எஸ்.எம்.எம் பஷீர்
புலிகள் துடைத்தழிக்கப்பட்டு விட்டார்கள் என்றாலும் புலிப் பக்தர்கள் பலர் புலம் பெயர் நாடுகளில் பைத்தியம்போல் அலையத் தொடங்கி இப்போது மெதுமெதுவாக பலர் சொஸ்தமடைய, சிலர் இன்னமும் தீராப் பைத்தியங்களாக உலா வருகின்றார்கள். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இப்புலிப்பைத்தியனினால் பாதிக்கப்பட்ட இலண்டனில் வாழும் ஒரு முஸ்லிம் பிரமுகர் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினை என்னுடன் பகிர்த்துகொண்டார்.
துன்பியல் (Tragedy)
லண்டனில் ஹரோவிலுள்ள பல சரக்கு கடையொன்றில் இலங்கை தமிழ் பத்திரிகை வாங்குவதற்காக அங்கு சென்றிருந்த கிழக்கு மாகாணம் மட்டக்களப்பைச் சேர்ந்த முன்னாள் அட்டாளைச்சேனை அரசினர் கல்லூரி ஓவியக்கலை விரிவுரையாளரும், முன்னாள் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கல்லூரி உபஅதிபரும், தற்காலிக அதிபருமாக கடமையாற்றியவரும், மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவராகவும் சிறப்புறப் பணியாற்றிய பிரபல சமூக சேவையாளரும், முன்னாள் இந்தியப் பிரதமர் திரு நேருஜீ அவர்களின் உருவப்படத்தினை வரைந்து நேருஜீ 1951 ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தபோது, முன்னாள் இலங்கை பிரதமமந்திரி திரு எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா அவர்களின் முன்னிலையில் அவ் ஓவியத்தினைக் கையளித்து சிறந்த ஓவியருக்கான பல விருதுகளைப பெற்று;, இலங்கையிலும், இந்தியாவிலும் பரவலாக அறியப்பட்ட ஓவியர் கலாபூசணம் அல்ஹாஜ் எம்.எஸ்.ஏ அஸீஸ் (ஜே.பி)அவர்களடம.; கடையில் சம்பாஷனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் “நீங்கள் எவடம”; என்று கேட்க ஜனாப் அஸீஸ் அவர்களும் மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு என மிடுக்குடன் சொல்ல அங்கு நின்றிருந்த முன்னாள் சட்டத்தரணி ஒருவர் யாரோ, யாரோ எல்லாம் மட்டக்களப்பில் தெரியுமா எனக்கேட்க கதை வளர்ந்து முன்னாள் மட்டுநகர் அரச அதிபர் திரு மௌனருசாமி அவர்களையும் சொல்லி மேலும் அவரது மைத்துனரான முன்னாள் ரொலே(1989) எம்.பி கருணாணாகரனையும் தெரியுமென சொல்ல எத்தனித்து “கருணா” எனத் தொடங்கியவுடனேயே பக்கத்தில் போதையில் நின்ற ஒருவர் இவர்மீது பாய்ந்து தாக்கியபோது கூடியிருந்தவர்கள் இவரைக் காப்பாற்றியதுடன், அடித்தவன் சார்பில் மன்னிப்புக் கேட்டனர்.
துன்பியல-நகைச்சுவை (Tragi-comedy)
சரி போனால் போகட்டுமென்றால் அச்சம்பவம் இடம்பெற்ற ஒரு வாரத்திற்குப் பின்னர் ஜனாப் அஸீஸ் அவர்கள் இன்னொரு முதியவரைச் சந்தித்தபோது அவரும் இவரை நீங்கள் “எவடம்” என்று கேட்டு;. பேச்சு வளர்ந்து இவர் முன்னாள எம்.பி இராஜதுரை தனது நண்பரெனச் சொல்ல “அவன் தமிழினத் துரொகி” என்று அந்த முதியவர் இவர்மீது பாய்ந்தார்.
நகைச்சுவை (Comedy)
இனிமேல் எவடம் என்று யாரும் கேட்டால் மட்டக்களப்பார் என்னை விடு சாமி என்று ஓடப்போகின்றார்கள், யாழ்ப்பாணம் சுன்னாகத்திலிருந்து முதனமுதல் ஆசிரியர் நியமனம்பெற்று எங்களுக்கு கற்பிக்க வந்த ஆசிரியர் அடிக்கடி சொல்வார் “அடே இங்கே மீன்பாடுது, தேனோடுது என்கிறாங்க ஆனால் இங்கு என்னென்றால் ஆளுக்குமேல் ஆள்தான் பாயுறான்.” இறுதியில் அவரும் வீடுவாங்கிக்கொண்டு மட்டக்களப்பில் வாழத் தொடங்கிவிட்டார். ஆனால் இப்போது மீன்பாடுதோ, தேன் ஓடுதோ இல்லையோ ஐரோப்பாவில யாழ்ப்பாணத்தார் மட்டக்களப்பார்மீது ஆளுக்குமேல் ஆள் பாயுறாங்க, ஒரு ஆலோசனையை சொல்லாமல் இருக்க முடியவில்லை “ கருணாகரப் பரம்பொருளே அடியேனை கண்பார்த்து அருள்வாயே” என்ற தேவாரத்தைப் பாடுபவர்கள் ஒரே மூச்சில் கருணாகரனான கடவுளை பாதுகாப்பிற்கு அழைத்து விடுங்கள். தப்பித்தவறி விக்கியோ, திக்கியோ கருணா…. என்று நிறுத்தினால்போதும்;: மதராஸ் தமிழில்; சொல்வதானால் உங்களைப் பின்னி எடுத்து விடுவார்கள் போங்கள்.
“கருணாகரப் பரம்பொருளே மட்டக்களப்பாரை கண்பார்த்து அருள்வாயே
Subscribe to:
Post Comments (Atom)
மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்
எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...

-
எஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...
-
எஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை ...
-
எஸ் . எம்.எம்.பஷீர் “I give you the end of golden string; Only wind it into a ball, It will lead you in at Heaven’s gate, ...
No comments:
Post a Comment