“மறப்போம்! மன்னிப்போம்!! “
எஸ்.எம்.எம்.பஷீர்

எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு, அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை   ( ஒஸ்கார் வைல்ட் )
“Always forgive your enemies; nothing annoys them so much.” (  Oscar Wilde)


"மறப்போம் மன்னிப்போம்", எனினும் தமிழ் சொற்றொடர் பயன்பாட்டை அரசியலில் அறிமுகம் செய்த செய்தியை விடவும் , அதன் ஆங்கிலப் பிரயோகத்தை (Forget and Forgive) விடவும் மனித வரலாறு நெடுகிலும் மறக்கும் மன்னிக்கும் செயலே  வரலாறாகி நிற்கிறது. அந்த நிகழ்வுகளில் ஒன்றாக தன்னோடு உஹத் எனப்படும் யுத்தத்தில் போரிட்டு மடிந்த தனது  சிறிய தந்தை கொல்லப்பட்ட பொழுது அவரின் நெஞ்சைப் பிளந்து ஈரலைக் கையிலெடுத்து சப்பித் துப்பிய பெண்மணியான ஹிந்தா உட்பட தமது எதிரிகளான யுத்தக் கைதிகளை பின்னர் மக்காவை வெற்றி கொண்ட பொழுது , அவர்கள் தமக்கும் தம்மைச் சார்ந்தோருக்கும் இழைத்த அநீதிகளை மறந்து மன்னித்தவர் முஹம்மது நபி (ஸல்).
உலகின் மிகப் பெரும் பழமை வாய்ந்த ரோமானிய சக்கரவர்த்தி மகா அலெக்சாண்டர் தொடக்கம் அண்மைக்கால தென்  ஆப்ரிக்கா நெல்சன் மண்டேலா வரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த "மன்னிப்போம் மறப்போம்"  நிகழ்வுகள் மனதை நெருடச்செய்வன.   

Channel Four's Circus Tour - 1
Published On:Wednesday, July 6, 2011
Posted by Sri Lanka Guardian


In the course of this long talk show on Sri Lanka, only one side of the story which comfortably glossed over the unrelenting terrorism of the LTTE and its destructive path of “national Struggle” was portrayed.
by S.M.M.Bazeer 

தேசிய வீரன் முஹம்மது பாராவும் தேடப்படும் பயங்கரவாத சந்தேக நபர் முஹம்மது அகமதும்!
எஸ்.எம்.எம். பஷீர்

பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
     பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்
                                                                                           உலகநாதர்

அண்மையில் பிரித்தானியாவில் முஸ்லிம் பெண்கள் அணியும் நிக்காப் ( கண்களைத்  தவிர்த்து  முகத்தின் பெரும் பாகம் உட்பட உடல் முழுவதையும் மறைக்கும் உடை ) அணிவது தொடர்பிலும் புர்க்கா எனப்படும் ( கண்களையும் சேர்த்து மறைக்கும் உடை )  அணிவது தொடர்பிலும்  சர்ச்சைகள்  ஐரோப்பாவின் சில நாடுகளில் புர்க்கா தடை செய்யப்பட்டதை  தொடர்ந்து சூடு பிடித்தது. சில கல்லூரிகளில் புர்க்கா அணிய  தடை விதிக்கப்பட்டது. நீதி மன்றுகள் கூட வழக்குகளில் சாட்சி வழங்கும் அல்லது , விசாரிக்கப்படும்  பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என்ற விடயத்தில் பெண்கள் தங்களின் முகத் திரையை விலக்கி தங்களின் அடையாளத்தை ஒரு  பெண் காவல் துறை அதிகாரியிடம் உறுதி செய்த பின்னர் புர்க்கா அணிந்து  சாட்சி வழங்கலாம் அல்லது  விசாரிக்கப்படலாம் என்று இலண்டன் குற்றவியல் நீதிமன்ற வழக்கொன்றில் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது. சரி சுற்றி வளைக்காமல் எமது தலைப்புக்கு வருவோம்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...