Sunday, 12 May 2013

"தாய் " கவிதைகள்

இன்று அன்னையர் தினம் என்று சொல்லப்படுகிறது. மேற்குலகின் நுகர்வுக் கலாச்சாரம் பரந்து விரிந்து உலகை ஆக்கிரமித்து வருகிறது. இயந்திர வாழ்வும் நுகர்வுக் கலாச்சார விஸ்தரிப்பும்  மனித உறவுகளைக் கொண்டாட  நினைவு கூற  அது பற்றிய  பிரக்ஞையினை ஏற்படுத்த நாட்கள் ஒதுக்கப்படும் நிலையை ஏற்படுத்தி இருக்கின்றன. . அந்த எண்ணக் கருவுக்கும் பிரகடனத்துக்கும் உடன்படாவிட்டாலும்  அன்னையர் நாள் என்ற சொற்றொடர் 2009 தை மாதம் 12 மறைந்து போன எனது தாயின் ஞாபகத்தினை  மெலிதாக தூண்டிவிட்டது . எனதும் எனது உடன் சகோதரனினதும்  "தாய் " பற்றி நாங்கள் பல வருடங்களுக்கு முன்னர் எழுதிய கவிதையை இங்கு பிரசுரிக்கிறோம்

அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (4)எஸ்,எம்.எம். பஷீர்

"கனத்த இதயத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலுக்கு நான் பிரியாவிடை சொல்கிறேன ;.   எனது பற்றுறுதிக்காக   நான் ஒரு   இனவாதி என்று அடையாளமிடப்பட்டிருந்தாலும் , அதிகமான பெரும்பான்மை சமூகத்தினரின் தலைவர்களும் எனது சமூகமும் கூட தன்னலமற்று பரந்த பார்வையுடன் செயற்படும் தகுதி உடையவர்களாக இல்லை என்று  நான் நம்புகிறேன்"  - எம்.எச் .எம்.அஸ்ரப் 

Sunday, 5 May 2013

The Voice of the Muslim minority in Sri Lanka -Seminar -25-10 -1998அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (3)
எஸ்,எம்.எம். பஷீர்

இருக்கிறதோ இல்லையோ பிரச்சினைகளை தேடிப்பிடித்து அதனைத தவறாக  அறிகுறி கண்டு , பிழையான நிவாரணத்தைப் பிரயோகிப்பதே அரசியல் கலையாகும்                                                                                        -ஏர்நெஸ்ட் பெண்   

(Politics is the art of looking for trouble, finding it whether it exists or not, diagnosing it incorrectly, and applying the wrong remedy.  ~Ernest Benn)
 
இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு சூழ்நிலையில்  பௌத்த மத தீவிர சிறுபான்மை தனிமங்களுக்கும்  முஸ்லிம்களுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பும் ஒரு அரசியல் மிக வேகமாக (பலத்துடன்) இருபுறமும்  செயற்பட்டு வருகிறது என்பதை அவதானிக்க முடிகிறது.  ஆசாத் சாலியின்  முஸ்லிம் சமூக அடக்குமுறைகளுக் கெதிரான ஆவேச பிரதிபலிப்பும் , உணர்வு மயப்படுத்தப்பட்ட  உரைகளும் , அதனைத் தொடர்ந்த அவரின் கைதும் , முஸ்லிம்களுக்குள் இன மத குரோத உணர்வுகளுக்கு உரமூட்டுவதையும்  பௌத்த தீவிரவாத சக்திகளை உஷார் படுத்துவதையும்  இன்று காணமுடிகிறது.  இந்தப் பின்னணியில்  முஸ்லிம் சமூக , மத  அரசியல் தலைமைத்துவங்களை , அவற்றின் ஆளுமைகளை,  முஸ்லிம்களே  கேள்விக்குட்படுத்துவதையும் காணாமலிருக்க  முடியவில்லை. "அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்" என்று காத்திருந்த சின்ன சின்ன அரசியல் கட்சிகளும்  , இயக்கங்களும் இதை விட்டால் பெரிய முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்களை உள்ளூர்த் மட்டத் தலைவர்களை உண்டு இல்லை என்று பண்ண சந்தர்ப்பம் வராது என்று தமது இன உணர்வினை வெளிப்படுத்தும் விதத்தில் தாங்களே உண்மையில் சமூக அக்கறைகள் கொண்டவர்கள் என்று வெகு வேகமாக செயற்பட்டு வருகின்றனர்.


அண்மையில் இலங்கை தேசிய ஐக்கிய முன்னணிக் கட்சி​யின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயருமான எம்.ஆசாத் சாலி. சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இலங்கைத் தமிழர்களுக்கான வாழ்வுரிமைக் கருத்தரங்கில்  கலந்து கொண்ட பின்னர் , ஜூனியர் விகடன் எனும் வார இதழுக்கு வழங்கிய பேட்டி அமைதியை விரும்பும்; , கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் புலிகள் நடத்திய இனச் சுத்திகரிப்பு  , இனப் படுகொலை உட்பட்ட  சகல மிலேச்சத்தனமான புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைளின் போதும் அமைதி காத்த முஸ்லிம் சமூகத்தை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Saturday, 4 May 2013

இலங்கை இனப் பிரச்சினை : ஸ்ருட்காட் தீர்மானம் -லண்டன் குரல் 26 நவ -09 டிசம் 2006


"இலங்கை இனப் பிரச்சினை : ஸ்ருட்காட் தீர்மானம்"

லண்டன் குரல் 26 நவ -09 டிசம் 2006


"வட கிழக்கில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றி அரசியல் ஆய்வாளர் சையத் பஷீர் உரையாற்றினார்.

Thursday, 2 May 2013

உண்மைக்கும் மீள் இணக்கத்திற்குமான ஆணைக்குழு சாதிக்கப்போவது என்ன.-எஸ்.எம்.எம்.பஸீர் (வீரகேசரி-20/09/2001)


உண்மைக்கும் மீள் இணக்கத்திற்குமான ஆணைக்குழு சாதிக்கப்போவது என்ன.-எஸ்.எம்.எம்.பஸீர் (வீரகேசரி-20/09/2001)

Twitter and Facebook censor New York Post report on Hunter Biden- By Kevin Reed

  Kevin Reed 16 October 2020 Social media censorship prior to the 2020 US presidential elections reached new heights on Wednesday, when both...