"நமது மக்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் வழி இல்லை" -எஸ்.எம்.எம்.பஷீர் -"முஸ்லிம் குரல்"

"நமது மக்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் வழி இல்லை" -எஸ்.எம்.எம்.பஷீர்
முஸ்லிம் குரல் பத்திரிகை நேர்காணல் .

விமலின் குறளிக் குஞ்சன் நூல் வெளியீட்டு விழா விமர்சனம்: 2006

விமலின் குறளிக் குஞ்சன் நூல் வெளியீட்டு விழா
விமர்சனம்: எஸ்.எம்.எம்.பஷீர்





நன்றி : உதயன் ஜனவரி/பெப்ருவரி 2006


விளையாட்டுத் துப்பாக்கி வீரர்கள் (வினையர்கள்) அல்லது கோமாளிகளும் கோமாளிகளும்


விளையாட்டுத் துப்பாக்கி வீரர்கள் (வினையர்கள்) அல்லது கோமாளிகளும் கோமாளிகளும்
-  வடபுலத்தான்
'ஹம்பாந்தோட்டை நகரசபைத்தலைவர் எராஜ் பெர்னண்டோ துப்பாக்கியை ஏந்தியவாறு எதிர்க்கட்சியினரைத் துரத்தி துரத்தி அச்சுறுத்தினார்...' என்ற செய்தியைப் படித்தபோது முதலில் அதிர்ச்சியாக இருந்தது.

'எராஜ் பெர்னண்டோ கையில் வைத்திருந்தது மெய்த்துப்பாக்கியில்லை. அது பொய்த்துப்பாக்கியே' என்று பிறகு சொன்னார்கள். இதைக் கேட்டபோது உண்மையில் எனக்கு அதிர்ச்சி கூடியிருக்க வேணும். ஆனால், சிரிப்புத்தான் வந்தது.

கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்சின் மரணமும் அவரின் இறவா இலக்கிய சாதனையும்




எஸ்.எம்.எம்.பஷீர்

"புதிதாக கதைகளைப் புனையும் நாங்கள் எதையும் நம்புகிறோம். அடுத்தவர் எப்படி சாக வேண்டும் என்று யாரும் தீர்மானிக்க முடியாத; , உண்மையும் மகிழ்ச்சியும் சாத்தியம் என்பதை அன்பு நிரூபிக்கின்ற;  ,   தனிமையில் நூறு ஆண்டுகள்  தண்டிக்கப்பட்ட  இனங்கள் இறுதியாகவும் நிரந்தரமாகவும் பூமியில் இன்னுமொரு சந்தர்ப்பத்தை பெறுகின்ற ஒரு முழுமையான மாற்றத்துக்கு உள்ளாகும் ஒரு புதிய  உன்னத வாழ்க்கை உருவாக்கத்தில் ஈடுபட   அதிகம் காலம் கடந்து விடவில்லை என்று நம்புவதற்கு உரித்துடையவர்கள் என்று உணர்கிறோம் "   

( கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் "தனிமையின் நூறு ஆண்டுகள்" மற்றும் அவரின் சிறுகதைகளுக்காகவும்  நோபல் விருது பெற்ற வேளையில் ஆற்றிய உரையிலிருந்து )


இது எங்கள் ஞாயம். - வடபுலத்தான்


'வடக்கிலே உள்ள சில பிரதேச செயலகங்களுக்குச் சிங்களப் பிரதேச செயRajapaksha cartoon-10லர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்' என்றொரு செய்தி சில மாதங்களுக்கு முன்பு வந்திருந்தல்லவா!

அந்தச் செய்தியைப் பார்த்த பெரும்பாலான தமிழர்கள் பதறியடித்தார்கள்.

'தமிழ்ப்பகுதியில் சிங்கப் பிரதேச செயலர்களா?' என்று கொதித்தவர்களும் உண்டு.

'இது ஒரு திட்டமிட்ட சதி' என்று சினந்தனர் சிலர்.

'சிங்களக் குடியேற்றங்களைத் தமிழ்ப்பகுதிகளில் செய்வதற்கு அரசாங்கம் போட்டுள்ள திட்டம் இது' என்று பொங்கினர் பலர்.

ஒரு கனேடியத் தமிழ் நாடோடிக்கதை

பொட்டம்மானின் மனைவியும் தேசியத்தலைவரின் மனைவியும் நெருங்கிய நண்பிகள். ஒருமுறை பொட்டம்மானின் மனைவி தேசியத்தலைவரின் மனைவி மதிவதனிக்கு பேன் பார்த்துக்கொண்டிருந்தபோது மட்டக்களப்பார் எல்லாரும் தேசியத்தலைவரை படிக்காத ஆள் என்று பழிக்கிறார்களே என்று மதிவதனி குறைபட்டுக்கொண்டாரம். இதற்கு பொட்டரின் மனைவி " யக்கா இதுக்கெல்லாம் போய்க்கவலைப்பர்றியளே, ஏன் உங்கட மகனை உங்கடை "இஞ்சேருங்கோ' விட்டைச் சொல்லி லண்டன் சீமைக்கனுப்பி இங்கிலீசில ஒக்ஸ்போட்டில படிப்பிக்கலாமே " என்று ஆலோசனை சொன்னா.

போடியாரின் பேராண்மையும் பிரபாகரனின் பேடிமையும்!




எஸ், எம்.எம். பஷீர்


"புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் - அந்தப்
பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்" 
      
          கவிஞர்  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்



துரோகி: ஈழ அரசியலின் பூமறாங்





எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது- அது 1990- விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா எனப்படும் மாத்தையா எனது சொந்தக் கிராமமான தம்பலகாமத்திற்கு வருகிறார். ஊரே திரண்டு அவரை வரவேற்கிறது. வீதிகள் தோறும் நிறைகுடம் சகிதமாக மக்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர். எங்கள் முறையின் போது நான் மாத்தையாவிற்கு சந்தனப்பொட்டு வைத்த நினைவுகள் இப்போதும் பசுமையாகவே இருக்கினறன. அப்போது ’இணக்கம்’ என்ற சொல்லைத் தவிர வேறு ஏதும் அறிந்திராத வயது. தமிழ் தேசியம் என்னும் சொற்தொடரை நான் ஒரு பேச்சுகுத்தானும் கேள்வுற்றிராத காலம் அது. எனது கிராமத்தில் 'இயக்கம்' என்னும் சொல்லைக்கூடப் பெரியளவில் புழக்கத்தில் இருக்கவில்லை. பொதுவாக இயக்கங்களைப் 'பொடியள்' என்றே மக்கள் அழைப்பதுண்டு. பின்னர் காலம் என்னையும் தமிழ் தேசிய பக்கமாக நகர்த்தியது. ஆனால் ஆச்சரியம்- தமிழ் தேசியத்தைச் சொற்களாகக்கூடக் கேள்வியுறாத காலத்தில் மலர் தூவி வரவேற்கப்பட்ட மாத்தையா,நான் தமிழ்த் தேசிய அரசியல் குறித்து அறிந்து கொள்ள முற்பட்டபோது, எனக்கு துரோகியாகவே அறிமுகமானார்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...