உறவும் பகையும் உயிர்க் கொலையும் : எஸ்.எம்.எம்.பஷீர்


உறவும் பகையும் உயிர்க் கொலையும் : புலிகளும் முஸ்லிம்களும்  -

எஸ்.எம்.எம்.பஷீர்

வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவுஒரு முன்நிகழ்வு (Flashback) 


வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழர்களுடன் மிக நெருக்கமாகவும் நல்லுறவுடனும் வாழ்ந்தனர் என்பதை இரு பகுதியினரும் ஏற்றுக் கொள்கின்றனர்குறிப்பாக குடா நாட்டில் வாழ்ந்த தமிழர்களும் முஸ்லிம்களும் மிக நெருக்கமாகவும் அந்நியோன்யமாகவும் எவ்வித வேறுபாடுமின்றி வாழ்ந்ததாக இன்றுவரை கூறுகின்றனர்ஆனால் மாறாக கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் - தமிழர்களுக்கிடையே மனக்கசப்புக்கள், சிறு சிறு பிணக்குகள் காலங்காலமாக இடம் பெற்றிருந்தாலும், அவையாவும் பொருளாதார சமூக நடவடிக்கைகளில் காணப்பட்ட பரஸ்பர தங்கியிருத்தல் காரணமாக இலகுவில் மறக்கப்பட்டு அல்லது சமரசம் செய்யப்பட்டு பொதுவான சகஜீவிதம் பேணப்பட்டு வந்ததுஅவ்வாறான பிணக்குகள் இரண்டு சமூகத்தினரதும் மொத்த சமூகப் பிரச்சினையாக இரண்டு இனங்களுக்கிடையிலான பிரச்சினையாகப் பார்க்கப்படவில்லைமேலும் அவ்வாறான பிணக்குகளின் விளைவாக ஏற்பட்ட சிறு சிறு கைகலப்புக்கள் கூடஅவ்வப் பிரதேச தனி நபர்களின் அல்லது அப்பிரதேச மக்களின் தனிப்பட்ட பிணக்காக அல்லது கைகலப்பாகவே கருதப்பட்டது.

அட்டன்பரோ: வரலாற்றின் கலைஞன் -வெ. சந்திரமோகன்,

கலை மூலம் சமூக மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர்.
கலையின் பல வடிவங்கள் நம் வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. எனவே, கலைஞர்களின் இழப்பு ஏற்படுத்தும் பாதிப்பு மிக அதிகம். அதிலும் திரைக்கலைஞர்களின் மரணங்கள் ஆறாத வடுவை ஏற்படுத்திவிடுகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடிகர் ராபின் வில்லியம்ஸ் இறந்தார். தற்போது, ரிச்சர்டு அட்டன்பரோ. ராபின் வில்லியம்ஸைப் போலவே இவரும் இந்திய ரசிகர்களுக்கு நெருக்கமானவர். ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் டைனோசர்களின் உலகை மீண்டும் படைக்கும் தொழிலதிபராக வெண் தாடி, கைத்தடி என்று நட்புணர்வு கொண்ட தாத்தாவாக அவர் நடித்த பாத்திரம் சராசரி இந்திய ரசிகரும் அறிந்த ஒன்று. ஆனால், இந்தியர்களுக்கும் அட்டன்பரோவுக்கும் இடையே அதையும் தாண்டி ஒரு வலுவான பிணைப்பு உண்டு. அவர் இயக்கிய ‘காந்தி’ திரைப்படம்தான் அது.

நினைவில் பதிந்த தடயங்கள்- புத்தளம் நகரசபை மண்டபத்தில்(11/01/2004)

வட  அயர்லாந்து  சமாதான  செயற்பாட்டாளர்களுடன்  வடக்கில் இருந்து புலிகளால் விரட்டப்பட்ட  முஸ்லிம்களின்  பிரதிநிதிகளை புத்தளம் நகரசபை மண்டபத்தில் 11 ஜனவரி 2004ல் சந்தித்த பொழுது.  







சமூக மோதல்கள் தோன்றக் கூடிய ஆபத்தும், தமிழர் தலைமையின் பொறுப்பும் - யதீந்திரா



ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் மீதான விசாரணைக்கான திகதி ​ அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆங்காங்கே சில பதற்றங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த விடயங்கள் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியவை. தெற்கை தளமாகக் கொண்டியங்கிவரும் பௌத்த அமைப்புகள், மனித உரிமைகள் பேரவையின் விசாரணை தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன், அது குறித்த எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. கொழும்மை தளமாகக் கொண்டியங்கிவரும் சில சிவில் சமூக அமைப்புகளும் மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகளும், இவை அனைத்திற்கும் பின்னால், அரசின் திரைமறைவு கரம் இருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், அரசோ இவை ஒரு குறிப்பிட்ட இனத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்றும், அதன் காரணமாகவே இவ்வாறான குழப்பங்கள் ஏற்படுவதாகவும் பதலளிக்கிறது. இதில் எவர் சரி என்பதற்கு அப்பால், தமிழர் தரப்பு உற்று நோக்கவேண்டிய விடயங்களோ வேறு.

நினைவில் பதிந்த தடயங்கள்





தமிழர் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரியுடன்

திருமதி. ராஜேஸ்வரி பாலசுப்ரமணிமும் அமர்ந்திருக்கிறார் .

இரண்டு சம்பவங்கள் -ஞானம் சஞ்சிகை,

‘செம்பியன் செல்வன்’ ஆ.இராஜகோபால் ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி (2013), ஞானம் சஞ்சிகை, இலங்கை (தளம்.ஞானம்.இலங்கை)


மாவிலாறும் இரணைமடுவும் - வரலாறு சொல்லும் பாடம்-வடபுலத்தான்

மாவிலாறும் இரணைமடுவும் - வரலாறு சொல்லும் பாடம்
-வடபுலத்தான்
'மாவிலாற்றை மறிச்சு சிங்கள ஆக்களுக்குப் போற தண்ணியை நிப்பாட்டினதால வந்த வினைதான் முள்ளிவாய்க்கால்ல அன்னந்தண்ணியில்லாமல் வாடி, வதங்கித் துவண்டு போகவேண்டிவந்தது'. 

'
மாவிலாற்றை மறிச்சவையின்ரை கதையும் மாவிலாற்றை மறிக்கச் சொன்னவையின்ரை கதையும் முள்ளிவாய்க்காலில முடியவேண்டி வந்ததும் தண்ணியை மறிச்ச பாவந்தான்' எண்டு சின்ராசண்ணை அடிக்கடி சொல்லிறதை மறுக்கேலாது. 

மரபுவாத முஸ்லிம் மன்றமும் மறைந்துபோன முஸ்லிம்களின் துயரமும்



எஸ்.எம்.எம்.பஷீர்  


"நீ ஒரு தாராளவாதி இல்லாத இளைஞனானால் , உமக்கு இதயம் இல்லை , நீ ஒரு மரபுவாதி இல்லாத முதியவனானால் உனக்கு மூளை இல்லை"

வின்ஸ்டன் சர்ச்சில்  (முன்னாள் பிரித்தானிய மரபுவாத பிரதம மந்திரி )

இலங்கையில் முஸ்லிம்கள் மீது பௌத்த பல சேனாவின் தூண்டுதலால்  கட்டவிழ்த்து விடப்பட்ட வெருவலை அளுத்தகம இன வன்முறைகள் காரணமாக புலம் பெயர்ந்து வாழும் முஸ்லிம்  மக்கள்  தாங்கள் வாழும் நாடுகளில் தங்களின் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருந்தனர் என்பது பரவலான செய்தி.  .

நினைவில் பதிந்த தடயங்கள் !! தீபம் தொலைக் காட்சி ஒளிபரப்பாளர் கண்ணனுடன்


பொதுக் கட்டமைப்பின் எதிர்காலம் பற்றிய தீபம் தொலைக் காட்சி நேர்காணலில் ஒளிபரப்பாளர் கண்ணனுடன்



நினைவில் பதிந்த தடயங்கள் !! ஜெரமி பக்ஸ்மனுடன்


பீ பீ சீ இரண்டு நியூஸ் நைட் தொகுப்பாளர்  ஜெரமி பக்ஸ்மனுடன்

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...