யார் யாரோவெல்லாம் எம்மில் சவாரி செய்ய ..

யார் யாரோவெல்லாம் எம்மில் சவாரி செய்ய ..

எஸ். எம்.எம். பஷீர்

சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பாக நான் எழுதிய "ஹீரோ டு ஜீரோ" (From Hero to Zero) என்ற கட்டுரையில் குறிப்பிட்ட மேற்குலக சக்திகளின் பின்னணிகள் பற்றிய அனுமானங்கள் பல என்று ஆதாரங்களாகி வருகின்றன. அந்தப் பின்னணியில் இன்னுமொரு புதிய செய்தி இலண்டனில் இருந்து வெளிவரும் தெளிக்ராப் (The Daily Telegraph) எனும் பத்திரிக்கை செய்தியுமாகும். அதாவது முன்னாள் பிரித்தானிய மரபுவாதக் கட்சியின் அதன் இன்றைய தலைவரான டேவிட் கமரூன் (David Cameron) பாரிய லண்டன் நகர மேயராகவிருக்கும் போரிஸ் ஜோன்சனின் (Boris Johnson) ஆகியோருக்கு ஆலோசகராகவிருந்த ஜேம்ஸ் மக்ராத்(James McGrath) என்பவர் ஜெனரல் பொன்சேகாவுக்கு அவரது தோல்வியின் பின்னரான ஹோட்டல் பத்திரிகை பேட்டி, அதனை தொடர்ந்த மகிந்தவுக்கு எதிரான அறிக்கைகளுக்கு பின்னனியிலிருந்தார். அப்பத்திரிக்கை மேலும் குறிப்பிடுகையில் ஜெனரல் பொன்சேகா இத்தேர்தலில் வெற்றியடைந்திருந்தால் அதன் புகழ் இவருக்கே சாரும், ஏனெனில் இவர் ஒரு மாதமாக பொன்சேகாவின் பிரச்சார செயற்பாட்டின் உபாய வகுப்பாளராக இலங்கையில் செயற்பட்டிருந்தார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. அது மாத்திரமல் மேற்குலகின் இரட்டை வேட , நயவஞ்சகத்தனமான செயற்பாட்டினைஇவர் பொன்சேகாவின் மீது போர் குற்றம் சாட்டப்பட்டு உள்ளபோதும் தான் அவரை ஆதரிப்பதில் தனது மனச்சாட்சி உறுத்தவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இவர் தனது ஆலோசகர் பதவியிலிருந்து 2008 ம் ஆண்டு கரிபியன் மக்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களை கூறி அதனால் ஆலோசகர் பதவியிலிருந்து விலகநேரிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று அமெரிக்க அவுஸ்திரேலியா என்று அனுதாபங்களை பெற்றுக்கொண்டு உலகை இலங்கை மீது தலையிடக் கோரும் இந்த ஜெனரல் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டயினும் மேற்குலக நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு சபதமேடுத்துள்ளார். இந்த நிலையில் மேற்குலக எதிர்புவாதிகளான ஜே. வீ. பீ என்ன செய்யப்போகிறது, இவர் எக்கட்சியில் போட்டியிடப்போகிறார், என்ற கேள்விகளுக்கு அப்பால் மீண்டும் தொடங்கும் மிடுக்கென இலங்கையை பின்னி எடுக்கப்போகிறோம் என்று மேற்குலக ஏகாதிபத்தியங்கள் இன்னமும் உரமாக மூலோபாயங்களை மாற்றி செயற்படப்போகிரார்கள். அந்த வலையில் ஜே வீ.பீ உம இணைந்து கொள்ளலாம். ஆனால் ஏகாதிபத்திய ஹக்கீம் , மனோ கணேசன், சம்பந்தன் தமது "கூட்டுப்படை தளபதி" ரணிலுடன் என்ன செய்வார்கள் எனபது தெரிந்ததுதான். எனது முன்னைய கட்டுரையை ஞாபக மூட்டுவதற்காய் மீண்டும் இங்கு பதிவிலிடுகிறேன்.


ஹீரோ டூ ஸீரோ

எஸ்.எம்.எம். பஷீர்

பொன்சேகா சென்ற வருடம் செப்டம்பரில் கனடாவிலுள்ள நெஷனல் போஸ்ட் (The National Post) பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் சிறுபான்மை இனங்களை பற்றி கருத்து தெரிவிக்கும்போது, "இந்த நாடு சிங்களவர்களுக்கு உரியது. அவர்கள் எங்களுடன் வாழலாம் ஆனால் தாங்கள் சிறுபான்மையின ராக இருக்கிறோம் என்ற சாட்டில் அடாத கோரிக்கைகளை உரிமையுடன் கோரமுடியாது" என்று ஆரம்பித்து தனது சர்ச்சைக்குரிய கருத் துக்களை நியாயப்படுத்தி பிரசித்தி பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா முஸ்லிம்களை சிறுமைப் படுத்திவிட்டார் என்று சினந்த ரவூப் ஹக்கீம் ‘பொன்சேகாவின் அப்பன் என்றாலும் அவ்வாறான கருத்தினை முஸ்லிம்களைப் பற்றி கூறி னால் நான் விடமாட்டேன்’ என்று வீர முழக்கமிட்டார்.

மேலும், புலிகளைத் தோற் கடிக்க (சரத் பொன்சேகா ) கால அட்டவணை வகுத்ததைப் பற்றி ஹக்கீம் தனது அதி மேதாவிலாசத் தினை காட்டும் வகை யில் "விவேக முள்ள இராணுவத்தளபதி கால அட்டவணை பற்றி என்றும் பேச மாட்டார். ஏனெனில், அவை நிச்சயமாக யுத்த தந்திரத்தையும், திட்ட மிடலையும் பாதிக்கும், எதிரியை உசார்படுத்தும். இப்போது இதுதான் உண் மையில் நடந்திருக்கிறது.

(“I would not let even the Fonseka’s father make such comments about Muslims. No prudent general could ever talk of time frames-as it will certainly affect strategy and planning and even help notify the enemy and put them on alert. In this case, this is exactly what happened.”)

இலங்கை இராணுவம் தங்க ளுக்கு ஏற்பட்ட மன உளைவை மறைப்பதற்கும் வெற்றி நெருங்கி வருகிறது என்ற நம்பிக்கையை வைத்திருப்பதற்கும் அவர் கள் (இராணுவத்தினர்) மீற்றர்களை கைப்பற்றுவது பற்றி பேச வேண் டும். கைவிடப்பட்ட பங்கர்களைப் பற்றிய எண்ணிக்கையை சொல்ல வேண்டும். எதிரியின் மரணத் தொகை பற்றி பெருப்பித்துக் கூற வேண்டும்.

(“In order to hide their embarrassment and to maintain the hope of imminent victory, they have to talk of capturing meters, give figures of abandoned bunkers and keep bloating the number of battlefield deaths of enemy” -The Sunday Leader 14th January 2009)

என்றெல்லாம் புலிகளின் பலத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த ஹக்கீம் பொன்சேகாவை, இலங்கை இராணுவத்தை பரிகாசம் செய்தார். ஆனால், ஒரு வருடத்துள் தனது கருத்தினை ஏன் எவ்வித முகாந்திரமுமின்றி மாற்றிக்கொண்டார்?

சென்ற ஜனாதிபதித் தேர்தலில் ஹக்கீம் சுயாட்சி பெறுவதாகக் கூறி ரணில் தரப்பினருடன் ஒப்பந்தம் செய்தார். முஸ்லிம்களுக்கு ரணில் சுயாட்சி தருகி றார் என்று ஒப்பந்தம் பண்ணியதாக கூறி ரணிலுக்கு ஆதர வளித்து அவலப் பட்டவர், அல்லல் பட்டவர்- சிறுபான்மை சமூகங்க ளைப் பற்றி ஆதிக்கக் கருத்துக்களை தான் அப்படிக் கூறவில்லை இப் போது பத்திரிகைக்காரன் திரித்து எழுதிவிட்டான் என்று சுமார் ஒரு வருடத்தின் பின்னர் சரத் பொன் சேகா மறுப்பு விடு முன்னரே ஹக்கீம் முந்திக்கொண்டு எவ்வித வெளிப்படை யான அல்லது அந்தரங்க உடன்பாடுமின்றி பொன்சேகா வுக்கு ஆதரவளிப் பதாக தெரிவித்தி ருக்கிறார்.

சரத் பொன்சேகா பல கோமாளி கருத்துக்களை கூறி தானும் ஹக்கீ முக்கு சளைத்தவரல்ல என்பதை நிரூபித்து வருகிறார் .

இதில் வேறு முஸ்லிம் களின் ஹஜ்ஜுப் பெருநாள் பண்டிகைக்கான வாழ்த் துக்களை கூட ஆஹா ஓஹோ என்று பொன்சேகா தெரிவித்திருக்கிறார். சரத் பொன்சே காவை ஆதரிப்பதாக சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு முஸ்லிம் மக்களை ஆலோசிக்காமல் முடிவெடுத் துவிட்டு கிழக்கு மக்களி டம் சென்று ஆலோசிக்கப் போவ தாக செய்தி வெளிவந்திருக் கிறது.

ஒன்று மட்டும் தெளிவாகிறது, ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல்கள் மெதுமெதுவாக அரங்கேற்றப்படுகின்றன.

‘விடுதலைப் புலிகள் பலவீனப் படுத்தப்படுவதை நாம் ஒரு போதும் விரும்ப மாட்டோம். சமாதானப் பேச்சுக்கள் உறுதியுடன் முன்னெடுக் கப்பட வேண்டு மானால் அந்த அமைப்பு பலங்கொண்டதாகவே இருக்க வேண்டியது அவசிய மாகும்’ என்று 2004ம் ஆண்டு ஜூனில் குறிப் பிட்ட ஹக்கீமுக்கு இலங்கை இராணுவம் புலிகளை வென்றது கூட அல்லது புலிகளை வெல்லப் போவது கூட விருப்பத்திற்குரியதாக இருக்கவில்லை.

இன்னொரு புறம் சரத் பொன் சேகாவை பொறுத்தவரை, பிரபாகரனுடன் ரணில் ஒப்பந்தம் பண்ணி யதே துரோகத்தனமான செயலென கருத்துரைத்த பொன்சேகாவும், துரோகத்தனம் செய்த ரணிலும் மேற்குலகின் சதிக்கு துணை போவ தாக, இலங்கை நாட்டிற்கு துரோகத் தினை புரிவதாக இலங்கையின் பிரபல வைத்திய நிபுணரான நிமல் டி கஸ்தூரியாராச்சி குறிப்பிட்டு ஜனாதி பதித் தேர்தலிலே போட்டி யிடுவதனை தவிர்க்குமாறு பொன் சேகாவிற்கு ஒரு வேண்டுகோளினை விடுத்திருந்தார்.

ஆனால் பென்சேகா தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று தான் துரோகி யென்று குறிப்பிட்டவர் களுடனும், பரிகசித்தவர்களுடனும் கூட்டுச் சேர்ந்துள் ளார். ஹக்கீமும் அதனைத்தான் செய்துள்ளார். மொத் தத்தில் இவர்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

அண்மையில் அமெரிக்காவில் போர்க் குற்றங்களுக்காக கைதுசெய் யப்படலா மென்று கருதப்பட்ட பொன்சேகா எவ்வித தடையுமின்றி, தடுப்புமின்றி இலங்கை திரும்பியது ஜனாதிபதித் தேர்தல் குறித்த மேற் குலகின் சந்தர்ப்ப வாத அணுகுமுறை யினையும் தலையீட்டினையும் உறுதி செய்கின்றது.

இவ்வாறே பலஸ்தீன காஸா பிரதேசத்தில் உள்ள றபாவில் 2002ம் ஆண்டில் 59 பலஸ்தீனியர்களின் வீடுகளை நிர்மூலமாக்கியதனை யுத்தக் குற்றமாக பலஸ்தீனிய லண்டன் மனித உரிமை சட்டத் தரணிகள், யுத்தக் குற்றம் புரிந்த மைக்காக ஓய்வுபெற்ற இஸ்ரேலிய ஜென ரல் டெனொண்ங் அள்மொங்கினை (General Danong Almog) அவர் லண்டன் வந்தபொழுது கைதுசெய் வதற்காக ஸ்கொட்லாண்யாட் பொலிஸார் பிடிவிறாந்து ஒன்றினை பிறப்பித்தனர்.

ஆயினும், அவர் லண்டன் ஹீதுறோ விமான நிலையத்திலி ருந்து (இஸ் ரேலிலிருந்து) அவர் வந்த தமது நாட்டு எல்-அல் விமா னத்திற்கு மாறாக, வேறு ஒரு விமா னத்தில் இஸ்ரேலுக்கு புறப்பட்டு திரும்பிச் சென்றதால் பிடி விறாந்து வாபஸ்பெறப்பட்டது என்ற சாட்டு சொல்லப்பட்டது.

மறுபுறத்தில் அதேகால கட்டத் தில் ஐக்கிய நாடுகள் சபையில் அப்போதைய பிரித்தானிய பிரதமர் ரொனிபிளேயரை சந்தித்த இஸ்ரே லின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷெரோன், ரொனி பிளேயர் லண்ட னுக்கு வருமாறு அழைத்தபோது ஏன் என்னைக் கைதுசெய்து கூண் டில் அடைக்கவா என நகைச்சுவை யாகக் குறிப்பிட்டதுடன், ஜெனரல் டெனொண்ங் அள்மொங்கின் விடயத்தை- கைதுசெய்வதற்கு ஸ்காட் லாந்து முயற்சிப்பதை- கவனிப்ப தாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னணியில்தான் பிடிவிறாந்தினைத் தாண்டிச்சென்ற இஸ்ரேலிய ஜெனரலின் வெளி யேற்றமும் பார்க்கப்படவேண்டும்.

பொன்சேகாவைக் கொண்டு இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதி ரான சதியில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான றொனால்ட் றீக னின், வுறூஸ் பெயின் என்னும் பிரபல முன்னாள் சட்டத்தரணி ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப் பட்ட செய்திகளும் கசிந்தன.

இந்த வுறூஸ் பெயின் என்னும் சட்டத்தரணி புலி களின் படுகொலைகளுக்கு எதிரான தமிழர்களின் ஸ்தா பனத்தில் சட்ட ஆலோசக ராக விளங்கி, இலங்கையின் இராணுவத் தளபதியை (சரத் பொன்சேகாவை) கோத்த பாயா ராஜபக்ஷவை, ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவை இலங்கையில் போர்க் குற்றவாளியாக்க தீவிரமாக செயற் பட்டவர்.

இவரை லண்டனிலுள்ள தமிழர் தகவல் நடுவத்தின் முக்கிய நிர்வாகியான வரதகுமார் என்பவர் அண்மையில் அழைத்து அவரது பணிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருந்தார்.

இத்தமிழர் தகவல் நடுவத்தின் சுயநிர்ணய உரிமை, புலி ஆதரவு, உட்கிடை யான சிங்கள இனவாதம் என்ற நிகழ்ச்சி நிரலுக்குள் எவ்வாறு இலங்கை சிறு பான்மை அரசியல் வாதிகள் குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸ் சிக்கிக் கொண்டது பற்றி எனது ‘மீசைக்காரச் சிங்கள வன், அடங்காத் தமிழன், முடங்கிப் போன முஸ்லிம்கள்’ என்னும் தலைப்பிலான கட்டுரைகளில் முன் னர் குறிப்பிட்டுள்ளேன்.

இந்த புறூஸ் பெயின்தான் முன் னாள் மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே. கட்சி யின் பாராளுமன்ற தேசியப் பட்டியல் உறுப்பினரான அலிசா ஹிர் மௌலா னாவினை இலங்கை அரசு தமது அமெரிக்க தூதுவராலய உத்தியோகஸ் தராக நியமித்தமையை அவரது அகதி விண்ணப்பம் முடிவு றாத நிலையில், மேலும் அவரது முன்னைய குடிவரவு முறைகேடு கள் பற்றி விசாரிக்காத நிலையில், அவ்வாறு நியமிக்கப்பட்டதனை ஆட்சேபித்து அமெரிக்க அரசுக்கு முறைப்பாடு ஒன்றினை செய்தவ ராகும்.

அதுகுறித்து பிறிதொரு சந்தர்ப் பத்தில் விரிவாக எழுதலாமென நினைக்கின் றேன். ஏனெனில், சில ரின் முகத்திரைகளும் கிழிக்கப்பட வேண்டிய அவசியம் சமூகத்தின் நலன் களுக்காக தவிர்க்க முடியாததே.

சுமார் இரு வாரங்களுக்கு முன் னர் இலங்கையிலுள்ள பிரித்தானியத் தூது வரை புலம்பெயர் குழுவினருடன் அவரின் பௌத்தாலோக மாவத் தையி லுள்ள தூதுவராலயத்தில் சந்திக்க நேர்ந்தபோது, அவர் வடக்கிற்கு அபிவி ருத்தி மட்டுமல்ல அவசியம் அது வெறுமனே சில வருடங்களுக்கு மட்டும் தான், யாழ்ப் பாணம் மிக வசதியான இடம், அது அவர்களுக்கு அவசியமல்ல. நாலை ந்து வருடங்களுக்கு பின்னரும் அரசியல் தீர்வு குறித்து ஒரு உந்துதல் எற்படுமென்றும், இலங்கைக்கு தேவை நல்லாட்சிதான் என்றும் அதனைக் கொண்டுவருவதற்கு செயற்பட வேண்டுமென்றும் அதற்கு நாங்கள் பங்களிக்க வேண்டுமென் றும் வேண்டிக் கொண்டார்.

நான், சுவிஸில் இடம்பெற்ற தமிழ் பேசும் மக்களின் மகாநாடு குறித்த பிரித்தானியாவின் மறைவான கரம் இருப்பதாகவும், ஒரு சதிக் கோட்பாடு நிலவுவதாகவும் கேள்வி எழுப்பியபோது சிரித்து மழுப்பி சதிக் கோட்பாடுகள் பல உண்டு என்று சமாளிக்க முற்பட்டார்.

அவரது கருத்துக்கள் சிலவற்றில் எனது முரண் கருத்துக்களை வெளிப் படையாகத் தெரிவிக்க வேண்டி நேரிட்டது. பீற்றர் போலிங் என்னும் பிரபல அரச சார்பற்ற நிறுவனங்க ளின் செயற்பாட்டாளரின் பின்னணி யும் இந்த சுவிஸ் மகாநாட்டில் இருப்பதாக இரகசியங்கள் இப் போது கசியவந்துள்ளது.

பிரித்தானிய தென்கிழக்காசியா விற்கான கொள்கை வகுப்பாளர் களை சுமார் 1லீ வருடங்களுக்கு முன்னர் லண்டனில் சந்தித்தபோதும் மஹிந்த அரசுக்கு எதிரான கருத்துக் களை அவர்கள் கொண்டிருந்தனர். அதற்கு நான் அறிந்த தமிழ் தேசிய வாதிகளும் பின்னணியில் இருந்தனர்.

அடிக்கடி பிரித்தானிய பிரித்தாளு பவர்களுடன் நெருக்கமாக வேலை செய்பவர்களெனினும், மொத்தத் தில் இலங்கையில் ஒரு ஆட்சி மாற் றத்தினை மேற்குலகம் அமைக்க முயற்சிக்கின்றது என்பது தெரிந்தது.

இன்று அது உள்நாட்டு எதிர் அரசியல் சக்திகள் மூலம் திரட்சி பெற்றுள்ளது என்பதை அங்கு நடை பெறும் ஆச்சரியமான அரசியல் கூட்டுக்கள் நிகழ்வு கள் எடுத்துக் காட்டுகின்றன. மேற்குலகின் வஞ்சகத்தனத் திற்கு உதாரணங்கள் வரலாறு நெடு கிலும் விரவிக் கிடக்கிறது. இந்த வஞ்சகத்தனமான நவீன காலனித் துவ ஆக்கிரமிப்பு பல்வேறு நாம கரணங்களுடன் அரங்கேறி வருகி றது. ஏகாதிபதியங்கள் தமது எதிரி யையும் நண்பனையும் தாம் விரும் பியவாறு தமது தேவைக்கேற்றவாறு உருவாக்கிக் கொள்ளும் அல்லது உருமாற்றிக் கொள்ளும்.


January 2010

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...