Friday, 29 July 2011

பயங்கரவாதமும் பைத்தியமும் !!!

எஸ்.எம்.எம்.பஷீர்  

நான் சாகத் தயாராக இருக்கிறேன் , ஆனால் நான் கொல்வதற்கு தயாராகவிருப்பதற்கான  காரணம்தான் இல்லை”  (மகாத்மா காந்தி)
(I am prepared to die, but there is no cause for which I am prepared to kill” .  ~Mahatma Gandhi)

நோர்வேயில் சென்ற வெள்ளிக்கிழமை பயங்கரவாத செயல்புரிந்து முழு ஐரோப்பாவையும் மட்டுமல்ல உலகின் மேற்குலக பயங்கரவாதம் பற்றிய கருத்தியலுக்கு புதிய பார்வை வீச்சினை ஏற்படுத்திய பிரிவிக் ஒரு கிரீஸ்தவனில்லை ஒரு முஸ்லிம் எதிர்ப்பாளன் , ஒரு வலதுசாரி என்ற அடையாளப்படுததலே உலகின் பிரபல ஊடகங்களால்  இன்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஒரு பயங்கரவாதியாக பிரிவீக் கிறிஸ்தவ மதத்தின் பெயரில் மனித விரோத கருத்தியல்களுடன் தன்னை அடையாளப்படுத்தி புலிப்பயங்கரவாதிகளுக்கு புகலிடமும் போஷனையும் செய்த நோர்வே நாட்டின் கதவுகளை அந்நாட்டு பிரஜை ஒருவனே தட்டியுள்ளான் என்பதை நோர்வே ஜீரணிக்கவே கஷ்டப்படுகிறது.  அழிவுகள் மூலம் மேற்குலகினை அவன் இரு விதத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளான் .  ஒன்று மேற்குலகில் எடுத்ததற்கெல்லாம் சகட்டு மேனிக்கு  முஸ்லிம் பயங்கரவாதம் என்று பிரபல சர்வதேச உள்ளூர்  ஊடகங்களிலும் எழுதியும் பேசியும் வரும் பல் துறைசார் விற்பன்னர்களுக்கும்  , முஸ்லிம் பயங்கரவாதம் என்று முஸ்லிம் மக்கள் மீதும் போர் முரசறையும்  பொய் ஜனநாயக  மனித உரிமை முகமூடியணிந்த மேற்குலக அரசுகளுக்கும இது பெரிய அதிர்ச்சிதான்..    நோர்வேயும் பயங்கரவாதத்தின் நேரடி விளைவை சந்தித்திருப்பதால் இலங்கையில் பயங்கரவாதம் எப்படி இருந்திருக்கும் என்பதை தமது பட்டறிவு மூலம் அறிந்து கொள்ள நேரிட்டுள்ளது.

பிரிவிக் ஒரு மனநிலை சரியற்றவன் , புத்தி பேதலித்தவன் என்று  கிறிஸ்தவ மத அடிப்படையில் பயங்கரவாதம் புரிந்தவனை அடையாளப்படுத்துவதில் மூடி மறைப்புக்களை செய்ய மேற்குலகின் ஊடக ஆய்வாளர்கள் , ஆரசியல் கருத்துரையாளர்கள் முயற்சிப்பதை கூட  இப்போது காணக் கூடியதாகவுள்ள நிலையில் , உண்மையில் உலகின் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதில் சம்பந்தப்பட்டதாக சொல்லப்பட்ட  நபர்கள்  தொடக்கம் இந்திய ஹிந்துத்துவ ஆர். எஸ்.எஸ். இயக்க , சிவசேன இயக்க சார்பாக பயங்கரவாத செயல்களுடன் அடையாளப்படுத்தப்பட்ட  நபர்கள் , என புலிகள் வரையும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டோர் மனநிலை பாதிக்க பட்டவர்கள் அல்லர் எனபதும் அவர்களில் பலர் நன்கு சிந்திக்க கூடியவர்களாக மூளச்சமநிலை உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது ஒரு வெளிப்படையான கசப்பான உண்மை . அந்த வகையில் பிரிவிக்கும் அதற்கு விதிவிலக்கல்ல.


Saturday, 23 July 2011

ஆடி மாதமும் ஆடி அடங்கா தமிழ் இனவாத அரசியலும் : ஒரு நினைவுக் கிளறல்
                                                                             எஸ்.எம்.எம்.பஷீர்
மொழி சிந்தனையை சிதைக்கலாம்
                         -ஜோர்ஜ் ஓர்வெல் -
 (Language can corrupt thought'- George Orwell)

இலங்கை வரலாற்றில் ஆடி (ஜூலை) மாதம்  வைகாசி  (மே)   மாதம் ஆவணி (ஆகஸ்ட்) மாதம் ஆகிய மாதங்கள் சகல இலங்கை மக்களாலும் மறக்கமுடியாத துர்ப்பாக்கிய சம்பவங்களால் நிறைந்திருக்கிறது. தமிழ் தேசியவாதிகளின்  புலி ஆதரவாளர்களின் சிங்கள இனவெறியூட்டல்கள்  ஆண்டுதோறும் ஆடி மாதத்திலும் வைகாசி மாதத்திலும் கள மேற்படுத்தப்படும் பொழுது முழு இலங்கை மக்களும் தமிழ் தேசிய வெறியர்களும் பயங்கரவாதிகளுமான புலிகளால் மற்றும் ஆயுதம் தாங்கிய தமிழ் இயக்கங்களால் இலங்கை மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளையும் நாம் நினைவு கூறவேண்டியுள்ளது.   

ஆடி மாதத்தில் இனவெறியாட்டத்தை  1983 ல் சிங்கள காடையர்கள் கட்டவிழ்த்து விட்டபின்   அந்த வெறியாட்டத்துக்கு தூண்டுகோலாயிருந்த  புலிப  பயங்கரவாதம் முடிவுக்கு வரும் வரை  வருடந்தோறும் ஆடி மாதத்தில் புலிகள் ஆடிய இனவெறியாட்டம் எமது கவனத்தையும் நினைவையும் விட்டு நீங்கவில்லை. ஆடி மாதமே புலிகளின் ருத்திர தாண்டத்துக்கு கால்கோளிட்ட  மாதமாகும்  அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்

Friday, 15 July 2011

"இவர் போல யாரென்று" மறக்க முடியாத சில மனிதர்கள் - மேலைப்பாளையம் ஜமால் மொஹிடீன்


 
எஸ்.எம்.எம்.பஷீர்

தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர் - ..”   (நன்னெறி)
இலண்டனில் சுமார் மூன்று தசாப்தங்களாக வாழ்ந்து தான் வாழ்ந்த சமூகங்களுக்கு மத்தியில் ஆளுமை செலுத்திய தமிழ் நாடு மேலைப்பாளையத்தை சேர்ந்த மறக்கப்பட்டுப் போன ஒரு மனிதர் பற்றிய நினைவு என்னை அவர் பற்றி எழுதத் தூண்டியது.  அந்த வகையில் நான்  கேள்வியுற்ற ,   ஓரிரு தடவைகள்  1994ல்  நேரடியாக சந்திக்க கிடைத்த  ஒரு நல்ல மனிதர்தான்   ஜமால் மொஹிடீன் . 
Thursday, 14 July 2011

தமிழக முஸ்லிம் அரசியலும் இலங்கை விவகாரங்களும்;

எஸ்.எம்.எம்.பஷீர்

“தலைவன் ஆங்கு பிறர்கையில் பொம்மை;
சார்ந்து நிற்பவர்க் குய்ந்நெறி உண்டோ? “ சுப்ரமணிய பாரதி


இம்மாதம் 16 ந் திகதி தமிழக தேர்தல்கள் இடம்பெறுகின்றன. புpரச்சாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன. இலங்கைத் தமிழரின் அரசியல் அதிலும் குறிப்பாக புலிசார்பு அரசியல் இன்றைய முல்லைத்தீவு மக்களின் துயரக முகத்துடன் தமிழகத்தின் அமைதிச்சூழலை ஆக்கிரமித்திருக்கிறது. தமிழ் நாட்டு முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களது அரசியல் அடையாளத்தினை பாகிஸ்தான் பிரிந்து முகமதலி ஜின்னா அவர்கள் இடம்பெயர்ந்தபின்னர் சுதந்திர இந்தியாவின் அகில இந்திய முஸ்லிம்லீக் கட்சியினை (அ.இ.மு.லீ.) சுமந்துகொண்டவர். மறைந்த காயிதே மில்லத் இஸ்மாயில் தாஹிப் அவரது தி.மு.காவுடனான அரசியல்கூட்டு அவரது மறைவிற்குப் பின்னரும் தொடர்ந்து வருகின்றது. இடைக்காலத்தில் அ.ஸ.அப்துல் சமத் அவர்கள் காங்கிரசுடன் தனிக்கூட்டுவைத்ததை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அ.இ.மு.லீ என்றுமே தி.மு.காவின் பக்கம் இருந்து வருகின்றது. பெயரில் அகில இந்தியக் கட்சியாக இருப்பினும் அவ்வாறு செயற்பட முடியாமல் இன்று கேரளா, தமிழக மானிலக் கட்சியாக அ.இ.மு.லீ சுருங்கியுள்ளது மறுபுறம் டில்லி ஜாமாபள்ளி தலைமை இமாம் வுஹாரி அவர்கள் தேர்தல் காலங்களில் தனது ஆளுமையை பேரம்பேசும் சக்தியாக பிரயோகித்து அரசியல் ஈடுபாடின்றி முஸ்லிம் மக்களின் நலன்சார்ந்து செயற்பட்டு வருகின்றார்.


Monday, 11 July 2011

மெல்ல தமிழ் ஊடக தர்மம் இனிச் சாகும்!

எஸ்.எம்.எம் பஷீர்

aananthi
“குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலை களவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்….”
உலகநாதர்


தேனி இணையத்தளத்தில் வெளியான வாசந்தியின் பிரபாகரன் உங்களைச் சந்திக்க மாட்டாரென்று வி.பி.சி ஆனந்தி கூறியதாக தென் இந்திய எழுத்தாளர் வாசந்தி எழுதிய கட்டுரை எனது ஞாபகத்தினைக் கிளறியதால் ஏற்பட்டதன் பிரதிபலிப்பே இக்கட்டுரையாகும்.
அக்கட் டுரையில் ஸ்ரீலங்கா காவல்துறை எனக்கு யாழ்ப்பாணத்திற்குச் செல்ல அனுமதி கொடுத்தது: “அவருக்கு வழியில் ஆபத்து ஏற்பட்டால் அவரேதான் பொறுப்பு” என்கிற ஷரத்துடன். நான் தங்கியிருந்த தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அப்போது லண்டனிலிருந்து வந்திருந்த பி.பி.சியின் பணியாளர் ஆனந்தி தங்கியிருந்தார். யாழ்ப்பாணத்திற்கு செல்ல முயன்று வந்தார். நான் தடைசெய்யப்பட்ட எல்லைக்கு அப்பால் இருக்கும் வவுனியா பகுதிக்கு ரயிலில் பயணமாவது தெரிந்து (நான் எனது பயணத்தைப் பற்றி அவரிடம் உளறி வைத்தேன்) மிக வியப்படைந்தார். மிகுந்த பரபரப்புடன் ‘எப்படி அனுமதி கிடைத்தது எப்படிப் போகப்போகிறீர்கள் மிகக் கடுமையான பயணம் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார். எதற்காகப் போகிறீர்கள் என்று துளைத்தார். பிரபாகரன் உங்களைக் காணமாட்டார் என்று தெரியாதா? கஷ்டப்பட்டுச் சென்ற பிறகு புலிகள் உங்களை உள்ளே அனுமதிக்காவிட்டால் என்ன செய்வீர்கள்? ஏன்று எச்சரித்தார். ஆனந்தி புலிகளுக்கு நெருக்கமானவர் என்று தெரியும். ஆனால் எனது ஆர்வம் அசைக்க முடியாததாக இருந்தது. என்று வாசந்தி குறிப்பிட்டிருந்தார்.

Saturday, 9 July 2011

நெஞ்சில் மூண்ட தீயை நினைவில் இறக்கிய நாள்எஸ்.எம்.எம்.பஷீர்   

எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.
                                                                                                      அம்பேத்கார்தோழர் யோகரத்தினத்தின் "தீண்டாமை கொடுமைகளும் தீமூண்ட நாட்களும்" நூல் வெளியீடு -ஒரு பார்வை

பிரான்சிலுள்ள லா சப்பால் என்னுமிடத்தில் சென்ற ஞாயற்றுக்கிழமை (3.07.2011) இடம்பெற்ற தோழர் யோகரத்தினம் எழுதிய "தீண்டாமை கொடுமைகளும் தீமூண்ட நாட்களும்" எனும் நூல் வெளியீட்டு விழா, இலங்கையின் இடதுசாரி மூத்த தலைவர்களில்  ஒருவரும் இன்றைய இலங்கை அரசின் தேசிய மொழிகள் சமூக  ஒருங்கிணைப்பு அமைச்சருமான தோழர் வாசுதேவா நாணயக்காரா சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட நிலையில் சிறப்பாக மூவின மக்களின் பிரசன்னத்துடன் வெற்றிகரமாக நடைபெற்றது என்பது வெறுமனே ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வு என்பதற்கப்பால் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக ஒரு போராளியாக  தான் வாழ்ந்த காலத்தை பதிவாக்கிய ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாக  பதிவு செய்யப்பட வேண்டும். 

கொழும்பு துறைமுக நகரம் தனி நாடல்ல! - –சுப்பிரமணியம் நிஷாந்தன்

ஏப்ரல் 18, 2021   கொ ழும்பு துறைமுக நகரம் வர்த்தக ரீதியாக இலங்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதுடன், இதுவொரு தனிநாடல்ல. இதன் மொத்த நி...