மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (பாகம்-6)
-எஸ்.எம்.எம். பஷீர்


இத்தொடர் கட்டுரை திடீரென்று நின்று போனதால்; நானும் “முடங்கிப்போன முஸ்லிமானேனோ” என்ற கேள்வியினை நட்புடன் சிலர் ஒருபுறம் எழுப்ப, இன்னுமொரு புறம் இலங்கையிலும், மத்திய கிழக்கிலுமிருந்து இக்கட்டுரையினைத் தொடருமாறு பலர் நட்புடன் வேண்டுகோள் விடுக்க,  மீண்டும் வேலைப்பளுவுக்கு மத்தியிலும் நேரத்தினைக் கடன் வாங்கிக் கொண்டு “முடங்காத முஸ்லிமைத்”  தேடித் தொடர்கிறேன். முஸ்லிம் சமாதானச் செயலகத்தில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது ஏகபோகத்தினை நிலைநாட்ட முயற்சித்தாலும் இது அரசியல் சார்ந்த நிறுவனமாக நிலவ வேண்டுமென்பதில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முயற்சிகளில் தடையேற்பட்டது. ஏனெனில் தேசிய ஐக்கிய முன்னணி அரசியல் அதிகாரத்தில் இருந்தபடியினாலும், அவர்களையும் பங்காளிகளாக சேர்த்துக்கொண்டு செயற்படவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் ஆரம்பகால தலைவர்களாக செயற்பட்டவர்களான எம்.ஐ.எம் முகைதீன், ஜாவிட் யூசுப் ஆகியோர்  விலகிக் கொள்ள வேண்டிய  சூழ்நிலையும் எற்பட்டது. 

அதிலும் ஜாவிட் யூசுப் கட்சி அரசியல் சார்புநிலை அதில் அதில் மேலோங்குவதையும், நிர்வாக முறைகேடுகளையும் சகிக்க முடியாமல் அதிலிருந்து விலகியதாக கூறப்படுகின்றது. இவர் ஒரு நேர்மையான மனிதர் என்பதுடன் சவூதி அரேபியாவின் முன்னாள் தூதுவர் பதவியிலிருந்தும் பின்னர் கொழும்பு சாஹிராக் கல்லூரியின் அதிபர் பதவியிலிருந்தும் சுதந்திரமாக தான் செயற்படமுடியாது என்பதால் தன்னிச்சையாக பதவியிலிருந்து விலகிக்கொண்டவர் ஆவார். இவருடன் மனித உரிமைகளுக்கும், அபிவிருத்திக்குமான சட்டத்தரணிகள் (Lawyers for Human Rights and development) ஸ்தாபனத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்குண்டு. இன்னுமொருவரான எம,.ஐ.எம் முகைதீன் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் செயற்பட்டதுடன், முஸ்லிம் காங்கிரஸ்; அரசதரப்பாக சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டபோது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை பிரதிநிதித்துவப்படுத்தியவராவார்.. ஆயினும் இவர் குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 
இறுதியாக சுவிஸில் இடம்பெற்ற அரசு –புலி பேச்சவார்த்தையின்போது அவ்வேளை அரச பிரதிநிதியாக கலந்துகொண்ட பேரியல் அஸ்ரப் அவர்கள் வடகிழக்கு முஸ்லிம்கள் தொடர்பான ஆய்வறிக்கைகளை தந்துதவுமாற கேட்டபோது அவற்றிற்கு குறிப்பிட்ட பணம் தருமாறு எம,.ஐ.எம் முகைதீன் கேட்டதாக குற்றச்சாட்டு அவர்மீது முன்வைக்கப்பட்டது. இது எவ்வாறாயினும் நோர்வே அரசும் ஒரு எதிரிடையான முஸ்லிம் சமாதானச் செயலகம் ஏற்படாதிருப்பதில் கவனமாக இருந்தனர். ஏனெனில் மறுபுறம் புலிகள் ஏகபோகமான தமிழர் பிரதிநிதிகளாக இருப்பதனை உறுதிசெய்வதிலும் கவனமாக இருந்தனர். தமிழர்களுக்கென புலிகளின் சமாதானச் செயலகம் மாத்திரம் இயங்கியதுடன் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள், குழுக்கள், கருணா பிளவின் பின்னரான கிழக்கு தமிழர்களை மையப்படுத்தும் சமாதான பிரிவினைக் குரல்களை அலட்சியம் செய்துவந்தனர்.மறுபுறம் சமாதானம் என்ற போர்வையில் தீவிரமாக புலிகளினுடைய போர்ப்பயிற்சிகளும், சிறுவர்களை படையணியில் சேர்த்தலும் முடுக்கிவிடப்பட்டிருந்தன. இன்று வன்னியில் கைதாகியிருக்கும் தமிழினியின் தலைமையில் நடாத்தப்பட்ட பயிற்சிப் பாசறை ஒன்றின் பிரத்தியேகப் புகைப்படம் ஒன்றினை சான்றாக இங்கு நான் முன்வைக்கின்றேன்.
thamiliniசென்ற வருடம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழர் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, வடகிழக்கு அரசியலை முன்னெடக்க வேண்டுமென்னும் சமிஞ்சை காட்டியதுடன் ”கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடுவது கிழக்கை அங்கீகரிக்கும் விடயமாக ஆகிவிடுமெனக் கருதி விலகியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸினருடன் அடிக்கடி கூடிப் பேச்சு நடாத்தி வருகின்றது. முஸ்லிம் காங்கிரஸினை அவர்கள் ஒரு நேச சக்தியாக பார்க்கின்றார்கள்”. இன்னொரு புறத்தில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ”கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற முடிவானது வடக்கிலிருந்து கிழக்கினை பிரிக்கும் அனுமதியாக கருதப்படக்கூடாது” ஏன்ற கருத்தினையும் பகிரங்கமாக முன்வைத்து செயற்பட்டதுடன் ஒருபடி மேலேசென்று “தமிழ்பேசும் மக்களின உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அமமாகாணத்தின் பெரும்பான்மை மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்தவத்தைக் கொண்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பும, முஸ்லிம் காங்கிரசும் கூட்டணி அமைத்து தெர்தலில் போட்டியிட வேண்டுமென்னம் அபிப்பிராயம் வலுவடைந்து வருவதாக…” ஆதாரபூர்வமற்ற முஸ்லிம்களின் ஆதரவற்ற ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டுவைப்பதில் முரண்பட்ட ரவூப் ஹக்கீமின் தன்னிச்சையான கருத்தும் அவரது “வியூகங்களும், உபாயங்களும்” பலம்பெயர் பலி சார்பு தளங்களின் கவனத்தினை ஈர்த்தன. 

லண்டனிலுள்ள தமிழர் தகவல் நடுவம் (Tamil Information Centre) ) முஸ்லிம் சமாதானச் செயலகத்தின் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினரும் முஸ்லிம் சமாதானச் செயலகத்தின் சபை உறுப்பினருமான தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைப்பு தொடர்பில் செயற்பட்டவருமான அமீர் பாயிஸ் என்பவரை அழைத்து அதுகுறித்த கருத்தாடல் ஒன்றினை 07.12.2008  ஆம் ஆண்டு நடாத்தி அம்முயற்சிக்கான ஆதரவு தளத்தினை உருவாக்குவதற்காக முனைப்புடன் புலம்பெயர் தமிழர் தரப்பில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு வேளை புலிகள் தோற்கடிக்கப்படாவிட்டிருந்தால் சுதந்திரமாக செயற்படும் நிலைமை தமிழர் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஏற்படாதிருந்திருந்தால் இம்முயற்சிகள் வெற்றியளித்திருக்கும். 
இன்று இந்தச் சமாதானச் செயலகம் தன்னுடைய அடிப்படைக் கோட்பாடுகளாக சகல முஸ்லிம் கட்சியினரிடையும, பங்குதாரரிடையும் கருத்தொருமைப்பாட்டினை கட்டியெழுப்புகின்ற ஒரு பிரகடனத்துடன் செயற்படுவதாக குறிப்பிட்டாலும் முஸ்லிம் காங்கிரசும், தேசிய ஐக்கிய முன்னணியுமே இதன் செயற்பாடுகளில் பங்காளிகளாக இருக்கின்றார்கள். நோர்வே மட்டுமல்ல பிரித்தானியாபோன்ற பல மேற்கத்திய நாடுகள் இச்சமாதானச் செயலகத்திற்கு நிதியுதவி அளிக்கின்றார்கள். நோர்வே அரசு 2003 ம் ஆண்டிலிருந்து புலிகளின் சமாதானச் செயலகத்திறகு வருடம் தோறும் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிவந்தது. அண்மையில் அரசியல் தலையீடும், தவறான முகாமைத்துவமும் முஸ்லிம் சமாதானச் செயலகத்தில் நிலவுவதாக குற்றம்சாட்டி இவ்வாண்டின் ஆரம்பத்திலேயே நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள். உதவிகளை நிறுத்திவிட்டனர். அவ்வாறான குற்றச்சாட்டுக்களில் ஒன்றுதான் இதன் இயக்குனர்கள் அதிகளவான பணத்தினை கையாடியுள்ளார்கள் என்றும், சம்பளமாக எடுத்துள்ளார்கள் என்பதுமாகும். இக்குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கையின் பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்ற செய்தி வெளியிட்டிருந்தது.
இச்சமாதானச் செயலகத்தின் இயக்குனர்களாக செயற்படுபவர்களில் எம்.எச்.எம் சல்மான் என்பவரும் ஒருவராவார். இக்குற்றச்சாட்டுக்கள் குறித்த இன்னுமொரு இயக்குனரான சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய செயலாளர் நாயகம் ஹசன் அலி அவர்கள் கணக்காய்வு செய்யப்படவுள்ளதாக அறிவித்தார். எனக்கு நெருக்கமானவரும் இச்செயகத்தில் செயற்படும் ஒரு சிலரை நெருக்கமாக அறிந்தவருமான கொழும்பிலுள்ள ஒரு சட்டத்தரணியை நானும் இதுகுறித்து விசாரித்த பொழுது அவரும் இந்த ஆங்கிலப் பத்திரிகையில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து இயக்குனர்களாக செயற்படுபவர்கள் சுமார் 75 ஆயிரம் ரூபாயினை மாதாந்தச் சம்பளமாக எடுத்துக்கொண்டதாகவும் தனக்குக் கிடைத்த தகவல்கள் கூறுவதையும் மறுபுறம் இச்சமாதானச் செயலகத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய உறுப்பினரிடம் ஏன் இதற்கான மறுப்பறிக்கையினை வெளியிடவில்லை எனக்கேட்ட பொழுது தாங்கள் இதுகுறித்து "கிண்ட" விரும்பவில்லை என்றும் இதற்குப்பதில் கொடுத்தால் பிரச்சினையாகிவிடுமெனவும் குறிப்பிட்டார். 
தமிழர் தகவல் நடுவம் இலங்கை அரசுக்கு எதிரான அறிக்கைகளை மிகத்தீவிரமாக வெளியிட்ட காலகட்டத்தில சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடனான தொடர்புகளைப் பேணி தமிழ் தேசியவாத உணர்வுகளுக்கு உரமிட்டும் செயற்பாடுகளில் தீவிரமாக இயங்கிவந்தனர்.
2007 ம் ஆண்டு ஆகஸ்ட: மாதத்தில் புத்தளத்தில் செயற்பட்டுவந்த முஸ்லிம் சமாதானச் செயலக அலுவலகம் பிரதி அமைச்சர் கே.ஏ பாயிஸினால் முற்றுகையிடப்பட்டு அலுவலக உபகரணங்கள் உடைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் இதனை பாயிஸ் மறுத்ததுடன் புத்தளத் பிரதேச மக்களை உள்ளடக்காத அவ்வலுவலகம் மூடப்படவேண்டுமென்பது அவரது குறிக்கோள் எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிரான முறைப்பாட்டினை செய்வதினை ஹக்கீம் தடுத்ததாகவும் நம்பத்தகுந்த செய்திகள் வெளியாகின. வடமாகாண முஸ்லிம்களினுடைய பிரச்சினைகள் குறித்து தனியான முஸ்லிம் சமாதானச் செயலகம் உருவாவதற்கான காரணங்களாக இவையெல்லாம் அமைந்தன. இம்முஸ்லிம் சமாதானச் செயலகம், அல்லது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசோ, தேசிய ஐக்கிய முன்னணியோ 18 வருடங்களுக்கு மேலாக வடமாகாணத்தில் புலிகளால் கடத்தப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள்பற்றி ஒருபோதும் சிலாகித்துப் பேசவில்லை. அவர்களின் விடுதலைக்காக எவ்வித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை. 
13.04.2002 ம் ஆண்டு புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஹக்கீம் ஒப்பந்தம் ஒன்றினைச் செய்தபொழுது முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்கள் சாhபில் பங்குபற்றியதுடன் வடகிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் அதிகபட்ச ஆதரவினைப்பெற்ற கட்சி முஸ்லிம் காங்கிரஸ் என்பதால் முஸ்லிம் காங்கிரஸினருடன் மட்டுமே பேசவேண்டுமென்னும் தீர்மானமும் ஒப்பந்த சரத்துகளாக அமைந்தன. ஆனால் இச்சமாதானச் செயலகத்தினுடைய இணையத் தளத்தில் 18 வருடங்களுக்குப் பின்னர் த.தே..கூ பின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட இமாம் அவர்கள் பிரபாகரனைச் சந்திக்க நேரிட்ட பொழுது அவர் ஏற்கனவே “ஒட்டி வாழ்ந்தோம் வெட்டிவாழவில்லை” (ஓட்டி வாழ்ந்தோம் வெட்டி வாழவில்லை யாழ் முஸ்லிம் பிரமுகர்களின் கூட்டறிக்கை)
”இவ்வேளையில் எவ்வித தவறும் இழைக்காத யாழ் முஸ்லிம்கள் சார்பில் புலிகளை மிகவும் தயவுடன் வேண்டிக்கொள்வது என்னவென்றால் தங்கள்வசமிருக்கும யாழ் முஸ்லிம் 35 இளைஞர்களையும் விடுதலை செய்யுங்கள். பிள்ளைகளைப் பிரிந்து ஏக்கத்தில் சில பெற்றோர் மரணித்துவிட்டனர். இவர்களைப் பிரிந்து வாழும் பெற்றோர்களும், மனைவியர்களும் பிள்ளைகளும் கொட்டில்களில் துன்பம் நிறைந்த அகதி வாழ்க்கை வாழ்ந்தாலும் இவர்களது வரவால் மகிழ்ச்சியடைவர். யாழ் முஸ்லிம்கள் அங்குள்ள தமிழ் மக்களுடன் ஒட்டிவாழ விரும்புகிறார்களேயொழிய வெட்டிவாழ விரும்பவில்லை. எமது தாயகமும் வடக்கே! வீரகேசரி (09-06.96ல்) பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.)

என்ற அறிக்கையில் புலிகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட சம்பவம் குறித்து முதன் முதலில் இமாம் கேட்கவில்லை என்பது குறித்து “இமாம் ஒரு இமாமாக இருப்பாரா” (Will Imam be an Imam?)  என்ற தலைப்பில் நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையினை தமிழில் மூலத்திருட்டுச் (Plagiarism) செய்து  (காப்பியடித்து) வெளியிட்டு நீலிக்கண்ணீர் வடித்திருந்தார்கள். அக்குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தங்களிடம் முறையிட்டதுபோல் ஒரு தோற்றப்பாட்டினையும் ஏற்படுத்தியிருந்தார்கள்.

இச்சம்பவம் ஒரு பொதுவான அறிவிற்குட்பட்ட விடயமாக இருந்திருப்பினும் இதனில் காட்டப்பட்ட ஆதாரங்கள், வசன ஒழுங்குகள் யாவும் மூலத்தினைக் கோடிட்டுக் காட்டாமல் மொழியாக்கம் செய்யப்பட்டதாகும். இதுபற்றி இணையத்தள ஆசிரியரிடம் நான் செய்த முறைப்பாடு ஆசிரியரிடமிருந்து கவனிப்பதாக கூறியபோதும் எவ்வித பதிலும் பலமாதங்களாகியும் -இதுவரையில்- வரவில்லை. இதபற்றி நான் பிரபல பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவருடன் கதைத்தபொழுது அவரும் தனது ஆய்வுகளின் தரவுகள் பல மூலம் கூறப்படாமல் அவ்விணையத்தளத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். போலித்தனமாக தங்களை வளம் படுத்திக்கொள்ளும் சமூக அமைப்புக்களையும், குறுகிய அரசியல் செயற்பாடுகளையும் மிக உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய காலம் இப்போதுள்ள சூழ்நிலையில் முஸ்லிம் மக்களிடமிருந்து எதிர்பார் க்கப்படுகின்றது. 
தொடரும்.

Thenee, lankamuslims, unmaikal and mahavali (28/07/2009)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...