Re-election of Rizvi Moulavi as ACJU President- by Latheef Farook

July 23, 2019

Reflects religious and moral bankruptcy of Muslim community  



ACJU
The re-election of Rizvi Moulavi, despite his reputation for frequent controversies and repeated blunders which caused immense damage to the community, as the president of All Ceylon Jamiathul Uema, ACJU, reflects the religious and moral bankruptcy of the Muslim community. 
This was expected as the ACJU has been a one man show, ever since Rizvi Moulavi who, kicked out ACJU President Riyal Moulavi under questionable circumstance 20 years ago and grabbed power.
ACJU is an association of those who have gone through Madarasas. ACJU has no mandate to speak or act on behalf of the Muslim community as it was not given this authority by the community.
In Islam there is no priesthood. We only have Islamic scholars .There are many Islamic scholars who are not members of ACJU as they do not have independent voice on crucial religious matters.

முஸ்லிம் அமைச்சர்களின் பதவி துறப்பு நாடகம் முடிவுக்கு வருகின்றது .! - புனிதன்


கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தலைநகர் கொழும்பிலும்
நாட்டின் சில பகுதிகளிலும் உள்ள தேவாலயங்களில் மதவழிபாட்டில்
ஈடுபட்டிருந்த மக்கள் மீதும் மற்றும் நட்சத்திர விடுதிகள் மீதும் நடத்தப்பட்ட
இஸ்லாமிய பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதல்களால் 250 இற்கும்
மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் பல நூற்றுக்கணக்கானோர் காயமும்
அடைந்தனர். இந்தத் தாக்குதல்கள் காரணமாக இலங்கை ஒரு பாதுகாப்பற்ற நாடு என்ற உணர்வு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உருவானது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், அரசியல் ரீதியிலான நெருக்கடிகளும் ஏற்பட்டன.
Image result for muslim ministers resigned in sri lanka at pm place

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி சில நாடுகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா போன்றன இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய எத்தனித்தன. ஆனால் தேசப்பற்றுள்ள அரசியல் சக்திகளும் மக்களும் அதற்கு அனுமதிக்கவில்லை. என்றாலும் திரைமறைவு முயற்சிகள்
தொடர்ந்தவண்ணம் உள்ளன. இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களைத்
தொடர்ந்து அரசாங்கத்தில் உயர் பதவி வகித்து வந்த சில முஸ்லீம்
அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக,
அமைச்சர் ரிசாத் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும்
மேல்மாகாண ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோர் மீது இந்தப் பயங்கரவாதத்
தாக்குதல்களுடன் சம்பந்தப்படுத்தி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
விசேடமாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது பல குற்றச்சாட்டுகள்
முன்வைக்கப்பட்டன. ரிசாத் பதியுதீனை அமைச்சர் பதவியில் இருந்து
நீக்குவதுடன், அவரைக் கைது செய்து விசாரணைக்கு உள்படுத்த
வேண்டுமெனவும் நாட்டின் பல தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள்
எழுந்தன. அவர் மீது உடன் நடவடிக்கை எடுக்கக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அத்தரலிய ரத்தினதேரர் கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் சாகும்வரை உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டார். இந்த நிலைமைகள் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடுமையான நெருக்கடியை உண்டுபண்ணின.

அரசாங்கம் ஜே.வி.பி. மூலம் வைத்த பொறியில் சிக்கிக்கொண்டதா எதிர்க்கட்சி?- வானவில்

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சி நடத்தும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக ஜனதா விமுத்தி பெரமுனவினால் (மக்கள் விடுதலை முன்னணி – ஜே.வி.பி.) கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் 27 மேலதிக வாக்குகளால் தோற்றுப்போனது. இது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.

ஏனெனில்இ ஐ.தே.க. அரசாங்கத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதன் பாரம்பரிய சகபாடியான தமிழ்த்தலைமை – தற்போது அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு – முண்டு கொடுத்து காப்பாற்றிவிடுவது வழமை. இந்தமுறையும் அதுதான் நடந்தது.

எதிரணிக்கு 95 உறுப்பினர்கள்வரை இருந்தும்இ அதனுடன் சேர்த்து ஜே.வி.பியின் 6 உறுப்பினர்கள் சேர்ந்து வாக்களித்தும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு 92 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. அதேநேரம் தீர்மானத்துக்கு எதிராக 119 பேர் வாக்களித்துள்ளனர். 13 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இலங்கையின் பயங்கரவாதத் தாக்குதல்களின் பலாபலன்களை அறுவடை செய்த நரேந்திர மோடி! அடுத்த இலக்கு என்ன?



இலங்கையில் இவ்வருடம் ஏப்ரல் 21  ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன் று கிறிஸ்தவ தேவாலயங்கள் ; மீதும் நட்சத்திர விடுதிகள்  மீதும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் தாக்கமே சமகால இலங்கையின்  சகல விடயங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது. நிச்சயமாக இது பாரதூரமான தேசிய
முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயம் என்பதில் சந்தேகமில்லை. அதற்கும் அப்பால் இது பிராந்திய ரீ தியிலான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதிலும் சந்தேகமில்லை.

முதலில் இந்த தாக்குதல்கள் உள்ளூரைச் சேர்ந்த  குறிப்பிட்ட ஒரு முஸ்லீம் பயங்கரவாத இயக்கத்தால்தான்  திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது எனவே கருதப்பட்டது. பின்னர் இந்தத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ். என்ற சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு உரிமை கோரிய  ன்னர் இந்தத் தாக்குதல்கள் சர்வதேச சக்திகளின் திட்டமிட்ட நாசவேலை எனக்  கூறப்பட்டது. ஆனால் நாள்  போகப்போக இந்தத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ். என்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கும் அப்பால் அந்த அமைப்பை பின்னால் இருந்து இயக்குகின்ற வேறு ஓரு பெரும் சக்தி செயல்பட்டிருக்கலாம்  என்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது.


இலங்கையில் ஏற்பட்டுள்ள அமெரிக்காவின் அதீத அக்கறை!- பிரதீபன்


அமெரிக்க அரசின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ( யூன் மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அந்நாட்டின் இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
யூன் 24 முதல் 30 வரை அவர் மேற்கொள்ளவுள்ள மூன்று இந்தோ – பசுபிக்
பிராந்திய நாடுகளுக்கான விஜயத்தின் போது அவர் முதலில் இந்தியா
செல்லவுள்ளார். இந்திய விஜயம் பற்றிக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க அரசு, இந்தியாவில் மோடி திரும்பவும் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது
அவரது இலட்சியங்களை அடையவும்,இந்தியாவை உலகின் நடுநிலை
ஸ்தானத்துக்கு வளர்க்கவும் வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள இந்தக் கருத்தின் அர்த்தம் எதிர்காலத்தில்
இந்தப் பிராந்தியத்தில் மோடியின் இந்தியா அமெரிக்க வல்லரசின் இளைய கூட்டாளியாக மேலும் உறுதியுடன் செயல்படப் போவதின் வெளிப்பாடு எனக் கருதப்படுகிறது.


டியூ குணசேகரவின் அறுபது வருடகால அரசியல் சேவை; அவர் ஒரு கைதேர்ந்த கம்யூனிஸ்ட்


நீண்டகாலம் சேவை செய்த அரசியல் தலைவராக டியூ.குணசேகர விளங்குகிறார். சரியாகச் சொல்லப்போனால் 60 வருடங்கள். டட்லி சேனாநாயக்க 31 வருடங்கள் சேவை செய்தார் ஜே.ஆர்.ஜயவர்தன 50 வருடங்கள் ;  சிறிமாவோ பண்டாரநாயக்க 40 வருடங்கள் ;  கலாநிதி என்.எம்.பெரேரா 46 வருடங்கள் ;  கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா 56 வருடங்கள் ; கலாநிதி எஸ்.ஏ.விக்ரமசிங்க 50 வருடங்கள் ; பீட்டர் கெனமன் 57 வருடங்கள்.
நோர்வேயைச் சேர்ந்த சிறந்த நண்பரொருவர் டி.யூவுடன் குறுகிய நேரம் சந்தித்துப் பேசிவிட்டு அவர் எத்தகைய பண்பு கொண்டவர் என்று மதிப்பிடுகிறீர்கள் என்று என்னைக் கேட்டார். ‘டியூ ஒரு கைதேர்ந்த கம்யூனிஸ்ட்’  என்று நான் பதில் சொன்னேன். கம்யூனிஸ்ட் என்றால் யார் என்று தனக்கு விளங்குகிறது என்றும், ஆனால் கைதேர்ந்த கம்யூனிஸ்ட் என்ற ஒரு சொல்லை ஏன் சேர்க்கிறீர்கள் என்றும் நோர்வே நண்பர் திருப்பிக் கேட்டார். எனது பதில் மிகவும் எளிமையானது; டியூ வார்த்தை ஜாலங்களில் நம்பிக்கை கொண்டு செயற்படுபவர் அல்ல. அவர் நம்புவது ஆய்வுகளையும், அறிவாதாரமான அனுபவத்தையுமே.

மற்றும் சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை முயற்சி ‘டெயிலி மிரர்’ ஆசிரிய தலையங்கம்:

சீன – இலங்கை உறவுகள்,

அதன் கடன் சுமை


லங்கையிலிருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ பத்திரிகையில் யூன் 3 ஆம் திகதி வெளியான ஆசிரிய தலையங்கத்தின் சாராம்சம் கீழே தரப்பட்டுள்ளது.
________________________________________
சீனாவும் இலங்கையும் வரலாற்றுரீதியாக நெருங்கிய உறவைப்பேணி வருகின்றன. கிறிஸ்துவுக்கு 400 ஆண்டுகள் முன்னதாகவே சீன பௌத்த குருமார் இங்கைக்கு விஜயம் செய்தமை பதிவாகியுள்ளது. இலங்கை 1948 இல் சுதந்திரமடைந்த பின்னர் 1950 இல் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் சீனா நிரந்தர உறுப்புரிமை பெறுவதற்கு அனுசரணையும் வழங்கியது.
1952 இல் இலங்கை பெரும் உணவுப்பற்றாக்குறையை எதிர்நோக்கியதுடன் தனக்கு தேவையான அரிசியையும் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதேநேரத்தில் இயற்கை இறப்பரின் விலையும் வீழ்ச்சி கண்டது. இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் மூலம் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சீனா உதவி அளித்தது.

கார்த்திகேசன் – ஓர் அர்ப்பணிப்புள்ள தோழர்-‘வானவில்’

கார்திகேசன் ; - ஓர் அர்ப்பணிப்புள்ள தோழர் 1952 இல் நான் கம்பஹாவின் 1952 நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலிருந்து இலங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடித் தோழர்களில் ஒருவரான தோழர் கார்த்திகேசனை அறிவேன். சீனத் தலைநகர் பீஜிங்கில் இருந்த எனது மூத்த புதல்வர் சுபாசும்,  கார்த்தகேசனின் மகள் ராணியும் நெருங்கிய நண்பர்களான பின்னர் எமது உறவுகள் மேலும் பலப்பட்டன. 1940 களில் கார்த்திகேசன் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்ட பின்பு யாழ்ப்பாண அரசியலில் அவர் ஒரு பிரபல மனிதரானார். அப்பொழுது அவர் ஒரு இளம் தலைவராக இருந்தார். நான் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினதும்ää
அதன் வாலிபர் சம்மேளனத்தினதும், அதேபோல அதன் தொழிற்சங்க
சம்மேளனத்தினதும் பொதுச்செயலாளரான பின்னர் ,  கம்பஹா
- யக்கல மடுகஸ்வளவுவவில் இருந்த எனது இல்லத்துக்கு அவர் வருகை
தந்திருக்கிறார். இந்த வருகைகளின் போது நாம் இருவரும் பல்வேறு
விடயங்கள் குறித்து,  விசேடமாக தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து, அதிலும் யாழ்ப்பாணத்தில் நிலவி வருகின்ற சாதிப் பிரச்சினை குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்திருக்கிறோம்.






இராணுவ முகாமை அமைக்க அமெரிக்கா முயற்சி – வாசுதேவ


அமைச்சரவையை நீக்கி சர்வகட்சிகள் அடங்கிய அமைச்சரவை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார,  நாட்டின் இறையான்மைக்கு பாதகமான நடவடிக்கைகளையே பிரதமர் உட்பட அமைச்சரவை மேற்கொண்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
சோலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் சில பிரதேசங்களில் ஏற்பட்டுவரும் சிறிய வகையான சம்பவங்கள் பாரியதொரு வெடிப்பாக மாறும் அபாயம் இருக்கின்றது. அதனையே அமெரிக்கா போன்ற நாடுகள் எதிர்ப்பார்த்து இருக்கின்றன.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...