விசாரணைகள்
மற்றும் சட்ட நடவடிக்கைகளில் உறுதியாக நிறுவப்பட்டுள்ளது, மூன்று
வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்கள், சிவபரன் என்கிற
நெடியவன்
தலைமையிலான புலம்பெய
ர்
புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என நம்பப்படுபவர்கள், சதித்திட்டம்
மேற்கொண்டு, நிதி வழங்கி மற்றும் ஸ்ரீலங்காவில் உள்ள ஐந்து முன்னாள் புலி
உறுப்பினர்களை யாழ்ப்பாண மாவட்ட ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினரான
எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டி அதை
நடைமுறைப்படுத்த தூண்டிவிட்டுள்ளார்கள் என்று. இது சுமந்திரனின் கொலை
முயற்சி ஒரு நாடகம் என விளக்கி வருபவர்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது.
அதேவேளை தீர்மானமான ஒரு சதித்திட்டத்தின் இருத்தல் மற்றும் அதை
நடைமுறைப்படுத்துவது தொடர்பான தயாரெடுப்புகள் என்பன தீர்க்கமாக
நிரூபிக்கப்பட்டுள்ளன, இதில் உறுதிப்படுத்துவதற்கு அவசியமானது,
சுமந்திரனின் படுகொலை முயற்சி, எல்.ரீ.ரீ.ஈ யிற்கு புத்துயிர் அளிக்கும்
பெரிய சதியின் ஒரு பகுதியா அல்லது வெறுமனே சுமந்திரனை மட்டும் இலக்கு
வைத்து மேற்கொள்ளப்பட்ட தனியான ஒரு சதியா என்பதுதான்.
