Posts

Showing posts from April, 2017

"இலங்கை அரசின் மேற்கு நோக்கிய இன்னொரு அடியெடுப்பு! " -தனபதி

வ ட கொரியாவைச் சேர்ந்த நால்வர் இலங்கையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள வருகை தர இருந்த வேளையில் நாட்டுக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் விசா மறுத்திருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தற்போதைய அரசாங்கம் மேலும் மேலும் மேற்கத்தைய சார்பாக மாறி வருவதின் இன்னொரு வெளிப்பாடு என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். 2017 மார்ச் 17ஆம் திகதி இலங்கை – வட கொரிய நட்புறவுச் சங்கம் கொழும்புக்கு அருகே கட்டுநாயக்க பகுதியில் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கருத்தரங்கில் வட கொரியாவுடன் யப்பான், பங்களாதேஸ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில சுயசார்புக் குழுக்கள் பங்குபற்ற இருந்தன.

"உள்ளுராட்சித் தேர்தல்களை உடன் நடத்துக!" -வானவில்

Image
இ லங்கையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உரிய காலத்தில் நடாத்தாது இழுத்தடிக்கப்படும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடத்துக்குள் நடாத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருக்கிறார். அதன் அர்த்தம் இன்னும் மேலதிகமாக ஒரு வருடம் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இழுத்தடிக்கப்படப் போகின்றது என்பதே. அதன் பின்னரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுமா என்பதற்கு எவ்விதமான உத்தரவாதமும் இல்லை. இந்த விடயத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மட்டுமே உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை காலதாமதம் இன்றி உடனடியாக நடாத்தும்படி அரசை அடிக்கடி வலியுறுத்தி வருகின்றது.

தீண்டாமைக்கெதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் 50 ஆவது ஆண்டு நினைவாக: முன்னுதாரணமான ஒரு போராட்டத்தின் படிப்பினைகள்! – முதலி சின்னையன்

Image
இ லங்கைத் தமிழர்களின் வரலாற்றில் 1966 ஒக்ரோபர் 21 இல் ஆரம்பமான தீண்டாமைக்கு எதிரான போராட்ட எழுச்சி ஏற்பட்டு 2016 ஒக்ரோபர் 21 ஆம் திகதியுடன் 50 வருடங்கள் பூர்த்தியாகி இருக்கிறது. இந்தப் போராட்டம் தமிழர்களின் போராட்ட வாழ்வில் ஒரு மைல் கல்லாகவும், பெறுமதியான படிப்பினைகளை வழங்கும் பொக்கிசமாகவும் திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழ் மக்கள் தமது இன உரிமைகளுக்காக முதலில் சாத்வீக வழியிலும், பின்னர் ஆயுதப் போராட்ட வழியிலும் போராடியிருக்கிறார்கள் எனப் பலரும் கூறுவதுண்டு. இந்தக் கூற்றில் ஓரளவு உண்மையும் உண்டு. அதே நேரத்தில் சுதந்திரத்துக்கு முன்னரும், அதன் பின்னரும் தமிழ் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதினரான தாழ்த்தப்பட்ட மக்கள், தம்மீது திணிக்கப்பட்ட சாதி மற்றும் தீண்டாமை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மனித உரிமை வேண்டிப் போராடிய வரலாறும் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதாக இருக்கின்றது.

Insider’s book sheds light on Sri Lanka’s regime-change operation By Vijith Samarasinghe

20 December 2016 November 21 marked the second anniversary of Sri Lankan President Maithripala Sirisena’s defection from former President Mahinda Rajapakse’s government to contest the January 2015 presidential election as the opposition’s “common candidate.” Sirisena, who was Rajapakse’s health minister and secretary of the ruling Sri Lanka Freedom Party (SLFP), defeated the incumbent and formed a coalition government with the United National Party (UNP), appointing its leader Ranil Wickremesinghe as prime minister. The mainstream media and pseudo-left groups hailed Sirisena’s election victory as a “democratic revolution.” Only the World Socialist Web Site and Socialist Equality Party explained that Sirisena’s cross-over was part of a reactionary regime-change operation orchestrated by Washington against Rajapakse’s pro-China tilt. A recent book by a SLFP parliamentarian, Malith Jayathilake, titled The January 8th Revolution: As I Have Seen It, contains some inside information on ho

National Consultative Council -An Interview

Image

தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் அமரர் எஸ். அருளானந்தம் (25.12.1947 -08-04.2017)

Image
காலஞ்சென்ற திரு எஸ்.அருளானந்தம் நினைவாக அவரின் " தினகரனுக்குள் கறுப்பு ஆடுகள் அல்ல; ஞான சூனியங்கள்! " என்ற தலைப்பில் "தமிழ்க் குரல்" மற்றும் "தேனீ "இணையத்திலும் வெளியான அவரின் கட்டுரை அவரின் தார்மீக குரலின் ஒலியாய் இங்கு மீள் பதிவு செய்யப்படுகிறது.  தினகரனுக்குள் கறுப்பு ஆடுகள் அல்ல; ஞான சூனியங்கள்! . - எஸ்.அருளானந்தம், முன்னாள் பிரதம ஆசிரியர் - தினகரன் லேக்ஹவுஸ் நிறுவன 'தினகரன்' பத்திரிகைக்குள் கறுப்பு ஆடுகள்' என்ற தலைப்பில் 'தேனீ' இணையத்தளத்தில் வெளிவந்த விடயதானத்தைப் பார்வையிட்டேன். அதில் விமர்சிக்கப்பட்டிருந்த இரண்டு கட்டுரைகளையும் முன்னதாகவே வாசித்தபோது அதிர்ச்சியடைந்தேன். இரண்டுமே குறுந்தேசியவாதிகளுக்கும் புலிப் பயங்கரவாதிகளின் வால்பிடிகளுக்கும் சாமரம் வீசும் கடடுரைகள் என்பதுதான் எனது கருத்தும். பச்சைப் பொய்களுடன் இனமுறுகலை ஏற்படுத்தும் பாணியிலமைந்த இந்தக் கட்டுரைகள் அரச சார்புப் பத்திரிகையான தினகரனில் வெளிவந்தமையே எனக்கு அதிரச்சியை ஏற்படுத்தியிருந்தது.

காலந்தாழ்த்திய கரிசனைக்கு காலவகாசம் கோரும் அரசு!

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணை விவகாரம் மீண்டும் ஒருமுறை இலங்கை அரசியலில் விவாதப் பொருளாக வலம் வருகின்றது. கடந்த 6 வருடங்களாக இது ஒரு ‘மழை ஓய்ந்தும் தூவானம் நிற்காத’ கதையாகத் தொடர்கின்றது. தற்போது ஜெனிவாவில் ஐ. நா. சபை மனித உரிமை பேரவையின் கூட்டம் நடந்து வருகின்றது. இதில் இலங்கைää ‘‘இலங்கையில் நல்லிணக்கம்ää பொறுப்பு கூறல்ää மனித உரிமைகள் மேம்படுத்துதல்’’ என்ற தலைப்பில் ஒரு தீர்மானம் தாக்கல் செய்துää போர்க்குற்ற விசாரணைக்கு மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் கேட்கின்றது. இந்தத் தீர்மானம் தொடர்பாக விரைவில் வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இதுவரையில் அமெரிக்காää பிரித்தானியா உட்பட 4 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

LET THE PEOPLE DIED IN THE WAR REST IN PEACE - By Dr. P. Sivapalan

It is surprising that the international community is debating few issues related to Sri Lanka in Geneva. I’m a Sri Lankan from the North where majority are Tamils who had a miserable and dreadful life due to their ethnicity. I had closely watched and studied what had been going on in Sri Lanka for few decades. I think the International community had misconceived the problems in Sri Lanka. Representatives from Western countries and from few institutions visit Sri Lanka and meet the leaders of the government and the opposition, the leaders of the main Tamil political party, prominent members of the civil society and Christian priests. They don’t meet the common men among the Tamils who led a dreadful life since the day the Tami youth used the gun to do away with the opponents of the main Tamil political party, the Ilankai Tamil Arasu Kadchi. Even if they meet them the truth wouldn’t come out. Tamils wouldn’t tell anything that is favourable to Sri Lankan government or unfavo

‘வானவில்’ எதைச் சாதித்தது? – தோழர் மணியம்

‘ வானவில்’ எதைச் சாதித்தது? இப்படியொரு கேள்வி இடையிடையே எம்மை நோக்கி எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்வியை எழுப்புபவர்கள் ஒரே ரகத்தினர் அல்ல. எமக்கு நேர் எதிர்க் கருத்துள்ளவர்களும் எழுப்புகிறார்கள். கருத்து வித்தியாசம் உள்ளவர்களும் எழுப்புகிறார்கள். எம்மை ஆதரிக்கும் சிலரும் எழுப்புகிறார்கள். பொதுவாக புலம்பெயர் நாடுகளில் வெளிவரும் நூற்றுக்கணக்கான பத்திரிகைகளை நோக்கி இத்தகையதோர் கேள்வி எழுப்பப்படுவது அபூர்வமாகவே இருக்கும். ஏனெனில் தனி நபர்களாக அந்தப் பத்திரிகைகளை நடாத்தும் பெரும்பாலானோரின் ஒரே குறிக்கோள் பணம் சம்பாதிப்பதே. தமது பத்திரிகையை விற்று அவர்கள் பணம் சம்பாதிக்க முடியாது. ஏனெனில் தாயகத்தில் வெளிவரும் பத்திரிகைகள் போல் புலம்பெயர் நாடுகளில் பத்திரிகைகளை விலைக்கு விற்பதில்லை. எல்லாமே இலவச விநியோகம்தான்.

மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு சரியான தலைமையும் வழிகாட்டலும் அவசியம்

Image
மார்ச் 22, 2017 இ லங்கையில் இப்பொழுது எங்கு திரும்பினாலும் ஒரே போராட்டமயமாக இருக்கின்றது. முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு மக்கள் நாளாந்தம் போராட்டக்களங்களை நோக்கி அணி வகுத்துச் செல்வதைக் காண முடிகிறது. இலங்கையில் மாத்திரமின்றி, உலகம் முழுவதும் 1960களின் பிற்பகுதியில் ஏற்பட்டது போன்ற மக்கள் எழுச்சி ஒன்றுக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களில் நமது அண்டை நாடான இந்தியாவின் தமிழக மாநிலத்தில் ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டம் (ஜல்லிக்கட்டு பற்றிய எமது கருத்து வேறாக இருந்தபோதும்), நெடுவாசல் இயற்கை எரிவாயுத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் என இரண்டு மிகப் பிரமாண்டமான மக்கள் தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன.