“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!” தொடர்: பன்னிரெண்டு



எஸ்.எம்.எம்.பஷீர் 

ஒவ்வொரு நட்பின் பின்னாலும் சில சுய அக்கறை இருக்கிறது. சுய அக்கறையின்றி நட்பில்லை . இது ஒரு கசப்பான  உண்மை - சாணக்கியன்

There is some self-interest behind every friendship.   There is no Friendship without self-interests. This is a bitter truth.” 
Chanakya )
 பேராளர்களும்” “ போராளிகளும்”! 
முஸ்லிம் காங்கிரஸ் கட்சின் "போராளிள் " என்று சொல்லப்பட்ட நிசாம் காரியப்பர் பின்னாளில் பேராளர்கள் என்று சொல்லப்பட்டவர்களால் திட்டமிட்ட வகையில் ஓரங்கட்டப்பட்டார்.
முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சியாக தன்னை , அதன் ஆறாவது மாநாட்டில்கொழும்பில் பாஷா  விழாவில் 29/11/1986 பிரகடனப்படுத்தி சில மாதங்களில் பிரதேசிய  சபைகளுக்கான தேர்தல்களை நடத்த அரசு பிரகடனப்படுத்தியது. முஸ்லிம் காங்கிரஸ் ஆரசியல் அங்கீகாரம் பெற்ற கட்சியாக 11ம் திகதி மாசி மாதம் 1988ஆம் ஆண்டு  சட்டபூர்வமாக பிரகடனப்படுத்த முன்னரே அந்த தேர்தலில் சுயேட்சை குழுவாக பங்குபற்ற முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்தனர்.   

லன்டன் மாநாட்டில் எச்சரிக்கை..." உதயன் ( இலண்டன் - செப்-அக்டோ 2006)



"லன்டன் மாநாட்டில் எச்சரிக்கை  
இலங்கையில் மனித உரிமைகளை மீறுபவர்கள்
சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்
"
 
குறிப்பாக முஸ்லிம் பிரநிதியான சையட் பசீர் பேசும்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டு குழப்பி அவரது உரையை இடைநிறுத்தினர்

இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் மனித உரிமைகளை மதிக்காது அதனை மீறினால்  சர்வதேச நீதிமன்றத்தில் யுத்தக் குற்றங்களுக்காக நிறுத்தப்படுவார்கள் என்ற எச்சரித்த  சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் தங்கள் தரப்பினரை வலியுறுத்தவேணடும் என்று கேட்டுக் கொண்டன.  ஓகஸ்ட் 5ல் சர்வதேச மன்னிப்புச்சபையும் (Amnesty International ) மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch  ) இணைந்து ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் அவ்வமைப்புகள் இதனை வலியுறுத்தின.  இலங்கை இனப் பிரச்சினைக்காக சமாதனச் தீர்வில் புலம்பெயர்ந்தவர்களையும் ஈடுபடுத்தும் முதலாவது நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

"இனப்பிரச்சினைக்கான தீர்வும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்"

"இனப்பிரச்சினைக்கான தீர்வும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்"
                                                                             (உயிர்நிழல் சஞ்சிகையிலிருந்து  )


"இனப் பிரச்சினை என்பதனை எப்போதும் ஒரே பரிமாணத்தில் வைத்துப் பேச முடியாது  பிரச்சினைகளும் தீர்வும் ஒரு சமன்பாட்டுக்கு உடபட்டதல்ல " எஸ்.எம்.எம்.பஷீர்
 
" "இனப்பிரச்சினைக்கான தீர்வும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்"  பற்றிப் பேசிய எஸ்.எம்.எம்.பஷீர் , இனப் பிரச்சினை என்பது ஒரு நிரந்தரமான ஸ்திரத்தன்மை கொண்டதல்ல என்றும் அது அந்தந்த இனங்களின் , மாநிலங்களின் , இன்னும் பண்பாடுகளிற்கேற்ப அதற்கான பரிமாணங்களைக் கொள்ள முடியும்  என்றும் எனவே இனப் பிரச்சினை என்பதனை எப்போதும் ஒரே பரிமாணத்தில் வைத்துப் பேச முடியாது எனவும் பிரச்சினைகளும் தீர்வும் ஒரு சமன்பாட்டுக்கு உடபட்டதல்ல என்றும் கருத்துத் தெரிவித்தார். 

“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!” தொடர்: பதினொன்று


சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!
                                                                               தொடர்:  பதினொன்று 
எஸ்.எம்.எம்.பஷீர் 
"என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி யார் பெறுகிறார்கள்  என்பதே அரசியல் "     ஹரல்ட் லாஸ்வெல்

முதற் கோணல் முற்றும் கோணல்

காரியப்பருக்கு ஏற்பட்ட க(ச)தி பற்றியும் எழுத முன்னரே காரியப்பரே சில தகவல்களை வெளிப்படையாகவும் சொல்லிவிட்டார்

நிஸாம்: இரவு எடுத்த முடிவை அடுத்த நாள் காலையில் நடைமுறைப்படுத்துவதற்கு திராணியற்ற தலைமைத்துவம் இரண்டு வருடங்கள் கழித்து இதனை நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கை என்னிடம் இல்லை.

ஆங்கிலத்தில் சம்பந்தப்பட்டவர் ஒரு விஷயம் பற்றி நேரடியாக அறிந்தவர் கூற கேட்டால் அதை குதிரையின் வாயிலிருந்து கேட்டதாக சொல்லுவார்கள். அந்த வகையில் அவர் பத்திரிக்கையாளர்களின் சில கேள்விகளுக்கு அளித்த பதிலைப் பார்த்தால் அதனை நன்கு புரிந்து கொள்ளலாம்.

கள்ளியங்காட்டு க (தை)தா நாயகன் பித்தன் ஷா (கலந்தர் லெப்பை முஹம்மது ஷா ( 31. 07.1921 – 15.12.1994): ஒரு நினைவோட்டம்

எஸ்.எம்.எம்.பஷீர்

 

உண்மையும் உருவமற்றுப் போய்விட்டதோ? எல்லாமே பைத்தியக்காரத்தனம் சீ…!”-  பித்தன்    (பாதிக் குழந்தை)

மட்டக்களப்பு கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனியில் வாழ்ந்து , உள்நாட்டில் ஏதிலியாகி அங்கேயுள்ள முஸ்லிம் மையவாடியில் அடக்கப்பட்ட (கிழக்கிலங்கையின் சிறு கதை இலக்கிய முன்னோடியான மறைந்த பித்தன் ஷா மரணித்து இன்றுடன்  பதினேழு   வருடங்களாகின்றன. கள்ளியங்காட்டு கிராமத்தின் உயிர்நாடியாய் திகழ்ந்த கிழக்கின் முஸ்லிம் சிறுகதை இலக்கிய பிதாமகனை   கள்ளியங்காடு முஸ்லிம் மக்களின் பள்ளிவாயலும் இறுதியாய் இழந்து போன இன்றைய நிகழ்வுகளை நினைவில்  கொண்டு நினவு கூர்கிறேன்  )

கிழக்கிலங்கையின் மூத்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவரான கலந்தர் லெப்பை மீராஷா தனது இயற்பெயரால் அறியப்பட்டதைவிட  தானே தனக்கு சூட்டிக்கொண்ட  பித்தன் ஷா எனும் அடைமொழிப் பெயருடன்தான் அதிகம் தமிழ் இலக்கியப்பரப்பில் நன்கு அறியப்பட்டவர்.

முஸ்லிம் கொலனி (கள்ளியங்காடு) பள்ளிவாயலின் முந்திய கதையும் பிரம்ம குமாரிகள் நிலையத்தின் பிந்திய கதையும்


                                எஸ்.எம்.எம்.பஷீர் 

"வந்தாரை வாழ வைத்து
சொந்த மண்ணில் பிறந்தாரை
சாகடிக்கும் சிங்காரமான
மட்டக்களப்புச் சீமையான்
வேறு என்ன சிரைப்பான்"
                           (  மறைந்த கிழக்கு கவிஞன்  வீ ஆனந்தன்)

கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனி பள்ளிவாயல் முன்னாள் தலைவர் ஒருவர் நிறைவேற்று ஜனாதிபதிக்கு அனுப்பிய முறைப்பாட்டினை அடுத்து ஜனாதிபதியின் செயலாருக்கான , உதவிச் செயலாளர் அன்டன் பெரேரா காணி ஆணையாளர் நாயகத்துக்கு  அந்த முறைப்பாடு தொடர்பில் தலையிட்டு அமுலில் இருக்கும் விதிகள் ஒழுங்குகள்  பிரகாரம் விவகாரத்தை தீர்ப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருந்தார். அதன் பிரதி மட்டக்களப்பு பிரதேச செயலாளருக்கு அவசியமான நடவடிக்கைகளுக்கும் முறைப்பாட்டாளருக்கும் அனுப்பப்பட்டிருந்தது.

சிதைக்கப்படும் சதாம் ஹுசைன் கிராமத்தின் கதை !



 
எஸ்.எம்.எம்.பஷீர்

"உங்களை நான் இராக்கியனாக இருக்க வேண்டுகிறேன்,
எனக்கு மரணம் எனத் தீர்ப்பளித்தால்,
என்னை ஒரு பொது குற்றவாளிபோல் தூக்கிலிடக் கூடாது , நான் ஒரு இராணுவத்தினன் என்னை சுடும் படையணியினால் சுட்டுக் கொல்ல வேண்டும்  "
 (  சதாம் ஹுசைன் தன்னை விசாரித்த நீதிபதிகளிடம்  கூறியது) .

ஏறாவூரின் வட மேற்கு எல்லை கிராமமாக அமைந்துள்ள சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயரை இராக் கிராமம் என்று மாற்றம் செய்யப் போவதாக செய்தி வந்து, அதுவும் அப்படி பெயர் மாற்றினால்தான் இராக் அரசாங்கம் நிறுத்தி வைத்திருந்த உதவிகளை மீண்டும் பெற முடியும் என்ற காரணம் வேறு சொல்லப்பட்டது. அதனை தொடர்ந்து ஓரிரு தினங்களின் பின்னர் ஏறாவூரிலுள்ள ஈராக் கிராமத்திற்கு இங்கையிலுள்ள ஈராக் தூதுவர் ஹக்தான் தாகா கலப் செவ்வாய்க்கிழமையன்று (29.11.2011) விஜயம் செய்தமை , அங்குள்ள மக்களுக்கு உதவி செய்யப் போவதாக வாக்குறுதியமைத்தமை "மணியோசை வரும் முன்னே யானை வரும் பின்னே" எனும் கதையை சொல்லாமல் சொல்லி நின்றது.

Paarvaikal-எஸ்.எம்.எம்.பஷீர்

 DAN தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை (25-11-2011) இடம்பெற்ற பார்வைகள் நிகழ்ச்சியில் கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த நிலையத்தில் நடைபெற்ற நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் தொடர்பான மாநாட்டில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க நடவடிக்கைகள் சம்பந்தமாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன, இந்த நல்லிணக்க நடவடிக்கைகள் சம்பந்தமாக எமது நேயர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட பார்வைகள் நிகழ்ச்சியை நீங்கள் இங்கு காணலாம்


கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் 

நிறைவேற்று ஜனாதிபதியின் ஆணையும் நீர்த்துப்போன கள்ளியங்காட்டு முஸ்லிம்களின் பிரச்சினையும்





எஸ்.எம்.எம்.பஷீர்

"சுவாமி விபு லாநந்தர் யாழிசைநூ லோலிக்கும்
மஞ்சாரும் பொழில்மட்டு மாநாட்டில் நிலைக்கும்
வாழ்வுடையோர்க் கவர்மனம்போல் மனவளமும் இனிதே"

                             -புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை-



மட்டக்களப்பு கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனியில் முஸ்லிம் மக்களின் வழிபாட்டுத்தலமான பிர்தௌசியா பள்ளிவாயல் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக அங்கு ஒரு ஹிந்து தியான மண்டபம் பிரம குமாரிகள் ராஜ யோக நிலையம் என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டு இரு வாரங்கள் ஓடிவிட்டன. அது கிளப்பிய சலசலப்பு ஓய்ந்து விட வேண்டும் என்று பலர் எண்ணுவது , கருத்துப்பகிர்வு செய்வது , அதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என்றவகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க அங்கு காலங்காலமாக வாழ்ந்த சிலர் தங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற அங்கலாய்ப்புடன் ஓயாமல் தமது உரிமையை நிலைநாட்ட உறுதியாக செயற்பட்டு வருகின்றனர். ஒரு சமூகத்தின் வழிபாட்டுத்தலம் , ஒரு சமூகத்தின் வரலாறு அடிச்சுவடு தெரியாமல் கள்ளியங்காட்டில் அழிக்கப்பட்டிருக்கிறது,

Demolished Kalliyankaadu (Muslim Colnony )Mosque - Masjithul Firthoz -Batticaloa


THEN AND NOW!! (அன்றும் இன்றும்!!)


அன்றைய  மஸ்ஜிதுல் பிர்தௌசியா  தகர்த்தெறியப்பட்டு இன்று அப்பள்ளிவாயல் இருந்த இடத்தில் பிரேம குமாரி ராஜயோக நிலையம்  கட்டப்பட்டு 9/11/2011 அன்று திறக்கப்பட்டுள்ளது !!!.

 
The Masjithul Firthousiya was demolished to build  a Preama Kumari Rajayoga Centre in its place. !!



 Masjithul Firthoz  (Kalliyankaadu -Muslim Colony)




மஸ்ஜித் எல்லை சுவர்
(Masjith Boundary wall)
Quran Madrasaa Moulavi with students (At Mosque )
( குரான் போதிக்கும் மதரசா-மௌலவியும் மாணவர்களும் )








NOW 2011
Prema Kumari Rajayoga Centre built over the demolished Mosque
பிரேம குமாரி ராஜயோக நிலையம் -கள்ளியங்காடு மட்டக்களப்பு    











பிர்தௌஸ் பள்ளிவாசல் மீதெழுப்பிய பிரம்ம குமாரிகளின் இராஜ யோக நிலையம்-முஸ்லிம் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் அரங்கேற்றம் !




எஸ்.எம்.எம்.பஷீர் 


"தவறான புரிந்துணர்வுகளால் துன்பங்களும் துயரங்களும் ஏற்படுகின்றன. உண்மையிலேயே அன்பானது தூய உணர்வுகளால் நிறைந்தது. அங்கு எதிர்பார்ப்புகளோ தன்னலமோ, சார்புகளோ, வரையறைகளோ இருக்க முடியாது. ஆகவே அன்பானது குறைகளைப் பார்க்காது பொது நலம் கருதுகின்ற எல்லையற்ற தூய உணர்வுகளால் நிறைந்தது. அன்பை நாம் வழங்கும்போது தான் அதிகரிக்கின்றது. இதனால் நாம் துன்பப்படவோ நம்மால் பிறர் துன்பப்படவோ மாட்டார்கள்.
                                                                - பிரம்மகுமாரி திருமணி- .

கோட்டமுனையில் வாழ்ந்த முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் நகருக்குள் உள்ள இடப்பற்றாக்குறை , அங்கே காணிகள் வாங்குவதில் உள்ள பொருளாதார இயலாமை காரணமாக அரச காணியான கள்ளியங்காடு எனும் பகுதியில் காடு வெட்டி குடியேறிய பகுதிதான் முஸ்லிம் கொலனி எனப்பட்ட கள்ளியங்காடு. கள்ளி மரங்கள் நிறைந்திருந்ததால் இப்பகுதி கள்ளியங்காடு என்ற பெயர் பெற்றிருந்தாலும் முஸ்லிம்களின் குடியேற்றத்தின் பின்னர் முஸ்லிம் தமிழ் சமூகம் அங்கு குடியிருந்தபோது முஸ்லிம் கொலனி என்றே பரவாக அறியப்பட்டு வந்தது. எனினும் பல நூற்றாண்டுகளாக மட்டக்களப்பு புளியந்தீவு, கோட்டமுனை பகுதிகளில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களின் மையவாடியாக கள்ளியங்காடு விளங்கியது, அதுபோலவே ஹிந்துக்களின்  மயானம் , கிறிஸ்தவர்களின் சேமக்காலை ஆகியனவும் அருகருகே கள்ளியங்காட்டில் அமைந்துள்ளன. இங்கே மட்டக்களப்பில் வாழும் மூன்று பிரதான மதத்தை சேர்ந்தோரும் இறந்து போனபின் " சமரசம் " காணும் இடங்கள் அமைந்திருப்பதும் இப்பிரதேசத்தின்ஒரு தனித்துவமாகும். இந்த பள்ளிவாயல் அரசினர் வைத்தியசாலையில் வெளியூரிலிருந்து வந்து வைத்தியம் பெறும் முஸ்லிம் நோயாளிகள் மரணித்தாலோ அவர்களும் அங்கே அடக்கபடுவத்தும் , அப்பள்ளியிலே இறுதி பிரார்த்தனை நடைபெறுவதும் வழக்கமான நடைமுறையாகும். மேலும்  மட்டக்களப்பு புகையிர நிலையத்துக்கு அருகாமையில் இருப்பதால் முஸ்லிம் பயணிகள் பலர் தங்குவதற்கும் இப்பள்ளிவாயல் உதவியிருக்கிறது.  


“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!” ( தொடர்: எட்டு)



                                                                              
 எஸ்.எம்.எம்.பஷீர் 


நாங்கள் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்ட ஒரே ஒரு விடயம் என்னவென்றால் நாங்கள் அனுபவத்திலிருந்து  ஒன்றையும் கற்றுக் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான்”     - சின்னு அச்சபே -

”The only thing we have learnt from experience is that we learn nothing from experience.”  ( Chinua Achebe)



ஹிஸ்புல்லாவின் நாடாளுமன்ற செயலாளர் இப்திகார் செய்த போலீஸ் முறைப்பாடும் அதனை தொடர்ந்த சட்ட நடவடிக்கைகளும் சடுதியாக நிறுத்தப்பட்டுப் போயின. வழக்கும் கைவிடப்பட்டுப் போயிற்று. இந்நிலையில் முஹைதீன் அப்துல் காதர் ஏமாற்றமடைந்தார். ஹிஸ்புல்லாவிற்கு எதிரான ஒரு துரும்பாக கருதிய குற்றவியல் வழக்கு கைநழுவிப் போனதால் , அஸ்ரப் மீதும் கட்சி மீதும் அப்துல் காதர் நபிக்கை இழந்து போனார். ஆகவே அவரின் ஊர்க்காரர்கள் கட்சியை விட்டு விலகி அஸ்ரபுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று மொஹிதீனுக்கு ஆலோசனை வழங்கினர். தனது மக்களின் அரசியல் சமூக தேவைகளை நிறைவேற்ற வேண்டிய தேவையும் மொஹிதீனுக்கு ஏற்பட்டது. ஏனெனில் பெரும்பான்மையான ஓட்டமாவடி மக்கள் காலங்காலமாக முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சராகவிருந்த கே டப்ளியு .தேவநாயகம் என்பருக்கு இன பேதமற்று கல்குடா தேர்தல் தொகுதியில் வாக்களித்தவர்கள் . அதுமட்டுமல்ல தமிழரசுக் கட்சி தமிழர் கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களை தோற்கடித்து முஸ்லிம்களின் வாக்குகளை கொண்டே  கே டபிளியு தேவநாயகம் அறுபத்தைந்தாம் (1965) ஆண்டு தொடக்கம் கல்குடா தொகுதி இல்லாமல் போகும் வரை அவரே அம்மக்களின் தெரிவாக இருந்தார். ஆனால் இம்முறை புதிய தேர்தல் சட்டத்தின் கீழ் கல்குடாவையும் இணைத்ததாய் விகிதாசாரப் பிரதிநித்திதுவ தேர்தல்   நடைபெற்றதால் தங்களுக்கும் ஒரு முஸ்லிம் பிரதிநிதி வரும் வாய்ப்பை முஸ்லிம் காங்கிரஸின் கணவான் ஒப்பந்தத்தின் மூலம் ஓட்டமாவடி மக்கள் நம்பியிருந்து ஏமாற்றப்பட்டார்கள் . இந்நிலையில் முன்னாள் கப்பற்துறை வணிகத்துறை அமைச்சர் ஏ .ஆர்.எம். மன்சூர் மூலம் தனது ஊர் தேவைகளை நிறைவேற்றி வந்த மொஹிதீன் ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்வாங்கப்பட்டார். இன்னொரு விதமாக பார்த்தால் பிரேமதாசாவின் அனுசரணையும் ஆதரவும் பெற்ற ஹிஸ்புல்லா மற்றும் பிரேமதாசாவுடன் நெருக்கமாக உறவுகொண்டிருந்த அஸ்ரப் ஆகியோரின் ஆபத் பாந்தவனாக விளங்கிய பிரேமதாசாவின் கட்சிக்குள் இவரும் எதோ ஒரு விதத்தில் காரணம் எதுவாகவிருப்பினும் இணைந்து கொண்டார். மொத்தத்தில் பிரேமதாதா எனும் அரசியல் கடலில் அன்று இவர்கள் எல்லோரும் சங்கமமாயினர். புலிகளும் பிரேமதாசாவுடன் இணைந்து அவரின் ஆலோசனைப்படி அரசியல் கட்சி யொன்றையும் விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி”( People’s  Front of Liberation Tigers ) என்ற பெயரில் (1989)  பதிவு செய்தனர்.  1990ம் ஆண்டு தொடக்கத்திலேய  புலிகள் வட கிழக்கில் முஸ்லிம் காங்கிரசின் நடவடிக்கைகளை தடை செய்தனர். மேலும் ஐம்பதுக்கும்  மேற்பட்ட முஸ்லிம்களை (முஸ்லிம் காங்கிரஸ் தீவிர ஆதரவாளர்களை )  தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கைதியாக வைத்திருந்தனர் . அந்த வேளையில் புலிகளுடன் அரச அதிகாரிகளை பேச்சுவார்த்தை நடத்தச் செய்து அவர்களை விடுவிக்க முஸ்லிம் காங்கிரசுக்கு பிரேமதாசா உதவினார் .  ஆக பிரேமதாசாவுடனான நெருக்கம் வலுப்பெற இது போன்ற பல பல காரணங்களை நான் இங்கு கட்டுரையின் நீளமும் , அதற்கான சந்தர்ப்பமும்  (Context) இதுவல்ல என்பதால் தவிர்த்துள்ளேன். பிரேமதாசாவின் புலிகளுடனான உறவே இறுதியில் அவரின் உயிரைப் பறித்தது. புலிகள் யாருடன் சேர்ந்தாலும் எதிர்த்தாலும் அவர்களின் மாறாத குணமே அவர்களைக் கொல்வதே என்பதில் இவரும் சேர்த்தி, பின்னர் சேராதிருந்த அஸ்ரபுக்கும் அதுவே நடந்தது.


யாரை யார் நோகுவது  என்ற இரண்டும் கெட்டான் நிலையில் நிலைமைகள் நடந்தேறினும் மொஹிதீன் தனது முஸ்லிம் காங்கிரஸ் உறவை முற்றாக அறுத்த நிலையில் , ஐக்கிய தேசிய கட்சியுடன் சங்கமமான சந்தர்ப்பத்தில் சேகு  இஸ்சதீனையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அங்கத்துவத்திலிருந்து இடை நிறுத்தியது.

“சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா! “ (தொடர் ஐந்து )




                                                                                                                                         எஸ்.எம்.எம்.பஷீர் 


சிலர் தங்களின் கட்சியை தங்களுடைய கொள்கைகளுக்காக மாற்றிக் கொள்கிறார்கள் ; வேறு சிலர் தங்களின் கொள்கைகளை தங்களின் கட்சிக்காக மாற்றிக் கொள்கிறார்கள் -வின்ஸ்டன் சர்ச்சில் 

( “ Some men change their party for the sake of their principles; others their principles for the sake of their party.”-Winston Churchill )
 

        

எப்போதுமே தேர்தலின் பின்னர் ஹிஸ்புல்லாஹ் தன்னை எம்.எல்.ஏ .எம்.ஹிஸ்புல்லாஹ் என்றுதான் எழுதிக் கொள்வார் அல்லது எழுதுவதை , அவ்வாறே சகல ஆவணங்களிலும்  வெளிவருவதை வழக்கமாக்கி கொண்ட ஹிஸ்புல்லாஹ் அந்த தேர்தலின் பின்னர் ஆலிம் முஹம்மத் ஹிஸ்புல்லாஹ் எம்.எல் என்று தனது தகப்பனின் தொழிலை முன்னிறுத்தி , எழுதினாலும் தனது பெயரை அவ்வாறு வேறு அதிலும் எங்கும் அவர் பயன்படுத்துவதில்லை. நாடாளுமன்ற எம்.பிக்கள் பட்டியலிலும் அவரின் பெயர் ஹிஸ்புல்லாஹ் எம.எல்.ஏ .எம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. '' ( A- ஆலிம் என்பதை குறிக்கும் முதல் எழுத்து ) அவரின் இனிஷியலிலும் (Initials-  தலைப்பெழுத்துகள் ) மூன்றாவது இடத்திலே பயன்படுத்தப்படுவதை யாரும் அவதானிக்காமல் இருக்க முடியாது. இதை ஏன் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றால் ஹிஸ்புல்லாஹ் ஆரம்பம் முதலே அரசியலில் தனது சூட்சுமங்களை பயன்படுத்தி அரசியல் செய்து வருபவர் என்பதை சுட்டிக் காட்டவேயாகும்.

Sign e-petition for Babar Ahmad

Sign e-petition for Babar Ahmad

The campaign to release south London IT worker Babar Ahmad is asking supporters to sign an e‑petition which demands he should be tried in Britain.
Babar has been held without trial for more than seven years as he fights extradition to the US on trumped up terrorism charges.
Over 40,000 people have signed the petition so far.
His campaign says, “If we make the 100,000 mark it will be a huge symbolic victory and cause major embarrassment to the government.”
Sign the petition at www.letsgetjustice.com

காவு கொள்ளப்பட்ட கடாபியும் , கற்பனை ராச்சியங்களும்

      
 
 


 
எஸ்,.எம்.எம்.பஷீர்


கேணல் முஅம்மர் கடாபி கொல்லப்பட்ட செய்தி காட்டுத் தீபோல்  திகதி உலக ஊடகங்களில் இப்போது பரவி ஆக்கிரமித்திருக்கிறது. எங்கும் எதிலும் அது பற்றிய செய்திகள் பரபரப்பாக பேசப்படுகின்றன , விவாதிக்கப்படுகின்றன. கடாபி எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றிய செய்திகளும் பல விதங்களில் சில நிமிடங்களுக்குள் மாறு பட்டே வரத் தொடங்கின . குறிப்பாக முதன் முதலில் மேற்குலக செய்தி ஊடகங்களுக்கு பரவிய செய்தி  கடாபி சென்றதாக சந்தேகிக்கப்பட்ட வாகனத் தொடரணி மீது நேட்டோ படையினரின் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என்பதாகும். பரஸ்பர சண்டையில் ஒரு வீட்டில் குண்டடிபட்டு இறந்ததாகவும் செய்திகள் வந்தன , மிக இறுதியான செய்தியாக கடாபி ஒரு கழிவு நீரோடும் குழாயிலிருந்து சுடப்பட்டதாகவும் , வெளியாகின  , வீட்டில் சுடப்பட்டதான செய்தியின் போதும் கழிவு நீர் குழாயிலிருந்து சுடப்பட்ட செய்தியின் போதும் அவர் தன்னை சுட வேண்டாம் என்று கெஞ்சியதாகவும் செய்திகள் வந்தன. 

அதிலும் குறிப்பாக இறுதியில் வந்த செய்தி என்னவென்றால் கடாபி எதிர்த்து போரிடவில்லை தற்செயலாக -விபத்தாக சுடப்பட்டார். ( ஒசாமா பின் லாடனையும் ஆரம்பத்தில் தாக்குதல் நடத்த முற்பட்டார் என்றும் பின்னர் அவர் தங்களை தாக்க முற்படவில்லை என்றும் செய்திகள் வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.)   இந்த செய்திகள் எல்லாம் இப்போதைக்கு வேண்டாம் ; கடாபி கொல்லப்பட்டுவிட்டார் ; சர்வாதிகாரி ஒழிந்து விட்டான் என்பதுதான் தேவையான செய்தி என்று மேற்குலக ஊடகங்கள் சமரசம் செய்து கொண்டன. ஆனால் சில மேற்குலக செய்திகளின் நம்பக தன்மைக்கு சவால் விடும் சில சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் ஓரிரு செய்தி ஊடகங்கள் மெதுவாகவேனும் கடாபி எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்து கேள்வி எழுப்புகின்றன. அந்த வகையில் இறுதியாக சர்வதேச மன்னிப்பு சபையும் இடைக்கால தேசிய சபை கடாபி கொல்லப்பட்டது குறித்து ஒரு சுயாதீன விசாரணை செய்யவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளது. லிபியாவின்  இடைக்கால தேசிய சபையின் பேச்சாளர்கள் அமைச்சர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசத்தொடங்கி உள்ளார்கள்.
.
மேலும் சர்வதேச மன்னிப்பு சபை நேட்டோ நாடுகளின் குடிமக்கள் மீதான தாக்குதல்களை ஆப்கானிஸ்தானிலோ அல்லது லிபியாவிலோ ஆக்ரோஷமாக கண்டிக்கவில்லை என்பது ஒரு புறமிருக்க கடாபியின் மரணம் ( ஆயுதம் வைத்திருக்காத , எதிர்த்து சண்டைபுரியாத ஒருவரை விபத்தாக கொன்று விட்டோம் என்பதன் மூலம் கொலையை இடைக்கால தேசிய சபை மறைமுகமாக ஒத்துக் கொண்டிருக்கின்ற வேளையிலும் ) அடக்குமுறைக்கும் துஷ்பிரயோகத்துக்கும்   குறிப்பட்ட லிபியாவின் வரலாற்று  அத்தியாத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வரினும் கதையை முடிக்கவில்லை என்றும் (The reported death of Colonel Mu'ammar al-Gaddafi would bring to a close a chapter of Libya's history marked by repression and abuse but does not end the story,) சூசகமாக கடாபியின் கொலை சம்பந்தமாக விசாரணையின் தேவைப்பாட்டையும் வலியுறுத்துகிறது. இதுவரை நேட்டோ நாடுகளின் குண்டுத்தாக்குதல்களினாலும் , லிபிய ஆயுத புரட்சியாளர்களினாலும் கொல்லப்பட்ட சித்திரவதை செய்யப்பட்ட  குடிமக்கள் கடாபி ஆதரவாளர்கள் பற்றிய தகவல்கள் கசிந்தவன்னமிருக்கின்றன. மேற்குலக மனித உரிமை நிறுவனங்கள் சிலிர்த்து எழுந்து சீண்டும் திராணியற்றவை என்பதால் நேட்டோ அலட்டிக் கொள்ளப்போவதில்லை , ஆக மிஞ்சினால் ஒரு விபத்து நிகழ்வாக மன்னிப்பு கேட்டுவிட்டால் போதும். அதைத்தான் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் செய்து வருகிறார்கள்.  

தர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகாசம் (பகுதி நான்கு)

எஸ்.எம்.எம்.பஷீர்


2009 ஆம் ஆண்டு மத்திய பகுதியில் வேருவளையில் உள்ள இரண்டு முஸ்லிம் குழுக்கள் கொள்கை அடிப்படையில் தங்களுக்குள் முரண்பட்டு கருத்துக்களால் மோதி , இறுதியில் ஒரு பகுதியினர் வன்முறையை கையாண்டு மற்ற பகுதியினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் இலங்கையில் புதிய சம்பவம் அல்ல. முஸ்லிம்களுக்கிடையே சிறு சிறு அளவில் கொள்கை முரண்பாடுகள் சிறு சிறு கைகலப்புகள் என பல நெடுங்காலமாக இடம் பெற்றே வந்திருக்கின்றன. ஆனால் அவற்றில் பல வக்ப் மன்றில் (Wakf Board) அல்லது ஜம்யித்துள் உலமா எனும் தேசிய முஸ்லிம் மத அறிஞர்கள் சபையில் முறையீடுகளுக்கும் விசாரனைகளுகுமாக கொண்டு வரப்பட்டு எதோ ஒரு விதத்தில் தீர்க்கப்பட்டு , அல்லது கைவிடப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட ஸ்திரமான மத பிரிவினர் என்ற வகையில் காத்தான்குடி அப்துர் ரவூப் மிஸ்பாகி என்பரின் கொள்கையை பின்பற்றுவோர் எண்பதுகளின் ஆரம்பத்தில் மிகுந்த சவாலாக பிரதான முஸ்லிம் பிரிவினருக் கெதிராக திகழ்ந்தனர். இன்றும் அவர்கள் காத்தான்குடியில் ஒரு மதப் பிரிவினராக செயற்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கும் பிரதான முஸ்லிம் பிரிவினர்களுக்குமிடையிலான சச்சரவுகள் இன்றுவரை நிலவினாலும் இவ்விரு பிரிவினருக்கு மிடையே ஒருவித சமாதான நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான முக்கிய காரணம் அங்கு நிலவும் அரசியலுமாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்துர் ரவூப்பின் பிரிவினரும் கந்தூரி (சடங்கு விருந்து வழங்கல்) கொடியேற்றம் , தர்கா சார்ந்த செயற்பாடுகள் அனுஸ்டானங்கள் பலவற்றை செய்பவர்களுமாவார்கள். அதேவேளை காலங்காலமாக செயற்பட்டுவந்த ஆதரமற்ற , பிற மதங்களிலிருந்து உள்வாங்கப்பட்ட அனுஷ்டானங்கள் பலவற்றை கேள்விக்குட்படுத்தும் மத தூய்மை வாதம் மேலெழுந்து வரும் பின்னணியில் பல சம்பவங்கள் ஓரிரு கொலைகள் உட்பட நடைபெற்றன , அவற்றில் குறிப்பிடத்தக்க சம்பவங்களாக , சூபி தியான மண்டபம் ஒன்று காத்தான்குடியில் நிர்மூலமாக்கப்பட்டது தொண்ணூற்றி ஆறாம் ஆண்டில் , பயில்வானின் ஊர் பிரதிஷ்டம் செய்யப்பட்ட கொள்கையாளர்கள் உச்ச நீதிமன்ற கட்டளையுடன் மீண்டும் ஊர் திரும்ப நேரிட்டது. மத்திய மாகாணத்தில் உக்குவளையிலும்(மாத்தளை) நூற்றி ஐம்பது வருட தொன்மை வாய்ந்த சியாரம் ஒன்று மாசி மாதம் இரண்டாயிரத்து ஒன்பதில் தகர்க்கப்பட்டது. ஆக முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் தொன்மை வாய்ந்த முஸ்லிம்களின் (தங்களின்) வரலாற்று அம்சங்களாக சுட்டிக்காட்டப்படும் தலங்களை தகர்த்தெறிந்தனர். காத்தான்குடி குழந்தை உம்மா கபுரடிக்கும் (சியாரம்) இந்த நிலையே ஏற்பட்டது.வேருவளையிலும் ஜூலை மாதம் 2009 ஆம் ஆண்டு உள் மத வன்முறை ஏற்பட்டது. அதற்கான கொள்கை முரண்பாட்டு சூழல் இரு புறமும் நிலவியற்கு அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தவ்ஹீத் பள்ளிவாசல் ஒன்றின் மீது அக்கொள்கைக்கெதிரானவர்கள் , 2002 ஆம் ஆண்டு அப்பள்ளிவாசல் திறந்து வைக்கும் நிகழ்வையொட்டி கைக்குண்டு வீசி பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருந்தனர்.சில தர்காக்கள் மசூதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.


“ஷேய்க் பிரபாகரன் “!!

நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த தீப்பொறி வேருவளை வன்முறையில் வெளிப்பட்டு. வேருவளை காதிரிய்யா பிரிவினரின் பள்ளியான புகாரி பள்ளிவாசல் பிரிவினர் ரகுமான் பள்ளிவாசலில் இரவில் கூடியிருந்த மக்கள் மீதுஅங்கிருந்த மின்சாரத்தை இருளச்செய்து (புலிகள் காத்தான்குடியில் பள்ளிவாசல் கொலைகளில் செய்த பாணியில்) அங்கு சென்று கத்தி வாள் தடி கொண்டு அங்கு கூடியிருந்தோரை தாக்கி அங்கிருந்த சொத்துக்களுக்கும் அழிவு ஏற்படுத்தினர். அந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர் . இலங்கையில் பொலிசாரால் ஒரே சம்பவத்துக்காக அதிக எண்ணிக்கையோரான 131 நபர்கள் தடுத்துவைக்கப்பட்ட நிகழ்வு இதுவென பத்திரிகைகள் குறிப்பிட்டிருந்தன. இந்த தாக்குதலின் சூத்திரதாரராக கருதப்பட்ட மௌலவியை பாதிக்கப்பட்ட தரப்பினர் அவரின் புலிகளை ஒத்த பயங்கரவாத செயலுக்காய் “ஷேய்க் பிரபாகரன் “ என்று கண்டித்திருந்தனர். ஆக மொத்தத்தில் தர்க்காக்கள் இலங்கையில் சர்ச்சைக்குள்ளாவது அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதுடன் அதனை நீக்கிவிடுவது அல்லது அங்கு பள்ளிவாசலை நிறுவி வேறு விதத்தில் முஸ்லிம் மத பாரம்பரியத்தை தக்க வைத்து கொள்வது பற்றிய செயற்பாடுகளும் சில இடங்களில் இடம்பெற்று வருகின்றதும் குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய நாகூரில் அடக்கப்பட்டுள்ள சாகுல் ஹமீத் என்பரின் சமாதியின் பிரதியீடாக கருதப்பட்டு கல்முனைக்குடி கடற்கரை பள்ளி செயற்பட்டு வருகிறது. நாகூரில் நடத்தப்படும் சடங்க்குளின் நம்பிக்கைகளின் அடிப்படையில் வருடந்தோறும் கொடியேற்றி இங்கும் பல நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இப்போது இப்பள்ளியும் சர்ச்சைக்குரியதாகி வருகிறது. என்றாலும் கிழக்கில் தர்கா சடங்குகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இப்பள்ளி -ஒரு தர்கா- செயற்பாட்டுடன் செயற்பட்டு வருகிறது. இந்த பின்னணியில் தனி மனித சமாதிகள் சில இன்னமும் முந்திய முக்கியத்துவம் இழந்திருப்பினும் முழுமையாக செல்வாக்கிழக்கவில்லை என்பதால் தனி மனித முக்கியத்துவத்தை முதன்மை படுத்தும் , சடங்குகளை சமய நம்பிக்கைகளை பின்பற்றும் பகுதியினருக்கு எதிராக தூய்மைவாத அடிப்படை சமய கொள்கையாளர்கள் தொடர்ந்தும் கருத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போர்வை தர்கா மீதான தாக்குதல்கள் ( !0-03-2009)

புலிகளின் அந்திம கால தாக்குதல்கள் பலவற்றில் அரசியல் வாதிகளை இலக்கு வைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்காகவிருந்தது. கொடபிட்டியாவில் நடைபெற்ற மீலாதுந்நபி நிகழ்சிகள். அது நடைபெற்ற இடத்துக்கு அண்மையிலான தர்கா அமைந்திருந்ததால் புலிகளின் தாக்குதல் இடம்பெற்ற இடத்தின் மூலம் அத்தாக்குதல் ஒரு தர்காவை அண்மிய பிரதேசத்தில் இடம்பெற்றதன மூலமும் அது ஒரு முஸ்லிம் சமய கலாச்சார நிகழ்வு என்றவகையில் புலிகளின் முஸ்லிம்கள் மீதான தாக்குதலாக கொள்ளப்படவும் வேண்டும் (இது பற்றிய எனது முன்னைய கட்டுரை( http://www.bazeerlanka.com/2011/05/blog-post_25.html) முஸ்லிம்களை யாழிலிருந்து வெளியேற்றிய இளம்பருதியின் யாழ் முஸ்லிம்களின் மீலாதுன் நபி நிகழ்வுடன் ஒப்பீடு செய்து பார்க்க முடிகிறது). ஆனால் இந்த கொடபிட்டிய பகீர் முஹித்யதீன் தர்கா கூட 1915 கலவரத்தில் சிங்கள பௌத்த தாக்குதலுக்கு உள்ளாகியதும் பின்னர் பிரித்தானிய அரசு (சுதந்திரத்துக்கு முன்னர்) அதனை மீள கட்ட உதவியதும் செய்திகளாகும்.

கோட்டமுனை அப்பா சியாரம்

ஒரு உதராணத்துக்கு (நீண்ட கட்டுரையை தவிர்ப்பதற்காக ) மட்டக்களப்பின் நகர மத்திய பகுதியில் உள்ள வாவிக்கரை ஓரமாக அமைந்துள்ள கோட்டமுனை பள்ளி அல்லது கோட்டமுனை அப்பா சியாரம் எனும் சியாரம் பற்றிய கர்ணபரம்பரை கதைகள் , நேரிடையாக அறிந்த சம்பவங்கள் என்பவற்றின் மூலம் சியாரம் எவ்வாறு உருவாகிறது / உருவானது , அதனோடு தொடர்புபட்ட ஐதீகங்கள் , நம்பிக்கைகள் , நடைமுறைகள் ஏனைய பல நாடெங்கிலுமுள்ள தர்க்காக்களை -சியாரங்களை -பற்றிய ஒரு பார்வையினை ஒப்பீட்டு அடிப்படையில் செலுத்தமுடியும் கோட்டமுனை வாவியில் ஒரு சடலம் கரை ஒதுங்கியதாகவும், அதனை கரை சேர்க்க அதனைக் கண்ட தமிழ் மீனவர்கள் முயன்றபோதும் அச்சடலம் கை நழுவிச் சென்றதாகவும் பலமுறை முயன்றும் முடியவில்லை என்றும் அதே வேளை , அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த முஸ்லிம் மீனவர்கள் அச்சடலத்தை கரைக்கு கொண்டு வர முடிந்ததாகவும் அதனால் அவர்கள் அந்த சடலத்தை இஸ்லாமிய முறைப்படி வாவிக் கரையினை அண்மிய காணியில் அடக்கம் செய்ததாகவும் அன்றிலிருந்து அச் சடலம் அடக்கப்பட்ட இடம் ஒரு மகானின் சமாதி அந்தஸ்துடன் போற்றப்பட்டு வருகிறது ,: என்று . சுமார் மூன்று நான்கு தலைமுறைக்கு முற்பட்ட கதை ஒன்று உலவுகிறது.


அதிலும் குறிப்பாக அச்சமாதி உள்ள இடம் ஒரு தமிழ் வழக்கறிஞருக்குரியது என்றும் , அவர் அந்த சடலம் அடக்கப்பட்ட போது அதன் தலைமாட்டில் , கால்மாட்டில் நடப்பட்டிருந்த கற்களை (முஸ்லிம்கள் இறந்தவர் அடக்கப்பட்ட இடத்தில் , அடக்கப்பட்டவரின் கால் மாட்டிலும் தலைமாட்டிலும் இரண்டு சிறிய பலகைகளை (மீசான் கட்டை) நடுவதுண்டு-ஆனால் அங்கு அவர்கள் இரண்டு கற்களை நட்டிருந்தார்கள் ) அகற்ற அவர் யானை ஒன்றினை கொண்டு கட்டி இழுத்த போதும் முடியாமல் போனதாகவும், அதனால் அந்த காணியை தனது காணியிலிருந்து நீக்கி , அங்கு அந்த சியாரம் இருக்க அனுமதித்ததாகவும் கதை உண்டு. ஆனால் அங்கு முன்னரைபோலவன்றி முஸ்லிம்கள் பெருமளவில் விஜயம் செய்வது , தரிசிப்பது , சடங்குகள் செய்வது என்பன அருகிவருகின்றன. மட்டக்களப்பு நகர்புற மக்களில் சிலரும் காத்தான்குடி ரவூப் மிஸ்பாகி கொள்கையை பின்பற்றும் காத்தான்குடி மக்களில் சிலரும் இங்கு வருடந்தோறும் நடைபெறும் கொடியேற்ற , கந்தூரி வைபவங்களில் கலந்து கொள்கின்றனர். கொட்டமுனையை சுற்றியுள்ள தமிழ் மீனவர்களும் இச்சியாரத்துக்கு நேர்ச்சை –நேர்த்திக்கடன்- வைப்பவர்களாகவும் காணிக்கை செலுத்துபவர்களாகவும் உள்ளனர். இங்கு இப்போது நடைபெறும் சடங்குகள் கல்முனைக்குடி கடற்கரை பள்ளியோடு ஒப்பிடும் போது சிறிய அளவிலே நடைபெறுகின்றன. தொடரும்

தர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகாசம் ( பகுதி மூன்று )



எஸ்.எம்.எம்.பஷீர்  

ஒரு முஸ்லிம் நபரின் அடக்கஸ்தலம் (ஸியாரம்)  தனித்தே எங்கேனும் காணப்பட்டு , அந்த சமாதி தனிப்பட்ட வகையில் முக்கியத்துவமளிக்கப்பட்டு விஷேட  மரியாதைக்கு குரியதுமாக ஆக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு விழாக்களும் சடங்குகளும் செய்யப்பட்டாலோ அல்லது இறந்த அந்த சமாதியிலுள்ள மனிதரின் பிரார்த்தனைகள் அல்லது அவரின் சமாதியை தரிசிப்பது  ஆத்மா ஈடேற்றம் தரும் செயல் என கருதப்படும் வகையில் ஏதேனும் நடைமுறைகள் பின்பற்றப்படும்  பின்னணியில்தான் தர்க்காக்கள் உருவாகின்றன.  அவ்வாறான சமாதியை தரிசிப்பதும் அங்கு பிரார்த்தனைகள் புரிவதும் ஓர் இறை நம்பிக்கைக்கு   மாற்றமானது என்ற கருத்து கொண்டோர் இவ்வாறான தர்க்காக்களை தர்கத்துக் குள்ளாக்கி வருகின்றனர். கல்வி வளர்ச்சியுற்ற நிலையில் , மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு அதிகரித்த நிலையிலும்  தொழிநுட்ப வளர்ச்சியும் அதனால் மத அறிவுத்தேட்டம் இலகுவாக்கப்பட்டுள்ளமையும் தர்க்காகளை மட்டுமல்ல இஸ்லாம் என்ற பெயரில் செய்யப்படும் பல வழிபாட்டு அனுஷ்டான முறைகளை கேள்விகுள்ளாக்கியுள்ளது .
பிற சமயங்களின் அனுஷ்டான தனிமனித வழிபாடு சடங்குகள் செல்வாக்கு முஸ்லிம் மதத்துள்ளும் மனித இயல்புகளுக்கும் பலவீனங்களுக்கும்  அமைவாக  முஸ்லிம்களுக்குள்ளும் ஊடுருவத்தொடங்கிய வரலாறும் மிக பழமையானது. இஸ்லாமிய பரம்பல் பல நம்பிக்கைகள் கொண்ட சமூகத்துள் , நாடுகளுள் பரவிய போதும் அவர்கள் பின்பற்றிய கலாச்சார நம்பிக்கைகள் என்பவற்றையும் முழுமையாக தவிர்க்க முடியாது போன சூழ்நிலையிலும்  இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கை தொடர்பான பிறழ்வாக அவை பின்பற்றப்பட்டு வருகின்றன. 

அந்த பின்னணியில் தர்க்கா சார்ந்த விவகாரங்கள் , அதற்கெதிரான மதப்பிரிவினரால் சர்ச்சைகுள்ளாக்கப்பட்டு வருகின்றன. தனி மனிதரை அவர் கொண்டுள்ள்ள  தவிர இறைநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு  இறைத் தரகனாக காட்டும், அதிலும் குறிப்பாக அந்த மனிதரின் இறப்பின் பின்னர் அந்த நம்பிக்கையின் அடிப்படையில்   சமய அனுஷ்டானங்கள் செய்யும் பின்னணியில்தான் தர்க்காக்களில் அமைந்துள்ள  பல சியாரங்களில் தனிமனித வழிபாட்டை அல்லது அதனை சார்ந்து பின்பற்றப்படும் கிரிகைகளை ஊக்குவிப்பனவாக கண்டு கொண்டதால் அவற்றினை நீக்கும் அல்லது புறந்தள்ளும்  முயற்சிகள் சில இடங்களில் இடம்பெற்றன. அந்த வகையில்தான் பல உள்ளார்ந்த மத முரண்பாடுகள் அண்மைக் காலங்களில் அவதானிக்கப்பட்டன. ஆயினும் கருத்து முரண்பாடுகள்  முஸ்லிம் சமூகத்தில் தோற்றுவித்த பகை முரண்பாடுகளால் சில அழிவுகளும் ஏற்பட்டுள்ளன. சியா சுன்னி சமய பிரிவுகளிடேயே ஏற்படும் பரஸ்பர அழிவுகள் உலகின் பலரும் அறிந்த செய்தி. அங்கும் அடிப்படையில் தனிமனித முக்கியத்துவமே மூல காரணமாக பிரிவினைக்கு வலி வழி கோலியது. 

அந்த சூழ்நிலையில் தான் காத்தான்குடி பயில்வானின் அடக்கப்பட்ட உடலும் அவர் நிர்மாணித்த தர்காவில் அடக்கம் செய்யப்பட்டு எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட சமாதி முக்கியத்துவத்தை தவிர்க்கும் வகையில் பிரதான சமய அடிப்படைகளை பின்பற்றும் பெரும்பான்மை சமயப்பிரிவினரில் உள்ள அதி தீவிர எதிர்ப்பாளர்களால் பயில்வானின் கொள்கைகளை பின்பற்றுபவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.  அடிப்படை இஸ்லாமிய பண்பியல்புகளுக்கு எதிராக சட்டத்தை தமதாக்கி கொண்டு அத்தகைய செயல் எதிர் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது.  அதன் விளைவாய் பயில்வானை பின்பற்றிய சிலரின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. எனினும் இந்த நிகழ்வுகளை தமிழ் ஆங்கில சிங்கள பத்திரிகைகள் தங்களின் சுய வியாக்கியானங்களுடன் வஹாபிகள் , ஜிகாதிகள் என்றெல்லாம் பெரும்பான்மை முஸ்லிம் சமய வழிபாட்டாளர்களை தீவிரவாதியாக்கினர். அதற்கான இன்னுமொரு முக்கிய காரணம் , முஸ்லிம்களுள் உள்ளோரே தமது எதிர் கருத்தாளர்களை அவ்வாறே அடையாளப்படுத்தியே தம்மையும் தமது கொள்கைகளையும்  பாதுக்காக்கவும்  முற்பட்டனர்.

முஸ்லிம் சமூகத்துள் பிற மத சமூகத்திலிருந்து ஊடுருவி முஸ்லிம் மத நம்பிக்கைகளாய் கலாச்சாரமாய் மாறிப்போன  பல மூட நம்பிக்கைகள் தனிமனித வழிபாடுகள் பற்றிய எதிர் பிரச்சாரங்கள் அதுபற்றிய விழிப்புணர்வு என்பன ஏற்படக் காரணம் தவ்ஹீத் இயக்கம்  வஹ்ஹாபி இயக்கம் ,ஜிஹாதி இயக்கம் என புதிய இயக்கங்கள் ஏற்பட்டிருப்பதுதான்  என ஒரு சாரார் பலி கூறுவதும் அவாறான குற்றச்சாட்டினை ஊடகங்கள் பல செய்தியாக்குவதும் இன்று சாதாரண நிகழ்வுகளாகி விட்டன. ஆனால் இந்த சியாரம் அது அமைந்துள்ள கட்டடமான தர்க்கா , அங்கு நடைபெறும் பிற மத நம்பிக்கைகள் நடைமுறைகள் அனுஷ்டானங்கள் என்பன காலங்காலமாக இலங்கையில் இருந்து வந்திருக்கிறது.  அவற்றிக் கெதிராக சமூகத்துள் கல்விமான்கள் , மதவறிஞர்கள் நீண்ட நெடும் காலமாக பணியாற்றி வந்திருக்கிறார்கள் அவ்வாறான  அறியாமையை மூட நம்பிக்கைகளை எதிர்த்து சமூக மறுமலச்சிக்காக உழைத்திருக்கிறார்கள். அந்த வகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர் அறிஞர் சித்தி லெப்பை. சித்தி லெப்பை தனது முஸ்லிம் நேஷன்  (Muslim Nation) என்ற பத்திரிக்கையில் பின்வருமாறு 1882 ல் எழுதியது அவரின் காலகட்டத்தில் நடைபெற்ற தர்க்காவும் அதனை சூழ்ந்த நடைமுறைகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.

தர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகாசம் (பகுதி இரண்டு )



எஸ்.எம்.எம்.பஷீர்  

காழ்ப்பை காழ்ப்பினால் ஒழித்துவிட  முடியாது அன்பினாலே காழ்ப்பை ஒழிக்க  முடியும்
                                                                                                         கவுதம புத்தர்
( Not by hatred does hatred cease; By Love Hatred ceases  -Buddha)

அனுராதபுர சியாரத்தை உடைத்தவர்களில் முதன்மை பாத்திரம்
வகித்தவர்கள்  வெறுமனே தாங்கள் சிங்கள இளைஞர்களையும் பௌத்த  பிக்குகளையும் கொண்ட குழு என்பதற்கு அப்பால் சிங்கள ராவய இயக்கத்தினர் என்று தங்களை அடையாளம் காட்டியே  அந்த உடைப்பினை செய்திருக்கிறார்கள் . எனினும் சிங்கள ராவய இயக்கம் தமது இயக்க அகத் தூண்டுதலை (Inspiration) இருபதாம் நூற்றாண்டின் பௌத்த மத மறுமலர்ச்சியின் தந்தையாக இலங்கையிலும் இந்தியாவிலும் கருதப்படும் சிறீமத் அநகாரிக தர்மபாலாவிடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.  சிங்கள ராவய அநாகரிக தர்மபாலாவின் நூற்றி நாற்பத்தி  ஏழாவது ஜன்ம தினத்தை கொண்டாடிய விதமே அவரின் கொள்கைகளை புதுப்பிக்கும் அவரின்  சிஷ்யர்களாக தங்களை அடையாள படுத்தும் முயற்சியாகவே புலப்பட்டது.  அவர்கள் தர்மபாலாவின் சிந்தனைகளை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் அவரின் கருக்களுக்கு பௌத்த மதம் தொடர்பில் அளிக்கும் முக்கியத்துவம் போலவே முஸ்லிம்  எதிர்பிற்கும்   சமதளத்தில்   முக்கியத்துவமளிக்கிரார்கள். இருபதாம் நூற்றாண்டில் பௌத்த மதம் இலங்கையில் புத்துயிர்ப்பு பெற , முஸ்லிம் இனவாதத்கினையும் கக்கியே   பௌத்த மதத்தை சிங்கள இனத்துடனான ஒற்றைப் பரிமாண தேசிய அடையாளத்துடன் , அவரால் முன்வைக்கப் பட்டது. அதே காககட்டத்தில் அவர் இந்தியாவில் புத்தரின் போதிமர ஞானம் பெற்றதாக கூறப்படும் புத்த காயா எனும் இந்தியாவின் பிகாரில் உள்ள பவுத்த தேவாலயம் ஹிந்துகளின் கட்டுப்பாட்டில் ஹிந்து கோவிலாக பவுத்த சிறப்புக்கள் இழந்து காணப்படுவதையும்  கண்டு அதனை மீட்டு அங்கும் புத்த மதத்தை நிலைபெற செய்ய முயன்றார் என்பது வரலாறு. ஆனால் அவரின் மத சகிப்புத்தன்மையின்மை காரணமாகவும் முஸ்லிம் மக்களின் தனித்துவம் , முஸ்லிம் வர்த்தகர்களின் வியாபார நடவடிக்கைள் மீதும் அவர் கொண்ட காழ்ப்புணர்ச்சி   ஆண்டு முஸ்லிம் சிங்கள கலவரங்களுக்கு காள் கோலிட்டது  என்பதும் வரலாறே.     
சிங்கள ராவய பௌத்த மத அடிப்படை தர்மங்களை புறந்தள்ளிவிட்டு முஸ்லிம் எதிர்ப்பும் சிங்கள தேசியவாதத்தியும் பெரும்பான்மை சிங்கள மக்களால் தூக்கி எறியப்பட்ட அனாகரிக தர்மபாலாவின்  சிங்கள பௌத்த தேசியவாதத்தினை முன்னெடுக்கும் முயற்சியில் எவ்வாறு அனகாரிக தர்மபாலா  தோல்வியுற்ராரோ , நாட்டைவிட்டு இந்தியாவில் கூட வாழ நேரிட்டதோ , அதையும் விட ஒரு சிறந்த முன்னேற்றகரமான சூழல் இப்போது நிலவுகிறது. எனவே சிங்கள ராவயவின் எதிர்ப்புணர்வு அவ்வப்போது ஏற்படுத்தும் , ஏற்படுத்தப்போகும் ஏனைய மத இனங்கள் மீதான அடக்குமுறை அட்டகாசங்கள் என்பற்றை எதிர்கொள்ளும் அணுகுமுறைகளை ஆராய்ந்து , அவர்களை புறந்தள்ளியுள்ள   பெரும்பான்மை சிங்கள சக்திகளுடன் , சேர்ந்தியங்க வேண்டிய தேவைப்பாடு பிற இன மத மக்களுக்கும் உண்டு. ஏனெனில்   இந்த சிங்கள ராவய இயக்கம் முஸ்லிம்களுக் கெதிரான பிரச்சாரத்தை எவ்வாறு அவர்களின் ஆதர்ஷன தலைவரான அநகாரிக தர்மபால முன்னெடுத்து 1915 ஆண்டு முஸ்லிம் மக்கள் மீதான கலவரத்துக்கு ஏதோ ஒரு விதத்தில் பங்களித்தது போல் , இவர்களும் ஒரு தொடர்ச்சியான முஸ்லிம் எதிர்ப்பு வாதத்தை கிளப்பி விட்டிருக்கிறார்கள் , அதேவேளை ஒப்பீட்டு ரீதியில் சிறிதளவாயினும் தமிழ் இன எதிர்ப்பையும் பௌத்த சமூக சிந்தனை தளததில் பதியமிட்டு வருகிறார்கள். 

தர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகாசம் (பகுதி ஒன்று )



எஸ்.எம்.எம்.பஷீர்   

அனுராதபுரத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பிரதேசமாக பிரகடனப்படுத்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் உள்ளதாக குறிப்பிடப்படும் முஸ்லிம் மக்களின் சமயத்துடனும் கலாச்சாரத்துடனும் அடையாளம் காணப்படும் சியாரம் ஒன்றினை   சிங்கள பெளத்த பிக்குகள் சிலரும்,  சிங்கள பெளத்த இளைஞர்கள் சிலரும் சேர்ந்து தரைமட்ட மாக்கியிருக்கிரார்கள். அதுவும் இலங்கையின் காவற் துறையினர் கைகட்டி பார்த்து நிற்க இந்த மனித உரிமை மீறல் , சட்ட விரோத சம்பவம் நடை பெற்றிருக்கிறது. இதனால்  அப்பிரதேச முஸ்லிம் மக்கள் ஆத்திர முற்றிருக்கிறார்கள் , அதனை தடுக்கச் சென்றவர்கள்    காவல் துறையினரால் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை தடுக்க சட்டத்தை கையிலெடுத்த காவல் துறையினர் , கட்டடத்தை -சியாரத்தை - உடைக்க சட்டத்தை தமது கையிலேடுத்தவர்களை சட்டத்தை மீறி நடக்க அனுமதி அளித்திருக்கிறார்கள். அச் சியாரத்தை உடைத்த பிக்குகளில் தலைமை தாங்கியவர்  அந்த சியாரம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பெளத்தர்களுக்கு வழங்கப்பட்ட காணியில் கட்டப்பட்டிருந்ததென்றும்  , இன்னுமொருவர் அது துட்டகெமுனுவின் அஸ்தி இடப்பட்ட பிரதேசத்தில் கட்டப்பட்டிருந்த தென்றும் அச் சியாரத்தை முஸ்லிம்கள் ஒரு பள்ளிவாசலாக மாற்ற திட்டமிடுகிறார்கள் என்றும் இடிப்புக்கு காரணம் கூறினார். வழக்கம் போலவே ஊடகங்கள் இச் செய்தியின் பின்னணிச் செய்திகளில் தமது அரசியலையும் , கருத்தியலையும் நாசூக்காக கையாண்டு கொண்டனர்.

இதையெல்லாம் இங்கு நோக்கும் போது உலகின் பெரும் புராதன கட்டடக் கலையை கண்டு கொள்ளும் நகராக மட்டுமல்ல சகல மதத்தினரும் மக்களும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரு பாரம்பரிய நகரில் இனவாத குழுவினரும் பெளத்த  மதவாதிகளும் பிறிதொரு மதத்தினை பின்பற்றும் மக்களுடன் தொடர்புபடுத்தப் படும் ஒரு நிறுமானத்தை நிர்மூலமாக்குவதற்கு உண்மையான காரணம் என்ன என்ற கேள்வியும் , எதிர்காலத்தில் வேறு என்னென்ன எங்கெங்கு  நடக்கும் என்ற அச்சமும் நிலவுவதாக சில அரசியல் நோக்கர்கள் தமது கருத்தை விதைப்பதையும் காணக் கூடியதாகவுள்ளது. இலங்கையின் பிரபல ஆங்கில பத்திரிகைகளில் ஒன்றான  சண்டே லீடர் எனும்  பத்திரிகை இந்த புன்னியதலம் (சமாதி கட்டடம் ) தனி மனிதர் ஒருவரால் கட்டப் பட்டதென்றும் எந்த முஸ்லிம் பள்ளிவாசல்களின்  ஆதரவும் அந்த சமாதி கட்டடத்துக்கு இல்லை என்றும் பல
முஸ்லிம் தலைவர்கள் அந்த சமாதி காட்டுமானத்துக்கு எதிர்ப்பு காட்டினார்கள் என்றும் சுற்றுப்புறசூழலாளர்கள் கூறியதாக செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அந்த செய்தியே முன்வந்த செய்திகளை கேள்விக்குட்படுத்தியது.
(The shrine was built on land close to where the ashes of King Dutugemunu are believed to have been buried hundreds of years ago. The shrine was constructed on a UNESCO world heritage site. Environmentalists said that the shrine was built by an individual and did not have the backing of any Muslim mosque.
Monks who were angry over the construction had razed it to the ground last week. Environmentalists say several Muslim leaders had also opposed the construction of the shrine adding that over 100 monks were involved in demolishing the Muslim shrine which took place last week.)

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...