அரசியல்வாதிகள் எல்லாம் இப்படி இருந்துவிட்டால் ,,,!

எஸ்.எம்.எம்.பஷீர்



“இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள். அதுதான் முக்கியமான விஷயம்.” 
                                                       
                                               எர்னஸ்டோ         சேகுவாரா




முன்னாள் மொரட்டுவ நாடாளுமன்ற உறப்பினர் மெர்ரில் பெர்னாண்டோ (Merryl Fernando) அண்மையில் காலமானார்; அவரது மறைவினை தொடர்ந்து மொரட்டுவ பல்கலைகழகத்தின்   முன்னால் துணை வேந்தர் க. பிரான்சிஸ் த சில்வா (G.T. Francis De Silva) அவர்கள் நினைவு கூர்ந்த சம்பவங்கள் ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.

 இப்போதெல்லாம் நாம் காண்கின்ற அரசியல்வாதிகளில் ஒரு சில இடதுசாரி அரசியல் வாதிகள் மற்றும் அபூர்வமாக ஏனைய அரசியல் கட்சிகளின் சில அரசியல்வாதிகள் தவிர , பொதுவாக மக்களின் வாக்குகளால்  தெரிவானபின் , தமக்கு கிடைத்த நாடாளுமன்ற அங்கத்துவம்  திருடுவதற்கும் சுயமேம்பாட்டுக்கும் வழங்கப்பட  உரிமம் ( LICENSE) என்பதுபோல்  தான் இன்றைய அரசியல்வாதிகள் செயற்படுகின்றர்கள். 


என். எம். பெரேரா அமைச்சராக இருந்தபோது ஒருதடவை நாடாளுமன்றத்திலிருந்து நேரடியாக வந்து கியூவில் நின்று கொழும்பு இராணுவ மைதானத்தில்  மேட்ச் பார்ப்பதற்காக நுழைவுசீட்டு பெற்றுக்கொண்டு சாதாரணமாக ஒரு பொதுமகனாக அரங்கிலிருந்து பார்த்தார் என்பது அவரது வாழ்வில் நடைபெற்ற அத்தகைய பல சம்பவங்களில் ஓன்று.

மெர்ரில் . பெர்னாண்டோ 1956 ஆண்டில் லங்க சமசமாஜ பார்ட்டி உறுப்பினராக மொரட்டுவ தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜாம்பவானான ருச்கின் பெர்னாண்டோவை தோற்கடித்து நாடாளுமன்றம் சென்றார். 1953 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 12 ஆம் திகதி , ஆடசியிலிருந்த ஐக்கிய தேசியக் கடசி அரசின்  கொள்கைகளுக்கும்  நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய ஹர்த்தாளில் முக்கிய பங்கு வகித்ததற்காக மூன்று மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.  தனது சாதாரண வாழ்க்கையில் மெர்ரில் . பெர்னாண்டோ  பேருந்துக்காக வரிசையில் காத்துநின்று தனது போகுமிடம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்  என்று துணை வேந்தர் பிரான்சிஸ் குறிப்பிடுகிறார்.

ஒருதடவை இவர் தனது தொகுதில் உள்ள பொது வைத்தியசாலைக்கு சுகவீனம் காரனமாக சென்று வைத்தியரை காண்பதற்கு காத்திருந்தபோது, வைத்தியரிடம் ஊழியர்கள் வந்திருப்பவர்   யாரென்று  சொன்னபோதும் , வைத்தியர் அதனை ஒரு சிறநத உதாரணமாக குறிப்பிட்டார். வைத்தியர் அவரின் முறை வந்த பொழுது குறிப்பட்ட வைத்தியர் மெர்ரில் பெர்னாண்டோ விடம்  எதிர்காலத்தில் வைத்திய உதவிக்காக வருவதேன்றால் தனது விடுதிக்கு   (Quarters) நேரடியாக  வருமாறு கேட்டுக்கொண்டார். 

1960 தேர்தலில் ரஸ்கின் பெர்னாண்டோவிடம் (Ruskin Fernando) தனது தொகுதியை இழந்த மெர்ரில் மீன்றும் ஜூலையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றார். 1965 ஆண்டு மறைந்த எட்மொந்து சமரக்கொடி ( Edmond Samrakody -LSSP) உடன் சேர்ந்து அரசுக்கெதிரான நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு வாக்களித்து தமது கட்சியில் இருந்து வெளியேறி இருவரும் நாடாளுமன்ற அங்கத்துவத்தை இழந்தனர்.இவர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியதும் மஹரகம ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றினார். அன்றைய கட்டுபொத்தை வளாகத்திலும் ( University of Morattuwa) பணிக்குழு (staff officer) ஆகவும் பணியாற்றி உள்ளார். 

தனது நாடாளுமன்ற  உறுப்பினர் பதவியை இழந்து , ஆசிரியர் பதவியை இழந்து,  பொருளாதார கஷ்டங்களுக்கும் உள்ளானபோதும் கொள்கையில்  உறுதியாகவிருந்தார். தனது பொருளாதரக் கஷ்டத்தினால் , வேலை தேடும் நோக்குடன் கணக்கியல் துறையில் இடைத்தரநிலை (Intermediate) கணக்கியல் தரத்தில் சித்தி எய்தி வித்தியோதய பல்கலைகழகத்தில் சிரேஷ்ட உதவி நிதி பொறுப்பாளராக (Bursar) ஆக பணியாற்றியும் இவர் ஒரு முன்னாள் எம்.பி .என்றோ அல்லது முன்னாள் மொரட்டுவா நகரசபை தவிசாளர் என்றோ பல்கலைகழக அதிகாரம் இவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதுடன் இவரும் சாதாரண ஊழியராகவே தன்னை அடையாளப்படுத்தி செயற்பட்டார்  என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இவர் மொரட்டுவை பல்கலைகழகத்தில் கணக்கியல் பகுதியில் பணியற்றியபோது இவரிடம் பேராசிரியர் பிரான்சிஸ் தே சில்வா ஏன் நீங்கள் மீதமுள்ள கணக்கியல் பகுதிகளை முடித்து முழு தகுதிபெற்ற கணக்காளர் ஆக கூடாது என்று கேட்டபோது; அது (கணக்காளர்-accountant ) என்பது முதலாளித்துவ தொழில் என்று குறிபிட்டபோது: ஏன் அப்படியானால் படித்தீர்கள் எனக் கேட்க: தனக்கு தொழில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றளவுக்கு படித்ததாக கூறினார். சிறிது . இடைவெளியின் பின்னர் முதலாளித்துவ ஐக்கிய தேசிய கட்சியின் (UNP) தேர்தல் எழுச்சிகளினை முன்னுணர்ந்து தேர்தலில் தமது புதிய கட்சியை ஆரம்பித்து தோல்வி அடைவோம் என்று அறிந்தபோதும் தனது பல்கலைகழக பதவியை துறந்து போட்டியிட்டார்.
 

தனது பல்கலைகழக பதவியில் விடுமுறை பெற்று போட்டியிட அனுமதி இருந்தும் அது தனது கொள்கைக்கு மாறானது என்று மறுத்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிட்டார் . மேலும் இவர் தொழிலாளர்களுக்கு ஆங்கிலம் படிப்பிப்பதற்காக  இவரது மணித்தியால கட்டணத்தை கேட்டபோது; ஒரு மணித்தியால வேதனமாக ரூபாய் 25 போதும் என்று கூறினார் ஆனாலும் மெரில் பெர்னாண்டோ கேட்கும் தொகை அவரைபோன்ற ஆங்கில ஆசிரியருக்கு கொடுக்ககூடிய பொருத்தமான ஊதியம் அல்ல என்றும் அதனை   வழங்குவது  வெட்கிக்கக்கூடியது என்றும் தான் ரூபாய் 50 வழங்குமாறு கேட்டுக்கொண்டதாக அவரை  ஆங்கில ஆசிரியரை வேலைகமர்த்த தேடியவர் குறிப்பிட்டார் . ஆனால் நியமனம் வழங்கும் சபை அவரது தகுதியை உணர்ந்து ரூபாய் 100 வழங்குவதற்கு அனுமதித்தனர். 

ஒருதடவை பொது வைத்தியசாலையில்  வைத்தியரை பார்க்க முன்னால் பலர் காத்திருக்க , பின்னால்   வரிசையில் காத்திருந்தவர் முன்னாள்  பிரதமர் தகாநாயக  என்று அறிந்துகொண்டு , அவருக்கு முன்னால் இருந்தவர்கள் தாதிகள் என பலர் அவரை தங்களுக்கு முன்செல்ல தூண்டியும் அதனை மறுத்து  அவர் காத்திருந்தார் என்ற செய்தியை என்னிடம் சொன்னவர் அவருக்கு முன்னால் காத்திருந்த ஒருவர் . எல்லோரையும் போலவே தானும் ஒருவர் என்பதை அவர் என்றும் மறந்து  செயற்படவில்லை. பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் , காலியில் உள்ள தனது வீட்டிற்கு பொது வாகனத்தில் அவர் தனித்தே சென்றார் என்றும் அவர் பற்றி  சொல்லப்படுகிறது.  
 

 ஆங்கிலம் .இரண்டாவது விருப்பு மொழியாக ( English as a second language ) கலைமாணி பட்டதாரி மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பிற்கு மூன்று வருட கல்வியின் பின்னர் அனுகூலமானது என்ற மெரில் பெர்னாண்டோவின் கருத்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பின்னர் உணரப்பட்டது..

இப்படியான உதாரண அரசியல்வாதிகள் சிலர்  இப்பொழுதும் இல்லாமலும் இல்லை. இன்றைய அரசில் அமைச்சராக இருக்கும் திஸ்ஸ விதாரணவும் தனது சொந்த வாழ்வில் எளிமையானவர் மிகவும் பட்டோபகரமான வாழ்க்கை நடத்தாதவர். பழகுவதறகு இனியவர். 


பொது, அரச வாகனம் ஏனைய சொத்துக்களை தனது சொந்த வாழ்க்கைக்கு பயன்படுத்தாத இன்னுமொருவராக குறிப்பிடக்கூடியவர். முன்னாள்  அமைச்சரும் இன்றைய ஜனாதிபதியின் ஆலோசகர் ஜனாப்  எம்.அஸ்வர் ஆகும். முன்னாள் கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் அவர்களும் ஒரு ஊழலற்ற மனிதராகவே வாழ்ந்தார்,  இறுதிவரை வாடகை வீட்டிலே வாழ்ந்து காலமானார்

முன்னாள் மட்டக்களப்பு எம் . பி நல்லையாவும் ஒரு எளிய மனிதராகவே வாழ்ந்து வாடகை வீட்டிலே காலமானார்.  இப்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள்  யாவரும் , விதி விலக்காக ஒரு சிலர் தவிர , எல்லோருமே  எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்களே நன்கு அறிவீர்கள் .

unamikal  July 2009

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...