இந்திய எதிர்ப்பில் இழையோடும் இஸ்லாமிய விரோதம்




எஸ்.எம்.எம்.பஷீர்

“அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்!
                                                     திருவள்ளுவர்

இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாகி சுமார் 26 வருடங்கள் முடிந்து விட்டன, வடக்கு கிழக்கு மாகாணங்களும்  பிரிந்து விட்டன, கிழக்கு மாகாணம் தனது இரண்டாவது தேர்தலையும் நடத்தி முடித்து சாவாதானமாக  செயற்படத் தொடங்கியிருந்து,.
எப்படியோ இறுதியில் தமிழ் ஈழக் கனவு பிரபாகரனின் அஸ்தமனத்துடன் , வட மாகாண சபைக்கான தேர்தலுடன் புலத்தில் கலைந்து போவது யதார்த்தமாகிப் வருகிறது,  ஆனால் புலம் பெயர் புலிகள் கடுப்பில் இருக்கிறார்கள் .

இருபத்தியொரு வருடங்களின் இரத்தம் சுவறிய நினைவுகள் !! பொலன்னறுவை ( அக்பர்புரம் , அகமட்புரம் ) படுகொலைகள் (15/10/1992)



எஸ்.எம்.எம்.பஷீர்

இதே திகதியில் இன்றைக்கு சுமார் 21 வருடங்களுக்கு முன் அதிகாலைப் பொழுது புலர இன்னும் ஓரிரு  மணித்தியாலங்கள் இருந்தன. இன்னும் இருள் மண்டிக் கிடக்கிறது. கதிரவன் நாளை வழக்கம் போல் வைகறையில்  எழுவான் என்ற நம்பிக்கையுடன்தான்  அகமட்புரம் , அக்பர்புரம் கிராம மக்கள் அதற்கு முன் தினம் துயிலச் சென்றிருந்தனர்.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக மறுநாள் காலை அக்டோபர் மாதம் பதினைந்தாம் திகதியை தங்களின் இரத்தமும் தசையும்  காக்கும் எத்தனத்தில் அல்லோல கல்லோலப்பட்டு அவலத்துடன் விடியப் போகிறது என்று அவர்கள் யாரும் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

நேற்றும் இன்றும் நாளையும் ஒன்றே !





எஸ்.எம்.எம்.பஷீர் 

"மெல்ல மெல்ல செல்லுகின்ற
தந்தை செல்வா நாயகம்
சொல்லுகின்ற பாதையிலே
செல்லுகின்ற வீரர் நாம்"
                  ( எஸ்.ஜே.  வீ. பற்றிய   ஒரு பாடல்) 
இலங்கையின் மூன்று மாகாணங்களில் தேர்தல் நடைபெற்றாலும் வட மாகாணத் தேர்தல் , அதுவும் மன்னார்  ஆயர் ராயப்பு ஜோசப் ஒப்பிட்ட  அரசியல் முள்ளிவாய்க்கால் கிழக்கிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டவுடன் அங்கு ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை இழந்தவுடன் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் கிழக்கிலே மாகாண சபைத் தேர்தலிலே தோல்வியுற்றவுடன் ஆயர் சொன்னது போல் அங்கு நடந்தது அரசியல் முள்ளிவாய்க்கால் அல்ல , அது அரசியல் மாவிலாறு மட்டுமே , இப்பொழுதுதான் அரசியல் முள்ளிவாய்கால் முதற்போராட்டமே  ஆரம்பித்து,அதுவும் இன்றுடன்  போராட்டம் முடிவுக்கு வருகிறது,

“பிரித்தானியாவை வெறுத்த மனிதன்” ! (“The Man Who hated Britain” ! )


எஸ்.எம்.எம்.பஷீர்

“ஜனநாயகம் , சமத்துவம் , சமூக அசைவாற்றல் , வர்க்கபேதமின்மை, என்பவை அதிகம் அடையபெற்ற ஒரு சகாப்தத்தில் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வாழ்க்கையின்  ஒரு அடிப்படை விஷயம் தொக்கி நிற்கிறது, இந் நாடுகளில் அநேக ஆண்களும் பெண்களும் பொருளாதாரத்தில் உயர் நிலையில்  உள்ள  ஒப்பீட்டளவில் தொலைவில் உள்ள வகுப்பினரால்  இழுக்கப்பட்ட  பிற மக்களால்  ஆட்சி செய்யப் படுகிறார்கள், பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள், நிர்வகிக்கப்படுகிறார்கள், நீதி செய்யப்படுகிறார்கள் யுத்தத்திற்கு ஆணையிடப்படுகிறார்கள்."  ( ரால்ப் மில்லிபண்ட் Ralph  Miliband) 

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...