எகிப்து எழுதிய புதுக் கவிதை காவியமாகுமா ?

எஸ்.எம்.எம்.பஷீர்

“உங்களின் பழைய கவிதைகளை தள்ளி போடுங்கள் உங்கள் பழைய குறிப்பேடுகளை கிழித் தெறியுங்கள் இன்று எகிப்துக்காக அவளுக்கு தகுந்த கவிதைகளை எழுதுங்கள். “- எகிப்திய இளம் கவிஞன் ஹிஷாம் எல் கோஹ் (09/02/20111)

தஹிறார் சதுக்கத்தில் எவ்வித வன்முறையிலும் ஈடுபடாமல் கூடியிருந்து தமது முற்றுகை நேரத்தில் கவிதைகள் வாசித்து புதிய கவிதை எழுதுவதற்காக உழைக்கும் வர்க்கத்தினர் இளைஞர்கள் தேர்ச்சி பெற்ற தொழில் வல்லுனர்கள் என சகல மக்களினதும் வெகுஜன போராட்டம் பதினெட்டு நாளில் வீதிக்கு வந்ததால் பலன் தந்திருக்கிறது , சர்வாதிகார தனிமனித ஆட்சிக்கு முடிவு கண்டிருக்கிறது. ஆனால் இந்த போராட்டம் நீறு பூத்த நெருப்பாக நீண்டகாலம் கருக்கொண்ட போராட்டம் விரிவாக இப்போதுதான் தஹிறார் சதுக்கத்தில் இளைய தலைமுறையின் அக்கினி குஞ்சுகள் காலூன்றின. பழைய வீரியமற்ற காலம் காலமாக அரசின் அடுக்கு முறைக்கு ஆளாகி அடிமையாகி போன சமூகத்தை தலைவர்கள் எவரும் வழிநடத்தாமல் அரசியல மத பின்னணி ஏதுமற்று இளைஞர்களினால் நடத்தப்பட்ட போராட்டம் முதலில் நன்றி சொல்ல வேண்டியது தமக்கு முன்னோடியாய் மக்கள் எழுச்சியின் மகோன்னதத்தை எடுத்துக்காட்டிய துனீஷிய மக்களைத்தான்

உலகின் பல பாகங்களிலும் மக்கள் புரட்சிகள் கொடுங்கோலர் ஆட்சிகள் முடிவுக்கு வருதல் என்பன புதியதல்ல என்றாலும் மத்திய கிழக்கில் அவாறான நிகழ்வுகள் அவசியம் என்று உணரப்பட்டாலும் மக்கள் பல தலைமுறைகளாக மாற்றங்களை நிகழ்த்திக்காட்டும் தமக்குள்ள வல்லமையை சரியாக மதிப்பிடவுமில்லை பயன்படுத்தவுமில்லை என்பதை அடுத்த கட்டமாக ஏமனிலும் சவூதியிலும் நடை பெறலாமென்ற எதிர்வு கூறல் சொல்லி ஓரிரு வாரங்களுள் இன்று ஏமனில் மக்கள் போராட்டம் வீதிக்கு வந்திருக்கிறது. அல்ஜீரியாவில் கூட மக்கள் புரட்சி வெடித்துள்ளது என்று கூறப்பட்டாலும் அங்கு காணப்படும் பாரம்பரிய பெர்பெர் , கபில், அராபிய இன பகைமைகள் முரண்பாடுகள் என்பன எவ்வாறு ஒரு மக்கள் புரட்சிக்கு முன்னோடியாய் அணுகப்பட போகின்றன என்ற கேள்வியுண்டு. துனீசியா, எகிப்பது, அல்ஜீரியா என்பன தங்களின் சுதந்திரத்துக்கான போராட்ட அனுவபங்களை சுமந்த நாடுகள் என்பதால் மக்கள் போராட்டம் என்பது அவர்களின் வரலாற்றோடு இணைந்தது , ஆனால் தமது சொந்த ஆட்சியாளர்களு கெதிராக கிளர்ந்து எழுவது என்பது இப்போது மத்திய கிழக்கில் எழுதப்படும் புதிய வரலாற்று அத்தியாயங்களாகும்.

1994 களில் எகிப்தில் மாற்றம் வேண்டி நின்ற சில இளைஞர்களை சந்தித்தபோது நான் நினைத்தேன் அவர்களிடம் இருந்த அந்த மாற்றம் நோக்கிய சிந்தனை எகிப்தின் அரசியலில் மாற்றத்தை கொண்டுவரும் என்று. ஆனால் அவ்வளவு இலகுவாக மாற்றங்கள் நடக்கவில்லை. இராணுவ ஜெனரல்கள் ஆட்சி தலைவர்களாக வந்து புரிந்த அட்டகாசங்களை எகிப்து இந்த அளவு சந்தித்திருக்கவில்லை. எகிப்திய சட்டத்தரணி ஒருவரை 2006 அளவில் ஒரு மத்திய கிழக்கு நாடொன்றில் சந்தித்தபோது எகிப்திய அரசியல் பற்றி எமது சம்பாஷனை நகர்ந்தபோது நான் அவரிடம் எகிப்தில் ஹோஸ்னி முபாரக் மற்றும் அவரது ஆட்சி பீட சகாக்கள் பற்றி அளவளாவும் போது எனக்கு அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஞாபகத்துக்கு வருவதாக சொன்னேன். அவர் வாய் திறந்து பல நிமிடங்கள் சிரித்தது மட்டுமல்ல அங்கிருந்த தனது நண்பருக்கும் அரபியில் சொல்ல (அவரும் ஒரு எகிப்தியர்) அவர்கள் இருவரும் ஆமோதித்து சிரித்தனர். “ நீங்கள் சரியாக சொன்னீர்கள் ஆனால் அவரை அசைக்கமுடியாதளவு நாட்டில் அரச இயந்திரம் ஊழல் மலிந்ததாகவிருக்கிறது. மக்கள் எதுவும் செய்யமுடியாமல் இருக்கிறார்கள்” என்று சொன்னார்.

மீண்டும் மாற்றத்தை எதிர்பார்ப்போம் என்று காத்திருக்க எகிப்து தீர்க்கமாக எந்த விட்டுக் கொடுப்பும் இல்லாமல் எழுந்து நின்றது. போன வாரம் நள்ளிரவில் எகிப்தில் கடந்த ஒரு தசாப்தமாக வாழ்ந்து வந்த ஒரு சூடானிய பிரித்தானிய பிரஜையான நண்பர் பிரித்தானிய பிரஜைகளை பிரித்தானிய அரசாங்கம் கப்பலேற்றி (விமானம்) கொண்டுவந்து இறக்கியது என்ற செய்தியுடன் என்னை தொலைபேசியல் தொடர்புகொண்டார். மாற்றங்கள் குறித்து சிலாகித்த அவர் முபாரக் போகாலாம் ஆனால் மாற்றங்கள் மக்களின் எதிபார்ப்புகளை பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி குறித்து பல சந்தேகங்களை கொண்டிருந்தார். பிரித்தானியாவும் அமெரிக்காவும் என் மேற்குலக நாடுகள் யாவும் மாற்றத்தை வரவேற்று அமையப்போகும் புதிய எகிப்திய அரசின் நண்பர்கள் தாங்கள் என்பதை வலியுறுத்த காட்டிய அக்கறை ஏகாதிபத்திய ஊடுருவல்கள் பற்றிய எதிர்கால அச்சங்களை அசட்டை செய்ய முடியாது என்று எச்சரிக்கிறது.

இராணுவ தலைமை இப்போது முபாரக்கின் கூட்டாளியிடமே இருக்கிறது என்றாலும் முபாரக்குக்கு மட்டுப்படுத்தப்படாத அதிகாரங்களை வழங்கிய அரசியல் சாசனம் இடைநிறுத்தப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு சட்ட வரைவும் அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடும் முறைமை பற்றியும் ஆராய ஒரு சபை உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தியுடன் இன்னும் ஆறு மாதம் மக்கள் இராணுவ நிர்வாகத்தில் தனது தலைவிதிகளை நிர்ணயிக்கும் சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கு காத்திருக்க வேண்டும். தேர்தல் களத்தில் குதிப்பார்கள் என எதிர்வு கூறப்பட்டு அவ்வாறு தாங்கள் குதிக்க போவதாக கூறும் முக்கிய நான்கு வேட்பாளர்களும் இராணுவ பதவிநிலை பின்னணியும் அமெரிக்க சார்பும் ஆதரவும் கொண்ட சாமி அனன், ஓமர் சுலைமான் ஆகிய இருவரும் தவிர மற்ற முக்கியமானவர் .அரேப லீக்கின் தலைவர் அமர் மெசே என்பவர். ஆனால் இவர் அரபு நாடுகளின் ஏதோச்சதிகார தலைமைகளுடன் நெருக்கமானவர். இன்னுமொருவர். மொஹம்மத் அல் பேரடி. இவர் அணு சக்தி அணுவாய்த பரம்பலை தடுத்தமைக்காக 2005ல் நோபல் பரிசு பெற்ற முஹமது எல் பாரடை எனும் எகிப்தியர். இவர் முன்னாள் ஐக்கிய நாடுகளின் அணுவாயுத பரிசோதகரான ஹான்ஸ் பிளிக்ஸுடன் பிரதி சர்வதேச அணு சக்தி முகவர் நிறுவனத்துடன் பணியாற்றி இராக் மீது பாரிய அழிவுஆயுதங்கள் வைத்திருப்பதாக இராக் மீது பரிசோதனை நடத்தியவர். இந்த யுத்தம் வேண்டுமென்றே அமெரிக்கவினாலும் அதன் கூட்டாளிகளாலும் நடத்தப்படுகிறது என்பதற்காக தனது தலைமை பதவியை ஹான்ஸ் பிலிக்ஸ் இராஜினாமா செய்ததும அணு சக்தி நிறுவனத்தின் தலைமை பதவிக்கு வந்தவர். ஹான்ஸ் பிளிக்ஸுக்கு இருந்த மனச்சாட்சி இவருக்கு இருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவர் எகிப்திய அரசியலுக்கு மிகத்தூரமானவர் என்ற கருத்தும் நிலவுகிறது.

எகிப்தின் இந்த மக்கள் புரட்சியின் வரலாற்றை பின்னோக்கி பார்க்கும் போது ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பு பூமியாக மட்டுமல்ல கிங் சாலஹுதீனும் எகிப்தினை கைபற்றி ஆள நினைத்து 1169ல் எல்-பாபின் யுத்தம் வென்று எகிப்தினை ஆட்சி செய்தவர். தொடர்ந்தேர்சியான ஐரோப்பிய ஆக்கிரமிப்புக்கள் எகிப்தை கையகப்படுத்தி வந்திருக்கின்றன. அந்த வகையில் 1879 ஆண்டில் ஐரோப்பிய ஆக்கிரமிப்புக் கெதிராக எகிப்திய விவசாயிகளின் சார்பில் போராட்டம் நடத்தி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒராபி பாஷா இலங்கையில் முஸ்லிம் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர். கொழும்பு சாஹிரா கல்லூரியில் இவரின் பங்கு காத்திரமானது. இவருக்காக இலங்கை அரசு முத்திரை வெளியிட்டு கவுரவித்தது. தனது அந்திம காலத்தில் இவர் எகிப்து திரும்பி மரணமானார். என்பது ஒருபுறம் இருக்க மக்கள் போராட்ட நாயகன் ஒராபி பாஷா தொடக்கி வைத்த மக்கள் போராட்ட எதிர்பார்ப்புக்கள் இப்போது சொந்த நாட்டின் சர்வாதிகார மக்கள் விரோத ஆட்சியாளர்களின் மீது திரும்பியிருக்கிறது. ஹிஷாம் எல் கோஹ் பாடும் கவிதைபோல் இந்த கவிதையே பழைய கவிதையாகமல் தள்ளி போடப்படாமல் எகிப்துக்காக தகுந்த கவிதையாக இருக்குமா ?

February 14, 2011 at 9:33 am

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...