அதே காலகட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய தலைவர் ரணில் விக்க்ரமசிங்ஹா ஒற்றையாட்சியில் மாற்றம் ஏற்படுவதை எதிர்ப்பதாக கருத்து வெளியிட்டவர், அவரது கட்சியின் அன்றைய பொருளாளர் கொழும்பு மேயர். கே. கணேசலிங்கம் ஒற்றையாட்சி தீர்வாகாது என்று பகிரங்கமாக பிரகடனம் பண்ணி ரணிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அதேவேளை பின்னர் சந்திரிக்காவின் அரசியல் யாப்பு திருத்த மசோதா இனப்பிரச்சனை தீர்வாக முன்வைக்க ரணில் அதனை தீவிரமாக எதிர்த்தவர் என்பதும் தெரிந்ததே. சென்ற தேர்தலில் ஹக்கீம் முஸ்லிம்களுக்கு சுயாட்சி தருவதாக ரணில் உத்தரவாதமளித்துள்ளார் என்று ஒப்பந்தம் பண்ணியே ரணிலை ஆதரித்ததாக பறை சாற்றினார், இம்முறை அது பற்றி மூச்சே இல்லை இப்போது கூட்டாட்சி ஒழிப்பு ஒன்றே குறிகோள் என்று தமிழர்களுக்கு வழக்கம்போல் அரசியல் பாடம் நடத்த ஹக்கீம்  தான் இருக்கிறர் என்பதுபோல் வேறு பகிரங்க இலவச ஆலோசனைகளும் பொது மேடைகளிலே தாராளமாக வழங்கி வருகிறார்.
.

சென்ற முறை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ரணில் விக்ரமசிங்ஹா "மஹிந்த ராஜபக்ச வட, கிழக்குடன் சம்பந்தமற்ற ஜனாதிபதிதேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், இது அபாயமானது" என்று கருத்துரைத்தார். ஆம் இது புலிகளுக்கு (வடக்கு- கிழக்கில் ஆபத்தாகத்தான் முடிந்தது. புலிகளின் கட்டளைப்படி தேர்தலுக்கு முன்பு ஓமந்தை சோதனை சாவடிக்கு முன்பாக நூற்றுக்கணக்கான வன்னி தமிழ் மக்கள் கூடி நின்று மஹிந்த ரணில் ஆகியோரின் படங்களையும் வாக்காளர் அட்டைகளையும் தீயிட்டு கொளுத்தியதுடன் , அங்கு பிரசன்னமாயிருந்த சர்வதேச கண்கானிப்பாளர்களிடம் " காலங்காலமாக தம்மை ஏமாற்றிய சிங்கள த்தலைமைகளுக்கு இதுவே தக்க பதில் " என்று தெரிவித்தனர். ஆனால் சிங்களவரே ஜனாதிபதியாக வரமுடியும்; அவ்வாறே அன்றும் முடிந்தது.

ஆனால் இம்முறை கேட்கும் தமிழருக்கு வாக்களித்தால் தமிழர்கள் தமது நம்பிக்கையை சிங்களத் தலைவர்கள் மீது கொள்ளவில்லை என்பதை நிரூபிக்க இன்னொருவிதத்தில் புலி அன்று செய்ததை வேறு விதமாக செய்ய தமிழ் மக்களின் சார்பாக சிவாஜிலிங்கம் போட்டியிடுகிறார் . ஆனால் இறுதியாக வந்திருக்கும் சம்பந்தனின் செய்தி ஆச்சரியமானதல்ல , அவ்வாறில்லாமல் அவர் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்தால்தான் ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆனால் புலிகளின் விசுவாசிகள் இப்போது சிங்களத்தலைமையை -ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரை,- ஜே . வி. பியை முன்னிலைப்படுத்தும் வேட்பாளரை - ஆதரிக்க முன்வந்திருக்கின்றனர்.இனாவாதிகள் என்று மூச்சுக்கு மூச்சு முஸ்லிம் காங்கிரசும் கூட்டமைப்பினரும் குற்றம் சாட்டிய ஜே.வி.பி தான் இன்று கொள்கையளவில் துருவ வேறுபாடாக திகழும் ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் தயாரித்துக்கொண்டிருக்கிரார்கள். மா ஒ சொன்ன பல கருத்துக்கள் இப்போது அவர்களை பொறுத்தவரை புதிய வியாக்கியானங்களை வரித்துக்கொள்ள வேண்டி இருக்கும்.

புலிகளின் "அஸ்தமனத்தின்" பின்னர் இப்பொது மறுபுறத்தில் சிங்களத் தலைவரை வெளிப்படையாக ஆதரிக்கும் ஜனநாயக இடைவெளியாவது (Space) ஏற்பட்டிருக்கிறது. அதுவே இன்றைய சூழலில் பெரிய வெற்றிதான். வெற்றி பெறுபவர்கள் ஜனநாயகவாதிகளாக இருப்பார்களா தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ராணுவ ஜெனரல்கள் சிறந்த மக்கள் ஆட்சியாளர்களாக இருந்ததில்லை என்பது சரித்திரம் முழுவதும் விரவிக்கிடக்கும் செய்தி.



இந்த ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் இன்னுமொரு ஞாபகமும் விரும்பாமலே வருகிறது. ரணிலும் சந்திரிக்காவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது  லண்டனில் நடந்த மாவீரர் நிகழ்வுவில் பிரபாகரன் " தேசத்தின் காதுகள்" என்று கவுரவித்த ;, ரவூப் ஹக்கீம் " முஸ்லிம்களின் காதுகள்" விதந்துரைத்த " புலிகளின் தத்துவஞானி அன்டன் பாலசிங்கம் அன்றைய சூழலில் நடைபெறவிருந்த ஜனாதிபதி தேர்தல் பற்றி  பேசுகையில் " எங்களுக்கு இந்த தேர்தலில் எல்லாம் எந்த ஒரு நிலைப்பாடும் இல்லை. சந்திரிக்காவும் ஒன்றுதான் யு . என். பி ரணிலும் ஒன்றுதான். ஆனால் இந்த அம்மா வந்தால் கொடூரம்தான். அவர் காலத்தில் இரத்தம் தோய்ந்த இருண்ட வாழ்வுதான்.. யுத்தம் -பசி-பட்டினி.. இது போன்ற நிலை என்றுமே தமிழர்களுக்கு வந்ததில்லை " என்று கூறிய சூழ்நிலை இன்று வேறுபட்டிருக்கலாம்.  ஆனால் புலிகளின் சிந்தனையாளர்கள் இன்னும் இருக்கிறார்கள்; அவர்கள் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அதன் மூலம் நுழைவதற்கு ஊசிக்  காது ( ஆங்கிலத்தில் ஊசிக் கண் என்று சொல்வார்கள் ) கிடைக்காதா என்று இந்த ஒட்டகங்கள் காத்திருக்கிறார்கள்.

ஆனால் இதுவரை சீரியஸ் ஆக வாசித்தோருக்கு ஒரு நகைச்சுவையுடன்   " தத்துவ வித்தகர்" (நன்றி : மூலம் ஹக்கீம்  ) அன்டன் பாலசிங்கம் இலண்டனில்  நடந்த மாவீரர் தின  நிகழ்சியொன்றிலே  கரகோசத்துக்கு மத்தியில் அவருக்கும் பிரபாகரனுக்கும் நடந்த தொலைபேசி உரையாடல் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டார் . 

பிரபாகரனுக்கும் பாலசிங்கத்துக்குமிடையில்    நடந்த அந்த "நகைசுவையான " ஆனால் விவஷ்தையற்ற உரையாடலை பார்ப்போம். .


"என்னடாப்பா பிரபாகரன் ரணில் ஜனாதிபதியாக வந்தால் சந்திரிகாவைபிடித்து உன்னிடம் கொடுக்கப்போவதாக சொல்கிறாரே "    


"பாலா அன்ன -என்னால அவவ வச்சிருக்க ஏலாது. வேணுமெண்டால் நீங்கள் வச்சிருங்கோ " "

" எனக்கு சாடையாக விருப்பந்தான் தம்பி , ஆனால் இஞ்ச ஆன்ரி (ஆன்டி) செருப்பால அடிப்பா என்றுதான் பயமாக இருக்கு."

இனிமேல் யுத்தம் இல்லை ;' பயங்கரவாத அச்சமில்லை என்றாலும் தமிழ் ஊடக அறிவு சீவிகள் இப்படியான நகைச்சுவைகளை சொல்வதற்கு புலித் தத்துவஞானிகளும் இல்லை என்ற கவலையில் இருக்கிறார்கள்.!


January 2010

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...