நாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலும் நாடு கடந்து கொடியேற்றிய புலிக்கட்சித் தேர்தலும்

                                                                                                    எஸ்.எம்.எம்.பஷீர்


ஒருபுறம் நாடுகடந்த தமிழீழ தனியரசுக்கான அடிப்படை கோட்பாடுகளை மிதக்கவிட்டு ருத்திரகுமாரன் வகையறாக்கள் படு அமர்க்களமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தேர்தல் நடாத்த முஸ்தீபுகள் செய்துவரும் வேளையில் முஸ்லிம்களுக்கு ஒரு தனியான தாயகம் உண்டு சுயநிர்ணய உரிமையை பிரயோகித்து அவர்கள் பிரிந்து செல்ல முடியும் என்றெல்லாம் போலியாகவேனும் வெளிப்படையாக சொல்கையில் அவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழும் "அரசியல் விஞஞானி" என தன்னையே அழைத்துக் கொள்ளும் இம்தியாஸ் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்தை அவர்களின் அரசியல் அடிப்படை உரிமைகளை தனது மொழியை அடிப்படையாகக் கொண்ட அளவுகோலை வைத்து அழுத்தி மறைத்துவிட முனைகிறார் .



இந்த நிலையில் அதே காலகட்டத்தில் பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் வந்திருக்கிறது இத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து புலம் பெயர் தமிழர்கள் முடிவெடுப்பது தொடர்பிலான பிரச்சாரங்கள் இன்னமும் சூடுபிடிக்கவில்லை. ஆனால் புலி சார்பு தமிழீழக்கனவில் மிதக்கும் புலம் பெயர் மக்களை அல்லது அதுபற்றி அசட்டை செய்யாதிருக்கும் மக்களை மீள தூண்டி இழுக்கும் ஊடக பணிகள் துரிதப்படுத்தப்படும். இந்த நிலையில் தான் புலிகளின் பிதாமர்களில் ஒருவரான நடராஜா பாலசுப்ரமணியம் எனும் வயோதிபர் பிரித்தானியாவில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற கட்சியினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார் . இக் கட்சியின் தேர்தல் நியமன உத்தியோகத்தராக பொன்னையா தேவராஜாவும் பொருளாலராக வாசுதேவர் நேரு என்பவரும் பலசுப்ரமணித்தின் தலைமையின் கீழ் செயற்படுவதாக பதிவுகள் கூறுகின்றன.இக்கட்சி தொடர்பிலான ஆட்சேபனைகளால் இதன் பதிவு இடை நிறுத்தப்பட்டிருந்தாலும் சென்ற வார இறுதியில் இக்கட்சியினை மேலதிக விசாரனை செய்யாமலே பிரித்தானிய தேர்தல் ஆனைக்குழு தடையை நீக்கியுள்ளது.

பிரபாகரன் காட்டிய பாதையில் தமது மக்களின் விடுதலைக்கான பயணத்தை தாம் தொடர இருப்பதாகவும் அக்கட்சியின் சின்னமாக புலிச்சின்னத்தையே பதியப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். கட்சியின் விவரனங்களாக பிரித்தானிய புலிகளை எல்லமே உள்ளடக்கிய பல பெயர்கள் யாவும் பிரித்தானியாவின் அரசியல் கட்சி பதிவில் இடம்பெற்றுள்ளது ; பிரித்தானிய ஈழம் தமிழ் புலிகள் (British Eelam Tamil Tigers ) பிரித்தானிய தமிழ் புலிகள் (British Tamil Tigers) ஈழ விடுதலை புலிகள் (Eelam Liberation Tigers) தமிழ் ஈழ விடுதலை போராட்டம் (Liberation Struggle of Eelam Tamils) ஈழ விடுதலை புலிகள் ( Liberation Tigers of Eelam )

உண்மையில் இலங்கையில் பிரேமதாசவுக்கும் புலிகளுக்கும் இடையில் தேனிலவு நிலவியபோது இந்தியாவை வெளியேற்ற புலிகளும் பிரேமாவும் திட்டமிட்டே புலிகளின் பயங்கர முகத்துக்கு ஜனநாயக முகமூடிபோடும் தந்திரோபாயத்தின் ஒரு கட்டமாகவே புலிகளின் விடுதலிப்புலிகளின் மக்கள் முன்னணி மகேந்திரராஜாவின் (முன்னாள் புலிகளின் துணைத்தலைவர் பின்னால் புலிகளின் “தேசத்துரோகி”) தலைமையில் உருவாக்கப்பட்டது. ஆனால் இக்கட்சியின் பொதுச்செயலாளராக யோகரத்தினம் யோகியின் பெயரும் கொழும்பு செயலகமும் இன்னமும் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சி நிரலில் இருக்கிறது. சென்ற கிழக்கு மாகான சபைதேர்தலில் இக்கட்சி போட்டியிட்டது . இது இலங்கை அரசின் சில்மிஷம் என்று சொல்லப்பட்டது. இக்கட்சி சில நூறு வாக்குகளையும் பெற்றிருந்தது. எது எப்படி இருப்பினும் இலங்கையில் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினை பிரித்தானியாவில் தடை செய்யக்கோரும் உரிமை இலங்கை அரசுக்கு இருக்கமுடியாது.

மொத்தத்தில் இலங்கையில் இன்னமும் பெயருக்காயினும் அரசியல் கட்சியாக புலிகளின் மக்கள் முன்னணி இலங்கையில் பதிவில் இருக்கும் நிலையிலே பிரித்தானியாவிலும் அது ஒரு அரசியல் கட்சியாக பதியப்படும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆயினும் இக்கட்சியின் தலைவர் இங்கு தாம் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் தலைவரின் கனவுகளை நனவாக்க (பிரபாகரன் காட்டிய பாதையில் புறப்பட்டிருப்பதாக ) சொல்லியிருப்பது பிரித்தானிய ஆட்சியாளருக்கு அதிருப்தியாக தோன்றவில்லை . ஒருவேளை ஹமாஸ் இயக்கத்தின் உப தலைவரை கொல்ல துபைக்கு பிரித்தானிய போலிக்கடவுச்சீட்டுகளில் யூத பயங்கரவாதிகள் சென்றது குறித்த விசாரனைகள் இன்னும் நிலுவையாக உள்ள பிரித்தானியாவில் ஹமாஸ் இயக்கத் தலைவரின் கனவுகளை நனவாக்க பாலஸ்தீனியர்களுக்கு பிரித்தானியாவில் என்ன கட்சி பதியத்தான் முடியுமா அல்லது அவ்வாறு அப்படி முனுமுனுக்கத்தான் முடியுமா. புலித்தலைவர் பாதையை தேர்வதட்கு அவரது கட்சிக்கு புலத்திலும் அங்கீகாரம் பெறுவதற்கு பிரித்தானியாவில் அவரது சிஷ்யர்கள் கொடுத்துவைத்தவர்கள் போங்கள் .
thenee, mahavali , lankamuslims and unmaikal  ( April 2010)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...