Posts

Showing posts from May, 2016

மீண்டெழும் மந்தைகள் !

எஸ்.எம்.எம்.பஷீர் மந்தைகள் தவம் செய்தன மானுடம் பயனுற வாழ்வதற்கே விந்தை நிகழ்ந்தது தூர்சீனா மலையின் அடிவாரம் நடுங்கியது மலை சுக்குநூறாகியது  மூஸா மூர்ச்சித்தெழந்தார்  மௌட்டீகத்தில் மீண்டும் மானுடம் மூழ்கியது ! தட்டுத் தடுமாறி தடியுடன் நடந்தவர்   மீண்டும் மனிதரை மேய்ப்பவரானார் மனிதரோ  மீண்டெழும் மந்தையராயினர் ! மாறின  காலங்கள் மேய்ந்த மந்தைகளும்  மேய்ப்பர்களும் மாறினர் ; மனிதரோ  மீண்டெழும் மந்தையராயினர் !

2005இற்கு முன்னரே மகிந்தவுக்கு எதிராக சந்திரிக செயற்படத் தொடங்கிவிட்டார்! குட்டை உடைத்தார் ஜனாதிபதி மைத்திரி!! -சாள்ஸ்

2005 இல் மகிந்த ராஜபக்ச முதன்முதலாக ஜனாதிபதியாகத் தெரிவு  செய்யப்பட்ட பின்னர், அவர் நாட்டையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் தனதும், தனது குடும்பத்தினதும் சர்வாதிகாரப் பிடிக்குள் கொண்டு வந்து, தன்போன்ற கட்சியின் சிரேஸ்ட தலைவர்களை ஓரங்கட்டத் தொடங்கிய பின்னரே, தான் நாட்டையும் கட்சியையும் பாதுகாப்பதற்காக அவரை எதிர்க்கத் தொடங்கியதாக ஒரு பிரச்சாரத்தை கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக குமாரதுங்க நடாத்தி வருகின்றார். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மகிந்தவைத் திட்டுவதையே தனது வழமையாக்கியும் கொண்டிருக்கிறார் சந்திரிக. ஆனால், சந்திரிக கூறுவது உண்மையல்ல, அது முற்றுமுழுதான பொய் என்பதை அவரது சாகாவும், இன்றைய ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவே அம்பலப்படுத்தியிருக்கிறார். அதாவது, 2005இல் மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இருந்த நேரத்திலேயே சந்திரிக, மகிந்தவுக்கு எதிராகச் செயற்பட ஆரம்பித்திருக்கிறார் என்ற விடயத்தை அம்பலத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரி.

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (9)

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (9) எஸ்.எம்.எம்.பஷீர். முதன் முதலில் தனியாக  நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சேகுதாவூத் பசீர் தனியான அதிகார சபை ஒன்றினை உருவாக்குவதற்கு தமக்கு ஆதரவு தெரிவிக்கும் ஏனைய அரசியல் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டாரோ ஒழிய , தாங்கள் அப்படியான கோரிக்கையை ஒரு கோரிக்கையாக முன் வைக்கவில்லை.  மாறாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னணித் தலைவர்கள் பின்னரான காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராக  மாறிய பின்னரும் முஸ்லிம்களுக்கு இணைந்த வடக்கு கிழக்கில் ஒரு அதிகார அலகு வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்பதை வலியுறுத்தி வந்திருந்த காரணத்தினாலும் ,  சேகுதாவூத் பசீர் அப்படியான கருத்தை முன் வைத்திருந்தார்.

இலங்கையின் புதிய அரசியல் அமைப்பு எப்படி இருக்கப்போகிறது?

Image
மே 19, 2016 இ லங்கைக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற பேச்சுகள் 2015, ஜனவரி 08 இல் மைத்திரி – ரணில் அரசு உருவான நாளிலிருந்து பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தப் புதிய அரசியல் அமைப்பு என்ன தேவைக்காகக் கொண்டு வரப்படுகிறது என்றோ, அது எப்படியானதாக அமையவிருக்கிறது என்றோ, அரசாங்கமும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி இதுவரை தெளிவுபடுத்தாத ஒரு நிலைதான் இருந்து வருகிறது. அதன் காரணமாக புதிய அரசியல் அமைப்பு சம்பந்தமாக ‘யானை பார்த்த குருடர்கள்’ நிலை ஒன்று நிலவுகின்றது.

கனவுகளைக் கலைத்துவிடு !

எஸ்.எம்.எம்.பஷீர் கனவுகள் எம்மை கட்டி வைத்திருக்காவிட்டால் எப்போதோ நாம் கரைந்து போயிருப்போம்! நனவுகளைப் போலவே கனவுகளும் சாஸ்வதமானவை இரண்டுக்கும் இடைவெளி நூல் இழையாயினும் இருவேறு உலகும் எமை ஆட்சி செய்யும்!

அருளும் பொருளும்

                                            எஸ்.எம்.எம்.பஷீர் பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை; அருளில்லார்க்கு  அவ்வுலகில்லை என்றோதும் குறளோனே ! நீ அவ்வுலகு இவ்வுலகு என்றெதனை சொல்லிவைத்தாய்?

மீண்டும் ஆட்சி மாற்றத்துக்கான தேவை எழுந்துள்ளது!

வானவில் -சித்திரை 2016 இலங்கையின் பொருளாதார நெருக்கடி அபாயகரமான ஒரு நிலையை எட்டியுள்ளதாக சகல பொருளாதார நிபுணர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். இதன் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்னொரு பக்கத்தில் ‘வற்’ வரி எனப்படும் பெறுமதி சேர் வரியை (ஏயடரந யுனனநன வுயஒ) அரசாங்கம் அதிகரித்துள்ளது. இவற்றின்; விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கப் போவதாக உணவு நிலையங்களின் உரிமையாளர்களும், பேக்கரி உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர். போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிக்கவுள்ளன

ராஜித மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ‘கட்டுக்கடங்கா ஊழல்கள்’ பற்றி வாய்ஓயாமல் பேசுபவர்களில் முக்கியமானவர் தற்போதைய சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னைய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்துவிட்டு திடீரெனப் பல்டியடித்து எதிரணிப்பக்கம் தாவியபோது, அவருடன் கூட ஓடிப்போனவரும் இந்த ராஜிததான்.

Muslim man wins 'unlawful questioning' at airport ruling

Image
20 Feb 2014 A Muslim man detained by police at an airport on his way home from Hajj, the holy journey to Mecca, has won a significant legal battle over the UK's anti-terror laws. The High Court declared that Abdelrazag Elosta was unlawfully refused access to a solicitor before he was detained and questioned under Schedule 7 of the Terrorism Act 2000. A judge ruled that Mr Elosta had undergone "45 minutes of unlawful questioning". Allowing Mr Elosta's application for judicial review, Mr Justice Bean said: "The examining officers had no power to question the claimant after he had requested the presence of a solicitor and prior to the solicitor's arrival."