"கடை விரித்தேன் கொள்வாரில்லையே"

எஸ்.எம்.எம்.பஷீர்-


ஒரு சமூக பிரச்சினையின் அதிர்வலைககளும் அணுகுமுறைகளும்.

ஏறாவூர் பழைய சந்தை முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஏறாவூரின் மூன்றாம் குறிச்சி பகுதியில் அமைந்திருகிறது. இதில் முஸ்லிம்களே காலங்காலமாக வியாபாரம் செய்து வருகிறார்கள், .எனினும் இச்சந்தையின் இடம்போக்கின்மை வளர்ந்துவரும் சனப்பெருக்கம் சிங்கள வியாபரிகளின் அதிகரித்த பொருளாதார நடவடிக்கையாலும்; சிங்கள சமூகம் ஏறாவூர் பிரதேசத்திற்குட்பட்ட சவுக்கடி தளவாய் புன்னைக்குடா பிரதேசங்களில் வாழ்ந்தமையினாலும் தமிழர்கள் தங்களுக்கென ஒரு தனியான சந்தையை கொண்டிராமையினாலும் தமிழர்கள் அதிகம் வாழும் ஏறாவூர் நாலாம் குறிச்சி பகுதியில் புதிய சந்தை எழுபது 1970 களில் நிர்மானிக்கப்பட்டு செயற்படத் தொடங்கியது. எனினும் முஸ்லிம் வியாபாரிகள் முஸ்லிம் மக்கள் தங்களது பிரதேசத்துக்கு தூரமான புதிய சந்தைக்கு இடம் பெயர்வதினை ஆதரிக்கவில்லை.

மூவின சமூகத்தினரையும் கொண்ட வியாபாரிகளை கொண்ட புதிய சந்தை முழுமையாக கைவிடப்பட்டது. இச்சந்தை பகுதியில் அருகாமையில் அமைந்துள்ள காளிகோயில் வீதியில் உள்ள விகாரையின் புத்தபிக்கு புலிகளின் உளவுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மானால் நெற்றிப்பொட்டில் 1985 அளவில் சுடப்பட்டு கொல்லப்பட்டார், மேலும் இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட பதட்டமும் அன்று கிழக்கில் காணப்பட்ட சிங்களவர்களுக்கு எதிரான புலிகளின் செயற்பாடுகள் காரணமாக சந்தை வியாபாரிகள் மீண்டும் ஏறாவூர் பழைய சந்தைக்கு இடம் பெயர தமிழ் சந்தை வியாபாரிகள் செங்கலடிக்கு இடம்பெயர்ந்தனர்.ஆனால் இன்று ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலைகள் காரணமாக அங்கு காணப்படும் சிங்கள வியாபாரிகளின் அதிகரித்துவரும் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் சிங்கள மக்கள் தங்களது முன்னைய வியாபார தலங்களையும் , பாடசாலைகளையும், வணக்கத்தலங்களையும் புதுப்பிக்கின்ற, இச்செயற்பாடுகளால் மீண்டும் குடியேறுகின்ற நிலைமை இன்று கிழக்கின் பல பிரதேசங்களில் காணப்படுகிறது. அவ்வாறான சில மீள் குடியேற்றங்கள் சில வேளைகளில், சில பிரதேசங்களில் முஸ்லிம் தமிழ் மக்களின் அதிருப்திக்கு காரணமானாலும் இன அரசியல் செய்யும் சக்திகளுக்கும் கட்சிகளுக்கும் தம்மை இனத்தின் பிரதிநிதிகளாக தக்க வைத்து கொள்வதற்குகும் இச்செயற்பாடுகள் பெரிதும் துணை புரிகின்றன.




மறுபுறம் அதிகாரத்திலுள்ள காவல் துறையினரும் இத்தகைய செயற்பாடுகள் குறித்த முறைப்பாடுகளில் காட்டுகின்ற அலட்சியம் , அதிகார துஸ்பிரயோகம், பக்கச்சார்பு என்பன காலங்காலமாக "சிங்கள ஆக்கிரமிப்பு" குறித்த கருத்துக்களை உள்வாங்கி, அவ்வாறான அனுபவங்களையும் சில காலகட்டங்களில் கொண்டிருக்கின்ற சமூகத்தில் இந்த புதிய சந்தை கடைகளை முழுமையாக சிங்கள வியாபாரிகள் கைக்கொள்ளும் நிலைமை அங்கு வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் ஆட்சேபனைக்கு உள்ளாகியுள்ளது.

ஆனால் சிங்கள வியாபாரிகள் மற்றும் மீண்டும் தங்களது வியாபாரங்களை பாடசாலைகளை, ஆலயங்களை ஆரம்பிபதற்கு பூரண உரித்துடையவர்கள் என்பதில் நியாயமுண்டு ஆயினும் அவை சட்டபூர்வமான உரிமை பிரயோகமாக அமைதல் வேண்டும். இங்கு அதிகளவான அல்லது சகல் கடைகளையும் சிங்கள வியாபாரிகள் எடுப்பதென்பது உள்ளூர் பிரதேச  சபாவின் அதிகாரத்தினை மீறும் செயல் என்பதால் அதனை சட்ட ரீதியாக தடுப்பதற்கான அல்லது சட்டரீதியாக உரிமம் வழங்க உள்ள நடைமுறைகளை செயற்படுதுவதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

இன்னுமொரு சுவாரசியமான ஒரு விடயம் இங்கு கடைகளை ஆரம்பித்துள்ள வியாபாரிகள் அதிகம் மலிவாக பொருட்களை விற்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறாயின் இச்சிங்கள கடைவிரிப்பாளர்கள் அப்பிரதேச வியாபாரிகளுக்கும் போட்டியாக அமைவதினை மறுக்கமுடியாது. இங்கு வள்ளலார் சொன்னதுபோல் " கடை விரித்தேன் கொள்வாரில்யே " என்ற தத்துவார்த்த கடை விரிப்பல்ல. இது மாறாக இந்த விலைக்குறைப்பு கடை விரிப்பு மறுபுறம் கொள்வார்களை கூட்டியிருக்கிறது. ஆயினும் முறைகேடான ஆக்கிரமிப்புக்கள் சட்டபூர்வமாக வேணும் தடுக்கப்படவேண்டும், இவற்றை வைத்து அரசியல் செய்யாமல் மக்கள் சக்திகள் திரட்சியுற்று கோரிக்கை விடவேண்டும் அல்லது மக்களின் வரிப்பணத்தில் நிர்வாகம் பண்ணும் அதிகார சபைகள் மக்களின் உரிமைகளுக்க உரிய தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

இன்னுமொரு விடயம் சட்டபூர்வமான உரிமை உடையவர்கள் பல வருடங்களுக்கு பின்னராயினும் தமது இடங்களுக்கு திரும்புவதற்கு உரிமையுடையவர்கள். வடமாகான கிழக்கு மாகான தமிழர்கள் முஸ்லிம்கள் மீண்டும் தகலாது பிரதேசங்களில் மீள் குடியேற்றம் செய்வதற்கு உரித்துடையவர்கள். அவ்வாரே சிங்களவர்களும் உரித்துடையவர்கள்.
கிழக்கிலே முஸ்லிம்கள் மீண்டும் உன்னிச்சை , கரடியனறு ,வேபங்காடு , கோபாய்வெளி , காயன்குடா, கித்துள் உறுகாமம் போன்ற பிரதேசங்களில் தங்களது பயிர்செய்கைகளியும் குடியிருப்புக்களையும் மீண்டும் தொடங்க முடியுமென்றால் சிங்களவர்களுக்கும் அது முடியும் என்பது ஒரு கசப்பான யதார்த்தமாகும். மறுபுறம் உறுகாமத்தில் புலிகளால் தரைமட்டமாக்கப்பட்ட முஸ்லிம் பாடசாலையை  இன்று மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளிவாசல் புனர் நிமானம் செய்யப்பட்டுள்ளது , முஸ்லிம் மக்கள் தமிழ் மக்கள் தங்களை மீண்டும் புரிந்து கொண்டு வாழத் தொடங்கிவிட்டார்கள், சிங்களவர்கள் தொடர்பான வெறுப்புக்களில் உள்ள சரி பிழைகள் நேர்மையாக சீர்தூக்கி பார்க்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது நிகழும் அதிகாரத் துஸ்பிரயோகம் சட்டபூர்வமாக தடுக்கப்பட வேண்டும். சந்திரிகா அரசில் கொண்டு வரப்பட்ட அரசியில் சீர்திருத்த சட்ட மூலம் 1983 கு முன்னர் உள்நாட்டில் அகதியான இடம்பெயர்ந்த அணைத்து மக்களையும் மீள் செல்லும் -குடியேறும்- உரிமையையும் அவர்களுக்கு அதற்கான உதவிகள் நஷ்ட ஈடுகள் வழங்க வேண்டும் என்று கூறுகிறது. 1987 ஜனவரியில் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி பாராளுமன்றத்தில் 73000 முஸ்லிம்கள் அகதிகளாக இருப்பதாக தகவல் வெளியிட்டார். இது 1990 ல் வடமாகான முஸ்லிம்கள் வெளியேற்றப்பட முன்னராக கணக்கெடுக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் உள்ளக இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் 1987 தொகை மாத்திரமேயாகும். இன்று இன்னிலை இல்லாதொழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் சூழலில் மீண்டும் இன முரண்பாடுகள் கவனத்துடன் அதேவேளை உரிமையுடன் சரியான முறையில் கைக் கொள்ளப்படல் வேண்டும் .


Thenee, Mahaveli, Lankamuslim, Unmaikal,alai, Muslim guardian December 2009

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...