இனி ஒரு விதி செய்வோம்!

இனி ஒரு விதி செய்வோம்!
| at 2/04/2010 11:56:00 AM |

எஸ். எம். எம். பஷீர்

“மக்கள் தமது நன்றியறிதலை வெளிப்படுத்தியுள்ளார்கள்”

என்ற தலைப்பில் வெளியான கருத்தாக்கத்தின் சுருக்கத் தமிழாக்கமே இக்கட்டுரையாகும். இதனை முன்னாள் ராஜரீய சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் கே. கொடகே ( K. Godage) தி ஐலன்ட் (The Island) பத்திரிகையில் எழுதியிருந்தார்.ஜனாதிபதிதேர்தலில் வெற்றியீட்டிய மகிந்த ராஜபக்ச எவ்வாறு வெற்றியீட்டினார் எனபது பற்றி சாதாரண பொது மக்களிடம், குறிப்பாக நாட்டுப்புற மக்களிடம் தான் உசாவி பெற்ற கருத்துக்களை அடிப்படையாக கொண்டு அவரது கருத்தாக்கம் அமைந்திருக்கிறது என்பது மட்டுமல்ல மகிந்த ராஜபக்ச தனது  பதவிக்காலத்தில் எவ்வாறு புரையோடிப்போன நாட்டை சீரழிக்கும் பல நோய்களை நீக்கலாம் என்பது குறித்தும் தனது கருத்துக்களையும் முன்வைத்திருக்கிறார். இவரது எதிபார்ப்புக் ளை ஆலோசனைகளை நோக்கும் பொழுது ஓன்று தெளிவாகிறது; அதுதான் இலங்கை தனது முரண்பாடு நோயிலிருந்து சுகமடைய வேண்டும், மக்கள் நலன் சார்ந்த இவரது கருத்துக்கள் இலங்கையின் இன்றைய அரசியல், சமூக, பொருளாதார, இன முரண்பாட்டு  சூழலில் கவனத்துக்குரியவை. சில வருடங்களுக்கு முன்னர் இவரை பற்றி கூட தமிழர் தேசிய வாதிகளும் , ரவூப் ஹக்கீம் போன்றோரும்   இனவாத சிந்தனையுடையவர் என்று ஒரே தொனியில் தெரிவித்த கருத்துக்கள் எனது காதுகளில் ரீங்காரமிடுகிறது.

“மக்கள் தமது நன்றியறிதலை வெளிப்படுத்தியுள்ளார்கள்”

"நாங்கள் இப்போது பயமின்றி தூங்க முடியும்" என சர்வதேச தொடர்புகள் துறை மாணவனான ஒருவர் பிரபாகரனை காப்பாற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு ஆட்படாது உறுதியாக போரினை முன்னெடுத்த புலிகளை வேரோடு கிள்ளி எறிந்த ஜனாதிபதி என்றவகையில் அவரது பொறுப்பும்  ,ஆயுதப் படையினரின் சாதனையும் ஜனாதிபதி தனது அழுத்தங்களுக்குட்படாத பொறுப்பினை நிறைவேற்றியதன் மூலமாகவே புலிகளை தோற்கடிக்க சாத்தியமானது.

இப்போது தேர்தல் முடிந்து விட்டது; அவரிடம் எமது எதிர்பார்ப்புகள் என்ன ? . ஜனாதிபதி 27 ம் திகதி உதயமானதும் ஊழலை நாங்கள் கட்டுப்படுத்துவோம்.ஆம் இதுதான் இன்றைய அவரது முக்கிய பணியாகும்.

நாங்கள் அவரை எங்களுக்கு தகவல் உரிமையை (Right to information ) பெரும் அதிகாரத்தை வழங்கி எங்களை பலப்படுத்துமாறு கோருகிறோம். இந்த உரிமை ஒரு அடிப்படை உரிமையாக எதிர்காலத்தில் அரசியல் யாப்பில் இடம்பெற வேண்டும் அல்லது இப்போதிருக்கும் அரசியல் யாப்பில் அதற்கான திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும. வெளிப்படைத்தன்மையை  (Transparency ) உறுதிப்படுத்துதல் மூலம் ஊழலை மட்டுப்படுத்த இந்த உரிமை அத்த்தியாவசியமானதாகும். எங்களுக்கு சட்டபூர்வமான உரிமையுள்ள வகைப்படுத்தப்படாத (Unclassified ) விடயங்கள், சகல அரச திட்டங்கள் பற்றிய தகவல்களையும் கேட்டுப்பெறும் உரிமையை எல்லா அரசியல்வாதிகளும், பொது உத்தியோகத்தர்களும் (Public officers ) தங்களுடைய சொத்துக்கள்,தங்களின் உடனடி குடும்பத்தினரின் சொத்துக்கள் பற்றி பகிரங்க பிரகடனம் செய்தல் வேண்டும்.ஊழலுக்கெதிரான யுத்தம் இலஞ்ச , ஊழல் ஆணைக்குழு  ஒன்றினை தகுந்த ஊதியத்துடனான பணியாட்களை கொண்டு ஸ்தாபிக்கப்பட்டால் மட்டுமே ஊழலுக்கெதிரான யுத்தத்தை வெற்றிகொள்ளமுடியும். அந்த பணியாட்சி குழுவின் உத்தியோகத்தர் குற்றவாளியாகக் காணப்பட்டால் அவருக்கு கண்டிப்பாக இருபது வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்படவேண்டும்.

அடுத்த முக்கிய பிரச்சினை பதினேழாவது ( 17 திருத்தச்சட்ட விவகாரத்தை தீர்க்குமாறு ஜனாதிபதியை கோரவேண்டியது மக்களாகிய எமது கடமையாகும்.இதற்கு எங்களுக்கு தேவை சுயாதீன ஆணைக்குழு வும் ( independent Commission) தேசிய நிறுவனங்களை அரசியல்அமைப்பற்றதாக எந்த அரசியல் கட்சிக்கும் அல்லது ஜனாதிபதிக்கும் உரித்தற்ற ஒன்றாக மாற்றுதல் என்பனதாகும். எனவே நாங்கள் அடுத்து வரும் பொதுத்தேர்தலுக்கு முன்பாக சுயாதீன ஆணைக்குழு,( The Independent Commission) பொதுச் சேவை ஆணைகுழு , (Public Service Commission) நீதிச்சேவை ஆணைக்குழு, ( The Justice Service Commission) தேர்தல் ஆணைக்குழு, (The Election Commission ) இலஞ்ச ஆணைக்குழு, (The Bribery Commission ) போலீஸ் ஆணைக்குழு (The Police Commission) என்ற ஆணைக்குழுக்களை நடைமுறையில் இருத்தச் செய்தல் வேண்டும். ஜனாதிபதிஇவற்றினை இன்று நாடாளுமன்றத்தில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகள் அதற்கான பொறுப்புடன் காணப்படுவதால் அவர்கள் ஆதரவினை வழங்குவார்கள். எனவே ஜனாதிபதி இதனை  செய்வாறானால் அவரை பற்றிய மதிப்பு உயரும்.

ஜனாதிபதி விருப்பு வாக்குகளை இல்லாதொழிப்பது பற்றி குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றமும் இதனை புரிந்து கொண்டுள்ளதுடன் அதற்கான குழு ஒன்றினையும் அமைச்சர் தினேஷ்குணவர்த்தன தலைமையில் நியமித்தது. அக்குழுவின் அறிக்கை இப்போது ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் அவ்வறிக்கை தாக்கல் செய்யப்படும்போது அடுத்த தேர்தலுக்கு முன்னர் அதனை எதிர்க்கும் கட்சிகள் பகிரங்கப்படுத்தப்படும், அவர்கள் புறந்தள்ளப்படுவார்கள்.

ஜனாதிபதி ராஜபக்ச, ஜெயவர்த்தன இல்லாமல் செய்த நீதிச் நிர்வாக சட்டத்தினை மீண்டும் அறிமுகம் செய்தல் வேண்டும் இச்சட்டம் நீதித்துறை தொடர்பாக அதிக விரிவான சட்டமாக அமையலாம். வழக்கறிஞர்கள் ஏழை எளிய வழக்காளிகளினால் அதிகம் வாழ்வதனை தடுப்பதுடன் சட்ட நடைமுறைகளை இலகுபடுத்தி , எழுத்து மூலமான சமர்ப்பணங்கள் மூலம் துரித வழக்கு முடிவினை எட்டுதல், சாட்சியம் அளிப்போரை பாதுகாத்தல் பற்றிய சட்டங்களை நடைமுறைப்படுத்தல் என்பன இன்றைய சூழலில் தவிர்க்கமுடியாத விடயங்களாகும்.

அடுத்த முக்கியமான ஜனாதிபதிக்குரிய விடயம் என்னவென்றால் சம வாய்ப்பு சந்தர்ப்பம் சட்ட மசோதாவை ( Equal opportunities Bill) தொடக்கி முன்வைக்கப்பட்டபோது சில அரசியல்வாதிகள் அதனை அன்று எதிர்த்தனர். அவ்வாறான தீவிரவாத செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பு எமக்கு பண்டா- செல்வா ஒப்பந்தம் , டட்லி -செல்வா ஒப்பந்ததத்துக்கு எதிரான நிலையினை ஞாபகமூட்டுகிறது. அன்று அவ்வொப்பந்தங்கள் திருத்தங்களுடன் கூட நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த நாடு இன்று எங்கே சென்றிருக்கும். ஜனாதிபதி இன கடும்போக்காளர்களை மேலேழ அனுமதிக்ககூடாது. இந்த நாடு எப் .ஆர்.ஜெயசூரியாக்கள் ஸ், தல்பவல்ல சீலவன்சாக்கள் , புத்தார்கிதாஸ்கள் ,ராஜராட்நாஸ்கள் , போன்றார் தமது காலங்களில் செய்தவற்றினால் தான் பினோக்கி தள்ளப்பட்டது.

இது தொடர்பாக ஜனாதிபதி திஸ்ஸ விதாரண குழுவின் அறிக்கையினை தீவிர முக்கியத்துவம் கொடுத்து அமுல் படுத்தவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம்தான் பிரச்சனைகளை ஒரு முடிவுக்கு கொண்டுவரமுடியும். நீதியான சமூகத்துக்கும் , இரக்க குணமுள்ள சமூகத்துக்கும் ஒருவேலை சட்டகத்தினை (work frame ) உருவாக்கவேண்டும். இன்றைய அவசர தேவை என்னவென்றால் ஒத்துழைக்கும் சகாப்தத்திற்கு கட்டியம் கூறி இந்நாட்டுக்கு அளவிடமுடியாத தீமையினை விளைவித்த முரண்பாட்டு சகாப்தத்தினை விட்டு விடுவதாகும். ஏனைய நாடுகள் குதிரைப் பாய்ச்சலில் முன் செல்கின்றபோது நாங்கள் பின்னோக்கி நகர்கிறோம். இந்த முரண்பாட்டு நோய் எங்கள் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரவி இருக்கிறது. இன்று ஜனாதிபதிக்கு இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கு  ஒரு பொன்னான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது; எதிர்கால சந்ததியினர் மக்கள் உங்கள் மீது நன்றி கொண்டவர்களாக இருப்பார்கள். “ 

என்று தனது கட்டுரையில் கே.கொடகே குறிப்பிட்டுள்ளார்.

இப்பின்னணியில் கே.கொடகேயின் கருத்துக்கள் பற்றி அலட்சியப்படுத்திவிட முடியாது. தமித் தேசிய தரப்பினரின்  எதிர்மறை கருத்தாளர்களின்  அபிப்பிராயங்கள் ஆரூடங்கள் என்பன குறித்தும் பார்வையை திருப்பவேண்டியும் உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு கலாநிதி கீத பொன்கலன் அரசியல் நோக்கும் கவனத்துக்குரியது. " மறுபுறம் ஜே வீ. பியின் தீவிரமான ஆதரவானது தென்னிலங்கைத தேர்தல் சமநிலையை பெரிதும் பாதிக்கச் செய்துஆளுந்தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது." ஜெனரலுக்கு அதிஷ்டத்தின் மேல் நம்பிக்கை இருந்தால் அவர் மகிழ்ச்சியடையக்கூடிய விடயம் கடந்த காலத்தில் ஜே வீ .பீ ஆதரித்த வேட்பாளர்கள் பெரும்பாலும் வெற்றியே பெற்றுள்ளனர்". இப்போதைக்கு கேள்வி என்னவெனில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதேயாகும். இத்தமிழ் வாக்காளர்களும் பொது வேட்பாளரான பொன்சேகாவுக்கு வாக்களிப்பதாக தீர்மானமெடுத்தால் ஜெனெரல் சரத் பொன்சேகா வெற்றி பெறுவதென்பது சாத்தியமானதே " என்று அரசியல் ஆரூடம்கூறிய கலாநிதி கீத பொன்கலன் , தேர்தல் முடிந்தவுடன் “ ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அவரது கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக கருதப்பட வேண்டும். மேலும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே .வீ. பீ யின் வாக்கு வங்கி பலவீனமாக இருப்பதன் காரணமாகவும் இந்த வெற்றி அவருக்கு கிட்டியுள்ளது "என்று தனது ஆரூடத்தை "அட்ஜஸ்ட்" பன்னிய பொன்கலன் "இனப்பிரச்சனை" சம்பந்தமாக இந்த அரசு பேசாதிருக்கும் என்ற தொனியில் எதிர்மறை கருத்தினைகூட முன் வைத்திருந்தார். ருத்திரமூர்த்தி சேரன் பிரபாகரன் செத்தால் ஏதோவெல்லாம் நடக்கும் என்று பூச்சாண்டி காட்டும் கருத்தினை கூறி,   இன்று அவையெல்லாம் புஷ்வானமானதும் புகலிட தேசம் கட்டும் முயற்சியில் முனைந்திருப்பதும், ஹக்கீம் சம்பந்தன் தமிழ் பேசும் மக்கள் வடகிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமை (நிசாம் காரியப்பரின் அண்மைய பீ. பீ. சீ நேர்காணல்) என்றெல்லாம்  பிணம் தோண்டி அரசியல் செய்ய வெளிக்கிட்டு விட்டார்கள் . இப்போது அவசரத் தேவை இவர்களிடமிருந்து மக்களை பாதுகாப்பதுமாகும்.

(இக்கட்டுரையின் மொழியாக்கம் செய்யப்பட்ட  மேற் பகுதி ஒரு சிங்கள கல்விமானின் கருத்தினை புலப்படுத்துவது மட்டுமல்ல, இவாறான கருத்துக்களை பல சிங்கள புத்தி ஜீவிகள் இடதுசாரிகள் , சாமான்ய சிங்கள மக்கள் என பல மட்டத்திலும் கொண்டிருக்கின்றனர் . ஆனால் மறுபுறத்தில் தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகள் தீவிர தேசியவாதம் சுயநிர்ணய உரிமை போன்ற சுலோகங்களை உச்சரித்து  சக சிங்கள சமூகத்துடன் வாழத் தடைகளை மட்டும் அடையாளப்படுத்தி சிறுபான்மை சமூகத்தை“சிறுபான்மையாக்கி” அந்நியப்படுத்தி உயிர்வாழும் சூழலில் இக்கட்டுரையினை இதன் உட்கிட்டக்கையை புரிந்து கொள்ள முடிந்தவர்களுக்காக தமிழாக்கம் செய்துள்ளேன்)

Alai 2/4/2010

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...