Posts

Showing posts from August, 2021

இன்றைய கொரோனா காலத்தில் உலவுகின்ற ஆதாரமற்ற வீண்வதந்திகளை நாம் நிராகரிக்க வேண்டும்!

Image
  ஆகஸ்ட் 30, 2021 ‘இன்றைய கொரோனா காலத்தில் உலவுகின்ற ஆதாரமற்ற வீண்வதந்திகளை நாம் நிராகரிக்க வேண்டும். உள்ளத்தில் நம்பிக்கையைகட்டியெழுப்ப வேண்டும்’ என்று ஆலோசனை கூறுகின்றார் நிதியமைச்சின் தேசிய உளவளத்துணை நிலையத்தின் சிரேஷ்ட உளவியல் உளவளத்துணை ஆலோசகர் மனூஸ் அபூபக்கர். அவர் வழங்கிய விசேட பேட்டியில் இதனைத் தெரிவித்தார். கேள்வி: கொவிட் 19, டெல்டா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் உளவியல் ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்ற தன்மை அவர்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது. இந்த இக்கட்டான காலப் பகுதியில் மக்கள் தங்களது மனநிலையை எவ்வாறு அமைதியாக வைத்துக் கொள்ளலாம்? பதில்: உண்மையில் ஒரு பேரிடர் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மக்களின் பொருளாதாரம், பிள்ளைகளின் கல்வி, உணவு,பொதுப் போக்குவரத்து, அரச நிர்வாக கட்டமைப்பு, சமூக ஒன்றுகூடல் என எல்லாமே கேள்விக்குறியாகியுள்ள காலத்தில் நாம் வாழ்கிறோம். தற்போது மக்கள் மத்தியில் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயமும், சந்தேகமும் மக்களது மனநிலையை மாற்றியமைத்துள்ளன. கேள்விப்படுகின்ற செய்திகள், தகவல்கள் எல்லாமே எதிர்

Glenn Greenwald calls for COVID-19 policies that “will kill people”- By Andre Damon

Image
In an article published Wednesday, the Brazil-based journalist Glenn Greenwald advocates COVID-19 policies that he acknowledges “will kill people,” claiming that the public is putting insufficient emphasis on the “costs” of saving lives. The article appears against the backdrop of a surge in COVID-19 cases in the United States and Europe. Governments around the world have made clear that they will take no measures to stop the spread of the disease, and that schools and businesses will remain open. Greenwald’s article provides a political rationalization for this policy. In his article, “ The Bizarre Refusal to Apply Cost-Benefit Analysis to COVID Debates ,” Greenwald states: In virtually every realm of public policy, Americans embrace policies which they know will kill people, sometimes large numbers of people. They do so not because they are psychopaths but because they are rational: they assess that those deaths that will inevitably result from the policies they support are worth it

கொவிட்-19 தோற்றம் பற்றிய ஆய்வில் விஞ்ஞானத்தினை நம்புங்கள்; அரசியலை நிராகரியுங்கள்

Image
 ஆகஸ்ட் 21, 2021 கொ விட்-19 இன் தோற்றம் பற்றி ஆய்வில் விஞ்ஞானத்தினை நம்புங்கள் அரசியலை நிராகரியுங்கள் என, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ செங்ஹாங் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசியல் ரீதியில் சீனாவுக்கு எதிராக முன்னெடுத்து வரும் எதிரொலியின் காரணமாகவே, சீனா மீது எவ்வித விஞ்ஞான அடிப்படையுமின்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சீனத் தூதுவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொவிட்-19 தோற்றம் பற்றிய ஆய்வு விஞ்ஞானம் சார்ந்த விடயம், இது தொற்றுநோயைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. சீனா, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் 90 நாட்களுக்குள் கொரோனாவின் தோற்றம் பற்றிய ஆய்வறிக்கையினை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அந்நாட்டுப் புலனாய்வுத்துறையினருக்கு மே மாத இறுதியில் ஆணையிட்டார்.  மேலும் சீனாவின் மீது “முழு விசாரணை மேற

100 வயதைக் கடந்து புதிய யுகமொன்றை நோக்கி தொடரும் பயணம்

Image
  ஆகஸ்ட் 28, 2021 கொ விட்-19 தொற்றுநோயின் விளைவான தாக்கம் மற்றும் உலக பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் சகலமுனைகளிலும் சீனாவை ஒரு சுபீட்சமான சமுதாயமாக கட்டியெழுப்புவதற்கு தலைமைதாங்கி வழிநடத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் 100ஆவது வருடாந்த நிறைவை ஜூலை முதலாம் திகதி அடைந்தது. 140கோடி சீன மக்களுக்கான ஒரு  நலமார்ந்த சமூகத்தை உருவாக்கும் அதன் நூற்றாண்டுக் குறிக்கோளை திட்டமிட்டபடி அடைவதில் தனக்குள்ள பற்றுறுதியை அந்த கட்சி மீளவும் வலியுறுத்தியிருக்கின்றது. இந்த மாற்றம் நவீன வரலாற்றில் மிகவும் பிரமிக்கவைக்கும் நிகழ்வுகளில் ஒன்றாக அமையும்.

இரவில் நடமாடும் சவப்பெட்டிகள்–ப.பிறின்சியா டிக்சி

Image
  ஆகஸ்ட் 28, 2021 “ஆ டி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா” என்ற பாடல் வரிகள் பொய்மையாக்கப்படும் காலமிது. ஆறடி நிலமல்ல, ஒரு சவப்பெட்டிகூட சொந்தமில்லாத நிலைமைக்கு சென்றுகொண்டிருக்கிறது. ஒருவர் இறந்துவிட்டால், அவரது கடந்தகால செயல்களைப் புகழ்பாடி, பாடைகளை அலங்கரித்து, தத்தமது மதங்களின் பிரகாரம் இறுதிப் பிரார்த்தனைகளைச் செய்து, ஊரவர்களே ஊர்வலம் சென்று, பூக்கள் தூவி, அடக்கம் செய்த காலம் மலையேறிவிட்டது. யாரோ தெரியாத நால்வர், எவ்விதமான முணுமுணுப்புகளும் இன்றி, தகனசாலைக்குள் சவப்பெட்டிகளை திணித்துகொண்டிருக்கும் நிலைமையே இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது. பல தகனசாலைகள், 24 மணிநேரமும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி, சொந்தங்களைக் கூட அநாதையாக விட்டுச்செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கொரோனா மரணங்கள் எத்தனைதான் நிகழ்ந்தாலும் ஐந்து வயதுச் சிறுமியை அநாதையாக்கிவிட்டு, அவளது பெற்றோரை, திருமண நாளன்றே கொரோனா கொன்றொழித்த சம்பவம், ஒவ்வொருவரின் மனங்களையும் உருக்கிக்கொண்டே இருக்கும். கிரிபத்கொடையைச் ​சேர்ந்த 36 வயதுடைய தனஞ்செய

நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால் நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச

Image
ஆகஸ்ட் 20, 2021 சங்கைக்குரிய மஹா சங்கத்தினர்களே, மதத் தலைவர்களே, நண்பர்களே, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என்று, உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய நிபுணர்கள் மற்றும் உலகத் தரம்வாய்ந்த வேலைத்திட்டத்தினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் தான், இலங்கைக்குத் தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்காக, கடந்த காலங்களில் நான் விசேட ஆர்வம் காட்டியிருந்தேன். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் தலைவர்களுடன், இது தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் உரையாடினேன். மேலும் பல நாடுகளின் அரச தலைவர்களுக்கு, நான் தனிப்பட்ட ரீதியில் கடிதங்களை அனுப்பினேன். தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் நாடுகளுடன், நமது நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாகவும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஊடாகவும் கலந்துரையாடினோம். தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களை, எமது அதிகாரிகள் நேரடியாகத் தொடர்புகொண்டனர். எமது நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி ஏற்ற வேண்டுமென்ற என்னுடைய தேவையின் காரணமாகவே, இந்த அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்டேன். இந்த முயற்சிகளின் பலனாகவே, தற்போது ஒவ்வொரு மாதமும்,

ஆப்கானிஸ்தானும் பூகோள அரசியலும்….–ச.லெனின்

Image
ஆகஸ்ட் 19, 2021 ஆ ப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் தலிபான் அமைப்பு தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டைவிட்டு சென்றுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களை அச்சம் சூழ்ந்துள்ளது. பேருந்து, ரயில்களில் ஏறுவதுபோல் நெருக்கியடித்துக் கொண்டு, கிடைக்கும் இடங்களில் தொற்றிக்கொண்டு விமானங்களில் மக்கள் ஏறி வெளியேறும் காட்சிகள்ஊடகங்களில் காட்டப்படுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு நாட்டைவிட்டு வெளியேறுவது நல்லதுதான். ஆனால் அதற்கான மாற்று தலிபான்கள் அல்ல. காலம் எதையும் தேக்கிவைப்பதில்லை. தலிபான்கள் போன்றே அனைத்து மத அடிப்படைவாதங்களுக்கும் இது பொருந்தும்.   மீண்டும் தலிபான்களிடம் அமெரிக்க இராணுவமும்  அது தலைமைதாங்கும் கூட்டுப்படையான நேட்டோ படையும் இம்மாதத்துக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக  வெளியேறும் என்று அமெரிக்க ஜனாதிபதி பைடன் மீண்டும் மிகத்தெளிவாக அறிவித்துள்ளார். கடந்த 2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்பட்டது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு அல்கொய்தா அமைப்புதான் காரணம் என்றும் அதுபாதுகாப்பாக இயங்

How media conspired to ignore decades of war in Afghanistan (Full show)- RT

Image
 Courtesy: RT

Geopolitics, Profit, and Poppies: How the CIA Turned Afghanistan into a Failed Narco-State-by Alan Macleod

Image
 " The war in Afghanistan has looked a lot like the war on drugs in Latin America and previous colonial campaigns in Asia, with a rapid militarization of the area and the empowerment of pliant local elites."    Alan Macleod                                                         A FGHANISTAN —   The COVID-19 pandemic has been a death knell to so many industries in Afghanistan. Charities and aid agencies have even   warned   that the economic dislocation could spark widespread famine. But one sector is still booming: the illicit opium trade. Last year saw Afghan opium poppy cultivation   grow   by over a third while counter-narcotics operations dropped off a cliff. The country is   said   to be the source of over 90% of all the world’s illicit opium, from which heroin and other opioids are made. More land is under cultivation for opium in Afghanistan than is used for coca production across all of Latin America, with the creation of the drug said to directly employ around half

The U.S. Government Lied For Two Decades About Afghanistan-Glenn Greenwald

Image
  Using the same deceitful tactics they pioneered in Vietnam, U.S. political and military officials repeatedly misled the country about the prospects for success in Afghanistan. Glenn Greenwald August 16 The Taliban give an exclusive interview to   Al Jazeera   after taking control of the presidential palace in Kabul, Afghanistan, Aug. 15, 2021 (Al Jazeera/YouTube) “The Taliban regime is coming to an end,”   announced President George W. Bush   at the   National Museum of Women in the Arts on December 12, 2001 — almost twenty years ago today. Five months later, Bush   vowed : “In the United States of America, the terrorists have chosen a foe unlike they have faced before. . . . We will stay until the mission is done.” Four years after that, in August of 2006, Bush   announced : “Al Qaeda and the Taliban lost a coveted base in Afghanistan and they know they will never reclaim it when democracy succeeds.  . . . The days of the Taliban are over. The future of Afghanistan belongs to the pe

தலிபான் வசம் ஆப்கானிஸ்தான்: வியட்நாமுடன் ஒப்பிடப்படுவது ஏன்? வல்லரசுகள் புகுந்த நாடுகளின் சோக வரலாறு-எம். மணிகண்டன்

Image
ஆகஸ்ட் 16, 2021 வெளிநாட்டுப் படைகள் விலக்கிக் கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்து ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றத் தொடங்கிய தலிபான்கள், கடந்த சில நாள்களில் யாரும் எதிர்பாராத வேகத்தில் தலைநகர் காபூலைக் கைப்பற்றியுள்ளனர். 2001-ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக தலிபான்களை ஒழிப்பதிலும், தங்களது விரும்பும் ஆட்சியை அமைப்பதிலும் ஈடுபட்டிருந்த அமெரிக்கா, தனது கட்டுப்பாட்டை முற்றிலுமாக இழந்திருக்கிறது. இதுவும்கூட அமெரிக்காவின் விருப்பத்துக்கு ஏற்பவே நடக்கிறது. ஏனெனில் தலிபான்களுடன் உடன்பாடு செய்து கொண்ட பிறகே ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேறும் முடிவை அமெரிக்கா எடுத்திருக்கிறது. பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களின் புகலிடம் என்று கருதப்பட்டதால்தான் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்தவர்கள் என்ற குற்றச்சாட்டின்படி தலிபான்கள் அமெரிக்காவின் இலக்குகளானார்கள்.

மிகவும் இக்கட்டான நிலையில் இந்தியாவின் 75வது சுதந்திர தினம்-–பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

Image
ஆகஸ்ட் 15, 2021 ந ம்முடைய குடியரசு அரசமைப்புச்சட்டத்தை உருவாக்குவதற்காகவும், நம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிப்பதற்காகவும் நாம் சுதந்திரப்போராட்டக் காலத்தில் உயர்த்திப்பிடித்த உன்னதமான குறிக்கோள்கள், கடந்த பல பத்தாண்டுகளில் அரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. குறிப்பாக, ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டணி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியபின், ஒரு குணாம்சரீதியான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 2014க்குப் பின்னர், சுதந்திரப் போராட்டத்தின் உன்னதக் குறிக்கோள்களாக இருந்த, ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் நாட்டின் இறையாண்மை ஆகிய அனைத்துக்கும் மிகவும் சக்திவாய்ந்த அச்சுறுத்தலாக விளங்கக்கூடியவிதத்தில் இந்துத்துவா மதவெறியும், நவீன தாராளமய முதலாளித்துவக் கொள்கையும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் இப்போதிருக்கும் அமைப்பில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் கையகப்படுத்தியும், அவற்றின் அதிகாரங்களை அரித்து வீழ்த்தியும், தங்களுடைய ‘இந்து ராஷ்ட்ரம்’ என்னும் இலக்கை நோக்கி, கொண்டுசெல்வதற்கு ஏற்றவிதத்தில் கையகப்படுத்திடும் நீண்ட பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, நரேந்திர மோடியின் சு

பெகாசஸ்: எதேச்சாதிகாரத்தின் இணைய வழி ஆயுதம்--பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

Image
ஆகஸ்ட் 12, 2021 [நடைபெற்றிருக்கும் சம்பவங்களின் காலவரிசையிலிருந்து இஸ்ரேலுடனான புதிய பாதுகாப்புக் கூட்டுச்செயல்பாடு என்பது மோடியின் பயணத்திற்காக 2017மார்ச் மாதத்தில் அஜித் டோவல் சென்றிருந்தபோதே, என்.எஸ்.ஓ (N.S.O)-உடன் புதிய பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கக்கூடும் எனத் தெரிகிறது.] பெ காசஸ் (Pegasus) வேவு மென்பொருள் (spyware) ஊழல், நாட்டுமக்களின் அந்தரங்கத்திற்குள் மூக்கை நுழைக்கும் ஒரு வழக்கோ, அல்லது சட்டவிரோதமான ஊடுருவலோ, அல்லது உளவு ஸ்தாபனங்களின் வேவு வேலையோ மட்டுமல்ல. பெகாசஸ் ஒரு ராணுவ வேவு மென்பொருளாகும். அது இணையதளங்களில் ஊடுருவி வேவு பார்ப்பதை புதிய மட்டத்திற்கு எடுத்துச்சென்றிருக்கிறது. இதன் முழுமையான சித்திரத்தை எவரும் தெளிவாகப் பார்க்க முடியாது. பாஜக அரசாங்கம் கடந்த ஏழு ஆண்டு காலமாகக் கட்டியெழுப்பியுள்ள பெரிய அளவிலான எதேச்சாதிகார கட்டமைப்பின் ஓர் அங்கம்தான் பெகாசஸ் பயன்பாடுமாகும். இதன் செய்தி கூறுவது என்னவெனில், எதேச்சாதிகார இந்துத்துவா ஆட்சியை நிறுவிடவும் ஒருங்கிணைத்திடவும் எந்த வழியையும் அது பின்பற்றும் என்பதேயாகும். பீமா கொரோகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கணினிகளி