“வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள் எல்லாம் லீடருடையது”


எஸ்.எம்.எம்.பஷீர்

நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம்
நேரு மென்று நினைத்திடல் வேண்டா
                             சுப்ரமணிய பாரதி

புலிகளின் யுத்த பயிற்சி கையேடு பல தரப்பட்ட  படையணிகளையும் அதற்க்கான பயிற்சி பொறிமுறைகளையும் கொண்டிருந்தது சகலரும் அறிந்ததே . அவ்வாறான யிற்சிகளையும்  தாக்குதல்களையும் நடத்த நியமிக்கப்பட்ட தலைவர்களின் கீழ்  எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் வெளியிட்ட கையேட்டில் மிகக் கவனமாக தலைமைத்துவத்தை போற்றும் , அத்தலைமைத்துவத்தின்  கீழ் கட்டுப்படும் "போராளிகள்' எதனை தலைமைத்துவத்திடம்  எதிர்பார்க்கலாம் எவ்வாறு தலைமைத்துவத்துக்கு பக்தியோடு இருக்கலாம் என்பது பற்றியெல்லாம் புலிகளின் வழிகாட்டி” (Guidelines)  கூறுகிறது. ஆனால்  அவ்வழிகாட்டியின்  (கையேட்டின்) தலைமைத்துவம் பற்றிய தலைப்பு மிகக் கவனமாக எழுதப்பட்டுள்ளது. இங்குதான் புலிகளின் தலைமைத்துவத்தின் கபடத்தனத்தையும் பட்டவர்த்தனமாக காணக் கூடியதாகவுள்ளது.     “வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள் எல்லாம் லீடருடையது”  என்று குறிப்பிடும்  அந்த கையேட்டின் தலைமை பற்றிய தலைப்பானது வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள் எல்லாம் தலைவருடையது என்பதை உண்மையில் கொண்டிருந்திருக்க வேண்டும். அதனையே நிதர்சனமாக வரலாறு இன்று நிரூபித்திருக்கிறது. பிரபாகரனின் தோல்வி புலிகளின் தோல்வியாக தமிழ் தேசிய வக்கிரத்தினதும் வன்முறையினதும் தோல்வியாக சகல தோல்விகளும்  முள்ளிவாய்க்காலில்  முடிவுற்றாலும் அது புலிகளின் தலைவரின் தோல்வியாக அடையாளப்படுத்திமட்டும் பார்க்க முடியாதவாறு தமிழர் தேசியஜனநாயக  சக்திகளும் தங்களை இணைத்து அடையாளப்படுத்தி வந்துள்ளனர்.   தமிழர் தலைமைகளும் தங்களின் இறுக்கமான குறுகிய தமிழ் தேசிய வாதத்தால் அரசியல் நகர்வுகளிலும் தோல்வியுற்ற தலைமைகள்தான்.
  

கவிதை எழுதிய கைகளும் காய்ந்து போகாத மையும்: எகிப்திய எதிர்பார்ப்புக்கள்

எஸ்.எம்.எம்.பஷீர்

உன்னால் முடியுமானால் நீ செய்யவே வேண்டும்”     (If you can, you must do )
                                                                                             முஹம்மத் ஹவாஸ் 

படம்: முஹம்மத் ஹவாஸின் நண்பர், கட்டுரையாளர், முஹம்மத் ஹவாஸ்
எகிப்து எழுதிய புதுக் கவிதை ஒரு காவியமாகுமா (http://www.bazeerlanka.com/2011/03/blog-post_7229.html) என்ற எனது கட்டுரையில் எகிப்தில்  எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்கள் எப்போது நடைபெறப் போகிறது அல்லது மக்கள் எழுச்சியின் வெற்றிகள் எதிர்பார்த்த பலனை தருமா என்ற ஆதங்கத்துடன் இராணுவ தலைமை இப்போது முபாரக்கின் கூட்டாளியிடமே இருக்கிறது என்றாலும் முபாரக்குக்கு மட்டுப்படுத்தப்படாத அதிகாரங்களை வழங்கிய அரசியல் சாசனம் இடைநிறுத்தப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு சட்ட வரைவும் அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடும் முறைமை பற்றியும் ஆராய ஒரு சபை உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தியுடன் இன்னும் ஆறு மாதம் மக்கள் இராணுவ நிர்வாகத்தில் தனது தலைவிதிகளை நிர்ணயிக்கும் சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கு காத்திருக்க வேண்டும்.என்று குறிப்பிட்டிருந்தேன்

ஆளுமை அழிப்பும் அநியாய இழப்பும் - ஒரு நினைவோட்டம்         
எஸ்.எம்.எம்.பஷீர் 

"இற்றைநாள் வரையிலும் அறமிலா மறவர் 
குற்றமே தமது மகுடமாக கொண்டோர்"
                                                         சுப்ரமணிய பாரதி   


தமிழ் ஆயுதப் போராட்டம் தொடங்கி புலிகள் ஆதிக்கம் பெற்று அழிந்து போகும் வரை ஆயுத அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகிப் போன முஸ்லிம் அரச நிர்வாகிகளின் கொலை முதலில் புலிகளால் மூதூர் உப அரச அதிபர் ஹபீப் முகம்மது எனும் இளைஞரை சுட்டுக்  கொன்றதுடன்   ஆரம்பித்து வைக்கப்பட்டது.  ஹபீப் முகம்மது அனுராதபுரத்தை சேர்ந்த இளைஞர் முதன் முதலில் நிர்வாக சேவையில் தெரிவு செய்யப்பட்டு பல எதிர்கால கனவுகளுடன்  மூதூருக்கு உப அரச அதிபராக தெரிவு செய்யப்பட்டவர். தனது நேர்மைக் குனத்தினால் மத ஈடுபாட்டினால் மக்களால் பெரிதும் விரும்பபப்படும் வகையில் எவ்வித பந்தாவு மில்லாமல் மக்களோடு மிக நெருக்கமாக இணைந்து சேவையாற்றியவர். எவ்வித அரசியல் அணியையும் சாராத கடமையே கண்ணாக கொண்டு செயற்பட்டவர்.இவர் மூன்றாம் திகதி செப்டம்பர் மாதம் எண்பத்தி ஏழாம் ஆண்டு  (03.09.1987) புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் குருதி தேய்ந்த உடலமும் , கபனிட்ட ( அடக்கம் செய்யப்பட அணியப்படும் ஆடை) உடலையும் கொண்ட படங்கள் முஸ்லிம்களை முழு இலங்கையிலும் அதிர்ச்சி அடையச் செய்தது. இந்த கொலை மூதூர் மக்களையும் குறிப்பாக சிவில் சமூகத்தையும் மீளாத்  துயரில் தமது குடும்ப உறுப்பினர் ஒருவர் தம்மை விட்டு மரணித்துவிட்ட சூழ்நிலையை ஏற்படுத்தியது. குறிப்பாக மூதூர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களில்  பலர் இதனை முதன் முதலில் புலிகளின் கீழ் முஸ்லிம் கல்வி சமூகம் எதிர்கொண்ட அச்சுறுத்தலை எடுத்துக் காட்ட , குறிப்பாக மூதூர் சரிப்தீன் ஹாஜியார்,  அக்பர் போன்றோர்  ஹபீப் முகமத்தின் கொலையை ஆவணப் படுத்தி வெளியிட்டனர் என்பது எனது ஞாபகத்தில் உள்ள குறிப்பு. இந்த சம்பவம் முழு கிழக்கிலங்கை முழுவதும் ஏற்படுத்திய அச்ச , அனுதாப அதிர்வலைகள் புலிகளுக்கு எதிரான முஸ்லிம் நிலைப்பாட்டினை தோற்றுவித்ததையும் சில மனித உரிமை செயற்பட்டுள்ளார்கள் சுட்டிக் காட்ட தவறவில்லை. 

அர்ச்சுனனின் பலாப்பழமும் அங்கிடுதத்தி அரசியல் கோட்பாடும்எஸ்.எம்.எம்.பஷீர்        


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
                             ( அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் கூறிய கீதோபதேசம்அண்மையில் புளட் (PLOTE) கட்சி சார்பான இணையத்தளமொன்றில் அக்கட்சியின் ஆதரவாளரான பிரபல அரசியல் விமர்சகரான அர்ச்சுனன் என்பவர் எழுதிய "ஈழத்தமிழர் இதயங்களுக்கு " என்ற தலைப்புடன் வெளியான கட்டுரையை படித்ததும் , அதிலும் குறிப்பாக அக்கட்டுரையின் முடிவுரையில் "பின்னால் படப் போகும்  வேதனை அறியாது மகிந்தவின் வீட்டு வாசலில் பலர் பாவங்களாக பலாப் பழத்துடன்  காத்திருக்கிறார்கள் " என்ற  வரிகளை படித்ததும் இக்கட்டுரையை எழுத நேரிட்டது.  ஏனெனில் அவர் அந்த பலாப்பழ கதையை சொல்லாமல் சொல்லி மஹிந்த எப்படிப்பட்டவர் என்பதை அவரை நம்பும் குறிப்பாக தமிழர்களுக்கு அவரின் தமிழ் விருந்தாளிகளுக்கு என்ன நடக்கும் என்பதை சூசகமாக குறிப்பிட்டிருந்தார்.  
எனக்கு இலேசாக ஞாபகத்தில் உள்ள அந்த பலாப்பழக் கதையை மீட்டுக்கொண்டு நமது கதைக்கு செல்வோம். 

"புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் " ; இமெல்டா சுகுமார்.                                                                                                              எஸ்.எம்.எம்.பஷீர்

அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!
                                                    சுப்ரமணிய பாரதி 

இப்போது யாழ் மாவட்ட  அரச அதிபர் இமேடா சுகுமார் மனம் திறந்து பேசத்தொடங்கியிருக்கிறார். தமது கடைமைகளை செய்ய புலிகள் தடையாக இருந்ததையும் மக்களை கேடயமாக்கி கொன்றதையும் மிகுந்த கிலேசத்துடன் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார். புலிகளின்  அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் குறிப்பாக நெடியவன் போன்றோரை குறிப்பிட்டு தாம் எவ்வாறு தனது கடைமையை செய்ய நேரிட்டது என்பது பற்றி தனது தனது உள்ளக்கிடக்கையை அண்மையில் வெளிப்படுத்தியுள்ளார். அந்த பின்னணியில் பார்க்கும் போது சில  அரச அதிபர்களின் உதவி அரச அதிபர்களின் புலிகளினதும் ஏனைய இயக்கங்களினதும் அதிகாரம் வடக்கு கிழக்கில் நிலவிய காலகட்டங்களில் எனது நினைவுக்கு வந்த சில சம்பவங்களையும் திரும்பி பார்க்கிறேன்.  

அரச நிர்வாக அதிகாரிகள்  புலிகளின் காலத்தில் எத்தகைய அவலங்களை அனுபவித்தார்கள் என்பது இதுவரை நன்கு ஆவணப்படுத்தப்படவில்லை. சகல தமிழ் ஆயுத இயக்கங்களும்  இலங்கை அரச நிர்வாக உத்தியோகத்தர்களின் கடமைகளை செய்வதில் தமது ஆயுத ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளனர். அது மாத்திரமின்றி அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் சிலர்  தமிழ் தேசிய உணர்வின்பால் உந்தப்பட்டு  அரசுக்கு கட்டுப்படுவதையும் ஒரு துரோக  செயற்பாடாக உளப்பூர்வமாக கருதி அரச ஊதியத்தை பெற்றுக்கொண்டு தமிழ் தேசிய  ஆயுத  இயக்கங்களின் (Armed Movements) மற்றும் அரசியல் கட்சிகளின்   செயற்பாடுகளையும்  அனுசரித்து செயற்பட்டு வந்துள்ளனர்.

Tamils tell LTTE: Stop the warTamils tell LTTE: Stop the War

SUNDAY OBSERVER 

Sunday, 19 February 2006'Tamils for democracy' in London, and similar organizations in Geneva are planning rallies while peace negotiators from the Sri Lankan government and the LTTE were scheduled to get talks under way this week at Chateau de Bossey in Geneva. "Stop the war, resume peace'' was the slogan of the London demonstrators who will be staging their rally in Trafalgar Square on Sunday.
"The threat of war by the LTTE casts a shadow upon the lives of people'' said the organizers of the rally. This will be one of the key slogans of the proceedings in Trafalgar Square. Among other slogans will be "actual talks lasted only one year", "stop extortion", "stop conscription of child soldiers" etc.
There will be no "peace tours and travels" as in the last peace talks, said sources in Geneva where apparently the negotiation teams will not hobnob with the media as in the previous peace talks.
Press opportunities will be restricted to one session before the talks begin on Wednesday, and another after talks end Thursday.
Among those Tamil organizations involved in the Trafalgar Square demonstration are the Tamil Democratic Congress, Tamil Women's League, Sri Lanka Muslim Information Centre, Committee for Democracy for Justice in Sri Lanka.
Some peace NGOs have however turned up in Geneva with the intention of meeting the negotiating team and making the peace sessions a "peace carnival" sources said, but the talks will be closed door sessions and the plan is to restrict media access and access by interested parties to the peace teams to a few planned sessions.

Online edition of Sunday Observer - Security


பத்திரிகை அறிக்கை


நவமணி- இலங்கை (  அக்டோபர் 2006) 

வடக்கு கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்பினை இரத்துச் செய்யும் சிறீலங்கா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் சிறீ லங்கா முஸ்லிம் மையத்தின் நிலைப்பாடும், சிறீ லங்கா முஸ்லிம் தகவல் மையம் ஐக்கிய ராஜ்யம்


இலங்கை இந்திய உடன்படிக்கையினால் ஏற்படுத்தப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் இணைப்பு அரசியலமைப்பிற்கு முரணானது என சிறீலங்கா உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. ஒருபுறம் சட்ட வாதங்களின் நியாயத் தன்மையை இத்தீர்ப்பு வெளிப்படுத்துகின்றபோதும் மறு புறம் கிழக்கில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சிங்கள மக்களின் ஜனநாயக தேர்வாக அல்லது அவர்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஆணைக்கு இணங்கிய சட்டவாக்க செயற்பாடாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு அமையவேண்டுமென்பதனை வலியுறுத்திக் காட்டுகின்றது.

A FIFTEEN YEARS OF AGONY
By Syed Bazeer

]
"It is 15 years today since the entire Muslims in the Northern Province were “ethnically cleansed” by the LTTE from their historical habitat. The systematic ethnic cleansing of about 75,000 Muslims form the Northern provinces in Sri Lanka was part of the LTTE’s mono ethnic Eelam project. The people who had lived for centuries in the Northern provinces were ruthlessly up rooted from their lands and chased out of the boarders of the Northern Province within 48 hours only for the reason that they were not Tamils.
On the 30th of October 1990 the LTTE forcibly evicted every single Muslim irrespective of their age or gender and expropriated their belongings. No mercy was shown on their elders, children and women. The Tamils of the Northern Province stood voiceless and helpless when their Muslim brothers and sisters were evicted from their settlements at gun point by the LTTE." 


                                            http://www.asiantribune.com/show_news.php?id=15971

Published in the Asian Tribune: 29/10/2005 
  

A fifteen years of agony : Ethnic cleansing


 Seyed Bazeer


“George the Third
Ought never to have occurred.
One can only wonder
At so grotesque blunder.”

                                Clerihew Bentley


Ethnic Cleansing of Northern Muslims


It is 15 years today since the entire Muslims in the Northern Province were “ethnically cleansed” by the LTTE from their historical habitat.  The systematic ethnic cleansing of about 75,000 Muslims form the Northern provinces in Sri Lanka was part of the LTTE’s mono ethnic Eelam project. The people who had lived for centuries in the Northern provinces were ruthlessly up rooted from their lands and chased out of the boarders of the Northern Province within 48 hours only for the reason that they were not Tamils. On the 30th of October 1990 the LTTE forcibly evicted every single Muslim irrespective of their age or gender and expropriated their belongings. No mercy was shown on their elders children and women. The Tamils of the Northern Province stood voiceless and helpless when their Muslim brothers and sisters were evicted from their settlements at gun point by the LTTE. The LTTE supremo simply justified the expulsion of the Muslims as a tactical move whereby he avoided a racial tension between the Tamils and Muslims. He acknowledged that he had “requested” the Muslims to leave the North temporarily. He also indicated that he would invite them to return once the situation was back to normal. The LTTE supporters abroad went further and accused that there were army informants and radicals among the Muslims and justified the action of the LTTE as the appropriate action. This rumour was widely circulated among the Diaspora Tamil community. Those who were forcibly expelled have been languishing in the Refugee camps in Puttalam and some other parts of South, with a hope that they will return to their homes one day. 

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...