மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (3)

 –எஸ்.எம்.எம் பஷீர் (பாகம் -3)

நோர்வேயினை வெளிநாட்டு அனுசரணையாளராக இலங்கை அரசு அங்கீகரித்து சமாதானப் பேச்சுவாhத்தையினை முன்னெடுப்பதற்கு புலம் பெயர் தமிழ் சக்திகள் நீண்டகாலமாக முனைப்புடன் செயற்பட்டு வந்தமைக்கான ஆதாரங்கள் பல உள்ளன. மேலும் நோர்வே 1970 களில் எண்ணை வளத்தினைக் கண்டுபிடித்து செல்வந்த நாடாக மாறியபோது உலகில் பிரச்சினைக்குரிய நாடுகளில் சமாதானத்தினை ஏற்படுத்தும் அனுசரணை நாடாக தன்னை ஈடுபடுத்தி பலஸ்தீனம், குவாட்டமாலா, சூடான், சைப்பிரஸ், கொலம்பியா முன்னாள் யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் செயற்பட்டமையும் இலங்கையில் சந்திரிகாவும், ரணிலும் ஆட்சியிலிருந்தமையும் இவர்களின் அனுசரணை சாத்தியமானது. நோர்வே மட்டுமல்ல ஸ்கண்டி நேவிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் புலி ஆதரவு புத்திஜீவிகள், தீவிர தமிழ் தேசியவாதிகள் பல “வெள்ளைப் புலி " என்ற பெருமிதம் கொள்ளும் பேராசிரியர்களை உருவாக்கியிருந்தனர்.



2008 ம் ஆண்டு ஏப்ரலில் நான் ஒஸ்லோ பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற சமாதானம் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டபோது புலிகளின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் பலர் பல்வேறு அறிமுகங்களுடனும், அடையாளங்களுடனும் கலந்துகொண்டனர். தமிழ் தேசிய ஆதரவு கல்விமான்களும் ஓரிரண்டு சிங்கள தேசிய கல்விமான்களும் கலந்துகொண்ட நிகழ்வில் பிரபாகரனை மெச்சும் சுவீடன் நாட்டு உபர்சலா பல்கலைக்கழக பேராசிரியர் அங்கு கலந்துகொண்ட முஸ்லிம் கல்விமான்களிடம் “அதிகமான வெள்ளைப் புலிகளைப் பார்ப்பதென்றால் எங்களது பல்கலைக்கழகத்திற்கு வாருங்கள”; என அழைப்பு விடுத்திருந்தார். ஸ்கன்டிநேவிய நாடுகளின் இறுதிக்கட்ட சமாதான ஈடுபாடுகள் பலரும் அறிந்ததே.

பிரேமதாசா புலிகளுடன் 1989 ல் தேன் நிலவு கொண்டாடியபோது இந்திய அரசாங்கம் பிரபாகரனை நாடுகடத்த கோரிக்கை விடுத்தபோது பிரேமா “ஒரு மூத்த சகோதரன் தனது இளைய சகோதரனை அவருடைய தவறுதலுக்காக அயலவரிடம் கையளிக்க மாட்டான்” என்று உரிமையுடன் நிராகரித்தார். அவருக்கும் புலிகளுக்குமான உறவு பல சிங்கள, தமிழ், முஸ்லிம் உயிர்களை காவு கொள்வதற்கு காரணமாக அமைந்தது. இது இராணுவத்தினரைக்கூட சங்கடத்தில் ஆழ்த்தியது. முன்னாள் இராணுவத் தளபதியும் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கமைய இடம்பெற்ற புலிகளின் ஆயுதக் கையளிப்பின்போது அரசின் பிரதிநிதியாக கலந்து கொண்டவருமான சேபால ஆட்டியகலவை; முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷரப் அவர்களும் லத்தீப் என்னும் அவரது உதவியாளருடன் கொழும்பு பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார். ;.அஷரப் தனக்கு வழங்கியுள்ள பாதுகாவலர்களின் எண்ணிக்கை போதாது என்பதற்காக சேபால ஆட்டியகல அவர்களைச் சந்தித்தபோது நான் தற்செயலாகவே அவருடன் செல்ல நேரிட்டது. ஆட்டியகல பிரேமதாசா மீதான  தனது மன உளைச்சலைக் கொட்டித் தீர்த்தார். நிபந்தனையாக எங்கள் இருவரையும் அஷரப்பிடம் யார் இவர்கள் என்று உறுதிசெய்த பின்னர் அவர் புலிகளுக்கு பிரேமதாசா வழங்கும் நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் பல்வேறுபட்ட பொருட்கள் தொடர்பான விபரங்களை கூறியதுடன் தங்களுக்கு (இராணுவத்திற்கு) அவற்றினை இராணுவ முகாம்களைத் தாண்டி கொண்டு செல்வதற்கு அனுமதிக்குமாறு வழங்கப்பட்ட ஆணைகள் குறித்து அதிருப்தி தெரிவித்து தமது கையறு நிலையினை வெளிப்படுத்தினார்.

இந்தச் சம்பவத்தை இவர்கள் மூவரும் இன்று உயிருடன் இல்லை என்பதால் வெளிப்படுத்த வேண்டியது அவசியமெனக் கருதுகிறேன். ஒரு ராணுவ ஜெனறலின் மனக்குமுறலை கைகள் கட்டப்பட்ட நிலையை இன்றைய சூழ்நிலையுடன் ஒப்பிட்டுப் பாhக்கின்றேன். இன்றைய இராணுவம் இலங்கை அரசின் தலைவர், இணைந்து செயற்பட்ட நிலை முன் ஒருபோதும் காணப்பட்டதில்லை. இந்த ஒருமித்த செயற்பாடு புலிப்பயங்கரவாதத்திற்கான வெற்றிக்கான காரணமாக அமைந்துள்ளது.


(தொடரும்)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...